இஸ்லாம் பெயரால் இஸ்லாத்தின் மீது பொய்யையும் புனை சுருட்டையும் அரங்கேற்றும் தளங்களில், ”ஆன்சரிங்க் இஸ்லாம்” என்ற இணையதளமும் ஒன்றாகும். இத்தளத்திற்கு சில நாடுகளில் தடை விதித்துள்ளனர். – "ஆன்சரிங்க் இஸ்லாம்” தளத்தைக் கண்டு இஸ்லாமிய உலகமே பயந்து ஓடுகிறது என்று அடுத்த பதிவில் பிறமத நண்பர்கள் சேர்த்துக்கொள்ளட்டும்) – திருக்குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது, முரண்பாடுகள் உள்ளது என்று விமர்சிக்கும் பிறமத நண்பர்கள், தங்கள் விவாதத்திற்கான சான்றுகளை "ஆன்சரிங்க் இஸ்லாம்" என்ற தளத்திலிருந்து எடுத்துக் காட்டுகின்றனர். குறிப்பாக மர்யம் என்ற 019வது அத்தியாயத்திலிருந்து ஓரிரு வசனங்களை எடுத்து வைத்திருந்தனர். (பார்க்க: வர்ஷ், ஹஃப்ஸ் காரீகளின் ஓதல் )
திருக்குர்ஆனில் முரண்பாட்டை நிறுவ முயலும் பிறமத நண்பர்கள் சுட்டிய 019:019வது வசனத்தை இங்கு பரிசீலிப்போம். 019:019வது வசனத்தின் அரபி மூலம், தமிழ் உச்சரிப்பில்,
”கால இன்னமா அன ரஸுலு ரப்பிகி லிஅஹப லகி குலாமன் ஸகிய்யா”
இன்னும், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் அன்றாடம் அணுகும் சில திருக்குர்ஆன் (தமிழ், ஆங்கிலம் உருது மொழி பெயர்ப்புப்) பிரதிகளிலிருந்து படமாக, (படங்களின் மீது சொடுக்கினால் தெளிவாகப் படிக்கலாம்)
திருக்குர்ஆன் மர்யம் அத்தியாயம் 019வது வசனத்தில் இடம்பெறும் ”லிஅஹப” வார்த்தையை (மட்டும்) சிகப்பு வண்ணத்தில் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த ஆவணங்களை பிறமத நண்பர்கள் தவறாக விளங்கி விமர்சித்திருக்கின்றனர் என்று அவர்களின் விவாதத்திலிருந்து விளங்க முடிகிறது. விமர்சனத்தைப் பார்ப்போம்,
* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:
He said, “I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son.”
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li’ahiba
* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்… படிக்கிறார்கள்:
He said, “I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son.”
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba
* அல்பஹர் அல்மொஹித், “Alkishaf” a book for Alzimikhshiry:
He said, “I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son.”
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani ‘n ‘hiba
திருக்குர்ஆன் 019:019வது வசனத்தில் இடம்பெறும் ஒரு வார்த்தையில் – li’ahiba, liyihiba, amarani ‘n ‘hiba என – மூன்று விதமான உச்சரிப்புகள் உள்ளதாக பிறமத நண்பர்கள் இங்கு சுட்டுகின்றனர். இவர்கள் சுட்டியுள்ளது போல் ”hiba” என்று மூலத்தில் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம் பெறவும்கூடாது. எனவே லிஅஹிப, லியிஹிப, அமரனி N ஹிப என்று பிறமத நண்பர்கள் எழுதியிருப்பது கவனக்குறைவான எழுத்துப்பிழையாக இருக்க வேண்டும். எழுத்துப் பிழை என்பதை ஒப்புக்கொண்டால் அதைத் திருத்திக்கொள்ளவும். அல்லது ”ஹிப” என்று எழுதியது சரிதான் என்றால் பிறமத நண்பர்கள் அதற்கான மூல ஆதாரத்தை வைக்க வேண்டும்.
வழங்குவாயாக, தருவாயாக, அளிப்பாயாக போன்ற அர்த்தமுள்ள வார்த்தைதான் ”ஹப்” என்ற அரபுச் சொல்லாகும் எடுத்துக்காட்டாக:
மேற்கண்ட படத்தில், திருக்குர்ஆன் – 003:036, 025:074, 026:083, 037:100 – வசனங்களில் சிகப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள். வசனங்கள் தமிழில்,
“அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் ‘இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” (003:038)
“அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் ‘இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” (003:038)
“மேலும் அவர்கள்: ‘எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.” (025:074)
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!” (026:083)
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக’ (என்று பிரார்த்தித்தார்)” (037:100)
இந்த நான்கு வசனங்களிலும் இடம் பெற்றுள்ள ”ஹப்” என்ற சொல்லில் இருந்து பிறந்தது தான் ”ஹப, அஹப, லிஅஹப” ”லியஹப” என்ற வார்த்தைகளாகும். ”லிஅஹப” என்றால் வழங்குவதற்கு, அளிப்பதற்கு, கொடுப்பதற்கு என்று பொருளாகும்.
