Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

இஸ்லாம் சந்தித்து வரும் இடுக்கண்கள், இஸ்லாம் எதிர் கொண்ட சவால்கள், அதற்கான தீர்வுகள் இத்யாதிகள் அனைத்தும் உலகம் அறிந்ததுதான். இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த சம்பவம், வரலாற்றுக் குறிப்பேடுகளில் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் இயற்கையாக மரணமடைந்தார்கள் என்பதில் இரண்டு கருத்துகள் இல்லை. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் விஷம் வைத்த உணவை உண்டதால் மரணமடைந்தார்கள் என வரலாற்றில் இல்லாத - சம்பந்தமே இல்லாத செய்தி பரப்பப்படுகிறது. எனவே நபி (ஸல்) அவர்களின் இயற்கை மரணம் பற்றி இங்கு காண்போம்.

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நபிமார்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாக மனித சமுதாயத்துக்கு இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தின் போதனைகைளை வழங்கினான் இறைவன். நபிமார்கள் போதித்த நல்லுபதேசங்கள் புறக்கணிக்கப்பட்டதோடு, சில நபிமார்கள் கொலையும் செய்யப்பட்டார்கள். (பார்க்க: திருக்குர்ஆன் வசனங்கள், 002:061,091. 003:021,112,181. 004:155. 005:070)

நபிமார்களின் அறவுரைகளைப் புறக்கணித்ததும், போதித்த நபிமார்களைக் கொலை செய்ததும் ஏன்? என்றால் மனித மனம் விரும்பாததை போதித்தாலேயே நபிமார்கள் கொலை செய்யப்பட்டார்கள்! என்று திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. மனம் விரும்பியதையெல்லாம் செய்பவருக்கு, அவரின் செயலால் பிறருக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன, பிறருக்குத் தீங்கிழைக்கப்படுகின்றன என்பதை உணர்த்தினால் அது பிடிப்பதில்லை. அவர் அறிவு அதை விரும்புவதுமில்லை. காரணம்: தன்னலம் மட்டுமே பிரதானமாகக் கருதுவது, பிறர் நலத்தில் அக்கறை கொள்ளாமல் இருப்பது.

இவ்வாறு மன இச்சைப்படி வாழ்க்கையை அமைக்க வேண்டாம் என்றே நபிமார்கள் வழியாக இறைவன் போதனைகளை வழங்கினான். ஆனால், மன இச்சையைப் பிரியர்கள், நல்லறங்களைப் பிரச்சாரம் செய்த நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்தும் தொடர்ந்து மன இச்சையிலேயே நீடித்தார்கள்.

சர்வ வல்லமை படைத்த இறைவன் தன்னடியார்களான மனிதர்களுக்கு நேர்வழியையும், ஆதாரங்களையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெள்ளத் தெளிவென தக்க அத்தாட்சிகளுடன் இறைத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து மார்க்கப் பிரச்சாரப் பணிகளை அவர்கள் வழியாக நிறைவேற்றினான். இந்த வரிசையில் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தூதுப் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முந்திய நபிமார்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டது போல், முஹம்மது (ஸல்) அவர்களையும் கொலை செய்வதற்கான திட்டங்கள் எதிரிகளால் வகுக்கப்பட்டது.

(நபியே) உம்மைச் சிறைப்படுத்தவோ, உம்மைக் கொலை செய்யவோ, (ஊரை விட்டு) உம்மை வெளியேற்றவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் செய்கின்றனர், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் சிறந்தவன். (திருக்குர்ஆன், 008:030)

நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் மக்காவில் பிரச்சாரம் செய்தபோது, மக்கா நகரின் பெரும் தலைவர்களெல்லாம் இஸ்லாத்தை எதிர்த்து தமது விஷமத்தனைத்தை வெளிப்படுத்தினார்கள். நபியவர்களின் தந்தையின் சகோதரர் அபூதாலிப் குரைஷிகளின் செல்வாக்கு மிக்கத் தலைவராக விளங்கியதால் நபி (ஸல்) அவர்களை எளிதாக நெருங்க முடியவில்லை

அபூதாலிபின் மரணத்திற்குப் பின் மக்காவில் இஸ்லாத்தை எதிர்த்தவர்களின் தொல்லைகள் அதிகரித்தது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு மதீனாவிலிருந்து அன்சாரித் தோழர்களின் ஆதரவு கிடைத்தது. நபி (ஸல்) அவர்களை எப்படியும் கொலை செய்திட - வேண்டும் என குரைஷித் தலைவர்களும், தலைவரின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட மக்களும் - கொலை வெறியுடன் அலைந்தார்கள். இன்று இரவு முஹம்மதை கொன்று விட வேண்டும் என்ற எதிரிகளின் திட்டம் அவர்கள் எதிர்பாரா அளவுக்கு முறியடிக்கப்பட்டது.

மக்காவைத் துறந்து மதீனாவுக்கு புறப்பட்ட தருணத்திலும் நபியவர்கள் பேராபத்துகளைச் சந்தித்தார்கள். வரலாற்றில் இச்சம்பவம் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. முஹம்மது தப்பித்து விட்டார் என்ற செய்தி பரவியவுடன் குரைஷித் தலைவர்கள் மிகுந்த ஆத்திரமடைந்து முஹம்மத், அபூபக்ர் இருவரில் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என பறைசாற்றினார்கள். அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார் மக்காவுக்கு கொண்டு வருகிறார்களோ அவருக்கு இந்தப் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டது. (புகாரி)

இதனால்,கால்நடை வீரர்கள், குதிரை வீரர்கள், காலடித் தட நிபுணர்கள் என நபி (ஸல் அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் மலைகள், பாலைவனங்கள் காடுகள் பள்ளத்தாக்குகள் என சல்லடை போட்டுத் தேட ஆரம்பித்தனர்.

எதிரிகளின் தேடல் நேரத்தில் நபியவர்களும், அபூபக்ரும் ஃதவ்ர் குகையில் இருந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ''நான் நபி (ஸல்) அவர்களுடன் குகையில் தங்கியிருந்தபோது எனது தலையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது எதிரிகளின் பாதங்கள் தெரிந்தன, நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது தங்களது பார்வையைத் தாழ்த்தினால் நம்மை பார்த்து விடுவார்களே'' என்று கூறினேன். ''அபூபக்ரே! கவலைப்படாதீர்! நம் இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''நிராகரிப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றி போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், ''நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று அவர் தம் தோழரிடம் கூறியபோதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். அமைதியை அவர் மீது இறக்கியிருக்கிறான். நீங்கள் பார்க்காத படைகளை கொண்டு அவரைப் பலப்படுத்தினான்'' (திருக்குர்ஆன், 009:040)

இஸ்லாம் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்த முந்திய நபிமார்களை கொலை செய்தது போல் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை எவராலும் கொலை செய்ய முடியவில்லை! காரணம்: ஏனைய நபிமார்களை விட முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட பல சிறப்பம்சங்களில் மனிதர்களால் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்திட முடியாது என்று நபியவர்களின் உயிருக்கு உத்திரவாதம் வழங்கியிருந்தான் இறைவன்.

''தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச் செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்'' (திருக்குர்ஆன், 005:067)

மக்களோடு மக்களாக சாதாரணமாக வாழ்ந்த மாபெரும் தலைவாரக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். நபியவர்கள் பாதுகாப்பு அரண் எதுவும் அமைத்துக் கொள்ளவில்லை. அப்படியிருந்தும் எதிரிகளின் சூழ்ச்சிகளால் நபியவர்களை கொல்ல முடியவில்லை.

விஷம் வைத்த சம்பவம்.

