Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

திருக்குர்ஆன் மீதான விமர்சனங்களும் விளக்கங்களும்!

பைபிளைப் பற்றி முஸ்லீம்களால் எடுத்து வைக்கப்படும் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு திருக்குர்ஆனிலும் தவறுகள் உள்ளது என்று எழுதத் தொடங்கியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, திருக்குர்ஆனில் சரித்திரத் தவறுகள் இருப்பதாகவும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பி அடித்து எழுதிக்கொண்டிருக்கும் பொழுது கவனக்குறைவாக பல தவறுகளை இழைத்துவிட்டதாகவும், அதை இவர்கள் கண்டுபிடித்துவிட்டது போன்று, தற்போது எழுதத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில் ‘குர்ஆனில் சரித்திரத் தவறு – மரியால் ஆரோன் மற்றும் மோசேயின் சகோதரியா?’ என்ற கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரை தமிழில் மொழிப்பெயர்த்து கிறிஸ்தவ தளங்களில் வெளியிடப்பட்டது.

குர்ஆனின் மீது குற்றம் சாட்டப்படும் அந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் – குர்-ஆனில் மர்யம்)

இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ? 

இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை சமர்ப்பிக்கின்றார் அந்த கிறிஸ்தவ நன்பர்:

3:35 இம்ரானின்(அம்ராம்) மனைவி ‘என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்’ என்று கூறியதையும்-

3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: ‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையேபெற்றிருக்கிறேன்’ எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) ‘அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

66:12 மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார் நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் – (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

19:27 பின்னர் (மர்யம் – மேரி) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: ‘மர்யமே! நிச்சயமாகநீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!’

19:28 ‘ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை’ (என்று பழித்துக் கூறினார்கள்).

இந்த குர்ஆன் வசனங்களின் மூலம் அந்த கிறிஸ்தவர் கண்டுபிடித்த அபாரமான (?) கண்டுபிடிப்பின் முடிவை பின்வருமாறு தெரிவிக்கின்றார்:

விளக்கம்:

யாத்திரயாகமம் 15:20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

என்ன கண்டுபிடிப்பு பார்த்தீர்களா? எவ்வளவு ஆய்வுப்பூர்வமான விளக்கம் பார்த்தீர்களா? இந்த அபாரமான கண்டுபிடிப்பை (?) படித்த Colvin என்ற கிறிஸ்தவர் உணர்ச்சி வசப்பட்டு  


நல்ல நகைச்சுவை தொடர்ந்து எழுது. கடைசியில் குர்ஆனின் சரித்திரத தவறுகளையெல்லாம் நீயே உன் கையால் புடமிடப் போகிறாய்

உனக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளேன்.
நீ ஒரு ஆம்பளயா இருந்தா அதற்கு முதலில் பதில் அளி பார்ப்போம்.
 
எவ்வளவு வெறித்தனம்? எத்தனை நாள் கோபமோ! இது தான் இவர்கள் சமாதானத்தை போதித்த இயேசுவிடம் கற்றுக்கொண்ட நற்குணங்கள் போலும்? அது இருக்கட்டும். அவர் கோரியபடி பதிலுக்கு வருவோம்.

இந்த தவறை (?) கண்டுபிடித்த கிறிஸ்தவர் தனது கட்டுரையின் தொடக்கத்திலேயே மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் – குர்-ஆனில் மர்யம்)

 இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ? என்று எழுதுகின்றார்.

இவர் குற்றம் சுமத்துவது போல் எந்த இடத்தில் மரியாளை இறைதூதர்களான ஹாரூன் (ஆரோன்) மற்றும் மூசா (மோசே)வின் சொந்த சகோதரி என்று சொல்லப்பட்டுள்ளது? ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. மாறாக, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில், ஹாரூன் என்ற பெயரை கொண்ட ஒருவரின் சகோதரியாகவே திருக்குர்ஆன் மரியாளை அடையாளம் காட்டுகின்றது. இதில் என்ன தவறு கண்டுபிடித்துவிட்டனர் என்று நமக்குப் புரியவில்லை.

ஏனெனில், பொதுவாக ஒரு பெயர் உலகில் ஒருவருக்கு மட்டும் தான் இருக்குமா? அல்லது பலருக்கும் இருக்குமா? என்பதை சிந்திக்க மறந்துவிட்டார் இந்த ஆய்வை (?) சமர்ப்பித்த கிறிஸ்தவ நன்பர். இவர் குறிப்பிடுவது போன்று ‘மேரியை ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்படுகின்றது’ என்று கண்மூடித்தனமாக குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன், ஒரு பெயர் பலருக்கும் இருக்க வாய்பிருக்கின்றதா? இல்லையா? என்பதை ஏன் யோசிக்கவில்லை? குறிப்பாக முன் சென்ற தீர்க்கதரிகளுடைய அல்லது கர்த்தரால் சிலாகித்துச் சொல்லப்படக்கூடிய பரிசுத்தவான்களின் – நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்கள் வைப்பார்களா? மாட்டார்களா? வைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றதா? இல்லையா? குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன் இந்த சாதாரன நடைமுறையை கூட ஏன் இந்த கிறிஸ்தவ நன்பர் சிந்திக்கவில்லை?

உதாரனமாக சொல்லவேண்டும் என்றால், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவில் இயேசுவினுடைய வம்சவரலாறைப் பற்றி சொல்லப்படுகின்றது. அந்த மத்தேயுவின் 1:16ம் வசனத்தில் ‘யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்’ என்று வருகின்றது. இதைப் படிக்கும் இந்த கிறிஸ்தவர், ‘மத்தேயு தவறாக எழுதிவிட்டார், யாக்கோபு என்பவர் ஈசாக்கின் மகன். இவர் பிறந்ததோ கிமு 1841. அந்த யாக்கோபின் குமாரன் தான் யோசேப்பு. இவர் பிறந்ததோ கிமு 1750. (பார்க்க ஆதியாகமம் 35:23-24) அந்த யோசேப்புக்கும் அவருக்குப் பின் 1750 ஆண்டுகள் கழித்து வாழ்ந்த மரியாளுக்கும் எப்படி திருமணம் நடந்திருக்கும்? இங்கே மத்தேயு தவறாக – கவனக்குறைவாக பழைய ஏற்பாட்டைப் பார்த்து காப்பி அடித்து எழுதும் போது தவறிழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுவாரா? அல்லது முந்தைய தீர்க்கதரிசிகளின் – நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்களுக்கு வைக்கும் வழக்கமிருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே மரியாளுடைய புருஷனாகிய யோசேப்புக்கும், அவரது தந்தையான யாக்கோபுக்கும் வைக்கப்பட்டிருக்கும் என்று முடிவு செய்வாரா?
குர்ஆனில் மரியாளைப் பார்த்து ‘ஹாரூனின் சகோதரியே’ என்று அழைத்ததை நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் சரித்திரம் தெரியாமல் தவறாக எழுதிவிட்டார் என்று குற்றம்சுமத்தும் இந்த கிறிஸ்தவர், அதே கண்னோட்டத்தோடு மத்தேயுவும் பழைய ஏற்பாட்டை காப்பி அடிக்கும் போது கவனக்குறைவாக தவறிழைத்துவிட்டார் என்று சொல்ல முன்வருவாரா? இதை முதலில் அந்த கிறிஸ்தவ நன்பரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

அடுத்து, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில் மரியாளைப் பார்த்து ‘ஹாரூனின் சகோதரியே’ என்று அழைப்பது அவருக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்த காரணத்தினாலேயே தவிர, நபி (ஸல்) அவர்களின் கவனக்குறைவினால் நடந்த தவறு அல்ல என்பதை கிறிஸ்தவ நன்பர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படியே இந்த ஹாரூன் என்றப் பெயர் இறைத்தூதர் ஹாரூனையே – (ஆரோனையே) குறிக்கும் என்றிருந்தால், ‘ஹாரூனுடைய சகோதரி’ என்று குறிப்பிடப்படும் இடத்தில் அவரைவீட மிகவும் பிரபலமானவரான முசா (மோசே) அவர்களைக் குறிப்பிட்டு ‘மூசாவின் சகோதரியே!’ என்று குறிப்பிட்டிருக்கலாமே? ஏனெனில் இறைதூதர்களான ஹாரூனும் முசாவும் சகோதரர்கள். ஹாரூனுக்கு சகோதரியாக இருப்பவர் மூசாவுக்கும் சகோதரியாகவே இருப்பார். அப்படி இருக்கும் நிலையில், இங்கே இறைதூதர் ஹாரூன்தான் நோக்கமாக இருந்திருந்தால், அவருக்கு பதில் பிரபலமான மோசேயை குறிப்பிட்டு கூறியிருக்கலாமே? எனவே இங்கே குறிப்பிடப்படும் ஹாரூன் என்பவர் மரியாளுடைய சொந்த சகோதரரையே குறிக்குமேயன்றி இறைதூதர் ஹாருனை அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இதே கேள்வியை இப்பொழுது மட்டுமல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடமும் கேட்கப்பட்டு அதற்கு அன்றைக்கே பெருமானார் அவர்கள் பதிலும் அளித்துவிட்டார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நபித்தோழர் முஃகீரா பின் ஷூஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டிலுள்ள)நஜ்ரான் நகரத்திற்கு அனுப்பியிருந்தார்கள். அங்கிருந்தவர்கள் இவ்வசனத்தைச் சுட்டிக்காட்டி ‘ஹாரூனுக்கும் மர்யமுக்கும் இடையே இன்னின்ன கால இடைவெளி இருக்கும்நிலையில் எவ்வாறு மர்யமை ஹாரூனுடைய சகோதரி என்று உங்கள் வேதம் கூறுகின்றது?’ என்று கேட்டார்கள். நான் மதீனா திரும்பியபின் இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது நபியவர்கள் ‘பனூஇஸ்ராயீல் மக்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்), நல்லவர்கள் ஆகியோரின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டிவந்தனர்’ என்று விளக்கமளித்தார்கள்.- நூல்: (ஸஹீஹ் முஸ்லீம், திர்மிதி, நஸயீ, முஸ்னது அஹ்மத்)

இந்த நபிமொழியின் படி பெருமானாரிடமே இன்றைய கிறிஸ்தவர்களால் கேட்கப்படும் அதி மேதாவித்தனமான கேள்வி அன்றைக்கே கேட்கப்பட்டது. அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், அக்காலத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு முன்சென்ற தீர்க்கதரிசிகளின் -நல்லவர்களின் பெயர்களை சூட்டிக்கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்று விளக்கமளிக்கின்றார்கள். எனவே, மரியாளுக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்தார். அந்த அடிப்படையில் அன்றைய சமூகத்தினர், மரியாளை அவ்வாறு குறிப்பிடுகின்றனர். அதைத் தான் குர்ஆனும் குறிப்பிடுகின்றது. எனவே இதில் ஒன்றும் தவறு நடந்துவிடவில்லை என்பதை இரண்டாவதாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அடுத்து இன்னொன்றையும் இங்கே முக்கியமாக விளக்கியாக வேண்டும். அதாவது, இந்தக் கேள்வி ஏன் இந்த கிறிஸ்தவர்களுக்கு எழுகின்றதென்றால், இவர்கள் இறைவேதமாக நமபும் பைபிளில் மரியாளுக்கு சகோதரர்கள் இருந்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அதை வைத்து, குர்ஆனில் சரித்திரத் தவறு என்ற இந்த குற்றச்சாட்டை கிறிஸ்தவ நண்பர் முன்வைக்கின்றார். இதுவும் ஒரு தவறான கண்னோட்டமே!

ஏனெனில், பைபிளில் மரியாளைப் பற்றி முழுமையான எந்த ஒரு தகவலும் கிடையாது என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். யார் யாருடைய தகவல்களெல்லாம் பைபிளில் எழுதப்பட்டிருக்கின்றது. சம்பந்தமே இல்லாத பலரின் வம்சவரலாறுகளெல்லம் எழுதப்பட்டு பைபிளின் பக்கங்கள் வீனடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தந்தையே இல்லாமல் பிறந்த இயேசுவுக்கு தந்தை வழி வம்சவரலாற்றை கூறப்படுகின்றது. (அதிலும் பல குளறுபடிகள்) ஆனால் இயேசுவை அதிசயமாக பெற்றெடுத்த பரிசுத்த பெண்மணியான மரியாளைப் பற்றிய தகவல்கள் மட்டும் வேண்டும் என்றே பைபிளில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை யார்? அவரது தாயார் யார்? அவருக்கு சகோதரர் யாரும் இருக்கின்றார்களா? இப்படி எந்த ஒரு நேரடியான தகவளும் பைபிளில் கிடையாது. மாறாக இயேசு அவரை உதாசீனப்படுத்தியதாகவும் – அவமரியாதை செய்ததாகவுமே பைபிளில் எழுதிவைத்துள்ளனார். இப்படி மரியாளைப் பற்றிய எந்த ஒரு தெளிவான தகவலும் பைபிளில் இல்லாத போது அதை ஆதாரமாக வைத்து குர்ஆனை எப்படி விமர்சிக்கலாம்? சற்று சிந்திக்க வேண்டாமா?

மரியாளின் சகோதரர் யார் என்பது பற்றி நேரடியாக பைபிளில் சொல்லப்படவில்லை என்பதற்காக ‘ஹாருனின் சகோதரரியே’ என்று குர்ஆன் குறிப்பிடுவதை வைத்து திருக்குர்ஆனின் மீது கலங்கம் கற்பிக்க முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள், அவரின் தந்தையைப் பற்றியோ தாயாரைப் பற்றியோ அதே பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே! அதற்காக அவருக்கு தாயோ தந்தையோ இல்லாமல் அதிசயமாக வானத்திலிருந்து குதித்தார் என்று வாதிடுவார்களா? அவரது இறப்பு பற்றியோ அல்லது பிறப்பு பற்றியோ பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே அதற்காக அவரை ‘பிறப்பும் இறப்பும் இல்லாத ஒரு அதிசயப் பிறவி’ என்று வாதிடுவார்களா?

அது மட்டுமல்ல, பல முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் நிரம்பிய பைபிளை வைத்து ஒருவருடைய வரலாற்றை ஆய்வு செய்யலாமா? அதற்கு அப்படி ஏதாவது தகுதி இருக்கின்றதா? அதுவும் ‘முரண்பாடுகளே இல்லாத ஒரே இறைவேதம்’ என்று சவால் விடுகின்ற குர்ஆன் என்னும் ஒரு இறைவேதத்தை எடைபோடுவதற்கு பைபிளை ஆதாரமாக எடுக்கலாமா? பைபிளில் ஒன்று இரண்டு முரண்பாடா? இருக்கின்றது? நூற்றுக்கணக்கான முரண்பாடுகளும் ஆயிரக்கணக்கான தவறுகளும் நிறம்பிய ஒரு புத்தகம் எப்படி வரலாற்று ஆதாரமாக இருக்க முடியும்? குர்ஆன் போன்ற ஒரு புத்தகத்தின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்கும் ஆதாரமாக எப்படி இந்த பைபிள் இருக்க முடியும்? அப்படி பைபிளோடு உரசி குர்ஆனின் நம்பகத்தன்மையை எடைபோடுபவர்கள் முதலில் நாம் பைபிளின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கட்டும். அதன் பிறகு திருக்குர்ஆனை விமர்சிக்கட்டும்.

அடுத்து தனது கட்டுரையில், குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற மற்றொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார். இது குறித்து விரிவாக விளக்க வேண்டி இருக்கின்றது. இருந்தாலும் சுறுக்கமாக இங்கே பார்த்து விடுவோம்.

குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா?