“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன். பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்’) என்று கூறினார்.” (019:019)
லிஅஹப என்ற அரபிச்சொல்: அன்பளிக்க, வழங்க, அளிக்க, கொடுக்க என்று பல தமிழ் விளக்கங்களில் மொழி பெயர்த்தாலும் பொருள் ஒன்றுதான். ஆனால், பிறமத நண்பர்கள் விமர்சித்திருப்பதுபோல் ”ஹிப” என்று எந்தக் குர்ஆனிலும் இடம் பெறவில்லை! மாறாக, ”லி அஹப” என்பதை ”லி யஹப” என்று ஓதியிருக்கிறார்கள்.
வர்ஷின் ஓதும் முறை ”லி அஹப”
ஹஃப்ஸின் ஓதும் முறை ”லி யஹப”
இந்த வித்தியாசமான உச்சரிப்பில் ஓதும் நடைமுறையை முஸ்லிம்கள் – மறுக்கவில்லை – ஒப்புக்கொண்டு, இணையதளங்களிலும் வெளியிட்டுள்ள விஷயமாகும்.
திருக்குர்ஆன் விளக்கவுரைகளில், இங்கு விவாதித்துக்கொண்டிருக்கும் மர்யம் அத்தியாயம் 019வது வசனத்தின் ”லிஅஹப” என்ற வாசகத்தின் விளக்கவுரையும் மேற்கண்ட படங்களில் இடம்பெற்றுள்ளன. (சிகப்பு வண்ணத்திர் கட்டம் வரைந்ததில்) அபூ அம்ரு பின் அஃலா என்பவர் ”லிஅஹப” என்பதை ”லியஹப” என்று ஓதியிருக்கிறார் என்ற தகவலைத் தவறாமல் குறிப்பிட்டு, அப்படி ஓதியதால் திருக்குர்ஆன் வசனத்தின் கருத்து சிதைந்து விடுவதில்லை, மாறிவிடுவதில்லை. இரண்டும் ஒரு பொருளையே பறைசாற்றுகிறது என்றும் விளக்கவுரையில் கூறுகிறார்கள்.
”பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க – அன்பளிக்க வந்துள்ளேன்” என்று வானவர் ஜிப்ரீல் கூறுகிறார்.
லி அஹப = நான் (ஜிப்ரீல்) அன்பளிக்க
லி யஹப = அவன் (அல்லாஹ்) அன்பளிக்க
இரண்டு வாசகமும் ஒன்றோடொன்று முரண்படாமல் மிகச் சரியான பொருளைப் பேசுகின்றன. இவ்விடத்தில் பிறமத நண்பர்கள் எதிர்பார்ப்பது போல் திருக்குர்ஆனில் முரண்பாட்டை இது ஏற்படுத்திவிடவில்லை என்பது தெளிவு. இங்கு பிறமத நண்பர்களின் எதிர்பார்ப்பு என்னவென்பதை நாம் தெரிந்துகொள்வது அவசியம்,
“தாய் குர்ஆன் ஒன்று உண்டு” என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன? அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.
முஸ்லீம்கள் “மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி…” என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்ஆன் தான் (They not accept the word “according to …” but they have it. Today’s Quran which all we use is according to Obi IBM Kanab.)”
பைபிளை எழுதிய நால்வரும் ஒவ்வொரு விதமாக முரண்பட்டு எழுதியுள்ளனர் என்ற விமர்சனத்துக்கு சரியான விளக்கம் கொடுக்க இயலாமல் – பைபிளில் முரண்பாடுகள் இல்லை என்று நிறுவவும் முடியாமல், பதிலுக்குப் பதில் என்ற தோரணையில் குர்ஆனில் எழுத்துப்பிழை உள்ளது, முரண்பாடு உள்ளது என்று பிறமத நண்பர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.
இங்கு நாம் கூறிக்கொள்வது, எழுத்துப் பிழையும் கருத்துப் பிழையும் ஒன்றாகுமா? என்றால் ஒருபோதும் சமமாகாது. எழுத்துப்பிழைகளைத் திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கருத்துப் பிழையை எக்காலத்திலும் திருத்திட முடியாது. கருத்துப்பிழை கொண்ட பைபிள் வசனங்களை நீக்குவதைத்தவிர வேறு வழியில்லை. பைபிளில் கருத்து முரண்பட்ட வசனங்கள் உள்ளது போல் திருக்குர்ஆனிலும் கருத்து முரண்பட்ட வசனங்கள் உள்ளன என்பதை நிரூபிக்க அவர்கள் வைத்துள்ளவை இதுதான், li’ahiba, liyihiba, amarani ‘n ‘hiba. இதைத் தமிழில் எழுதியிருந்தால் சாயம் வெளுத்துவிடும் என்பதினால் ஆங்கிலத்தில் எழுதி என்னவோ உலக மகா வித்தியாசத்தைக் கண்டுபிடித்து விட்டது போல் குறிப்பிட்டுள்ளனர். அதுவும் திருக்குர்ஆனில் இல்லாத ”ஹிப” என்ற வார்த்தையைச் சேர்த்துத் திருக்குர்ஆன் வசனத்தைத் திரித்துள்ளனர்.
நன்றி: abumuhai.blogspot.com
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)