கைபர் போர் முடிவில் யூதர்கள் விஷம் கலந்த ஆட்டிறைச்சியை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். விஷம் கலந்த இறைச்சியை உண்ட நபித்தோழர் பிஷ்ர் பின் பாரா (ரலி) இறந்து விடுகிறார். நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. விஷத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால், மனிதர்களிடமிருந்து நபியை காப்பாற்றுவான் என்று இறைவன் வாக்களித்திருக்கிறான். அதனால் எந்த கொம்பனாலும் நபியவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்திட முடியாது. விஷத்தாலும் நபியவர்களை கொல்ல முடியாது!

ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு கைபர் போர் நடந்தது. இந்தப் போர் சம்பவத்தையொட்டியே யூதப் பெண்ணால் விஷம் வைத்த விருந்தும் வைக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் விஷம் சாப்பிட்டதால் மரணமடைந்தார்கள் என்பது உண்மையானால் அவர்கள் விருந்து சாப்பிட்ட இடத்திலேயே மரணமடைந்திருக்க வேண்டும். விஷ விருந்தை சாப்பிட்ட நபித்தோழர் சம்பவ இடத்திலேயே மரணித்திருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 10ம் ஆண்டு கழிந்து, ஹிஜ்ரி 11ம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் மரணமடைந்தார்கள்.

இதற்கிடையில்...
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக: (வானவர்) ''ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை இரு முறை ஓதச்செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட (தைக் குறிப்ப) தாவே அதை நான் கருதுகிறேன்'' என்று தெரிவித்தார்கள். (புகாரி) இது ஹிஜ்ரி 10ம் ஆண்டு ரமதான் மாதம் நடந்த சம்பவம்.

ஹிஜ்ரி 10ம் ஆண்டு ஹஜ்ஜின் போது,

''நீங்கள் உங்களது ஹஜ் கடமைகளை (என்னிடமிருந்து) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா) மாட்டேனா என்பதை அறிய மாட்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். (முஸ்லிம்)

மதீனா பள்ளியில் மிம்பரில் ஏறி, ''நான் உங்களுக்கு முன் செல்கிறேன். உங்களுக்கு சாட்சியாளனாக இருப்பேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இன்னும் இதுபோல் நபியவர்களின் பல இறுதி உபதேசங்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை பிரியும் வேளை நெருங்கி, அவர்களது மரணச் செய்தி நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்பதை உணர்த்துகிறது.

''இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்'' (திருக்குர்ஆன், 005:003)

இஸ்லாம் நிறைவடைந்து, தூதுப் பணியும் பூரணமாக நிறைவுப் பெற்று இனி, இறைத்தூதரின் பிரச்சாரப் பணிக்கு அவசியமில்லை என்ற நிலையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உயிரை இறைவன் கைப்பற்றினான்.

நபி (ஸல்) அவர்கள் விஷம் சாப்பிட்டதால் மரணமடைந்தார்கள் என்று பிற மத நண்பர்கள் கூறுவது வெறும் கட்டுக் கதை!

நன்றி:   http://abumuhai.blogspot.com 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று தாமே சொல்லிக் கொள்ளவில்லை என்றொரு தவறானக் கருத்து வைக்கப்படுகிறது. முஹம்மது நபியை, அல்லாஹ்வின் தூதர் என்று மக்களாக விரும்பி அழைத்துக் கொண்டனர் என்று இஸ்லாத்திற்கு எதிரானக் கருத்தும் பேசப்படுகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சுய அறிமுகம் செய்து கொள்ளாமல், முஹம்மதை இறைத்தூதர் என்று மக்கள் எப்படித் தெரிந்து கொண்டிருப்பார்கள்? இது சாத்தியமா? என்று பார்ப்போம்.

அறிமுகமில்லாத எவரும் தன்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது உதாரணமாக:

ஒருவரைச் சந்திக்கும் பொழுது அவர் நானொரு பொறியாளர் என அறிமுகப்படுத்திய பின்னர் அவர் ஒரு பொறியாளர் என்பதைத் தெரிந்து கொள்வோம். இதை அவராகச் சொல்லாமல் அவரைத் தெரிந்து கொள்ள முடியாது. இன்னொரு வழி: அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் மூலமாகத் அறிந்து கொள்ள முடியும். அது, அவர் மற்றவருக்கு ஏற்கெனவே தன்னை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார் என்று பொருள்.

நபித்துவ வாழ்வுக்கு முன், நபி (ஸல்) அவர்களை முஹம்மத் என்ற பெயரில் மக்கா நகர் மக்கள் அறிந்திருந்தனர். முஹம்மத் உண்மையாளர், மிக நம்பிக்கையானவர் என்று நன்மதிப்பும் வைத்திருந்தனர். நபியவர்களின் நாற்பதாம் வயதில் இறைவனால், இறைத்தூதுவராக நியமிக்கப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது நாற்பது வயது வரை, அதாவது அவர்கள் நபியாகத் தேர்ந்தெடுக்கும் வரை வேதம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தார்கள்.

(நபியே) இவ்வேதம் உமக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவராக நீர் இருக்கவில்லை. (திருக்குர்ஆன், 028:086)

இவ்வாறே நம் கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (நபியே) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. திருக்குர்ஆன்,(042:052)

நாற்பது வயதுக்கு முன் வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன? என்பது கூட நபியவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தாம் நபியாகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் உணர்த்துகின்றன. நபியவர்களுக்கு முதன்முதல் இறைச் செய்தி வந்தபோது அதையும் அவர்களால் உறுதி செய்ய முடியாமல் இருந்தார்கள் என்பதை வரலாற்றில் படிக்கிறோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நாற்பதாம் வயதில் இறைவனால் அவனது தூதுவராகத் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். இந்தத் தேர்வு இறைவனுக்கும், நபியவர்களுக்கும் மட்டுமுள்ள தொடர்பாக இருக்கிறது. அப்படியானால் இறைவன் நபியவர்களைத் தூதராகத் தேர்ந்தெடுத்தச் செய்தி மூன்றாமவருக்கு எப்படித் தெரிந்தது? என்ற விடையில்லாக் கேள்வி இங்கு எழுகிறது.

முஹம்மது நபி (ஸல்)அவர்கள் தாம் ஒரு இறைத்தூதர் என்று மக்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னரே இறைவனின் பக்கம் மக்களை அழைத்து, ஏகத்துவ இஸ்லாமியப் பிராச்சாரத்தைத் துவங்கினார்கள்.

நபியவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொண்ட மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே!'' என்றும் அழைத்து வந்தார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதராக தாமாகச் சொல்லிக் கொண்டதில்லை என்பது சரியான வாதமல்ல! மாறாக, நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் தம்மை இறைத்தூதர் என சுய அறிமுகம் செய்து கொண்டார்கள் எனபதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

''மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.'' (திருக்குர்ஆன், 007:158)

''நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம்'' (திருக்குர்ஆன், 004:079 இன்னும் பார்க்க: 004:170. 033:040)

முஹம்மது நபியவர்கள் மனிதகுலம் அனைவருக்கும் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றே திருக்குர்ஆன் மக்களிடையே அறிமுகம் செய்கிறது. குர்ஆன் வசனங்கள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் வாய் வார்த்தைகள் வழியாகவே இறைவன் அருளினான். ''மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.'' எனும் வசனத்தின் வாயிலாக தம்மை இறைத்தூதர் என மக்களிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளும்படி திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

முஹம்மது நபி தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டதில்லை என்ற வாதம் தவறானது என்பதை மேற்கண்ட வசனங்கள் மெய்பிக்கிறது.

மேலும், ''(நபியே) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக'' (026:214) என்ற வசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று எச்சரித்தார்கள்.