அந்த கிறிஸ்தவ நன்பர் பின்வரும் ஒரு குற்றச்சாட்டையும் தனது கட்டுரையில் முன்வைக்கின்றார்:

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

முதலில் பைபிளைப் பார்த்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டது என்று குற்றம் சுமத்துபவர்கள், பைபிள் எப்பொழுது அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டது என்ற வரலாறை ஆய்வு செய்ய மறந்துவிடுகின்றனர். இவர்கள் உபயோகப்படுத்தும் இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிள், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் பொழுது, அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபிக்கு எப்படி அந்த பைபிள் பிரதி கிடைத்திருக்கும்? சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

இன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ பாதிரிமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பைபிளை விட்டும் பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்று கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டுமே படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும், அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாத பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு இன்னல்களுக்கும் ஆளாக்கபட்டு துன்புறுத்தப்பட்டனர் என்றும் கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. இன்னும் சொல்லப்போனால் குர்ஆனின் மீது பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இந்த கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான ‘புரோட்டஸ்டன்ட்’ பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதே.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எழுதப்படிக்கத்தெரியாதவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகின்ற நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் எப்படி அந்த பைபிள் கிடைத்திருக்கும். அதுவும் வேற்று மெழியான அரபியில்? சிந்திக்க வேண்டாமா?


எனவே கிறிஸ்தவர்களே! இஸ்லாத்தின் மீது இது போன்ற எந்த ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட்டுவிட்டு, திருக்குர்ஆனை சத்தியத்தை அறியும் நோக்கத்துடன் படியுங்கள். அதன் மூலம் சத்தியத்தை அறியுங்கள் – சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

நன்றி: egathuvam.blogspot.com

ராம் ஸ்வர்ப் என்பவர் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஹிந்து மதத்தைச் சார்ந்தவர். ஹதீஸின் வாயிலாக இஸ்லாத்தை அறிந்து கொள்ளுதல்என்று ஹிந்தி மொழியில் இவர் எழுதிய நூல் இந்திய அரசால் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருக்கின்றது.

இஸ்லாத்தைக் குறைகூறும் வாய்ப்புக்காக காத்துக்கிடந்த இவருக்கு சாலமன் ரஷ்டியின் ‘சாத்தானின் வசனங்கள்’ என்ற நூல் சர்க்கரையாக அமைந்தது. இந்தியாவிலும், இன்னும் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அந்த நூல் எப்படியோ ‘ராம் ஸ்வர்ப்’ என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. அதை படித்துவிட்டு புலமை சான்ற கேள்விகள் என்ற தலைப்பிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் 20-11-88, பக்கம் 5-ல் கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார்.

தவறான வாதங்கள், பொய்யான செய்திகளை உள்ளடக்கிய இஸ்லாத்தை நோக்கி அவர் எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது நமது கடமை என்பதால் இந்தக் கட்டுரை அவரது கேள்விகளை எடுத்து வைத்து அதற்கு விளக்கம் அளிக்கும் முன்பு ‘சாத்தானின் வசனங்களையும், சல்மான் ரஷ்டியையும் பற்றி அவர் தரும் அறிமுகத்தை தந்துவிட்டு அவரது கேள்விகளுக்குச் செல்வோம்.

ராம்ஸ்வர்ப் சொல்கிறார்:- சாலமன் ரஷ்டியின் சாத்தானின் வசனங்கள் இஸ்லாத்தையும், அதன் தூதரையும், அவருக்கு வந்த வேத வெளிப்பாடுகளையும் விமர்சிப்பதற்காகவே எழுதபட்டது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இவர் ‘மக்கா’ நகரை ‘ஜாஹிலியா’ என்ற பெயரால் தனது நூலில் குறிப்பிடுகிறார். இஸ்லாத்திற்கு முந்தைய காலத்து மக்காவை இஸ்லாமிய வரலாறுகள் ‘ஜாஹிலியா’ என்றே குறிப்பிடுகின்றன. ருஷ்டி தனது நூலில் முஹம்மதை குறிப்பிடும்போது ‘மஹவுன்ட்’ என்றும் நபிகளின் எதிரியாக திகழ்ந்த அபூஸூஃப்யானை ‘அபூஸிம்பல்’ என்றும் சிறிய மாற்றத்துடன் குறிப்பிடுகிறார். ஏனைய பாத்திரங்களைக் குறிப்பிடும்போது ரஷ்டி இந்த வித்தியாசத்தைக்கூட செய்யவில்லை. இஸ்லாமிய வரலாறுகளில் எவ்வாறு அவர்களின் பெயர் குறிப்பிடப்படுகிறதோ அவ்வாறே குறிப்பிடுகிறார். நபியின் சித்தப்பா ஹம்ஸா இஸ்லாத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட நீக்ரேர் அடிமை பிலால் மற்றும் காலித் ஆகியோர் இதே பெயர்களாலேயே இவரது நூலில் குறிப்பிடப்படுகிறார்கள். மக்காவில் – அதாவாது ஜாஹிலியாவில் பனிரண்டு பரத்தையர் இருந்ததாகக் குறிப்பிடும் இவர், அந்தபரத்தையருக்கு நபியின் மனைவியரின் பெயரைச்சூட்டி மகிழ்கிறார். இது கீழ்தரமான, அநாகரீகமான சித்தரிப்பாக அமைந்துள்ளது. ‘நான் இந்த நூலில் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை வெறும் கற்பனையாக எழுதப்பட்ட கதைதான் எனது நூல் என்று ரஷ்டி இப்போது பின்வாங்கினாலும் உண்மையில் அவர் இஸ்லாத்தையும் அதன் தூதரையும், அவருக்கு வந்த வேதவெளிப்பாடுகளையும் விமர்சனம் செய்வதை தலையாய நோக்கமாகக் கொண்டே தனது நூலை எழுதி இருக்கிறார் என்பது அவரது நூலைப் படிக்கும் போது உணர முடிகின்றது.

இவை யாவும் ரஷ்டியை பற்றியும், அவரது நூல் பற்றியும் ‘ராம் ஸ்வர்ப்’ தருகின்ற அறிமுகமாகும். இந்தச் சிறிய அறிமுகத்திலிருந்து ரஷ்டியையும், அவரது நூலையும் நன்றாக நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. இஸ்லாத்தை விமர்சிப்பது தான் அவரது நோக்கம் என்றால் ‘ராம் ஸ்வர்ப்’ போல் தெளிவாக நேரடியாக விமர்சிக்கலாம்.

தனக்கு இஸ்லாத்தைப் பற்றி ஏற்படுகின்ற ஐயங்களை தெளிவாக எழுப்பி இருக்கலாம். ரஷ்டியிடம் அந்தத் துணிவையும், நாகரிகத்தையும் காணமுடியவில்லை. மாறாக மஞ்சள் பத்திரிக்கைகள், சினிமா கிசு கிசு செய்திகளைப் போல் நாலாம் தர நடையைத் தேர்வு செய்திருக்கிறார். ‘ராம்ஸ்வர்ப்’ செய்யும் அறிமுகத்திலிருந்து இதை நாம் நன்றாக விளங்க முடிகின்றது. முஸ்லிம் அறிஞர் உலகும், ராம் ஸ்வர்ப் போன்றவர்களும் இஸ்லாத்தையே அவர் விமர்சனம் செய்துள்ளார் என்று கண்டுபிடித்துச் சொன்ன பிறகும் கூட அவர் துணிவுடன் ஒப்புக் கொள்ள முன்வரவில்லை.

நான் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை, கற்பனை கதைதான் நான் எழுதிய நூல் என்று இந்தியப் பிரதமருக்கு, கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் ரஷ்டி. அவ்வளவு துணிவும், நேர்மையும் கொண்டவர். ஓரு சமுதாயம் தங்கள் அன்னையர் என்று மதிக்கும் நபிகளின் மனைவியரின் பெயர்களை பரத்தையர்களுக்கு சூட்டி மகிழும் வக்கிரபுத்தியும், கீழ்த்தரமான எண்ணங்களையும் உடையவர் தான் ரஷ்டி என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ராம்ஸ்வர்ப்.

‘ராம்ஸ்வர்ப்’ போன்றவர்களே ஜீரணிக்கமுடியாத அளவுக்கு எழுதும் நாலாந்தர எழுத்தாளராக இவர் காட்சியளிக்கிறார். இவரைப் பற்றி எழுதுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல என்பதால் இத்துடன் விட்டுவிட்டு ராம்ஸ்வர்ப் எழுப்புகின்ற புலமை சான்ற கேள்விகளைப் பார்ப்போம்.

கேள்வி:-1 மக்கத்துகாபிர்கள் அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் ஆகிய பெண் தெய்வங்களை வழிபட்டு வந்தனர். பல தெய்வ வணக்கம் கூடாது என்று போதித்த முஹம்மதுக்குத் திடீரென ஒரு வஹி வருகிறது. அல்லாத், அல்உஸ்ஸா, மற்றும் மூன்றாவதான மகாத்தைப் பற்றி நீர் நினைத்ததுண்டா? அவை போற்றப்பட்ட பறவைகள் அவற்றின் சிபாரிசுகள் நிச்சயமாக விரும்பப்படுகின்றது என்று அந்த வஹி கூறுகிறது. தங்களின் தெய்வங்களை முஹம்மது புகழ்ந்து கூறியவுடன் மக்காவாசிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்து முஹம்மதுவை பின்பற்றி அல்லாஹ்வை வணங்க வழி ஏற்படுகிறது. இந்த உடன்பாடு அற்ப ஆயுளில் முடிந்து விடுகிறது. அந்த தெய்வங்களைப் புகழ்ந்து தனக்கு வந்த வஹி, ஷைத்தானிடமிருந்து வந்தது என்பதை முஹம்மது சீக்கிரமே கண்டுகொண்டு, அதற்கு பதிலாக வேறு வசனத்தைக் கூறுகிறார். முஹம்மதுவால் திருத்திக் கூறப்பட்ட அந்த வசனம் அல்லாத், அல்உஸ்ஸா, மற்றும் மூன்றாவாதாக மனாத்தைப்பற்றி நீர் நினைத்ததுண்டா? உங்களாலும் உங்கள் மூதாதையராலும் இட்டுக்கட்டப்பட்ட பெயர்களேயன்றி இந்த பெண் தெய்வங்கள் வேறில்லை. (அல் குர்ஆன்53:19-23)

இந்தத் தகவல்கள் கற்பனையானது அல்ல மாறாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களான தபரீ, வாகிதி போன்றவர்கள் இதைக்குறிப்பிடுகின்றனர். ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸ்களின் அடிப்படையிலே தனது நூலுக்கு ‘சாத்தானின் வசனங்கள்’ எனப் பெயரிட்டிருக்கிறார் ரஷ்டி. இந்தக் கதையை கூட்டவோ குறைக்கவோ இல்லாமல் சரியாகத் தரும் ரஷ்டி நம்முடைய உள்ளத்தில் முக்கிய வினாவையும் விதைக்கிறார். அதாவது ஷைத்தான் தோற்றுவித்த உதிப்பில் இருந்து எவ்வாறு மலக்குகள் தோற்றுவித்த உதிப்பைப் பிரித்தறிவது? இந்த விஷயத்தில் குர்ஆன் எந்த வழியையும் காட்டவில்லையே. மேலும் முஹம்மதுக்கு மட்டுமல்ல, அவருக்கு முன்தோன்றிய நபிமார்களும் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டனர் ஆனால் அவற்றை முறையாக இறைவன் ரத்து செய்துவிட்டான். (அல் குர்ஆன் 22:52) என்று குர்ஆன் இயம்புகிறது.

பதில்:1 இந்த விபரங்களின் அடிப்படையில் ‘ராம்ஸ்வர்ப்’ கேட்க விரும்புவதும், சொல்ல வருவது என்னவென்றால் திருக்குர்ஆனில் ஷைத்தான்களின் வசனங்களும் இடம் பெற்றுள்ளன அவற்றை வேறுபடுத்தி அறிந்திட குர்ஆன் எந்த வழியையும் காட்டவில்லைஎன்பது தான் இதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸையும், ஒரு குர்ஆன் வசனத்தையும் சமர்ப்பிக்கிறார். முதலில் ‘ராம்ஸ்வர்ப்’ தனது வாதத்துக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் ஹதீஸைப் பார்ப்போம். அந்த ஹதீஸைப் பற்றி ‘ஆதாரப்பூர்வமான ஹதீஸ்’ என்று ராம்ஸ்வர்ப் குறிப்பிடப்படுவதிலிருந்து ஹதீஸ்களில் ஆதாரப்பூர்வமானவைகளும் ஆதாரமாகக் கொள்ளத் தகாதவைகளும் உள்ளன என்பதை ராம்ஸ்வர்ப் அறிந்திருக்கிறார் என்பது தெரிகின்றது. ‘ஆதாரப்பூர்வமான ஹதீஸ்’ என்ற அடைமொழியுடன் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸ் உண்மையில் ஆதாரப்பூரவமானது அல்ல மாறாக இட்டுக் கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும் இது. ‘ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்’ என்று சொல்லப்படுவதற்கு முஸ்லிம் உலகம் எந்தத் தகுதிகளை வரையறுத்திறுக்கிறதோ அந்தத் தகுதியை இது பெற்றிருக்கவில்லை.

உதாரணமாக ஹதீஸை ஒருவரிடமிருந்து ஒருவராக அறிவிப்பவர் தமக்கு முந்திய அறிவிப்பாளரைச் சந்தித்திருக்கவேண்டும்; அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக அமையும். ‘ராம்ஸ்வர்ப்’ எடுத்து வைக்கும் இந்த ஹதீஸில் இந்த இரண்டு தகுதிகளுமே இல்லாமலிருக்கின்றன. தபரி, வாகிதி குறிப்பிடுவதால் மட்டும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக ஆகிவிட முடியாது. இந்த ஹதீஸைப் பொறுத்தவரை இந்த நபர் எனக்கு கூறினார் என்று அறிவிக்கும் இரண்டாம் நபர் முதலாம் நபரைச் சந்தித்ததாகவோ அவரது காலத்தில் வாழ்ந்தவராகவோ இல்லை. முப்பதுக்கும் மேற்பட்ட வழிகளில் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி பெரும்பாலான அறிவிப்புகளில் சொல்லி வைத்தாற் போல இந்த குறைபாட்டைக் கொண்டதாக உள்ளது. காரல் மாக்ஸ் இதை என்னிடம் கூறினார்என ராம்ஸ்வர்ப் கூறினால் அந்தக் கூற்றின் நிறை எதுவோ அதேநிலையைத் தான் இந்தச் செய்தியும் பெறுகிறது. மேலும் பல குறைபாடுகளையும் இந்தச் செய்தி உள்ளடக்கி இருக்கிறது ‘ராம்ஸ்வர்ப்’ இப்போது இதை விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டதால் நாம் இவ்வாறு கூறவில்லை எவரும் விமர்சிப்பதற்கு முன்-பலநூறு ஆண்டுகளுக்கு முன்-வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் இதை அலசி இது பொய் என்று தள்ளுபடி செய்துள்ளனர். அவர்கள் தள்ளுபடி செய்த இந்தக் குப்பையைத் தான் ரஷ்டியும், ராம்ஸ்வர்பும் இப்போது கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாத்தின் எதிரிகள் திட்டமிட்டுப் புனைந்த பெரும் பொய்யாகும் இந்தச் செய்தி என்று அறிஞர் இப்னு குஸைமா குறிப்பிடுகிறார். இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசை சரியானதல்ல என்று ‘பைஹகீ’ எனும் அறிஞர் குறிப்பிட்டுவிட்டு இந்தச் செய்தியை அறிவிப்பவர்களின் குறைபாடுகளையும் பட்டிலிட்டுக்காட்டுகிறார். அறிவிப்பாளர்களில் ஒருவருக்கொருவர் தொடர்பு எதுவும் இல்லாத வகையில் இது அமைந்துள்ளது என்று ‘பஸார்’ என்னும் அறிஞர் கூறுகிறார். இந்தச் செய்தியை நபித் தோழர்கள் எவரும் கூறாமல் நபித்தோழர்களின்அடுத்த காலத்தவர்கள்தான் அறிவிக்கின்றனர். இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் அது நடந்த காலத்தில் பிறந்தே இருக்காதவர்களால் எப்படி அறிவிக்க முடியும் என்று கேட்கிறார் ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் ஒன்றிரண்டு அறிவிப்பாளர் வரிசையில் நபித்தோழர்கள் அறிவிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் நபித்தோழர்கள் கூறியதாக அறிவிக்கும் அடுத்தடுத்த அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இல்லை என்றும் இப்னு கஸீர் மேலும் கூறுகிறார். ஆதாரமற்ற இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தியைத்தான் ஆதாரப்பூர்வமானது என்கிறார் ராம்ஸ்வர்ப். இவர் எடுத்து வைக்கும் ஆதாரமே பொய் என்று ஆகிவிடும்போது அதனடிப்படையில் அவர் எழுப்பிய கேள்வியும் புலமை சான்ற கேள்வி (?) என்ற நிலையிலிருந்து இறங்கிவிடுகின்றது. அல்லாத், அல் உஸ்ஸா மற்றும் மனாத் பற்றி இன்று நாம் காணுகின்ற 53:19-23 வசனங்களைத்தவிர வேறு எதுவும் அருளப்படவில்லை.

இந்தக் கதை உருவாக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதையும் அறிந்து கொள்வது இங்கே அவசியமாகும். ‘அன்னஜ்மு’ என்ற 53-வது அத்தியாயத்தை (அதாவது அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயத்தை) நபி (ஸல்) அவர்கள் ஓதியபோது ஸஜ்தா செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து முஸ்லிம்களும் நபியின் எதிரிகளும் ஸஜ்தா செய்தனர் என்று இப்னு அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழர் அறிவிக்கும் செய்தி ‘புகாரி’ நூலில் இடம்பெறுகின்றது. இந்த ஆதாரப்பூர்வமான செய்தியில் நபியுடன் அவரது எதிரிகளும் ஸஜ்தா செய்ததாகக் கூறப்படுகின்றது. நபியுடன் சேர்ந்து நபியின் எதிரிகள் எப்படி ஸஜ்தா செய்திருப்பார்கள்? அவர்கள் ஸஜ்தா செய்யும் அளவுக்கு நபியுடன் ஒத்துப்போனார்களென்றால், அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக நபி ஏதேனும் சொல்லி இருக்கவேண்டும். அவர்களின் தெய்வங்களைப்பற்றி புகழ்ந்து நபி ஏதேனும் சொல்லி இருந்தாலே அவர்கள் ஸஜ்தா செய்திருக்க முடியும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்தக் கதை புனையப்பட்டது.

நபியின் எதிரிகள் நபியுடன் சேர்ந்து ஸஜ்தா செய்யக்காரணம் தான் என்ன? என்ற ஐயம் சிலருக்கு எழலாம். நபியின் எதிரிகள் பல்வேறு கடவுளர்களை நம்புபவர்களாக இருந்தாலும் அவைகளைக் கடவுளர்களாக எண்ணிக்கொண்டிருக்கவில்லை. இவர்களுக்கெல்லாம் மேலாக மிகப்பெரிய கடவுள் ஒருவன் இருக்கிறான். அவன்தான் அல்லாஹ்என்பதே அவர்களின் கொள்கையாக இருந்தது.

வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நபியே நீர்அவர்களைக் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள் அல்குர்ஆன் (31:25) மேலும் (29:61, 29:63, 39:38, 43:9, 43:87, 10:18, 39:3) ஆகிய வசனங்களிலும் மக்கத்து மாந்தர்கள் அல்லாஹ்வை நம்பி ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்ற விபரம் கூறப்படுகிறது. அன்னஜ்மு அத்தியாயத்தில் இடம்பெறும் அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் பற்றிக் கூறப்படும் வசனத்தை ஓதியபோது நபிகள் ஸஜ்தா செய்யவில்லை மாறாக அந்த அத்தியாயத்தின் கடைசியில் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்யுங்கள்! வணங்குங்கள்!! என்று வருகின்ற வசனத்தை ஓதும்போதுதான் நபிகள் ஸஜ்தா செய்தார்கள். அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்வது நபிகளின் எதிரிகளுக்கும் உடன்பாடு என்பதால் அவர்களும் சேர்ந்து ஸஜ்தா செய்தனர்.

ஸஜ்தா செய்யுங்கள்!எனக்கட்டளையிடும் வசனங்களில் முதன் முதலில் அருளப்பட்டது அன்னஜ்மு அத்தியாயத்தில் உள்ள வசனமாகும். அதற்காக நபிகள் ஸஜ்தா செய்தபோது நபிகளின் எதிரிகளும் ஸஜ்தா செய்தனர். அப்துல்லா எனும் நபித்தோழர் அறிவிக்கும் இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து நபிகள் 53:19 23 வசனத்தின் போது ஸஜ்தா செய்யவில்லை, அதன் இறுதி வசனத்தின்போதே ஸஜ்தா செய்தார்கள் என்று அறியலாம். 53:1923 வசனத்தின் போது ஸஜ்தா செய்தார்கள் என்று சிலர் எவ்வித ஆதாரமுமின்றி நம்பிக்கொண்டு, அதற்கு ஒரு காரணத்தையும் சிருஷ்டித்துவிட்டார்கள். அவர்களால் சிருஷ்டிக்கப்பட்ட அந்தப் பொய்யான காரணம்தான் ‘ராம்ஸ்வர்ப்’ எடுத்துக் காட்டும் அந்தக் கதை. ரஷ்டியும், ராம்ஸ்வர்ப்பும் எடுத்துக் காட்டிய செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்று ஆகிவிடும் போது அதன் அடிப்படையில் அவர்கள் எழுப்பிய கேள்விகளும் அடிபட்டு அர்த்தமற்றுப் போகின்றன.

மேற்கூறிய அந்தப்பொய்யான நிகழ்ச்சியின் மூலம் ராம்ஸ்வர்ப் எழுப்பிய கேள்வி என்னவென்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். நமக்கு ஷைத்தானிடமிருந்தும் வஹி வந்ததை ஹதீஸ் கூறுகின்றது. ஆனால் ஷைத்தான் தோற்றுவித்த உதிப்பில் இருந்து மலக்குகள் தோற்றுவித்த உதிப்பைப் பிரித்தறிவது எப்படி? என்பதே அந்தக் கேள்வி. நபிகளுக்கு ஷைத்தான் உதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறும் அந்தச் செய்தி பொய் என்று நிரூபணமான பின் பிரித்தறிவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இல்லாத ஒன்றைப் பிரித்தறிய வழி முறையைச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ராம்ஸ்வர்ப் எடுத்துக்காட்டிய அந்தச் செய்தி பொய்என்பதை ஏராளமான குர்ஆன் வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன.

முஹம்மத் நம் மீது எதையாவது இட்டுக்கட்டிக் கூறி இருப்பாரானால் வலக்கரத்தால் அவரைப்பிடித்து அவரது நாடிநரம்புகளைத் துண்டித்திருப்போம். (அல் குர்ஆன் 69:44)

நாமே இந்த போதனையை அருளினோம் அதை நாமே பாதுகாப்போம். (அல்குர்ஆன் 15:9)

ஓதுவதற்காக அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத்திரட்டி (உம் உள்ளத்தில்) பதியச் செய்வதும், ஓதச் செய்வதும் நம்முடைய வேலையாகும். (அல்குர்ஆன் 75:16)

முஹம்மது தம் இச்சைப்படி பேசமாட்டார், அது இறைவனால் அறிவிக்கப்பட்ட செய்தியைத்தவிர வேறு இல்லை. (53:3)

இந்த வசனங்கள் யாவும் வேத வசனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்பதைத் தெளிவாக்குகின்றன. ஷைத்தான் குறுக்கிட்டு எதையும் சேர்த்துவிட முடியாது என்று அறைகின்றன. இன்னும் தெளிவாக இது விரட்டப்பட்ட ஷைத்தானுடைய சொல் அன்று (81:25) எனவும் அல் குர்ஆன் குறிப்பிடுகிறது.

இதை ஷைத்தான்கள் இறக்கியருளவில்லை, அவர்கள் அதற்கு சக்தி பெறவும்மாட்டர்கள். (26:210) ஷைத்தான்களால் உதிப்பு ஏற்படுத்தப்படும் என்பதை முற்றாக இந்த வசனங்கள் நிராகரிக்கும் போது ஆதாரமற்ற பொய்யான ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று முத்திரை குத்தி ‘ராம்ஸ்வர்ப்’ தன் கேள்வியை எழுப்புகின்றார்.

நபிகள் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டார்கள் என்றதன் கூற்றுக்கு திருக்குர்ஆனின் ஒரு வசனத்தையும் துணைக்கு அழைத்திருக்கிறார். முஹம்மதுக்கு முன் தோன்றிய நபிமார்களும் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டனர். ஆனால் இறைவன் அவற்றை முறையாக ரத்து செய்துவிட்டான் என்று குர்ஆனுடைய 22:52 வசனம் கூறுவதாக ராம்ஸ்வர்ப் கூறுகிறார். அவர் குறிப்பிட்டது. போல் குர்ஆன் கூறுமானால் ராம்ஸ்வர்ப் உடைய கேள்வி புலமை சான்ற கேள்வி என்பதில் ஐய்யமில்லை. ஆனால் திருக்குர்ஆன் அவ்வாறு கூறவே இல்லை. ஒரு சிலர் செய்துள்ள தவறான மொழிபெயர்ப்பை நம்பி அவர் இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்.

அல்குர்ஆன் 22:52 வசனத்திற்கு எந்த ஒரு தூதரை நாம் அனுப்பினாலும் அவரது உள்ளத்தில் ஷைத்தான் உதிப்பு ஏற்படுத்தாமல் இருந்ததில்லை; ஆனால் ஷைத்தான் ஏற்படுத்திய உதிப்பை அல்லாஹ் அகற்றி தன் வசனங்களை உறுதி செய்கிறான் என்று சிலபேர் மொழியாக்கம் செய்துள்ளனர், அதுதான் ராம்ஸ்வர்ப்புடைய இந்தக் கேள்விக்குக் காரணம். உண்மையில் அந்த வசனத்தின் பொருள் என்ன? என்பதைச் சொல்வதற்கு முன்னால் ராம்ஸ்வர்ப்புக்கு ஏற்படக்கூடிய ஒரு சந்தேகத்தை நாம் நீக்கி விடுவோம். இவரைப் போன்றவர்கள். இந்த வசனத்தின் அடிப்படையில் ‘புலமை சான்ற கேள்வி (?) கேட்டு விட்டதால் மொழிபெயர்ப்பு தவறு என்று நாம் சமாளிப்பதாக அவர் எண்ணக்கூடும். அவருக்கு அந்த சந்தேகம் வரதேவையில்லை. நாம் சரியான மொழிபெயர்ப்புக்கு சான்றாக இப்போதைய அகராதிகளைக் காட்டமாட்டோம். 1400 ஆண்டுகளுக்கு முன் நபித்தோழர்கள் சொன்னதையே சரியான மொழிபெயர்ப்புக்கு சான்றாகத் தருவோம்.

தவறான மொழி பெயர்ப்புச் செய்தவர்கள் அவரது உள்ளத்தில் என்று குறிப்பிட்ட இடத்தில்-மூலத்தில்-’உம்னிய்யத்’ என்ற பதம் உள்ளது. ‘உம்னிய்யத்’ என்ற வார்த்தைக்கு இந்த இடத்தில் அவர் அறிவித்த செய்தியில் என்பதே பொருளாகும் என்று நபிகளின் அன்புத்தோழரும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளனர். புகாரியில் இது இடம் பெற்றுள்ளது. அவரது மாணவர் முஜாஹித் அவர்களும், தபரீ அவர்களும் இதே பொருளையே தருகிறார்கள். நபித்தோழர்கள் ‘உம்னிய்யத்’ என்ற வார்த்தைக்குச் செய்துள்ள பொருளின் அடிப்படையில் அந்த வசனத்தில் பொருள் என்னவென்று பார்ப்போம்.

எந்ந ஒரு தூதரை அனுப்பினாலும் அவர் அறிவித்த செய்தியுடன் ஷைத்தான் எதையும் சேர்க்காது இருந்ததில்லை; ஷைத்தான் சேர்த்தவற்றை அகற்றி அல்லாஹ் தன் வசனங்களில் உறுதி செய்கிறான்என்பதே அதன் பொருளாகும். அதாவது எந்த ஒரு தூதரும் இறைச்செய்தியை மக்களுக்குக் கூறினால் அவர் கூறிய செய்தியில் சில ஷைத்தான்கள் தங்களின் கைச்சரக்கையும் சேர்த்துக் கொள்வர். இறைவன் அவற்றை அடையாளம் காட்டி தன் வசனங்களை உறுதி செய்வான் என்று உத்திரவாதம் தருகிறது அந்த வசனம். நபிகளிடம் இறைச்செய்தியை எழுதுபவராக இருந்த ‘அப்துல்லாஹ் இப்னு ஸஃது’ என்பவர் நபி சொன்னதற்கும் அதிகமாக அவராகவும் சில வார்த்தைகளைச் சேர்த்து எழுதிக்கொள்வார் நபி அவர்கள் அதைக் கண்டுபிடித்து அகற்றுகிறார்கள் என்பதை ராம்ஸ்வர்ப் தன் மூன்றாவது கேள்வியில் ஒப்புக்கொள்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைச் செய்தியுடன் சில ஷைத்தான்கள் தங்கள் கைச்சக்கரத்தைச் சேர்த்துவிட முயன்றனர் அவை அந்தக் கால அறிஞர்களால் அடையாளம் காட்டப்பட்டன. ‘ராம்ஸ்வர்ப்’ போன்றவர்கள் திருக்குர்ஆனில் உள்ளதாக எதையாவது சொந்தமாகக் கூறினால் இன்றைய அறிஞர்களாலும் அவை வெளிச்சம் போட்டு காட்டப்படும்.