''அல்லாஹ்வின் தூதர்'' (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது'' என்று எச்சரிக்கை செய்கிறார்கள். (புகாரி, 4771)

இங்கு தமது தந்தையுடன் பிறந்த சகோதரி, உறவு முறையில் அத்தையாகிய ஸஃபிய்யாவை நோக்கி ''அல்லாஹ்வின் தூதரின் அத்தையே'' எனத் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையில், ''இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்'' என்று உடன்படிக்கையில் எழுதும்படி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி, 2732) (அவ்வாறு எழுத குறைஷியர் சார்பில் ஒப்பந்தம் செய்தவர் மறுத்து விட்டால் என்பது தனி விஷயம்)

இன்னும் அழைப்புப் பணியில், அரசர்களுக்கும், ஆளுனர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கடிதம் எழுத நாடியபோது அரசர்கள் முத்திரை இல்லாத கடிதங்களை படிக்க மாட்டார்கள் என்பதால் வெள்ளியிலான மோதிரத்தை தயார் செய்தார்கள். அதில் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்று பதித்தார்கள்.

அல்லாஹ்

ரஸூல்

முஹம்மது


என்று அதில் மூன்று வரிகளாக இருந்தது (புகாரி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் அஸ்ஹாம் என்ற நஜ்ஜாஷிக்கு எழுதப்படும் கடிதமாகும்..
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவுக்கு எழுதுவது...
மேற்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்தக் கடிதங்களிலெல்லாம் இறைத்தூதர் முஹம்மது எழுதிக்கொள்வது என்று தம்மை அல்லாஹ்வின் தூதர் என்றே அறிமுகம் செய்து கொண்டார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்கள், சொல்லாலும், எழுத்தாலும் தம்மை அல்லாஹ்வின் தூதர் என சுய அறிமுகப்படுத்திய பின்னரே அவர்கள் இறைத்தூதர் என மற்றவர்கள் அறிந்துகொண்டார். அறிந்து நபியவர்களைப் பின்பற்றியவர்கள் முஹம்மதை இறைத்தூதர் என ஒப்புக் கொண்டு, நபியை "அல்லாஹ்வின் தூதரே!" என்று அழைத்து வந்தார்கள்.

ஆகவே, முஹம்மது நபி தம்மை இறைத்தூதர் என்று அறிமுகப்படுத்தியதில்லை என்பது தவறானக் கருத்து மட்டுமல்ல, இஸ்லாத்திற்கு முரண்படும் கருத்துமாகும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை 

நன்றி:   http://abumuhai.blogspot.com 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று தாமே சொல்லிக் கொள்ளவில்லை என்றொரு தவறானக் கருத்து வைக்கப்படுகிறது. முஹம்மது நபியை, அல்லாஹ்வின் தூதர் என்று மக்களாக விரும்பி அழைத்துக் கொண்டனர் என்று இஸ்லாத்திற்கு எதிரானக் கருத்தும் பேசப்படுகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சுய அறிமுகம் செய்து கொள்ளாமல், முஹம்மதை இறைத்தூதர் என்று மக்கள் எப்படித் தெரிந்து கொண்டிருப்பார்கள்? இது சாத்தியமா? என்று பார்ப்போம்.

அறிமுகமில்லாத எவரும் தன்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது உதாரணமாக:

ஒருவரைச் சந்திக்கும் பொழுது அவர் நானொரு பொறியாளர் என அறிமுகப்படுத்திய பின்னர் அவர் ஒரு பொறியாளர் என்பதைத் தெரிந்து கொள்வோம். இதை அவராகச் சொல்லாமல் அவரைத் தெரிந்து கொள்ள முடியாது. இன்னொரு வழி: அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் மூலமாகத் அறிந்து கொள்ள முடியும். அது, அவர் மற்றவருக்கு ஏற்கெனவே தன்னை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார் என்று பொருள்.

நபித்துவ வாழ்வுக்கு முன், நபி (ஸல்) அவர்களை முஹம்மத் என்ற பெயரில் மக்கா நகர் மக்கள் அறிந்திருந்தனர். முஹம்மத் உண்மையாளர், மிக நம்பிக்கையானவர் என்று நன்மதிப்பும் வைத்திருந்தனர். நபியவர்களின் நாற்பதாம் வயதில் இறைவனால், இறைத்தூதுவராக நியமிக்கப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது நாற்பது வயது வரை, அதாவது அவர்கள் நபியாகத் தேர்ந்தெடுக்கும் வரை வேதம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தார்கள்.

(நபியே) இவ்வேதம் உமக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவராக நீர் இருக்கவில்லை. (திருக்குர்ஆன், 028:086)

இவ்வாறே நம் கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (நபியே) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. திருக்குர்ஆன்,(042:052)

நாற்பது வயதுக்கு முன் வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன? என்பது கூட நபியவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தாம் நபியாகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் உணர்த்துகின்றன. நபியவர்களுக்கு முதன்முதல் இறைச் செய்தி வந்தபோது அதையும் அவர்களால் உறுதி செய்ய முடியாமல் இருந்தார்கள் என்பதை வரலாற்றில் படிக்கிறோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நாற்பதாம் வயதில் இறைவனால் அவனது தூதுவராகத் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். இந்தத் தேர்வு இறைவனுக்கும், நபியவர்களுக்கும் மட்டுமுள்ள தொடர்பாக இருக்கிறது. அப்படியானால் இறைவன் நபியவர்களைத் தூதராகத் தேர்ந்தெடுத்தச் செய்தி மூன்றாமவருக்கு எப்படித் தெரிந்தது? என்ற விடையில்லாக் கேள்வி இங்கு எழுகிறது.

முஹம்மது நபி (ஸல்)அவர்கள் தாம் ஒரு இறைத்தூதர் என்று மக்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னரே இறைவனின் பக்கம் மக்களை அழைத்து, ஏகத்துவ இஸ்லாமியப் பிராச்சாரத்தைத் துவங்கினார்கள்.

நபியவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொண்ட மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே!'' என்றும் அழைத்து வந்தார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதராக தாமாகச் சொல்லிக் கொண்டதில்லை என்பது சரியான வாதமல்ல! மாறாக, நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் தம்மை இறைத்தூதர் என சுய அறிமுகம் செய்து கொண்டார்கள் எனபதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

''மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.'' (திருக்குர்ஆன், 007:158)

''நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம்'' (திருக்குர்ஆன், 004:079 இன்னும் பார்க்க: 004:170. 033:040)

முஹம்மது நபியவர்கள் மனிதகுலம் அனைவருக்கும் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றே திருக்குர்ஆன் மக்களிடையே அறிமுகம் செய்கிறது. குர்ஆன் வசனங்கள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் வாய் வார்த்தைகள் வழியாகவே இறைவன் அருளினான். ''மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.'' எனும் வசனத்தின் வாயிலாக தம்மை இறைத்தூதர் என மக்களிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளும்படி திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

முஹம்மது நபி தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டதில்லை என்ற வாதம் தவறானது என்பதை மேற்கண்ட வசனங்கள் மெய்பிக்கிறது.

மேலும், ''(நபியே) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக'' (026:214) என்ற வசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று எச்சரித்தார்கள்.