இந்த இடத்தில் ‘ராம்ஸ்வர்ப்’ போன்றவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படக்கூடும் 22:52 வசனத்தில் ‘ஷைத்தான்’ என்று தான் கூறப்படுகிறது. மனிதர்கள் சொந்தமாகச் சேர்ப்பதைப்பற்றி அல்லவேஎன்பது தான் இந்த சந்தேகம். திருக்குர்ஆன் அனேக இடங்களில் ஷைத்தான் என்ற பதத்தை வழி கெட்ட மனிதர்களுக்கும் பயன்படுத்தி இருக்கின்றது.
(பார்க்க! 6:112, 2:14)

ஹதீஸ்களிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன. ராம்ஸ்வர்ப் தேடிப்பார்த்துச் சிரமப்படாமலிருக்க அவரே குறிப்பிட்டுள்ள ஒரு ஹதீஸைத் தருவோம். நபிகள் ஒரு கவிஞனைக் கண்டபோது இந்த ஷைத்தானைப் பிடியுங்கள்என்று கூறியதாக ‘ராம்ஸ்வர்ப்’ குறிப்பிடுகிறார். (அது பிறகு வருகின்றது.) இதில் மனித இனத்தைச் சேர்ந்த ஒரு கவிஞனை நபிகள் ‘ஷைத்தான்’ என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம். ஆக இந்த வசனம் ‘ஷைத்தான் நபியின் உள்ளத்தில் உதிப்பை ஏற்படுத்துவார்கள். அவர் அதை இறைவனின் வஹி என்று எண்ணிக் கூறிவிடுவார்என்று கூறவே இல்லை. மாறாக நபி இறைச் செய்தியை மட்டுமே கூறுவார் அவர் கூறிய இறைச் செய்தியுடன் சில ஷைத்தான்கள் தங்களின் கைச்சரக்கையும் சேர்ப்பர்; அது இறைவனால் அடையாளம் காட்டப்பட்டு அகற்றப்படும் என்பதே பொருளாகும். ‘ராம்ஸ்வர்ப்’ தன் புலமை சான்ற கேள்விக்கு ஆதாரமாகச் சமர்பித்த ஹதீஸ் பொய்யானது; அவர் எடுத்து வைத்த குர்ஆன் வசனத்தில் பொருள் தவறானது என்று ஆகும் போது அவரது கேள்விக்கு எவ்வித ஆதாரமும் இல்லாது போய்விடுகின்றது.

கேள்வி:2 அவருக்கு இறைவனிடமிருந்து வஹி வருகிறது என முதன் முதலில் நம்பியவர் அவருடைய முதலாளியும் முதல் மனைவியுமான கதீஜா தான். ஆனால் இவருடைய வசதிக்காகவே இறைவன் வசனங்களை வெளிப்படுத்துகிறான் போலும் என்று அவருடைய நேசத்துக்குரிய மனைவி ஆயிஷாவே அடிக்கடி அவரை கிண்டல் செய்திருக்கிறார், மேலும் தான் முஹம்மதுக்குக் கொடுத்த அறிவுரைக்கேற்ப மூன்றுமறை நபிக்கு வஹீ வந்ததாக உமர் பெருமையடித்துக் கொண்டார். இது உமருக்குத் திருப்தியளித்திருக்கலாம். ஆனால் பலருடைய உள்ளங்களில் வினாக்களை எழுப்பிவிட்டது என்கிறார் ராம்ஸ்வர்ப்.

பதில்:2 இந்த மூன்று நிகழ்ச்சிகளை இறைவேதத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இவர் தரும் அடுத்த சான்றுகளாகும். கதீஜா (ரலி) அவர்கள் தான் முதலில் விசுவாசம் கொண்டார்கள்; அதை நாம் மறுக்கவில்லை. கதீஜா (ரலி) முதலில் விசுவாசம் கொண்டதால் இறைவேதம் என்று குர்ஆனை நம்புவதற்கு என்ன தடை இருக்கிறது. கணவருக்குப் பயந்து கொண்டு விசுவாசம் கொண்டிருக்கலாம் என்று சொல்ல வருகிறாரோ என்னவோ தெரியவில்லை. கதீஜா (ரலி) முதன்முதலில் விசுவாசம் கொண்டது அவர்இறைத் தூதர் என்ற நம்பிக்கையை மேலும் உறுதி செய்யுமே தவிர அந்த நம்பிக்கையைப் பலவீனப்படுத்தாது.

(அ) கதீஜா ஒரு பெண். பொதுவாகவே பெண்கள் தங்களின் பாரம்பர்யமான நம்பிக்கையை எளிதில்விட முன்வர மாட்டார்கள். புதிய கருத்துக்களை ஏற்பதற்கு ரொம்பவும் தயக்கம் காட்டுவார்கள். தன்னுடைய பாரம்பர்யமான கொள்கையைத் தகர்த்தெறியும் புதுக்கொள்கையை கணவர் சொன்னவுடன் மறுப்பேதுமின்றி ஏற்றுக் கொண்டார்கள் என்றால் அவரிடம் இறைத் தூதருக்கான அனைத்து அம்சங்களும் இருந்திருந்ததால் மட்டுமே அது சாத்தியமாயிற்று.

(ஆ) கதீஜா அவர்கள் செல்வ சீமாட்டியாக இருந்தார்கள்; அவர்களின் செல்வத்தில்தான் நபிகளின் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. இது போன்ற நிலைமையில் கணவன் மீதுள்ள மதிப்பு தானாகவே சரிந்து போய்விடுவதை உலகில் நாம் காண்கிறோம். தன்னுடைய செல்வத்தில் காலங்கழிக்கும் தன் கணவரை அவமதிப்புச் செய்வதற்கு பதிலாக, அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்றே மிகமிக உயர்வான மதிப்பை வழங்கினார்கள் என்றால் நபியிடம் அதற்கான சிறப்புத் தகுதிகள் கட்டாயம் இருந்திருக்கவேண்டும்.

(இ) முஹம்மதைவிட வயதில் மூத்தவரான கதீஜா தன்னைவிட மூத்தவர் என்ற மரியாதைக்காக இறைச் செய்தியை நம்பினார்கள் என்றும் சொல்ல முடியாது.

(ஈ) வெளி உலகில் நல்லவனாக, உத்தமனாக நடிக்கின்ற ஏராளமானவர்கள் தன்வீட்டில் வாழ்கின்றனர். ஒருவனுடைய உண்மையான நடத்தையை மற்றவர்களைவிட அவனது மனைவிதான் நன்றாக அறியமுடியும். அவனுடைய எல்லா பலவீனங்களும், கெட்ட குணங்களும் மனைவிக்குத் தெரிவது போல் எவருக்கும் தெரியமுடியாது. பதினைந்து ஆண்டுகள் நபியுடன் வாழ்க்கை நடத்திய கதீஜா அவர்கள் அவருடைய அப்பழுக்கற்ற நேர்மையான உள்ளேயும் வெளியேயும் ஒரே விதமாக வாழுகின்ற வாழ்க்கையைப் பார்த்துதான் அவர் இறைத்தூதர் என்றதும் ஏற்றுக்கொள்கிறார்கள். நபியின் பரிசுத்த வாழ்க்கைக்கு சான்றாக அமைந்த கதீஜாவின் விசுவாசத்தை சம்மந்தமில்லாமல் இங்கே குறிப்பிடுகிறார் ராம்ஸ்வாப்.

இனி ஆயிஷா அவர்களின் விஷயத்துக்கு வருவோம். அதில் ராம்ஸ்வாப் சொந்தச் சரக்கைக் கலந்துவிட்டு அதனடிப்படையில் தன் சந்தேகத்தைத் தெரிவிக்கிறார். நீ விரும்பும் பெண்களை மணந்து கொள்ளலாம் என்ற வசனம் இறங்கிய போது உங்கள் ஆசையை உங்கள் இறைவன் விரைந்து நிறைவேற்றுகிறான் என்றே நான் கருதுகிறேன்என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது. குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு வசனம் இறங்கியதைத்தான் இங்கே ஆயிஷா (ரலி) குறிப்பிடுகிறார்கள். ஆயிஷா அவர்களின் இந்தக் கூற்றை இவர் எப்படி உருமாற்றிவிட்டார் தெரியுமா? இவருடைய வசத்திக்காகவே இறைவன் வசனங்களை வெளிப்படுத்துகிறானோ என்று ஆயிஷா அடிக்கடி நபியை கிண்டல் செய்திருக்கிறார்என்று ராம்ஸ்வர்ப் கூறுகிறார். ‘அடிக்கடி’, ‘கிண்டல்’ இவருடைய வசதிக்காகவேஎன்ற வாசகங்கள் ராம்ஸ்வர்ப் உடைய கைசரக்குகள். இதுதான் புலமை சான்ற கேள்வியா? இது வடிகட்டிய பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? ஒரு தந்தை தன் மகனுடைய ஒரு விருப்பத்தை நிறைவேற்றும் போது உன் தந்தை உன் விருப்பத்தை நிறைவேற்றுவதில் அக்கரையாக இருக்கிறார்என்று கூறுவதற்கு என்ன நிலையோ அதே நிலைதான் ஆயிஷாவின் கூற்றுக்கும் உண்டு.

இந்தத் தில்லுமுல்லுகளை ராம்ஸ்வர்ப் ஏன் செய்திருக்கிறார் தெரிகிறதா? இவருடைய வசதிக்காகவே – குர்ஆன் இறங்கியது என்றால், இறைவனுடைய செய்தி அல்ல அது. இவர் தனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதை இறைவன் கூறுவதாகச் சொல்லிவிடுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே இந்த ஒட்டுவேலையின் நோக்கம், இதில் வேடிக்கை என்னவென்றால் இவரே இவருக்கு முரண்பட்டுக் கொள்கிறார். ஆயிஷாவுடைய சொல்லை சிதைத்ததன் மூலம் அவரது விருப்பத்திற்கேற்பவே குர்ஆன் இறங்கியது என்று சொல்லவரும் ராம்ஸ்வர்ப், அவருடைய விருப்பத்துக்கு மாறாக -அவருடைய தோழர்களில் ஒருவராகிய உமருடைய விருப்பத்திற்கேற்பவே மூன்று விஷயங்களில் வஹி வந்தது என்றும் ஒப்புக்கொள்கிறார். மேலும் உமர் (ரலி) அவர்கள் விருப்பத்திற்கேற்ப மூன்று வசனங்கள் இறங்கியது வினாக்களை எழுப்பிவிட்டதாம். ஆயிஷா அவர்கள் கூற்றிலிருந்து எழும் வினாவுக்கு விடையாக அமைந்துள்ளதை அவர் வினா என்கிறார்.

ஆயிஷா அவர்களின் கூற்றைத் தேடிப்பிடித்து அதில் ஒட்டுவேலைகள் செய்த ராம்ஸ்வர்ப் அதே ஆயிஷாவின் மற்றொரு கூற்றையும் கவனித்திருந்தால் முறையாக இருக்கும்.
33:37 வசனத்தைப்பற்றி ஆயிஷா குறிப்பிடும்போது முஹம்மது இறை வேதத்தில் எதையும் மறைப்பவராக இருந்திருந்தால் தன்னைக் கண்டிக்கும் இந்த வசனத்தைத்தான் மறைத்திருக்க முடியும்என்று கூறுவதன்மூலம் அவர்களின் வசதிக்காகவே குர்ஆன் இறக்கிக்கொண்டிருக்கவில்லை என்று மறுக்கிறார்கள், நபிகளின் விருப்பத்துக்கு மாறாக ஒன்றல்ல இரண்டல்ல! நூற்றுக்கணக்காண வசனங்கள் இறங்கியுள்ளன.
தன் பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்கவேண்டுமென பெரிதும் விரும்பினார்கள். நீ விரும்புபவரை எல்லாம் உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது (28:56) என்ற வசனம் இறங்கியது.
உஹதுப் போரில் அவர்களின் பல் உடைந்தபோது எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்? என்று கோபப்பட்டார்கள். உமக்கு அதிகாரத்தில் யாதொருபங்குமில்லை(3:128) என்ற வசனம் இறங்கியது.
குருடர் ஒருவரது விஷயத்தில் நபியின் அணுகுமுறையைக் கண்டித்து (80:1) வசனம் இறங்கியது.
செல்வந்தர்களுக்கும், உயர் குலத்தவர்களுக்கும் தனி மதிப்புத் தரலாம் என்று விரும்பிய போது (6:52) வசனம் இறங்கியது.
கைதிகளை என்ன செய்யலாம் என்ற விஷயத்திலும், பெண்களின் ஆடைகள் பற்றியும், நயவஞ்சகர்களுக்கு தொழுகை நடத்துவது பற்றியும் இவரது விருப்பம் வேறாக இருந்தது. இவரது தோழரான உமருடைய விருப்பம் நோற்பது, தன் சுகத்தைத் தியாகம் செய்வது போன்ற காரியங்களை இயல்பிலேயே எவரும் விரும்ப மாட்டார்கள்.அவற்றைச் செய்யுமாறு அவருக்கும் சேர்த்தே கட்டளை வருகிறது. இவையெல்லாம் நபியின் விருப்பத்திற்குகேற்றவாறுதான் எல்லா வசனங்களும் இறங்கின என்ற ராம்ஸ்வர்புடைய சந்தேகத்தைத் தரைமட்டமாக்குகின்றன.

கேள்வி:3 முஹம்மது நபி மக்காவில் இருந்தபோது, அவருக்கு எழுத்தராக இருந்த அப்துல்லாஹ் இப்னு ஸஃது பற்றி ஹதீஸ் கூறுகிறது. நபி சொன்னபடி அவர் இறைவழிபாட்டை எழுதிக் கொள்வார். நபி சிலசமயங்களில் பாதியில் நிறுத்திவிடுவார். அப்போது அந்த எழுத்தர் வார்த்தைகளைப் போட்டு நிரப்புவார். அவர் சேர்த்து எழுதிய வார்த்தைகளும் இறைவேதத்துடன் ஒன்றிவிட்டதைக் கண்டு அவர் குழப்பமுற்றார். இது அவருடைய உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. இதைப்பற்றி பலரிடமும் அவர் பேச ஆரம்பித்தார். இஸ்லாத்தையும் கைவிட்டார். முஹம்மது இதற்காக அவரை மன்னிக்கவே இல்லை. இருபது வருடங்கள் கழித்து நபி மக்காவை வெற்றி கொண்டபோது அப்துல்லாவை சிரைச்சேதம் செய்யுமாறு கட்டளையிட்டார். நபியின் மருமகனும், அப்துல்லாவின் பால் குடிச் சககோதரருமான உஸ்மானின் சிபாரிசின் பேரில் காப்பாற்றப்பட்டார். நபியிடம் உஸ்மான், அப்துல்லாவைக் காப்பாற்றுமாறு உத்தரவிட்டபோது நபி நீண்ட பொழுது மௌனமாக இருந்தார். பிறகு சரி என்று சொன்னதாகவும், உஸ்மான் அவ்விடத்தைவிட்டு அகன்றபிறகு நபி தம்மைச் சூழ்ந்திருந்த தோழர்களை நோக்கி நான் ஏன் அவ்வளவு நேரம் மவுனமாக இருந்தேன் தெரியுமா? அந்த இடைவெளியில் உங்களில் எவராவது எழுந்து அவருடைய தலையைக் கொய்துவிட மாட்டீர்களா? என்ற எண்ணத்தில் தான் மவுனம் சாதித்தேன் என்று சொன்னார். இப்னு இஸ்ஸாக் இவ்வாறு கூறுகிறார்.

பதில்:3 இரண்டு நோக்கங்களுக்காக இந்தச் செய்தியை ராம்ஸ்வர்ப் எடுத்துக்காட்டுகிறார். (1) இறை வேதத்துடன் மனிதர்களும் தங்கள் கைச்சரக்கை சேர்த்துவிட்டார்கள் என்று நிரூபிப்பது (2) நபி மிகவும் மோசமான குணம் கொண்டவர். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி யாராவது கொன்றுவிடமாட்டார்களா? என்று எதிர்ப்பார்த்ததனன்மூலம் கீழ்த்தரமான எண்ணங்களையே நபி கொண்டிருந்தார் என்று காட்டுவது

இப்னு இஸ்ஹாக்கும், அபூதாவூத் போன்றவர்களும் இவ்வாறு குறிப்பிடுவது உண்மையே ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெரும் சிலர் நம்பகமற்றவராகவும், வேறு ஒருவர் அலி (ரலி) அவர்கள் பெயரால் பொய்களைப் பரப்பும் ஷியாக்களின் தலைவராகவும் இருக்கிறார். அவர்களால் அறிவிக்கப்படும் இந்தசெய்தி ஆதாரப்பூர்வமானது இல்லவே இல்லை. உண்மையில் இதுபற்றி வந்துள்ள ஆதாரப்பூர்வமான செய்தி இவ்வளவுதான்:- அப்துல்லாஹ் இப்னு ஸஃது என்பவர் அல்லாஹ்வின் தூதரிடம் எழுத்தராக இருந்தார். ஷைத்தான் அவரை வழிகெடுத்துவிட்டான். அவர் காபிர்களுடன் சேர்ந்து கொண்டார். மக்கா வெற்றியின் போது அவரைக் கொன்றுவிடுமாறு நபி கட்டளையிட்டார்கள். அவருக்காக உஸ்மான் அடைக்கலம் கோரிய போது உடனே அடைக்கலாம் தந்தார்கள்.இதுதான் ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இப்னு அப்பாஸ் எனும் நபித்தோழர் அறிவிக்கும் இந்தச் செய்தி அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஆதாரப்பூர்வமான செய்தியில் அடைக்கலம் கேட்டவுடனே அடைக்கலம் தந்ததாக உள்ளது ஆதாரப்பூர்வமான இந்தச் செய்தியுடன் அந்தச் செய்தி முரண்படுவதாலும் அதன் அறிவிப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இல்லாததாலும் அந்தச் செய்தியின் அடிப்படையில் ‘ராம்ஸ்வர்ப்’ கருதுகின்ற இரண்டாவது நோக்கம் அடிப்பட்டுப்போகின்றது. இவரை யாராவது கொன்றுவிட மாட்டீர்களா என்ற அளவுக்குக் கடுமையான வார்த்தையை நபி பிரயோகம் செய்திருந்தால் – அவரை மனப்பூர்வமாக மன்னிக்கவில்லை என்று ஆகின்றது. மனப்பூர்வமாக அவரை நபி மன்னித்திருக்காவிட்டால், சம்மந்தப்பட்ட அப்துல்லாஹ் இப்னு ஸஃது அவர்கள் மனந்திருந்தி திரும்பவும் இஸ்லாத்தில் இணைந்திருக்கமாட்டார். அவரது பிற்கால வாழ்க்கை இஸ்லாத்தின் மீதும், இறைத்தூதர் மீதும் இருந்த அளவுகடந்த நம்பிக்கையைப் படம்பிடித்து காட்டுகின்றன.
எகிப்துடன் நடந்த போரில் முஸ்லிம்களின் அணியில் இவர் பங்கெடுத்துக்கொண்டார். அதன் வெற்றிக்கு துணைநின்றவர்களில் பிரதானமானவராக அவர் இருந்தார். பல போர்க்களங்களில் பாராட்டப்படும் சாதனைகள் பல புரிந்தார். எகிப்து நாட்டின் நிர்வாகியாகவும் சில காலம் இருந்தார். அலி முஆவியா இருவருக்கிடையில் பூசல்கள் தோன்றிய போது எப்பக்கமும் சாராமல் இவர் நடுநிலை வகித்தார் என்று இப்னு யூனுஸ் என்னும் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார், ஆப்பிரிக்காவை வெற்றி கொண்ட படைக்கு அவர் தளபதியாகச்சென்று ஆப்பிரிக்காவை வெற்றி கொண்டார் என்று இப்னு ஸஃது என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். இஸ்லாமிய முக்கிய கடமையாக உள்ள தொழுகையை-வைகறைத் தொழுகையை-நிறைவேற்றி முடிந்ததும் இவரது உயிர் பிரிந்தது என்று புகாரி, பகவி ஆகியோர் கூறுகின்றனர். இந்த சரித்திரக் குறிப்புகள் அவருக்கு இஸ்லாத்தின் மீது இருந்த காதலுக்கு சான்றாக அமைந்துள்ளன. நபி இவரைப்பற்றி அந்த வார்த்தையைக் கூறி மனப்பூர்வமாக மன்னித்திருக்காவிட்டால் இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக அவர் நடந்துகொண்டிருக்க முடியாது என்று சிந்தனையாளர்கள் உணரலாம்.
இறைச் செய்தியுடன் தன் சொந்தச் சரக்கையும் சேர்த்துவிடுவார் என்ற கருத்தும் பொய்யானதாகும். ஏனெனில் நாம் குறிப்பிட்ட ஆதாரப்பூர்வமான அந்தச் செய்தியில் அந்த விபரம் இல்லை. நபியின் எழுத்தராக இருந்த என்றவாசகம் அவரைப்பற்றி அறிமுகம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாசகம் தானே தவிர, வஹியில் கலப்படம் செய்தவர் என்று காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாசகம் அல்ல. வஹியை எழுதுபவராக இருந்த அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்என்று தான் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூறுகின்றது. சொந்தச் சரக்கைச் சேர்த்தார் என்ற விபரமெல்லாம் அதில் இல்லை. எனவே ராம்ஸ்வர்புடைய முதல் நோக்கத்திற்கும் அடிப்படையில்லாமல் போய் விடுகின்றது.

‘வஹியில் அவர் கலப்படம் செய்தார்’ என்று ஒருவாதத்துக்காக பொருள் செய்தாலும், ராம்ஸ்வர்புடைய கருத்துக்கு அதில் ஆதாரம் எதுவுமில்லை. ஏனெனில் வஹியில் அவர் செய்த கலப்படத்தைத் தான் நபி கண்டுபிடித்து அகற்றிவடுகிறாரே! வஹியில் யாரேனும் கலப்படம் செய்தால் இறைவன் தூதருக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டுவிடும் என்றுதான் அதில் விளங்க முடியுமே தவிர, ராம்ஸ்வர்ப் விளங்குவது போல் விளங்க முடியாது.

கேள்வி:4 பல கடவுள் கொள்கைக்கு பதிலாக முஹம்மது ஒரு கடவுள் கொள்கை வந்தபோதும் இவரது இந்த வேத வெளிப்பாட்டினால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடவில்லை. மதத்தில் ஒரு ஆழமும், கடவுள் கொள்கையில் ஒரு தீர்க்கமும், மக்களின் பழக்க வழக்கங்களில் ஒரு உயர்வும் ஏற்படவில்லை என்கிறார் ராம்ஸ்வர்ப்.

பதில்:4 இவரது இந்த வாதத்துக்கு இஸ்லாத்தைச் சேர்ந்த ஒரு பாமரன் கூட பதில் சொல்ல முடியும். அவ்வளவு முட்டாள் தனமான கூற்றை இவர் எடுத்து வைக்கிறார். உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரியும் வித்தியாசங்களைக்கூட உணரமுடியவில்லை. என்றால் ஷைத்தான் இவருடைய உள்ளத்தில் தான் உதிப்பை ஏற்படுத்தி இருக்கிறான் என்று அர்த்தம்.

யானையை, பன்றியை, ஆட்டை, மாட்டை மாட்டின் சானத்தை, அதன் மூத்திரத்தை, பல்லியை, மூஞ்சூறை, கல்லை, மண்ணை, மரத்தை எல்லாம் கடவுளர்களாக எண்ணி அதற்கு போய் சாஷ்டாங்கம் செய்து கொண்டிருந்த சமுதாயத்தை அந்த மூடக் கொள்கையிலிருந்து விடுவித்து இவற்றையெல்லாம் விட மனிதன் உயர்ந்தவன். மனிதனைப் படைத்த இறைவன் உயர்ந்தவன் என்று நிரூபித்துக் காட்டியது மாபெரும் புரட்சி இல்லையா?

கடவுளுக்கும் மனைவியர், மக்கள், அவர்களுக்குள்ளேயும் சண்டைகள், பிறன் மணை நோக்குதல், திருடுதல், விபச்சாரம் புரிதல், பொய் சொல்லுதல், உறங்குதல், உண்ணுதல் போன்ற மனிதனிடம் காணப்படும் எல்லா பலவீனங்களும் உண்டு என நம்பி, மனிதனை விடவும் மட்டமானவராகக் கடவுளை நம்பிககொண்டிருந்ததைமாற்றியமைத்து, கடவுள் எல்லா பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்று பறைசாற்றியது கடவுள் கொள்கையில் தீர்க்கமானதாக இவருக்கு தென்படவில்லையா?

ஆதீனங்கள், மடங்கள, அவற்றின் பூசாரிகள், கடவுளின் புரோக்கர்கள், அவர்கள் உருவாக்கிய ராகு, எமகண்டம், ஜோசியம், ஜாதகம், மாயம், மந்திரம், திதி, திவசம், தாரை வார்த்துக் கொடுத்தல் தாயத்து, தட்டு, தகடு போன்ற எல்லா சடங்குகளையும் அடியோடு அகற்றிக் காட்டியது! முதத்தில் ஒரு ஆழமில்லையா? காவி உடைக்குள்ளேயும் கமண்டலத்திலும் மனித உயர்வைத் தேடிக் கொண்டிருந்த மக்களை, நல்லொழுக்கப் பண்பாடுகளே மனித உயர்வுக்குக் காரணம் என்று உணர வைத்து அவர்களை அதற்கேற்ப மாற்றியமைத்தது அந்த வேத வெளிப்பாடு செய்த மறுமலர்ச்சி அல்லவா?

இறை வேதங்களை சில ஜாதியினர் தங்கள் காதுகளால் கூட கேட்கக்கூடாது. அப்படி கேட்டுவிட்டால் ஈயத்தைக்காய்ச்சி அவர்களின் காதுகளில் ஊற்றவேண்டுமென சட்டமியற்றிக்கொண்டு மனித சமுதாயத்தில் ஒரு பெரும் பகுதியினரை மிருகத்திலும் கீழாக நடத்திக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் மனிதர்கள் அனைவரும் சமமே என்று உரத்துச் சொல்லி, வேதத்தை முழு மனித சமுதாயத்துக்கும் பொது உடைமையாக ஆக்கியதை முஹம்மதுக்கு அருளப்பட்ட அந்த வேதத்தைத் தவிர வேறு எந்த வேதம் செய்து காட்டியது?

மது, மங்கை, சூது, ஆடல் பாடல்களில் காலத்தைக் கழித்தும் கொண்டிருந்த மாக்களை அதிலிருந்து விடுவித்தும், நாடோடிகளை நாடாள்வேராகச் செய்ததும்,நேர்மை, ஒழுக்கம், பண்பாட்டுக்கு முன்மாதிரியான சமுதாயத்தை உருவாக்கிக் காட்டியது அந்த வேதம் செய்த பாதிப்பில்லையா? ஒரு சமுதாயம் தன்னுடைய எல்லாப்பழக்க வழக்கங்களையும் சுத்தமாக துடைத்து எறிந்து விட்டு முற்றிலும் மாறுபட்ட புதிய கலாச்சாரத்தை தழுவிக் கொண்டதும், இவரது கண்களில் படவில்லையானால் கோளாறு இவரது கண்களில் தான் உள்ளது, இதில் வேடிக்கை என்னவென்றால் இஸ்லாம் மனித வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும் சொல்லித் தந்தது என்று தன்னுடைய அடுத்த கேள்வியில் குறிப்பிடுகிறார். முரண்பாட்டின் மொத்த உருவமாக ஒருவர் திகழ முடியுமென்றால் ராம்ஸ்வர்ப்பைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது.

கேள்வி:5 போர், சமாதானம், கனீமத்தைப் பங்கிடுதல் வெற்றி கொள்ளப்பட்டவர்களை நடத்தும் முறைகள், எப்படி உடுத்துவது, உண்பது, மலஜலம் கழிப்பது, புணர்வது எல்லாமே இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது; இதனால் சல்மான் ரஷ்டி குர்ஆனைச் சட்டப் புத்தகம் எனப்பரிகசிக்கிறார் என்கிறார் ராம்ஸ்வர்ப்.

பதில்:5 ஆம்! குர்ஆன் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் சொல்லித்தருவது முட்டாள்களின் பரிகசிப்புக்கு உரியது என்றால் எமக்குக் கவலை இல்லை. முஸ்லிம் சமுதாயம் அதை பெருமைக்குரிய ஒன்றாகவே கருதுகிறது. கடவள் பன்றி உருவம் எடுப்பது, மீனும், மனிதனும் இணைந்து மனிதப் பிள்ளையைப் பெற்றெடுப்பது, யானை முகமும் மனித உடலும் கொண்ட விசித்திரப் படைப்பு, ஐந்தாறு கைகள், ஆறேழு முகங்கள் கொண்ட அதிசய உருவங்கள். இவைகளையே வேதத்தில் பார்த்துப் பழகியவர்களுக்கு வந்தவர்களுக்கு முஹம்மதுக்கு வழங்கப்பட்ட வேதத்தில் இவையெல்லாம் இல்லாவிட்டால் அவர்களுக்கு பரிகசிப்பாகத் தோன்றுவதில் வியப்பில்லை. இவைதான் வேதத்தின் இலக்கணம் என்ற நம்பிக்கையுடையோர் நன்றாகப் பரிகசிக்கட்டும்!

கேள்வி:6 கவிஞர்களைப் பற்றியும், கவிதையைப்பற்றியும் முஹம்மது மிக மோசமாக நினைத்திருந்தார். அவர் குர்ஆனை வழங்கியதற்காக மக்கள் அவரைக் கவிஞர் என்று கவுரவித்ததை அவர் நிராகரித்தார். தன்னை நபி என்றே மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில் குறியாக இருந்தார். ஒரு கவியுடைய கவிதையைக் கேட்ட போது அந்த ஷைத்தானைப் பிடியுங்கள்! ஒருவனுடைய வயிற்றில் சீழ்நிரம்பியிருப்பதைவிட அவனுடைய உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பது மோசமானது என்று முஹம்மது சொன்னதாக ஹதீஸ்கள் கூறுகின்றன. மக்கத்துப் பரத்தையரையும் கவிஞர்களையும் மரண தண்டனைக்கு உள்ளாக்கும் போது எழுத்தாளனுக்கும், பரத்தையருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று முஹம்மது கூறியதாக ரஷ்டியின் புத்தகத்தில் காணப்படுகின்றது. மறுபுறமோ முஹம்மது தன்னுடைய தத்துவத்தைப் போற்றுவதற்காகவும், தனது வெற்றியை உயர்த்துவதற்காகவும், எதிரிகளை பழிப்பதற்காகவும் கஃபு இப்னு மாலிக், ஹஸ்ஸான் இப்னு தாபித், கஃபு இப்னு ஸூஹைர் போன்ற கவிஞர்களை அமர்த்திக் கொண்டார். அவர்களுக்கு தாராளமாக செல்வத்தையும், அடிமைப் பெண்களையும் பரிசில்களாக வழங்கினார்.