''அல்லாஹ்வின் தூதர்'' (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது'' என்று எச்சரிக்கை செய்கிறார்கள். (புகாரி, 4771)

இங்கு தமது தந்தையுடன் பிறந்த சகோதரி, உறவு முறையில் அத்தையாகிய ஸஃபிய்யாவை நோக்கி ''அல்லாஹ்வின் தூதரின் அத்தையே'' எனத் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையில், ''இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்'' என்று உடன்படிக்கையில் எழுதும்படி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி, 2732) (அவ்வாறு எழுத குறைஷியர் சார்பில் ஒப்பந்தம் செய்தவர் மறுத்து விட்டால் என்பது தனி விஷயம்)

இன்னும் அழைப்புப் பணியில், அரசர்களுக்கும், ஆளுனர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கடிதம் எழுத நாடியபோது அரசர்கள் முத்திரை இல்லாத கடிதங்களை படிக்க மாட்டார்கள் என்பதால் வெள்ளியிலான மோதிரத்தை தயார் செய்தார்கள். அதில் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்று பதித்தார்கள்.

அல்லாஹ்

ரஸூல்

முஹம்மது


என்று அதில் மூன்று வரிகளாக இருந்தது (புகாரி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் அஸ்ஹாம் என்ற நஜ்ஜாஷிக்கு எழுதப்படும் கடிதமாகும்..
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவுக்கு எழுதுவது...
மேற்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்தக் கடிதங்களிலெல்லாம் இறைத்தூதர் முஹம்மது எழுதிக்கொள்வது என்று தம்மை அல்லாஹ்வின் தூதர் என்றே அறிமுகம் செய்து கொண்டார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்கள், சொல்லாலும், எழுத்தாலும் தம்மை அல்லாஹ்வின் தூதர் என சுய அறிமுகப்படுத்திய பின்னரே அவர்கள் இறைத்தூதர் என மற்றவர்கள் அறிந்துகொண்டார். அறிந்து நபியவர்களைப் பின்பற்றியவர்கள் முஹம்மதை இறைத்தூதர் என ஒப்புக் கொண்டு, நபியை "அல்லாஹ்வின் தூதரே!" என்று அழைத்து வந்தார்கள்.

ஆகவே, முஹம்மது நபி தம்மை இறைத்தூதர் என்று அறிமுகப்படுத்தியதில்லை என்பது தவறானக் கருத்து மட்டுமல்ல, இஸ்லாத்திற்கு முரண்படும் கருத்துமாகும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை 

நன்றி:   http://abumuhai.blogspot.com 

இஸ்லாம் மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்ட முஸ்லிம்கள் இறைவனையும், இறைத்தூதரையும் அனைத்து உலக விஷயங்களையும் விட அதிகமாக நேசிக்க வேண்டும்.

''உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட அவனது தூதரை விட அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்!'' (திருக்குர்ஆன், 009:024)

இஸ்லாத்தை விட மேலாக உறவுகளுக்கும், உலக செல்வங்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை என மேற்கண்ட இறைவசனம் ஆழமாக உணர்த்துகிறது. அதனால் இஸ்லாத்திற்காக எந்த வன்முறையிலும் ஈடுபடலாம் என்று அர்த்தம் கொள்ள இந்த வசனத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை! திருக்குர்ஆனின் மற்ற வசனங்கள் பிறருக்கு அநீதி இழைத்து வரம்பு மீறி நடப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. (அதனால் படிப்பவர்கள் தங்கள் கற்பனையை வேறு திசையில் தட்டி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.)

பெற்றோருக்குக் கட்டுப்பட வேண்டும், உறவுகளைப் பேண வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. எவன் ஒருவன் உறவை முறித்துக் கொள்கிறானோ அவனுடன் உள்ள உறவை நான் முறித்துக் கொள்வேன் என்று இறைவன் கூறுவதாக நபிமொழி இயம்புகிறது.

பூமியில் பரந்து சென்று உலக செல்வங்களைத் தேடிக் கொள்ளுங்கள். வீடு, தோட்டம், துரவுகள் என செல்வங்களை எந்த அளவுக்கு உங்களால் சம்பாதிக்க முடியுமோ, அவற்றை ஆகுமான வழியில் எவ்வளவும் சம்பாதித்து சேகரித்துக் கொள்ளுங்கள் என்றும் இஸ்லாம் அனுமதிக்கிறது!

ஆனாலும், ஏகத்துவ கொள்கைக்கு மாற்றமாக பெற்றோரும், உறவினரும் போதித்தால் அதற்கு இணங்காமல் இஸ்லாத்திற்கே முதலிடம் வழங்க, இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும். இறைவழியில் செலவிட நேர்ந்தால் தமது செல்வங்களை தயக்கமில்லாமல் செலவிட முன் வர வேண்டும். என்பதே திருக்குர்ஆன் 009:024வது வசனத்தின் சுருக்கமான விளக்கம்.

''உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும்வரை அவர் (உண்மையான) நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். (புகாரி, 0015. முஸ்லிம்)

பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள், உலக மாந்தர்கள் அனைவரையும் விட இறைத்தூதர் (ஸல்) அவர்களே ஒரு முஸ்லிமிற்கு மிகவும் பிரியமானவராக இருக்க வேண்டும். பிரியமானவர் என்றால், இம்மை எனும் இந்த உலக வாழ்க்கையில் வழிகாட்டியாகவும், மறைவான மறுமை வாழ்க்கை மீதான அவர்கள் அச்சமூட்டி எச்சரித்ததை நம்பிக்கை கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றிட வேண்டும்.

''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்'' (திருக்குர்ஆன், 003:031)

இம்மை, மறுமை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அதற்கு முன்மாதிரியாக முஸ்லிம்கள் பின்பற்றிட ஒரே மாமனிதர் நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் இல்லை! எனவும் திருக்குர்ஆன் வசனங்கள் சான்றுகள் பகிர்கின்றன.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு தனி மனிதரல்ல. இறைவனின் தூதுவர் எனும் மாபெரும் அந்தஸ்தை பெற்று இஸ்லாம் எனும் முழு மார்க்கமாகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் நுபுவத்தைக் கீழ்த்தரமாக, கேவலமாக, அசிங்கப்படுத்தினால் அது இஸ்லாத்தை அவமதிப்பதாகும். அதை முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையே வரும் நபிமொழியிலிருந்து விளங்கலாம்.

கண்பார்வையற்ற ஒரு மனிதரின் (தாய்மையடைந்த) அடிமைப்பெண், நபி (ஸல்) அவர்களை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் நிந்தனைகள் பல செய்து கொண்டும் இருந்தாள். அம்மனிதர் பலமுறை மன்னித்தும் நபி (ஸல்) அவர்களை திட்டுவதை அவள் நிறுத்தவில்லை. அவர் பலமுறை அவளை எச்சரித்தும் அவள் திருந்தவில்லை. ஒரு நாள் இரவு அவள் நபி (ஸல்) அவர்களை அசிங்கமாகத் திட்டித் தீர்த்தாள், நபிகளை வசைமாறிப் பொழிந்தாள். எனவே கண்தெரியாத அந்த மனிதர் ஒரு கத்தியை எடுத்து அவளின் வயிற்றில் குத்திவிட்டார். இதனால் அவளும் அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்துவிட்டது. மறுநாள் காலை இச்சம்பவம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் மக்கள் அவையை கூட்டினார்கள் பிறகு மக்களை நோக்கி கேட்டார்கள். ''மக்களே உங்களை பரிவுடன் கேட்கிறேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களில் யார் இந்த காரியத்தை செய்தது? மேலும் அவர் இவ்வவையில் இருப்பின் எழுந்து நிற்க வேண்டும் என்று அவர்மீது எனக்குள்ள உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்கள். பின்னர் மக்களிடமிருந்து ஒருவர் எழுந்து நின்றார்.

பிறகு அந்த நபர் நபி(ஸல்) அவர்களுக்கு முன் அமர்ந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளின் உரிமையாளன். அவள் கேவலமான வார்த்தைகளால் உங்களை திட்டுவதும், தொடர்ந்து நிந்தனை செய்வதுமாக இருந்தாள். நான் அவளை பலமுறை மன்னித்தேன். இருப்பினும் அவள் உங்களை இகழ்வதை நிறுத்துவதாக இல்லை. அவளை பல முறை நான் எச்சரித்தும் தன் நிலையை மாற்றிக் கொள்வதாக அவள் இல்லை. அவளிடமிருந்து முத்துக்களைப் போன்ற இரு மகன்களைப் நான் பெற்றிருக்கின்றேன். அவள் என்னுடைய மனைவி. கடந்த இரவு அவள் உங்களைக் கேவலமாகத் திட்டிக் கொண்டும் வசைமாறிப் பொழிந்து கொண்டுமிருந்தாள். எனவே கோபத்தில் ஒரு ரம்பத்தை எடுத்து அவள் வயிற்றில் குத்திவிட்டேன்'' என்றார்.

பிறகு, ''சாட்சியாளர்களாக இருங்கள்! அவளின் இரத்தத்திற்கு பழி வாங்கப்படாது.'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அபூதாவூத், நஸயீ )

இந்த நபிமொழிக்கு ஒரு மாற்று மத அடியார் கீழ்கண்டவாறு ''ஷரஹ்'' எழுதியிருக்கிறார்.

//முஹம்மதைத் திட்டினால் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் வயிற்றில் குத்தி கொன்று விட்டு வா. உன் மீது எந்த குற்றமும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்//

வேடிக்கையைப் பாருங்கள், முஹம்மதைத் திட்டினால் யாராய் இருந்தாலும் கொன்று விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நபியவர்களின் மீது கூசாமல் அவதூறு கூறியிருக்கிறார். மேற்கண்ட நபிமொழியை மீண்டும் படித்துப் பாருங்கள். நபி (ஸல்) அவர்களுக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததே தெரிந்திருக்கவில்லை. பின்னர் மக்கள் கூடியிருந்த அவையில், -''அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களில் யார் இந்த காரியத்தை செய்தது?'' - என்று விசாரிக்கிறார்கள். பிறகு கண் தெரியாத மனிதர் எழுந்து காரணத்தை கூறுகிறார். நடந்த சம்பவங்கள் மிகத் தெளிவாக இருந்தும் அதைத் திரிப்பதில் தேர்ந்தவர்கள் செய்யும் காரியத்தையே இந்த மாற்று மத அடியார் கையாண்டிருக்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் தமக்காக யாரையும் பழி வாங்கியதில்லை என நபிமொழி தொகுப்பு புகாரியில் இடம் பெற்ற செய்தி விளக்குகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு விருந்தளிக்கிறேன் என்று ஆட்டிறைச்சியில் விஷத்தைக் கலந்து கொலை செய்ய முயன்ற யூதப் பெண்ணையும் நபியவர்கள் மன்னித்தார்கள். நபித்துவம் துவக்க காலத்தில் மக்காவில் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது இவர் சூனியக்காரர், பைத்தியக்காரர் என்றெல்லாம் மக்காவாசிகள் விமர்சித்தார்கள். இன்னும் நபியவர்களைக் கொலை செய்யவும் முயன்றார்கள். இப்படித் தம்மை விமர்சித்தவர்களையும், தமக்குக் கொடுமைகள் இழைத்தவர்களையும் நபி (ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். தமக்காக யாரையும் பழி வாங்கியதில்லை!

வரலாறு இவ்வாறு இருக்க, சம்பந்தமில்லாமல் மேற்கண்ட நபிமொழிக்கு ''ஷரஹ்'' எழுதியவரின் கயமைத்தனம் நன்றாக விளங்குகிறது!

''உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும்வரை அவர் (உண்மையான) நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.''

நபி (ஸல்) அவர்களை நேசிப்பது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அந்த நம்பிக்கையை கேவலப்படுத்தினால், அதன் விளைவுதான் இந்த சம்பவம்.

''கடந்த இரவு அவள் உங்களைக் கேவலமாகத் திட்டிக் கொண்டும் வசைமாறிப் பொழிந்து கொண்டுமிருந்தாள். எனவே கோபத்தில் ஒரு கத்தியை எடுத்து அவள் வயிற்றில் குத்திவிட்டேன்.''

இதிலிருந்து இஸ்லாத்தை விமர்சிப்பது என்பது வேறு, இஸ்லாத்தைக் கேவலாமாகத் திட்டி வசைமாறிப் பொழிவது என்பது வேறு. இரண்டாவதைச் செய்தால் அவர்கள் கொல்லப்பட்டாலும் அதற்கு ''பழிக்குப் பழி'' இல்லை என்று அந்த சம்பவத்துக்கு நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.

அதற்காக இன்று இஸ்லாத்தைக் கேவலமாக வசை பாடுபவர்களை தனி ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு குழுவோ கொன்றுவிட வேண்டும் என்று பொருள் இல்லை என்பதை முஸ்லிம்கள் விளங்கியே வைத்துள்ளனர்.

விளங்காத மாற்று மத அடியார்கள், இல்லாத விளக்கத்தை வழக்கம் போல் நபிமொழியில் திணிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இது இஸ்லாத்திற்கு எந்த தீங்கையும் ஏற்படுத்திடாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை 
 
நன்றி: http://www.islamkalvi.com/
 

தற்போதுள்ள நமது சரித்திரப் பாடப்புத்தகங்கள் அந்த கால முஸ்லிம் மன்னர்களைப் பற்றி தவறான ஒரு கருத்தைக் கூறி தற்போதைய தலைமுறையினரிடம் , உண்மைக்கு மாறான ஒரு கருத்தைப் பரப்பி வருகிறது. அந்தக்கால முஸ்லிம் மன்னர்களில் பலர் இந்துக்களை வெறுத்தவர்கள் போலவும், கோவில் சிலைகளை உடைத்து நொறுக்கியவர்கள் போலவும், இந்துக்களை வாள் முனையில் மிரட்டி முஸ்லிம் மதத்துக்குக் கொண்டு போனவர்கள் என்றும் சித்தரிக்கப்படுகின்றன.

இவையெல்லாம் பொய்யானவை – முஸ்லிம்கள் மீது ஒரு தப்பபியாரத்தை ஏற்படுத்த இட்டுக்கட்டிய கட்டுக்கதை – என்று நான் சொன்னால் பலர் நம்பமாட்டீர்கள்.

நமக்கு எதுக்கு பொல்லாப்பு

ஓரிஸா கவர்னர் பி.என். பாண்டே அவர்கள் நிகழ்த்திய மூன்று பேரூரைகள், இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும்” Islam and Indian Culture என்ற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. அதை ஒரு முறை படித்துப் பாருங்கள். உங்கள் கடைக்காரரிடம் அந்தப் புத்தகம் இல்லாவிட்டால், புத்தக ஆசிரியருக்கு எழுதி ஒரு பிரதி கேட்டுப் பாருங்கள். இலவசமாகத் தர அவர் ஒப்புக்கொள்ளாவிட்டால், நான் அதற்குண்டான காசைக் கொடுத்து விடுகிறேன். அதைப் படித்துப் பாருங்கள். நமது பள்ளிகள், கல்லூரிகள் எல்லாவற்றிலும் அதைக் கட்டாயமாகப் படிக்கச் செய்யலாம் என்று கூட கருதுகிறேன்.