பதில்:6 நபியின் காலத்தின் அரபுலகிலும், உலகின் பல பகுதிகளிலும் கவிஞர்களுக்கு இருந்த மதிப்பு அளவிடற்கரியதாக இருந்தது. எழுதவும், படிக்கவும் தெரிந்திராத அன்றைய மக்கள், கவிஞர்களை உன்னதமானவர்களாக, தெய்வீக அம்சம் கொண்டவர்களாக, மனிதப் புனிதர்களாக, உத்தமர்களாக எண்ணி மதித்து வந்தனர். இந்தக் கவுரவத்தை எழுதவும் படிக்கவும் அறியாத அந்த நபிக்கு வழங்க முன்வந்த போது அதை நிராகரித்து விட்டார் என்றால் அதுதான் அந்த நபியின் தனித்தன்மை. அவர் உண்மையாளர்; பதவி, புகழுக்காக இவ்வாறு அவர் வாதிடவில்லை என்பதற்கு அது மகத்தான சான்றாகவும் அமைந்துள்ளதை நியாய உணர்வுடன் சிந்திப்பவர்கள் அறியமுடியும். அந்தக் கவுரவத்தை நிராகரித்துவிட்டு, எதைச் சொன்னால் மக்கள் எதிர்ப்பார்களோ, துன்பம் தருவார்களோ, கொலை செய்யவும் கூட முயற்சிப்பார்களோ நாடு கடத்தத் துணிவார்களோ அந்த ‘நபி’ என்ற தகுதியை-அன்றைய மக்கள் நம்ப மறுத்து இழிமொழி பேசிய நபி என்ற தகுதியை-வாதிட்டு அந்தத்துன்பங்களை எதிர்கெண்டாரே அது அவரது நபித்துவத்துக்கு சாட்சியாக அமைந்துள்ளது. ‘கவிஞன்’ என்ற தகுதியை அவர் மறுத்தது அவரது பலமாகவே உள்ளது. அதை பலவீனமாகக் காட்ட எண்ணுகிறார் ராம்ஸ்வர்ப்
‘எழுத்தாளனுக்கும், பரத்தையருக்கும் எந்த வித்தியாசமுமில்லை’ என்று முஹம்மது கூறியதாக ரஷ்டி குறிப்பிடுவது பச்சைப் பொய், அவ்வாறு கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை. கவிஞர்களைப் பற்றி நபி (ஸல்) ராம்ஸ்வர்ப் குறிப்பிட்டப்படி மிகமிகமேசமான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததில்லை.

கவிதை என்ற பெயரால் காம உணர்வைத் தூண்டி விடுவதையும், பெண்களின் அங்கங்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிப்பதையும், மதுபானங்களையும் போதைப் பொருட்களையும் வர்ணித்துப் பாடுவதையும், தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவனை அவனது குலத்தை-கோத்திரத்தை-உருவத்தை-விமர்சிக்கும் கவிஞர்களையும் தான் நபிகள் கண்டித்துள்ளார்கள். அத்தகைய கவிஞர்களையே ஷைத்தான் என வர்ணித்தார்கள். அத்தகைய கவிதைகளையே சீழை விடவும் மோசமானது என்றனர். ‘லபீத்’ என்ற இஸ்லாத்திற்கு முற்பட்ட கவிஞரின் கவிதையை நபி (ஸல்) பாரட்டியதை புகாரியில் காண்கிறோம். நல்ல கவிதை ஒன்றை ஒரு நபித்தோழர் நபியின் முன்னே பாடிக்காட்டிய போது திரும்பவும் பாடுவீராக!என்று பலமுறை அதை அவர்கள் ரசித்துக் கேட்டதை (முஸ்லிம் ஆகிய) நூல்களில் நாம் காண்கிறோம். நபியவர்கள் ரசித்துக்கேட்ட அந்தக் கவிதை முஸ்லிம் கவிஞருடைய கவிதை அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்தமாக கவியையும், கவிஞர்களையும் நபிகள் மறுத்தார்கள் என்பது உண்மைக்கு முரணாகும். நபியவர்களே நல்ல கவிஞர்களை வரவேற்றிருக்கிறார்கள் என்பதற்கு ராம்ஸ்வர்ப் குறிப்பிட்ட மூன்று கவிஞர்களையும் நபிகள் வரவேற்றது சான்றாக உள்ளது. இதில் இவர் குறை காண்பதற்கு எதுவுமில்லை. நபிக்கு இறங்கிய அந்த வேதமும் இருவகைக் கவிஞர்களையும் குறிப்பிடுகிறது. நல்ல கவிஞர்களை வரவேற்கிறது.(பார்க்க அல்குர்ஆன் 26:227)

கேள்வி:7 தன்னுடைய கவிதைகள் மூலம் முஹம்மதை எதிர்த்த காபிர்களை சிரச்சேதம் செய்யுமாறு ஆணையிட்டதாக ஹதீஸ்கள் கூறுகின்றன. முஹம்மதின் போர்கள் (மகாஸி) நூல்களில் முக்கியப் பகுதியாக விளங்குபவை இந்தப் படுகொலைகள் தான் அஸ்மா, அஃபாக், கஃபு இப்னுல் அஷ்ரப் ஆகிய கவிஞர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம் என்கிறார் ராம்ஸ்வர்ப்.

பதில்:7 கவிஞர்களை அவர்கள் கவிஞர்கள் என்ற காரணத்துக்காக மட்டும் ஒருபோதும் கொலை செய்யப்பட்டதில்லை. ஒரு சில கவிஞர்களாக இருந்தவர்கள் வேறு பல கிரிமினல் குற்றங்களைப் புரிந்ததால், அந்தக் கிரிமினல் குற்றங்களுக்காகவே கொல்லப்பட்டனர். ‘ராம்ஸ்வர்ப்’ என்ற எழுத்தாளர் திருடி விட்டார் என்று வைத்துக் கொள்வோம், அவருக்கு நீதிமன்றம் அதற்காக தண்டனை வழங்குவதாக வைத்துக் கொள்வோம். அவர் எழுத்தாளன் என்ற காரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டதாக எவரேனும் கூறினால் அவனைவிட முட்டாள் எவனுமிருக்க முடியாது. அவர் ஹிந்துவாக இருப்பதால் தான் தண்டிக்கப்பட்டார் என்று கூறுவதும் முட்டாள் தனமானது. இதேபோல் தான் எவர் குற்றம் செய்தாலும் இஸ்லாம் சலுகை காட்டியதில்லை. குற்றவாளிகள் கவிஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு தனிச்சலுகை எதுவும் இஸ்லாம் காட்டவில்லை. கவிஞர்களோ, கவிஞர் அல்லாதவர்களோ எவராக இருந்தாலும் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து இஸ்லாம் தப்பவிட்டதில்லை. அந்த அடிப்படையில் சில கவிஞர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையைத்தான் ராம்ஸ்வர்ப் விமர்சிக்கிறார். உதாரணமாக அவர் குறிப்பிட்ட மூன்று கவிஞர்களில் கஃபு இப்னு அஷ்ரபை எடுத்துக் கொள்வோம்

நபிகள் மதீனாவில் ஆட்சியை நிறுவியபின் முதன் முதலில் ‘பத்ரு’ என்னும் போர்க்களத்தைச் சந்திக்கிறார்கள். அதில் நபிகள் மகத்தான வெற்றி பெறுகிறார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் மதீனாவில்-இஸ்லாமிய நாட்டில் ஒரு பிரஜையாக கஃபு இப்னு அஷ்ரப் என்ற கவிஞனும் இருந்தான். பத்ரு வெற்றிச் செய்தியைக் கேள்விப்பட்டதும் உடனே மக்காவுக்கு ஓடி அங்கேயே தங்கி முஸ்லிம்களுக்கெதிராக மக்கத்துத் தலைவர்களைத் தூண்டி விட்டதோடு அவனது சொந்த நாட்டின் இரகசியங்களையும் அர்களுக்குத் தெரிவித்தான். இதன் காரணமாகவே அவனைக் கொல்லுமாறு நபிகள் கட்டளையிட்டார்கள். இப்னு இஸ்ஹாக் இதனை குறிப்பிடுகிறார். ஆதாரப்பூர்வமான வேறு நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது. ஒரு நாட்டைச் சேர்ந்தவன், எதிரி நாட்டுக்கு-அதுவும் இரண்டு நாடுகளுக்குமிடையே பகைமை உச்சகட்டத்தை அடைந்திருக்கும்போது-போர் மேகங்கள் சூழ்ந்து நெருக்கடியான நிலையில் இருக்கும் போது, அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவன் எதிரி நாட்டுக்கு இராணுவ இரகசியங்களைத் தெரிவித்தால் எந்த நாடும் அவனை மன்னிக்க முன்வராது. தேசத் துரோகிகளுக்கு கடுமையான தண்டனையை உலகில் எந்த நாடும் அளிக்கும் அந்த தேசத்துரோக குற்றத்தையே கஃபு இப்னு அஷ்ரப் என்பவன் செய்தான். தேசத் துரோகி கவிஞர் என்பதற்காக அவனை மன்னிக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறார் ராம்ஸ்வர்ப். ஏனைய கவிஞர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையும் அவர்கள் கவிஞர்களாக இருந்தார்கள் என்ற காரணத்துக்காக அல்ல என்பதை ராம்ஸ்வர்ப் உணரவேண்டும்

கேள்வி:8 அல்லாஹ், அல்குர்ஆன், அந்நபி ஆகியவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையாகக் கருதப்பட்டன என்கிறார் ராம்ஸ்வர்ப்.

பதில்:8 இஸ்லாம் ஒருபோதும் விமர்சனத்தை மறுத்ததில்லை. யாரும் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம். ஆனால் விமர்சனம் செய்து உண்மையை உணர்ந்து அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை ஏற்றுக் கொண்டபின் ஒருவன் விமர்சிக்கக்கூடாது. விமர்சித்தால் அவன் இன்னமும் அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இஸ்லாம் கருதுகிறது. இதில் எந்தத் தவறும் இருப்பதாக எவரும் கருதமாட்டார்கள். ஒரு தேசத்தில் பிரஜையாக இருப்பவன் அந்த தேசத்தின் நீதிமன்றத்தை-அது வழங்கும் தீர்ப்பை விமர்சிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அந்த தேசம் சம்மந்தப்பட்ட சில விசயங்களை விமர்சனம் செய்வது தடுக்கப்படுகின்றது. அவ்வாறு விமர்சனம் செய்தால் தேசத்துரோகி என்று அவனுக்குப் பட்டம் சூட்டப்பட்டு தண்டிக்கவும்படுகிறது. ஒரு தேசத்துக்கு என்று விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவைகள் இருப்பதை ராம்ஸ்வர்ப் போன்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இது போலவே ஒரு மதத்தைச் சேர்ந்தவன் என்று ஒருவனைக் கருதவேண்டுமானால் அந்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை அவன் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை ஏற்பதற்கு முன்னால் அவன் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; கேள்விகள் கேட்கலாம் என்பது எப்படித்தவறாகும். ஒரு ராம்ஸ்வர்ப் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம். அல்லாஹ்வை, அவன் தூதரை, அவன் அளித்த வேதத்தை விமர்சனம் செய்யலாம். இஸ்லாம் அதற்கு பதில் தரும். ஒரு சாலமன் ரஷ்டி அல்லாஹ்வை-வேதத்தை-நபியை-ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்ட சாலமன் ரஷ்டி விமர்சித்தால் அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் இன்னமும் இஸ்லாத்தின் கொள்கைகளை அவர் நம்பவில்லை என்று கூறி அவரை இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் என்று இஸ்லாம் முடிவு செய்கிறது. எந்தக் கொள்கையை ஏற்றுவிட்டதாக ஒருவன் கூறுகிறானோ, அவன் அந்தக் கொள்கையை நம்பாதவனாக இருந்தால் அவரது கூற்று எப்படி உண்மையாக இருக்கமுடியும்? இதைத்தான் இஸ்லாம் கூறுகிறது. ராம்ஸ்வர்ப் இதில் குறை காண்பதற்கு எதுவுமில்லை. அவரது புலமை சான்ற கேள்விகள் எதுவுமே புலமை சான்றதாக இல்லை. பொய்யும், முரண்பாடும், பொருந்தா வாதங்களும் நிறைந்ததன் கேள்விகளுக்கு ‘புலமை சான்ற கேள்விகள்’ என்று அவர் பெருமிதப்பட்டுக்கொள்வதில் அர்த்தம் எதுவுமில்லை.

நன்றி: onlinepj.com

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் இன்று வரை இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகின்றது! அதைப் பின்பற்றி நடப்போர் அதிகரித்து வருகின்றனர்! சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகு வேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது!

இந்த வளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட யூத, கிறிஸ்தவ சக்திகளும் நமது நாட்டிலுள்ள இந்து வெறி சக்திகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த சர்வதேச அளவில் திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகின்றன.
எப்படியாவது, இஸ்லாம் ஒரு பிற்போக்கான மார்க்கம் என்று காட்ட பல முனைகளில் சூழ்ச்சி செய்து வருகின்றன. இந்தியாவிலும் உலக அளவிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. இஸ்லாமியச் சமுதாயம் மிக்க விழிப்புடனிருக்க வேண்டிய நேரமிது!

அமேரிக்க அதிபர் கிளின்டன், சல்மான் ருஷ்டி என்ற மஞ்சள் எழுத்தாளரைச் சந்தித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்தச் சந்திப்பை இந்தியாவில் உள்ள செய்தித் தாள்கள் முக்கியத்துவத்துடன் வெளியிட்டதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

இதைச் சாதாரண சந்திப்பாக அறிவுடையோர் கருத முடியாது. ஏனெனில், உலகின் ஒரே வல்லரசாகச் சமீப காலத்தில் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட நாடு அமெரிக்கா. உலகிலேயே அதிக அதிகாரம் பொருந்திய பதவி அந்நாட்டு அதிபர் பதவி. உள்நாட்டு விவகாரங்களிலும் மூக்கை நுழைக்க வேண்டிய பிஸி யான பதவி அது!

அயல் நாட்டு மன்னர்களும் அதிபர்களும் அமைச்சர்களும் கூட எளிதில் சந்திக்க முடியாத அமெரிக்க அதிபரைச் சர்வ சாதாரணமாக சல்மான் ருஷ்டி சந்திக்க முடிகின்றது.

இவர் ஏதேனும் ஒரு நாட்டின் அதிபரா? மாபெரும் விஞ்ஞானியா? சிறந்த சமூக சேவகரா? மிகப் பெரும் தியாகியா? பெரிய வீரரா?எதுவுமே இல்லை! ஒரு எழுத்தாளர்! அவ்வளவு தான்.

எழுத்தாளர் என்றால், தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் புரட்சிகரமான எழுத்தாளரா? அல்லது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பும் துணிச்சல் மிக்க எழுத்தாளரா? போதைப் பொருட்கள், ஒழுக்கக் கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களை நல்வழிப்படுத்தும் சீர்திருத்த எழுத்தாளரா? தீராத பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறும் சிந்தனை மிக்க எழுத்தாளரா? மனித நேயம் வளரப் பாடுபடும் மனிதாபிமானமுள்ள எழுத்தாளரா? நிச்சியமாக இல்லை. ஒரு கீழ்த்தரமான மஞ்சள் எழுத்தாளர்!
இழிந்த நடையில் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் பற்றியும் அவர்களின் துணைவியர் பற்றியும் அவதூறுகளை எழுதிய நரகல் நடை எழுத்தாளர்! இதைத் தவிர எழுத்துலகில் வேறெந்தச் சாதனையும் செய்ததில்லை. இந்தக் கழிசடையைத் தான் அமேரிக்க அதிபர் சந்திக்கிறார். இந்த செய்தியைத் தான் பத்திரிகைகள் பெரிதாக விளம்பரப்படுத்தின.

(இவனது சாத்தானிய வசனங்கள்என்ற நூலுக்கு வேதம் ஓதும் சாத்தான்கள் என்று நாம் எழுதிய மறுப்பு நூலில் இவனது உளறல்களை அடையாளம் காட்டியுள்ளோம்.)

குறைந்த பட்ச தகுதி கூட இல்லாத இவனை அமெரிக்க அதிபரும் பிரிட்டன் அதிபரும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இங்குள்ள பத்திரிகையாளர்கள் இதைப் பெரிதுபடுத்துகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
முஸ்லிம் பெயர் தாங்கியை வைத்தே இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த முயல்வதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது.

மேலை நாடுகளில் கிறித்தவ மதத்தை நார் நாராகப் பலர் கிழித்துள்ளனர். இன்றளவும் கூட கிறித்தவத்துக்குச் சமாதி கட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் இந்த அதிபர்கள் சந்தித்ததில்லை.

இந்துக்களாகப் பிறந்த தி.க.வினர், கம்யூனிஸ்டு இயக்கத்தவர், பா.ம.க. மற்றும் ம.க.இ.க. ஆகிய கட்சியினர் இந்து மதம் குறித்து விமர்சனம் செய்துள்ளனர். அறிவுப்பூர்வமான இந்த விமர்சனங்கள் பற்றி இந்த நாட்டின் செய்தித்தாள்கள் என்றேனும் வரவேற்று எழுதியதுண்டா? இல்லவே இல்லை. முற்போக்கும் புரட்சிகரச் சிந்தனையும் தான் ருஷ்டியை முன்னிலைப்படுத்தக் காரணம் என்றால், டாக்டர் சேப்பன், பிரபஞ்சன் போன்றோரை அதே காரணத்துக்காக இந்த மேல் சாதிப் பத்திரிகைகள் முன்னிலைப்படுத்தியதுண்டா?
பிற்போக்குத் தனத்தின் மொத்த வடிவமாக அமைந்துள்ள தங்கள் மதத்தை விமர்சிப்பதைக் கண்டு கொள்ள மாட்டார்களாம். பிற்போக்குத் தனத்தைப் புறமுதுகிடச் செய்த இஸ்லாத்தைத் தவறாக எவரேனும் விமர்சனம் செய்தால் அவர் புரட்சியாளராம்!

தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தங்கள் மதத்தை விமர்சிப்பது போல் இஸ்லாத்தை விமர்சிக்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகள் கிடைக்க மாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்கள், இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை இரண்டு கழிசடைகளைத் தான் பெற முடிந்துள்ளது. இந்தப் பதினான்கு நூற்றாண்டுகளில் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரீன் என்ற இரண்டு அறிவீனர்களைத் தான் அவர்களால் பிடிக்க முடிந்துள்ளது.

இந்தயப் பத்திரிகையாளர்களுக்கு இப்போது கிடைத்திருப்பவர் தஸ்லிமா நஸ்ரீன்.

பெண்களும் புரட்சிகர சிந்தனைகளும் மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று கருதப்படுகின்ற ஒரு சமூகத்தில் தன் கருத்துக்களை நெஞ்சு நிமிர்த்திச் சொல்லி அசாத்திய துணிச்சலுடன் வாழ்க்கை நடத்துவதற்காகவாவது இந்த எழுத்தாளரை எத்தனை பாராட்டினாலும் தகும் என்று உச்சியில் ஏற்றுகிறது இந்தியா டுடே,. ஏனைய பத்திரிகைகளும் கூட இதே போக்கைத் தான் கடைப்பிடிக்கின்றன.

இந்தியா டுடேயில் இவரைப் பற்றிய கட்டுரையில் கூறப்படுவதன் அடிப்படையிலேயே இந்தியப் பத்திரிகையாளர்களை நாம் அடையாளம் காண முடியும்.

பெண்கள் வித்தியாசமாக நடத்தப்படுவதை என்னுடைய ஒன்பதாவது வயதில் முதல் முறையாக உணர்ந்தேன். எனக்கு பத்து வயதாகும் போதே இனி மேல் வெளியே போகக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். ஆனால், என் இரண்டு சகோதரர்களுக்குத் தடையில்லை என்கிறார். (இந்தியாடுடே – 93, டிசம்பர் 6 – 20)
இவள் இஸ்லாத்தை வெறுத்ததற்கு கூறிய காரணத்தை இந்தியாடுடேயும் ஒப்புக் கொண்டு வெளியிட்டுள்ளது. இந்தியாடுடே இன்னொரு இடத்தில் கூறுவதைப் பாருங்கள்!

-மூன்று வருடங்களுக்கு முன்பு டாக்கா மெடிக்கல் காலேஜில் அனஸ்தீஸியாலஜிஸ்டாக இருந்த நஸரீனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை தரவும் முடியவில்லை-

இந்த இரண்டுக்குமிடையில் உள்ள முரண்பாடு இந்தியாடுடேயின் முற்போக்குக்(?) கண்களுக்குத் தெரிய நியாயமில்லை. ஒன்பது வயதிலேயே வெளியே செல்ல விடாமல் தடுக்கப்பட்ட இவள் எப்படி ஆங்கில மருத்துவம் கற்று டாக்கா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தாள்? இவள் கூறுவது பச்சைப்பொய் என்பதை இந்தியாடுடே உணரவில்லை. ஒரு வேளை காளிதாசனுக்கும் ஞான சம்பந்தனுக்கும் ஞானம்(?) பொங்கியது போல் தஸ்லீமா நஸ் ரீனுக்கும் மருத்துவ அறிவு பொங்கியதாக நினைத்து விட்டது போலும்!

இவள் எத்தகைய வேஷக்காரி என்பதற்கும் பொய்யிலேயே ஊறிப் போனவள் என்பதற்கும் இதை விட வேறு சான்று தேவையில்லை.
ஆண் பெண் உடலுறவுப் பற்றிப் பச்சையா எழுதக் கூடியவர்கள் இந்த நாட்டிலும் உள்ளனர். பெரும்பாலும் பெண்கள் பெயரில் ஒளிந்து கொண்டு ஆண்களே எழுதி வருகின்றனர். இவர்களையெல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று இப்பத்திரிகைகள் போற்றியதில்லை.

ஆண், பெண் செக்ஸுவாலிடி பற்றி வெளிப்படையாக இவர் எழுதியிருக்கிறார். புத்தகங்களின் தலைப்பே இதைப் படம் பிடித்துக்காட்டும் என்றும் இந்தியாடுடே கூறி மகிழ்கிறது.

ஆபாசமான தலைப்புகளில் ஆண், பெண் உடலுறவு பற்றிப் பச்சையாக எழுதியதில் ஆனந்தப்படுகிறார்கள். இவள் புரட்சிகர எழுத்தாளராம்!

இவள் எவ்வளவு தரங்கெட்டவள் என்பதற்கும் இந்தியாடுடே சாட்சி சொல்லுகிறது.

இவர் எழுதிய ஒரு கதையில் வெறுத்துப் போன இரண்டு குடும்பத் தலைவிகள் தங்கள் செக்ஸ் வாழ்வைப் பற்றி பேசுவதாக வருகிறது என்று இந்தியா டுடே வெளிச்சம் போடுகிறது.

உலக வரலாற்றில் எவரும் செய்யாத பெரும் புரட்சி ஒன்றையும் இவள் செய்திருக்கிறாள். மஞ்சள் பத்திரிகையில் பச்சையாகப் பலரும் எழுதி வருகின்றனர். ஆண்களே இந்தக் கேவலமான வேலையைச் செய்து வருகின்றனர். தகாத உறவுகளை நியாயப்படுத்துவோர் உள்ளனர். ஓரினப் புனர்ச்சிக்கு வக்காலத்து வாங்குவோர் உள்ளனர். இந்தக் கீழ்த்தர எழுத்து வியாபாரிகள் கூட ஆண்களே! நீங்கள் கண்ட பெண்களைக் கற்பழியுங்கள் என்று எழுதியதில்லை. அவர்களே எழுதத் துணியாத – புரட்சிகரமான(?) இந்த யோசனையைக் காம வெறி கொண்ட இவள் எழுதியிருக்கிறாள்.

ஒருதரம் ஆண்களைப் பலாத்காரம் செய்ய ஆரம்பிக்கும் படி பெண்களைத் தூண்டினார் என்றும் இந்தியா டுடே பெருமிதப்படுகிறது.

துகாத உறவு கூட, இருவரும் விரும்பியதால் நடப்பதாகத் தான் மஞ்சள் பத்திரிகையாளர்கள் எழுதி வந்தனர். இவளோ ஆண்களைப் பலாத்காரம் செய்யும்படி ஏவுகிறாள்.

இந்த மேல் சாதிப் பத்திரிகையாளர்களை நாம் கேட்கிறோம். சோரணை இருக்குமானால் நேரடியாக இதற்குப் பதில் கூறட்டும்!

இவளது இது போன்ற எழுத்துக்கள் புரட்சி என்றால் உங்கள் குடும்பத்துப் பெண்கள் இவள் எழுதியது போல் எழுதவும் இவளைப் போல் நடக்கவும் உற்சாகமூட்டுவீர்களா? அனுமதியாவது கொடுப்பீர்களா? குறைந்த பட்சம் கண்டு கொள்ளாமலாவது இருப்பீர்களா? இதைப் புரட்சி என்று கூறும் நீங்கள் இந்தப் புரட்சிக்கு உங்கள் குடும்பத்துப் பெண்களைத் தயார்படுத்துவீர்களா? மாட்டீர்கள் என்றால் இவளுக்கு எந்த முகத்துடன் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

பெண்கள் கிடக்கட்டும்! ஆண்களாகிய நீங்கள் உங்கள் பத்திரிகையில் இந்தப் புரட்சியை ஆரம்பித்து வைப்பீர்களா? ஒரு பெண் பலருடன் நடத்திய செக்ஸ் வாழ்க்கையை எழுதினால் பிரசுரிப்பீர்களா? கண்ட இடங்களில் ஆண்களைப் பெண்களும் பெண்களை ஆண்களும் பலாத்காரம் செய்யுமாறு அறிவுரை கூறுவீர்களா? அவ்வாறு செய்து விட்டு இவளை ஆதரித்தால் அதில் உள்ள நியாயத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியும்.

இவையெல்லாம் மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்டவை! மனித அறிவை மழுங்கடிக்கக் கூடியவை! இவ்வாறு எழுதுவது கேவலமான பிழைப்பு என்று நீங்கள் கருதினால் இவளை ஆதரிப்பதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் நீங்கள் வெட்கப்பட வேண்டாமா?

இவளது காமவெறிப் போக்குக்கு மற்றுமொரு சான்றையும் இந்தியா டுடே தருகின்றது.

பொதுவாக பத்திரிகையாளர்கள் பரந்த மனப்பான்மையுடயவர்கள். கவிஞர்கள் அதை விடவும் பரந்த மனப்பான்மை உடையவர்கள் என்று கருதப்படுகின்றனர். மனைவியை இவர்கள் அடக்கியாள மாட்டார்கள்; அவளுக்குப் போதிய சுதந்திரம் வழங்குவார்கள் என்றெல்லாம் நம்பப்படுகிறது.

கடந்த பத்து வருடங்களில் அடுத்தடுத்து மூன்று முறை திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததால் ஆண்கள் பற்றி இப்படி ஒரு அணுகுமுறை அவருக்குள் உருவாகியிருக்கலாம். ஒரு கவிஞருடனும் இரண்டு பத்திரிகையாளர்களுடனும் வாழ்ந்து பார்த்தவர் இவர் என்று இந்தியா டுடே கூறுகிறது.

ஒரு தடவை திருமண ஒப்பந்தம் முறியலாம்! இரண்டு தடவi முறியலாம். பத்தாண்டுகளில் மூன்று திருமணம் செய்து உறவை முறித்துக் கொண்டால்நாகரீத்தை விரும்புகின்ற பத்திரிகையாளர்கள், கவிஞர்களுடன் கூட இவளால் வாழ்க்கை நடத்த முடியவில்லை என்றால் கோளாறு எங்கே என்பதை யாரும் அறியலாம்.

நான் ஆவேசமும் நம்பிக்கையும் அடிக்கடி மாறும் மனநிலை கொண்டவள் என்று அவளே கூறியதாக இந்தியா டுடே குறிப்பிடுகின்றது.

இது புரட்சியா? அல்லது பைத்தியமா? இத்தகைய தடுமாற்றத்துக்கும் அடிக்கடி தன்னை மாற்றிக் கொள்வதற்கும் பெயர் தான் புரட்சி என்று நீங்கள் கருதினால் இந்த நாட்டின் அரசியல் வாதிகளுக்குப் பட்டுக் கம்பளம் விரியுங்கள்! அடிக்கடி நிலைமாறும் அரசியல்வாதிகளைச் சந்தர்ப்பவாதிகள் என்று விமர்சிக்கும் நீங்கள் இவளை மட்டும் புரட்சிக்காரி என்பது ஏன்?

மனநிலை சரியில்லாதவள், துணிந்து பொய் சொல்பவள், காம வெறி பிடித்து அலைபவள், இளைஞர்களின் மனதைக் கெடுப்பவள் என்றெல்லாம் தெரிந்திருந்தும் இவளை நீங்கள் ஆதரிப்பதன் காரணத்தைச் சொல்ல மாட்டீர்கள். நீங்கள் சொல்லாவிட்டாலும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அவள் இஸ்லாத்தை விமர்சித்து விட்டாள் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. அவள் பைத்தியக் காரியானாலும் அவள் கூறுவது பச்சைப் பொய் என்றாலும் வெறி பிடித்து அலைபவள் என்றாலும் இஸ்லாத்தை அவள் குறை கூறி இருக்கும் போது அவளைப் பாராட்டாமல் உங்களால் இருக்க முடியாது.

மதம், பெண்களை எப்படி போகப் பொருளாக நடத்துகின்றது என்று நிரூபிக்க குரானில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி விளாசித்தள்ளியிருந்தார் நஸ் ரீன். இது இந்தியா டுடேயின் வாசகம்.

எவ்வளவுதான் மறைத்தாலும் இவர்களின் உள்நோக்கம் இப்போது தெளிவாகத் தெரிந்து விட்டது. பயன்படுத்தியிருக்கும் வார்த்தையைக் கவனித்தீர்களா? எழுதினார்; குறிப்பிட்டார் என்று கூட எழுதவில்லை. விளாசித் தள்ளினார்என்று மகிழ்ச்சித் துள்ளலுடன் தேர்வு செய்து இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது இந்தியா டுடே. காமவெறி பிடித்த பைத்தியக்காரியைக் கூட புரட்சியாளராகச் சித்தரிக்கக் காரணம் இது தான்.

இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் சொல்கிறோம். எழுதுவதை எழுதிவிட்டுப் பிறகு பல்டி அடித்து மன்னிப்புக் கேட்டு தடுமாறக் கூடிய சல்மான் ருஷ்டி போன்ற கோழைகளையும், மனநிலை சரியில்லாத கேவலமான தஸ்லீமா நஸரீனையும் தான் உங்கள் வலையில் சிக்க வைக்க முடியும். ஒழுங்கான ஒரு முஸ்லிமைக் கூட உங்களால் பிடிக்க முடியாது.

அப்படி என்ன விளாசித் தள்ளிவிட்டார் என்பதை விளக்கமாகக் கூறினால் நாமும் கொஞ்சம் விளாசித் தள்ளலாம். அதை இந்தியா டுடே குறிப்பிடவில்லை.

நீங்கள் அவர்களுக்கு ஆடை; அவர்கள் உங்களுக்கு ஆடை என்று ஆண் பெண் சமத்துவத்தைக் குர்ஆன் கூறுகிறதே அதை விளாசினாரா?

ஆண்களுக்கு இருப்பது போன்ற உரிமைகளும் கடமைகளும் பெண்களுக்கும் உள்ளன எனக் குர்ஆன் கூறுகிறதே அதை விளாசினாரா?

ஆண்களாயினும் பெண்களாயினும் சட்டத்தின் முன் சமம் என்று இஸ்லாம் கூறுகிறதே அதை விளாசினாரா?

அவள் விளாசித் தள்ளியது எது என்று இந்தியா டுடே தெளிவுபடுத்தினால் பதிலளிக்க நாம் தயாராக இருக்கிறோம்.

இவளுக்கு எங்கிருந்தெல்லாம் ஆதரவு கிடைக்கின்றது என்று பாருங்கள்!

அலேன்கின்ஸ்பெர்க், குந்தர்கிராஸ், ஜான் இர்விங், நார்மன்மெய்லர், ஆழிடான் போன்ற சர்வதேச எழுத்தாளர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து மரண தண்டனை விதித்ததைக் கண்டித்திருக்கிறார்கள். சக தோழர் சல்மான் ருஷ்டியும் தான் என்று இந்தியா டுடே கூறுகிறது!