சரித்திர உண்மைகள் என்று அச்சிடப்பட்டுள்ளவற்றில் உள்ள சில பொய்களை அவர் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறைத் தலைவராக உள்ள டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி அவர்கள் எழுதிய சரித்திரப் புத்தகம் என்று உள்ளது. அதில் அவர் ஒரு செய்தியை எழுதியிருக்கிறார். முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி திப்புசுல்தான் வற்புறுத்தியதால் 1,000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்” என்று அந்தப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவல் அவருக்கு எப்படிக் கிடைத்தது என்று விசாரித்த போது மைசூர் கெஜட்டிலிருந்து எடுத்ததாகச் சொல்கிறார் டாக்டர் சாஸ்திரி. இப்படிப்பட்ட செய்திகளை கெஜட்டில் கண்டுபிடிக்க முடியாது. சாஸ்திரி அவர்கள் குறிப்பிடுகிற வேறு ஆதாரங்களிலும் அப்படிப்பட்ட செய்தி இருக்காது, என்றாலும் அவரது புத்தகம் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், பீஹார், ஓரிஸ்ஸா, மத்தியப்பிரதேசம், உத்தர்பிரதேஷம் ஆகிய மாநிலங்களிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பாடப்புத்தகமாக வைக்க அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

அவர் குறிப்பிட்டிருக்கிற செய்தி உண்மையென்றால் , திப்பு சுல்தான் இந்துக் கோயில்களுக்கு எராளமான மானியம் கொடுத்திருக்கிறாரே எப்படி? அது மட்டுமா? சீரங்கப்பட்டினத்திலுள்ள தனது கோட்டைக்குள்ளிருக்கும் சீரங்கநாதர் கோயிலில் தினசரி பூஜை நடைபெறவும் திப்புசுல்தான் ஏற்பாடு செய்தவராயிற்றே!

முஸ்லிம் மன்னர்களிலேயே மிக மோசம் என்று வர்ணிக்கப்படுபவர் அவுரங்கசீப். அந்த அவரங்கசீப் இந்துக்களின் தேவஸ்தானங்களுக்கும், சீக்கிய குர்துவாராக்களுக்கும் ஏகப்பட்ட அளவில் மானியம் வழஙகியுள்ளார். சில இந்துக் கோயில்களை இடிக்க அவர் ஆணையிட்டிருக்கிறார். இதே போல் முஸ்லிம் மசூதிகள் சிலவற்றையும் அவர் இடித்துத் தள்ள உத்தரவு போட்டுள்ளார். தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று நிரூபிக்கப்பட்டால் அது முஸ்லிம் மசூதியோ, இந்துக்களின் கோயிலோ பாரபட்சமே காட்டுவதில்லை அவரங்கசீப். உடனே அதை இடித்துத் தள்ளு என்று கடுமை காட்டியிருக்கிறார்.

இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பகை உணர்வை விதைக்கும் வகையில் பிரிட்டிஷ்காரர்கள் திட்டமிட்டு இப்படியான பொய் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுச் சென்றிருப்பதாக பாண்டே விளக்குகிறார். வெள்ளைக்காரர்கள் ஆட்சியின் போது, துரை மார்கள் எழுதிய கடிதங்களில் “ஒருவரோடு ஒருவர் மோத விட வேண்டும் என்ற வாசகம் உள்ளதையும், கர்சன் பிரபுவுக்கு ஹேமில்டன் எழுதிய கடிதத்தில் “நமது நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொண்டு படித்த இந்திய மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். டஃபரின் பிரபு எழுதியுள்ள ஒரு குறிப்பில் “மதத்தின் பேரால் ஏற்படுகிற பிளவு தான் நாம் பிரிட்டிஷாரின் நிலையை வலுப்படுத்தும்” என்று சொல்லி இருக்கிறார்.

சரித்திரம் எழுதியுள்ள அந்தக் காலத்து சாஸ்திரிகளும், இந்த காலத்து பி.என். ஒய்க்ஸ்களும் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக இளம் உள்ளங்களில் விஷம் தூவி இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

நன்றி: அந்நஜாத் 1987

காபா எனும் இறையில்லம் மனிதர்களுக்காக முதன் முதலாகக் கட்டப்பட்ட ஆலயம் என்று இஸ்லாம் மார்க்கத்தின் திருமறையான, திருக்குர்ஆன் கூறுகிறது.

''அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன், 003:096)

மக்காவில் அமைந்த காபா, மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையில்லம். காபாவின் வரலாறு மிகத் தொன்மையானது. இது பற்றிய வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டம்:

ஹிஜாஸ் எனத் தற்போது அழைக்கப்படும் பகுதியைக் குறிப்பிடும்போது, ''அது பூர்வீக மக்களால் பெரிதும் கெளரவிக்கப்பட்ட பகுதி என்றும் அங்கு கல்லான ஒரு பலி பீடம் இருந்தது. அது மிகத் தொன்மையானது. சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் அதனை தரிசிக்க எல்லாத் திசைகளிலிருந்தும் வந்தனர்'' என்று டியோடரஸ் ஸிகுலஸ் குறிப்பிடுகிறார். - (சி.எம். ஓல்ட் ஃபாதர் என்பவரின் மொழிபெயர்ப்பு லண்டன் 1935 வால்யூம் 2 பக்கம் 211)

''காபா மிகப் பழமையானது. யாத்திரிகர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்கு வந்தனர். இப்படி இவர்கள் வருவது எப்போது தொடங்கியது என்பதே தெரிய முடியாத அளவுக்கு வெகு காலத்திற்கு முன்பே காபா இருக்கிறது''. என்று இஸ்லாத்தின் எதிரியான ஸர் வில்லியம் முயீர் கூறுகிறார். அவரே எழுதிய, Life of Mohammed - 1923, பக்கம் 103.

காபாவின் பழமை பற்றி, வராலாற்று ஆய்வுக்கு எட்டாத மிகத் தொன்மையானத் திருத்தலம் என்பதை வரலாற்று ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தப் பழமையான இறை ஆலயம் எத்தனை முறை புதுப்பித்துக் கட்டப்பட்டது என்பதற்கான சரியான வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை. நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் காபா சிதிலமடைந்து இருந்தது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இப்படி சிதிலமடைந்து கிடந்தது என்பதற்கும் இஸ்லாத்தில் சரியான குறிப்புகள் இல்லை!

எந்த மக்களும் குடியிருக்காத மக்கா எனும் அந்த இடத்தில் காபா சிதிலமடைந்து கிடந்தது. இறைவன் தனது நபி இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு மீண்டும் புதுப்பிக்கும்படி பணிக்கிறான். இது தொடர்பாக இஸ்லாத்தின் சான்றுகள் இருக்கின்றன. இங்கிருந்தே காபாவின் வரலாறு மீண்டும் துவங்குகிறது. வெறும் அடித்தளம் மட்டுமே இருந்த மிகத் தொன்மையான காபாவை, இறைவனால் அடையாளம் காட்டப்பட்டு நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரது மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களும் புதுப்பித்துக் கட்டுகிறார்கள். கட்டி முடித்து, இறைவனிடம் பிரார்த்தனையும் செய்கிறார்கள். (பார்க்க: அல்குர்ஆன், 002:125-130)

மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலாக அமைக்கப்பட்ட காபா எனும் இறையில்லம் மிகச் சரியாக, ஏற்கெனவே இருந்த அதே அடித்தளத்தில் மீண்டும் கட்டி எழுப்பப்படுகிறது. (காபாவின் மீள் துவக்க வரலாறு பற்றி இன்னும் விரிவாக திருமறை வசனங்களும், பல நபிமொழிகளும் கூறுகிறது. காபா அதன் சரியான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அலசுவது மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம் என்பதால் மேற்கொண்டு செல்வோம்)

ஒரு வரலாறு:

நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்விற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்:

நபித்துவ வாழ்விற்கு முந்திய கால கட்டத்தில் ரோமானியப் பேரரசு யமன் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதும், யமன் நாடு அபிசீனியாவின் ஆளுகைக்கு உட்பட்டது. அப்போது யமனில் அபிசீனியாவின் ஆளுநராக இருந்த அப்ரஹா என்பவன், அபிசீனியா மன்னரின் பெயரால் யமனில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை எழுப்பியிருந்தான். புனித மக்காவில் இருந்த காபா ஆலயத்திற்குச் செல்லாதவாறு, அரபியர்களை அந்த தேவாலயத்தின்பால் ஈர்ப்பதற்காக அதில் பல்வேறு வகையான பகட்டான அலங்காரங்களையெல்லாம் செய்திருந்தான்.