இதில் ஆச்சரியப்பட ஏதுவுமில்லை. இவளுக்காக நாளை வெள்ளை மாளிகையின் கதவுகள் கூட திறக்கப்படலாம்! பிரிட்டிஷ் மகாராணியும் போப்பாண்டவரும் கூட இவளைக் கட்டி அணைக்கலாம்? ஆயினும் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் இவர்களின் திட்டம் ஒருக்காலும் வெற்றி பெறப் போவதில்லை.

இவளது தகாத நடத்தைக்கும் போக்குக்கும் எதிராக பங்களாதேஷ் மக்கள் திரண்டெழுந்திருப்பதைப் பிற்போக்கு என்று வர்ணிக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு நாம் சிலவற்றை நினைவுபடுத்துகிறோம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் சுஜாதா ஒரு தொடர் கதையைக் குமுதத்தில் எழுதினார். (இரத்தம் ஒரே நிறம் என்று நினைவு) அத்தொடர் கதையில் நாடார் சமூகத்தைப் பற்றி அவர் பயன்படுத்திய வார்த்தைக்காக அந்த சமூகமே கொதித்தெழுந்தது. குமுதம் இதழ்கள் சாலை நடுவே எரிக்கப்பட்டன. உடனடியாக அத்தொடரை குமுதம் நிறுத்தியது.

இது போன்று தான் கி. ராஜ நாராயணன் விஸ்வகர்ம சமுதாயத்தைப் பற்றி எழுதிய போதும் எதிர்ப்பு வந்தது. அவர் மன்னிப்புக் கேட்டார்.

எந்த சமூகம் பற்றியும் தவறாக எழுதுவதை அந்தச் சமூகம் சகித்துக் கொள்வதில்லை. இது மனித இயல்பு. இதை உணர்ந்து குமுதமும் நடந்து கொண்டது. எழுதியவர்களும் நடந்து கொண்டனர். புரட்சி வசனம் பேசிக் கொண்டிருக்கவில்லை. புரட்சியாக எழுதக் கூடியவர்களும் கூட அதற்குரிய இலக்கணத்துடன் எழுத வேண்டும்.

சினிமா டைரக்டரான பாலசந்தர் தனது சமூகமான பிராமண சமுதாயப் பெண்ணைப் பற்றி அரங்கேற்றம் சினிமா எடுத்த போது இப்பத்திரிகைகள் கொதித்ததை நாம் மறக்கவில்லை.

சமீபத்தில் உ.பி.யில் ஸஹமத் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியின் சுவரொட்டியில் ராமனின் தங்கை சீதை என்று குறிப்பிட்டிருந்ததைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தையும் நாட்டையும் ரகளையால் திணறச் செய்தார்களே! ஒரு ராமாயணத்தின் அடிப்படையில் ஆதாரத்தோடு வெளியிடப்பட்ட செய்திக்கே இத்தனை காலாட்டா செய்தார்களே! ஸஹமத்தைக் கண்டித்து வேண்டாத வேலையிலீடுபடுவதாகத் தலையங்கம் எழுதினார்களே!

சுஜாதாவுக்கெதிராகவும் கி.ராஜநாராயணனுக்கெதிராகவும் ஸஹமத்துக்கெதிராகவும் போராடியது மட்டும் முற்போக்காம். பங்களாதேஷ் மக்களது நடத்தை பிற்போக்காம். இதுதான் இந்தியப் பத்திரிகைகளின் பத்ரிகா தர்மம்.

இந்தியப் பத்திரிகையாளர்களின் ஒரு தலைப்பட்சமான போக்குக்கு இன்னொரு சான்றையும் கூட நாம் குறிப்பிட முடியும்.

ஹைதராபாத் சிறுமிகள் இருவரை இரண்டு அரபிகள் திருமணம் செய்ததை இந்தப் பத்திரிகைகள் பரபரப்பான செய்தியாக்கின. பெண்ணின் விருப்பமின்றி நடைபெறும் திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிக்க மறுப்பதால் நாமும் அதனைக் கண்டிக்கிறோம்.

நாள் தோறும் தலைப்புச் செய்தியாக்கி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்து ஆட்டம் போட்டார்களே அது நல்ல நோக்கத்தில் செய்தது தானா? உண்மையிலேயே பொருந்தாத திருமணத்தை எதிர்ப்பதென்றால் இது போல் நடக்கும் அனைத்துத் திருமணங்களையும் அவர்கள் எதிர்க்க வேண்டுமல்லவா?

என்.டி ராமாராவ் அடுத்தவரின் மனைவியை திருமணம் செய்தது சரிதானா? அப்பெண்ணின் கணவர் புகார் செய்த பின்னரும் கூட இதை அவ்வளவு பெரிய விடயமாக இந்தியப் பத்திரிகைகள் எடுத்துக் கொள்ளவில்லையே அது ஏன்?
ஒரு சாமியார் திடீரெனக் காணாமல் போக, பலவிதமான வதந்திகள் வந்தனவே அது பற்றிப் பாராளுமன்றத்தில் எவரும் வாய் திறக்கவில்லையே? பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லையே அது ஏன்?

எந்தச் செய்தியாவது இஸ்லாத்தை மாசுபடுத்த உதவும் என்றால் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தப் பயன்படும் என்றால் இவர்கள் அதைப் பெரிய விசயமாக ஆக்குவது என்று செய்து விட்டார்கள். சர்வதேச அளவில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை சமுதாயம் கண்டுகொள்ள வேண்டும்.

நன்றி: onlinepj.com

இஸ்லாம் பெயரால் இஸ்லாத்தின் மீது பொய்யையும் புனை சுருட்டையும் அரங்கேற்றும் தளங்களில், ”ஆன்சரிங்க் இஸ்லாம்” என்ற இணையதளமும் ஒன்றாகும். இத்தளத்திற்கு சில நாடுகளில் தடை விதித்துள்ளனர். – "ஆன்சரிங்க் இஸ்லாம்” தளத்தைக் கண்டு இஸ்லாமிய உலகமே பயந்து ஓடுகிறது என்று அடுத்த பதிவில் பிறமத நண்பர்கள் சேர்த்துக்கொள்ளட்டும்) – திருக்குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது, முரண்பாடுகள் உள்ளது என்று விமர்சிக்கும் பிறமத நண்பர்கள், தங்கள் விவாதத்திற்கான சான்றுகளை "ஆன்சரிங்க் இஸ்லாம்" என்ற தளத்திலிருந்து எடுத்துக் காட்டுகின்றனர். குறிப்பாக மர்யம் என்ற 019வது அத்தியாயத்திலிருந்து ஓரிரு வசனங்களை எடுத்து வைத்திருந்தனர். (பார்க்க: வர்ஷ், ஹஃப்ஸ் காரீகளின் ஓதல் )

திருக்குர்ஆனில் முரண்பாட்டை நிறுவ முயலும் பிறமத நண்பர்கள் சுட்டிய 019:019வது வசனத்தை இங்கு பரிசீலிப்போம். 019:019வது வசனத்தின் அரபி மூலம், தமிழ் உச்சரிப்பில்,

”கால இன்னமா அன ரஸுலு ரப்பிகி லிஅஹப லகி குலாமன் ஸகிய்யா”

 இன்னும், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் அன்றாடம் அணுகும் சில திருக்குர்ஆன் (தமிழ், ஆங்கிலம் உருது மொழி பெயர்ப்புப்) பிரதிகளிலிருந்து படமாக, (படங்களின் மீது சொடுக்கினால் தெளிவாகப் படிக்கலாம்)

—————-
——————
—————
—————-
—————-
————–
————–
————–

திருக்குர்ஆன் மர்யம் அத்தியாயம் 019வது வசனத்தில் இடம்பெறும் ”லிஅஹப” வார்த்தையை (மட்டும்) சிகப்பு வண்ணத்தில் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த ஆவணங்களை பிறமத நண்பர்கள் தவறாக விளங்கி விமர்சித்திருக்கின்றனர் என்று அவர்களின் விவாதத்திலிருந்து விளங்க முடிகிறது. விமர்சனத்தைப் பார்ப்போம்,

* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:

He said, “I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son.”
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li’ahiba
* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்… படிக்கிறார்கள்:
He said, “I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son.”
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba
* அல்பஹர் அல்மொஹித், “Alkishaf” a book for Alzimikhshiry:
He said, “I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son.”
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani ‘n ‘hiba
திருக்குர்ஆன் 019:019வது வசனத்தில் இடம்பெறும் ஒரு வார்த்தையில் – li’ahiba, liyihiba, amarani ‘n ‘hiba என – மூன்று விதமான உச்சரிப்புகள் உள்ளதாக பிறமத நண்பர்கள் இங்கு சுட்டுகின்றனர். இவர்கள் சுட்டியுள்ளது போல் ”hiba” என்று மூலத்தில் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம் பெறவும்கூடாது. எனவே லிஅஹிப, லியிஹிப, அமரனி N ஹிப என்று பிறமத நண்பர்கள் எழுதியிருப்பது கவனக்குறைவான எழுத்துப்பிழையாக இருக்க வேண்டும். எழுத்துப் பிழை என்பதை ஒப்புக்கொண்டால் அதைத் திருத்திக்கொள்ளவும். அல்லது ”ஹிப” என்று எழுதியது சரிதான் என்றால் பிறமத நண்பர்கள் அதற்கான மூல ஆதாரத்தை வைக்க வேண்டும்.

வழங்குவாயாக, தருவாயாக, அளிப்பாயாக போன்ற அர்த்தமுள்ள வார்த்தைதான் ”ஹப்” என்ற அரபுச் சொல்லாகும் எடுத்துக்காட்டாக:


மேற்கண்ட படத்தில், திருக்குர்ஆன் – 003:036, 025:074, 026:083, 037:100 – வசனங்களில் சிகப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள். வசனங்கள் தமிழில்,

“அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் ‘இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
(003:038)

“மேலும் அவர்கள்: ‘எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.” (025:074)

“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!” (026:083)

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக’ (என்று பிரார்த்தித்தார்)” (037:100)

இந்த நான்கு வசனங்களிலும் இடம் பெற்றுள்ள ”ஹப்” என்ற சொல்லில் இருந்து பிறந்தது தான் ”ஹப, அஹப, லிஅஹப” ”லியஹப” என்ற வார்த்தைகளாகும். ”லிஅஹப” என்றால் வழங்குவதற்கு, அளிப்பதற்கு, கொடுப்பதற்கு என்று பொருளாகும்.

“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன். பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்’) என்று கூறினார்.” (019:019)

லிஅஹப என்ற அரபிச்சொல்: அன்பளிக்க, வழங்க, அளிக்க, கொடுக்க என்று பல தமிழ் விளக்கங்களில் மொழி பெயர்த்தாலும் பொருள் ஒன்றுதான். ஆனால், பிறமத நண்பர்கள் விமர்சித்திருப்பதுபோல் ”ஹிப” என்று எந்தக் குர்ஆனிலும் இடம் பெறவில்லை! மாறாக, ”லி அஹப” என்பதை ”லி யஹப” என்று ஓதியிருக்கிறார்கள்.

வர்ஷின் ஓதும் முறை ”லி அஹப”

ஹஃப்ஸின் ஓதும் முறை ”லி யஹப”

இந்த வித்தியாசமான உச்சரிப்பில் ஓதும் நடைமுறையை முஸ்லிம்கள் – மறுக்கவில்லை – ஒப்புக்கொண்டு, இணையதளங்களிலும் வெளியிட்டுள்ள விஷயமாகும்.
திருக்குர்ஆன் விளக்கவுரைகளில், இங்கு விவாதித்துக்கொண்டிருக்கும் மர்யம் அத்தியாயம் 019வது வசனத்தின் ”லிஅஹப” என்ற வாசகத்தின் விளக்கவுரையும் மேற்கண்ட படங்களில் இடம்பெற்றுள்ளன. (சிகப்பு வண்ணத்திர் கட்டம் வரைந்ததில்) அபூ அம்ரு பின் அஃலா என்பவர் ”லிஅஹப” என்பதை ”லியஹப” என்று ஓதியிருக்கிறார் என்ற தகவலைத் தவறாமல் குறிப்பிட்டு, அப்படி ஓதியதால் திருக்குர்ஆன் வசனத்தின் கருத்து சிதைந்து விடுவதில்லை, மாறிவிடுவதில்லை. இரண்டும் ஒரு பொருளையே பறைசாற்றுகிறது என்றும் விளக்கவுரையில் கூறுகிறார்கள்.

”பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க – அன்பளிக்க வந்துள்ளேன்” என்று வானவர் ஜிப்ரீல் கூறுகிறார்.

லி அஹப = நான் (ஜிப்ரீல்) அன்பளிக்க
லி யஹப = அவன் (அல்லாஹ்) அன்பளிக்க

இரண்டு வாசகமும் ஒன்றோடொன்று முரண்படாமல் மிகச் சரியான பொருளைப் பேசுகின்றன. இவ்விடத்தில் பிறமத நண்பர்கள் எதிர்பார்ப்பது போல் திருக்குர்ஆனில் முரண்பாட்டை இது ஏற்படுத்திவிடவில்லை என்பது தெளிவு. இங்கு பிறமத நண்பர்களின் எதிர்பார்ப்பு என்னவென்பதை நாம் தெரிந்துகொள்வது அவசியம்,
“தாய் குர்‍ஆன் ஒன்று உண்டு” என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌? அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.

முஸ்லீம்கள் “மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி…” என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word “according to …” but they have it. Today’s Quran which all we use is according to Obi IBM Kanab.)”
பைபிளை எழுதிய நால்வரும் ஒவ்வொரு விதமாக முரண்பட்டு எழுதியுள்ளனர் என்ற விமர்சனத்துக்கு சரியான விளக்கம் கொடுக்க இயலாமல் – பைபிளில் முரண்பாடுகள் இல்லை என்று நிறுவவும் முடியாமல், பதிலுக்குப் பதில் என்ற தோரணையில் குர்ஆனில் எழுத்துப்பிழை உள்ளது, முரண்பாடு உள்ளது என்று பிறமத நண்பர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.

இங்கு நாம் கூறிக்கொள்வது, எழுத்துப் பிழையும் கருத்துப் பிழையும் ஒன்றாகுமா? என்றால் ஒருபோதும் சமமாகாது. எழுத்துப்பிழைகளைத் திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கருத்துப் பிழையை எக்காலத்திலும் திருத்திட முடியாது. கருத்துப்பிழை கொண்ட பைபிள் வசனங்களை நீக்குவதைத்தவிர வேறு வழியில்லை. பைபிளில் கருத்து முரண்பட்ட வசனங்கள் உள்ளது போல் திருக்குர்ஆனிலும் கருத்து முரண்பட்ட வசனங்கள் உள்ளன என்பதை நிரூபிக்க அவர்கள் வைத்துள்ளவை இதுதான், li’ahiba, liyihiba, amarani ‘n ‘hiba. இதைத் தமிழில் எழுதியிருந்தால் சாயம் வெளுத்துவிடும் என்பதினால் ஆங்கிலத்தில் எழுதி என்னவோ உலக மகா வித்தியாசத்தைக் கண்டுபிடித்து விட்டது போல் குறிப்பிட்டுள்ளனர். அதுவும் திருக்குர்ஆனில் இல்லாத ”ஹிப” என்ற வார்த்தையைச் சேர்த்துத் திருக்குர்ஆன் வசனத்தைத் திரித்துள்ளனர்.

நன்றி: abumuhai.blogspot.com