அரபு தீபகற்பத்தின் மத்திய பாகத்திலும், அதன் வடபுலங்களிலும் வாழ்ந்திருந்த அரபியர்கள், அப்ராஹாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த யமன் நாட்டு மக்கள் அனைவரும் புனித காபா ஆலயத்தின் பக்கமே தங்களின் கவனத்தைத் திருப்பியவர்களாகவும், அதன்பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருப்பதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தமது இந்த எண்ணத்தை அபிசீனிய மன்னருக்கு எழுதித் தெரிவித்தான்.

அவன் எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்டும், அரபிகளை அவர்களின் புனித ஆலயமான காபாவை விட்டுத் திருப்பிவிட முடியவில்லை. அப்போது அப்ரஹா காபா ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு மக்களின் கவனத்தை, தான் எழுப்பிய கிறிஸ்தவ தேவாலயத்தின் பால் திருப்பிவிடும் எண்ணத்தில் பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டான். அதில் ஏராளமான யானைகளும் இருந்தன. மிகப் பெரும் பட்டத்து யானை அவற்றிற்கெல்லாம் முன்னணியில் சென்றது.
இதற்கிடையே அவன் இந்த நோக்கத்துடன் புறப்பட்டு விட்ட செய்தி அரபு நாடு முழுவதும் பரவியது. தமது புனித ஆலயத்தைத் தமது கண் முன்பே இடித்துத் தகர்த்துவிட அவன் வந்து கொண்டிருக்கும் செய்தி அரபிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.

இதன் காரணமாக அரபுகள் ஒவ்வொரு குலத்தாரும் அணிதிரளும்படி வேண்டியபின் படை திரட்டிக்கொண்டு அப்ரஹாவை மக்காவிற்கு சென்று விடாமல் வழியிலேயே தடுக்க, அவன் படையுடன் போர் செய்தார்கள். எனினும் அவர்கள் தோல்வி கண்டார்கள். அப்ரஹா, தம்முடன் போர் செய்து தோல்வியடைந்தவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு, காபா ஆலயத்தை இடித்துத் தகர்க்க தொடர்ந்து இராணுவத்துடன் முன்னேறி வந்தான்.

காபாவை இடிக்க வந்த அப்ரஹாவின் யானைப்படையை இறைவன் என்ன செய்தான் என்பதை திருக்குர்ஆன், அல்ஃபீல் - யானை - 105வது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.

(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
(அல்குர்ஆன், 105:001-005)

இயந்திரங்கள் இல்லாத அந்தக் காலத்தில் பலம் பொருந்திய யானைகளைக் கொண்டு காபாவை உடனடியாக இடித்துத் தகர்த்து விட முடியும். மேலும், நவீன போர் கருவிகள் இல்லாத அக்காலத்தில் இரும்பினால் செய்யப்பட்ட வெறும் ஈட்டி, வாள், கத்தி இவைகளைக் கொண்டு மனிதர்களிடையே போரிட்டுத் தாக்கிக் கொள்ள முடியுமே தவிர, யானைப் படையுடன் போர் செய்ய அந்தக் கருவிகள் உதவாது. யானைப் படையை எதிர்க்க பலமில்லாமல் இருந்த மக்காவின் குறைஷிகள், மற்றுமுள்ள குலத்தார்கள், இது இறைவனின் வீடு அதை அவனே பாதுகாத்துக்கொள்வான் என்று அப்ரஹாவின் யானைப் படையுடன் போர் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார்கள்.

அப்ரஹாவின் யானைப்படை மக்காவை நோக்கி வந்தது. முன்னணியில் வந்து கொண்டிருந்த பட்டத்து யானை மக்காவிற்குள் நுழைய மறுத்து மக்காவிற்கு வெளியேலேயே படுத்துவிட்டது. அதைக் கிளப்புவதற்கு எத்தனையோ முயற்சிகளை செய்தும் முடியவில்லை.

நபித்துவ வாழ்வில், ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட நாளில் மக்காவிற்குள் நுழைய மறுத்து, நபி (ஸல்) அவர்களின் கஸ்வா எனும் ஒட்டகம் மக்காவிற்கு வெளியிலேயே படுத்துக்கொண்டது. நபித்தோழர்கள், ''கஸ்வா இடக்குப் பண்ணுகிறது'' என்றார்கள். ''கஸ்வா இடக்குப் பண்ணவில்லை! அது சண்டித்தனம் செய்யும் இயல்புடையதுமில்லை! ஆயினும் அன்று அப்ரஹாவின் யானையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்தவனே இப்போது இதனையும் தடுத்து விட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அப்ரஹாவின் யானைப்படை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய இறைவன், பறவைக் கூட்டங்களை அனுப்பி, அவர்கள் மீது சுடப்பட்ட கற்களை எறிய வைத்து, மென்று தின்னப்பட்ட வைக்கோல் போல யானைப் படையும், அப்ரஹாவும் அழிக்கப்பட்டார்கள்.

நபித்துவ வாழ்வில், மக்கா வெற்றி கொண்ட நாளில்

''நிச்சயமாக அல்லாஹ்தான் அன்று யானைப் படையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினான். அவனே இன்று அவனது தூதரையும், நம்பிக்கையாளர்களையும் மக்காவின் மீது ஆதிக்கம் பெற வைத்திருக்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

காபாவை இடித்துத் தகர்க்க வந்த அப்ரஹாவும் யானைப் படையையும் மக்காவிற்குள் நுழையக்கூட முடியாமல், அழித்தொழிக்கப்பட்டார்கள். என்பதை திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் கூறுகிறது. காபா எனும் இறை ஆலயத்தைக் காத்துக்கொள்வதற்கு மனிதர்கள் சக்தி பெறவில்லையெனில் காபாவை இறைவன் காப்பாற்றிக் கொள்வான்.

(மீண்டும் அடுத்த பகுதியில்... இறைவன் நாடட்டும்)

அன்புடன்.
அபூ முஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்


மக்காவில் அமைந்திருக்கும் காபாவை, உலக முஸ்லிம்கள் புனித ஆலயமாகத் தமது வணக்க வழிபாட்டை அதை நோக்கி அமைத்துக் கொள்கிறார்கள். காபா ஆலயத்தை வன்முறை நோக்கத்தோடு தாக்கி அழிப்பதற்கு எவரேனும் முயன்றால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை திருக்குர்ஆன் 105வது அத்தியாயம் கூறுகிறது. அதற்கான வரலாற்று சான்றுகளை  பகுதி- 01ல் காணலாம்.

மேலும்,

''ஒரு படை காபாவின் மீது படையெடுக்கும், அப்படையை பூமி விழுங்கிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) காபாவை வன்முறையால் அழிக்கவருபவர்களை இறைவன் அழித்து விடுவான் என்பதை மேற்காணும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது. அப்படியானால் காபாவை எவராலும் இடித்து அழித்துவிட முடியாதா? என்றால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை!

''அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் காபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

''(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி காபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கிறது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

காபாவை இடித்து அழிக்க வருபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று கூறும் இஸ்லாம், காபாவை வளைந்த, மெலிந்த கால்களையுடையர்கள் உடைத்து பாழ்படுத்தி விடுவார்கள் என்றும் கூறுகிறது. ஒரு காலகட்டம் வரை காபாவை எவராலும் அழிக்க முடியாது. ஒரு காலத்தில் காபாவை இடித்துப் பாழ்படுத்தி விடுவார்கள். முஸ்லிம்களாலும் அவர்களைத் தடுக்க இயலாமல் போகலாம். அப்போது காபாவை இடித்துப் பாழ்படுத்துபவர்களை இறைவனும் தடுக்கமாட்டான். (இது இறுதி நாளுக்கு நெருக்கமாக நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்)

''யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும், உம்ராவும் செய்யப்படும்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தாரின் வருகைக்குப் பிறகும் காபா ஆலயம் இருக்கும் என்பது நபியின் வாக்கு!

இஸ்ரேலியத்தனம்

காபா ஆலயத்தை சில தடவைகள் இடித்துவிட்டு மீண்டும் கட்டியிருக்கிறார்கள். அதனால் காபாவை இடிப்பதை அல்லாஹ் எந்த நேரமும் தடுத்துக்கொண்டிருக்க மாட்டான். என்று சிலர் புரியாமல் விளங்கி வைத்திருக்கிறார்கள். ஒன்றை இல்லாமல் அழித்து நாசப்படுத்துவதற்கும், அதையே அழகான முறையில் செப்பனிடுவதற்காக அகற்றி மீண்டும் கட்டுவதற்கும், எண்ணத்தாலும், செயலாலும் வேறுபாடுகள் இருக்கிறது.

வரலாற்றுக் காலங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாத மிகப் பழமையான காபா, ஆலயமான வடிவத்தை இழந்து, அடித்தளம் மட்டுமே எஞ்சியிருந்தது எனத் திருக்குர்ஆன், 002:127 வசனம் கூறுகிறது. அங்கு ஏற்கெனவே மனிதர்கள் வாழ்ந்து, பிறகு மக்கள் எவரும் அங்கு வசித்திருக்கவில்லை. காபா ஆலயம் பராமரிப்பு இல்லாத நிலையில் இயற்கையின் கால மாறுபாட்டால் சிதிலத்திற்குள்ளாகி ஆலயத்தின் கட்டிடம் தரைமட்டமாகியிருந்தது. (இந்த அழிவை இறைவன் ஏன் தடுக்கவில்லை? என்ற கேள்வியெழாமல் இருக்க) மனிதர்கள் வசிக்காத பிரதேசத்தில் ஆலயம் அவசியமில்லை. மேலும், காபா ஆலயம் புதுப்பித்துக் கட்டப்படும் காலத்தை இறைவனே நன்கு அறிந்தவன்.

ஒரிறைக் கொள்கைப் பிரச்சாரம் துவக்கப்பட்டு, இஸ்லாத்தில் தொழுகை கடமையாக்கப்பட்டது. முஸ்லிம்கள் தொழும் கிப்லா - முன்னோக்கும் திசை பைத்துல் மக்திஸை - மஸ்ஜித் அல்-அக்ஸாவை நோக்கி இருந்தது. அப்போது முஸ்லிம்களின் கிப்லா யூதர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இவ்வாறு பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் மக்திஸை முன்னோக்கியே, - இந்த உம்மத்தின் முதல் முஸ்லிமாகிய நபி (ஸல்) அவர்களும் மற்ற முஸ்லிம்களும் - தொழுது வந்தனர். இந்த கிப்லா மாற்றப்பட வேண்டும், முஸ்லிம்களின் தொழுகையின் கிப்லாவாக - முன்னோக்கும் திசையாக காபாவை நோக்கித் திருப்பப்பட வேண்டும் என்பதே அண்ணல் நபியவர்களின் விருப்பமாக இருந்தது, நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இதற்காக அடிக்கடி பிரார்த்தனை செய்து கொண்டும், பணிந்து வேண்டிக்கொண்டும் இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிராத்தனைக்கேற்ப கிப்லா மாற்றம் தொடர்பான இறையுத்தரவு வந்தது. இது இறவைனிடமிருந்து வந்த உண்மையாகும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: அல்குர்ஆன், 002:144, 149, 150)

இந்தக் கிப்லா மாற்றம் நிகழ்ந்தபோது நயவஞ்சகமும், சந்தேகமும் கொண்ட சிலருக்கும், யூத இறைமறுப்பாளர்களுக்கும் ஐயமும், தடுமாற்றமும் ஏற்பட்டன. முஸ்லிம்களை நோக்கி, ''ஏற்கெனவே இருந்த அவர்களின் கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பியது எது?'' என்று கேட்பவர்களுக்கு பதிலடியாக:

மனிதர்களில் சில மதியீனர்கள், ''ஏற்கெனவே (முஸ்லிம்கள் முன்னோக்கித் தொழுதுகொண்டு) இருந்த அவர்களது 'கிப்லா' விலிருந்து (வேறு திசைக்கு) அவர்களைத் திருப்பியது எது?'' என்று கேட்பார்கள். ''கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான்'' என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன், 002:142) என்ற இறைவசனம் அருளப்பட்டது.

காபாவை முன்னோக்கி கிப்லா திருப்பப்பட்டதும், புனித இறையில்லமான காபாவைப் பற்றி இங்கு தொடங்கிய விஷமத்தனமான, யூதத்தன அவதூறு விமர்சனங்கள் இன்றும் இஸ்ரேலியத்தனமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

குறைஷியர் காபாவைக் கட்டியது.
நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித காபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: காபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் - கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. காபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர்.

''குறைஷிக் குலத்தாரே! காபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ, மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாது'' என்று சொல்லிக்கொண்டு, குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் தங்களுக்கிடையே அந்தப் பணியைப் பிரித்துக் கொண்டனர்.

பின்னர் குறைஷியரில் உள்ள பல கோத்திரத்தாரும் காபாவைக் கட்டுவதற்காகக் கற்களைச் சேகரித்தினர். பின்னர் அவற்றைப் பயன்படுத்தி 'ஹஜருல் அஸ்வத்' - கருப்புக் கல் இருக்கும் மூலைவரை காபாவைக் கட்டினார்கள். கருப்புக் கல்லை அதற்குரிய இடத்தில் பதிப்பது யார்? என்பது தொடர்பாக அவர்களிடையே சர்ச்சை ஏற்பட்டது. அந்தக் கல்லை அதற்குரிய இடத்தில் தாமே தூக்கி வைக்க வேண்டும் வேறு யாரும் அதைச் செய்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு கோத்திரத்தினரும் நினைத்தார்கள்.

குறைஷியர்கள் இதற்காக சண்டையிட்டுக் கொள்வதற்கும் தயாராயினர். இதே நிலையில் நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. அப்போது குறைஷியர்களிலேயே மூத்த வயதினரான அபூஉமய்யா பின் அல்முஃகீரா மக்ஸுமி என்பவர், குறைஷிக் குலத்தாரே! யார் இந்த ஆலயத்தின் வாசல் வழியாக அதிகாலையில் முதன்முதலில் நுழைகிறாரோ அவரை இந்தப் பிரச்சனையில் நடுவராக ஆக்கிக் கொள்ளுங்கள். அவர் உங்களிடையே தீர்ப்பளிப்பார்'' என்று கூறினார். குறைஷிகள் அவ்வாறே செய்வதாகக் கூறி, கலைந்து சென்றனர்.

மறுநாள் அதிகாலையில் ஆலயத்தின் வாசல் வழியாக முதன்முதலில் உள்ளே நுழைந்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தாம். (இது நபித்துவத்திற்கு முன்பு நடந்தது. ஆனாலும் இது அனைவரும் அறிந்த பிரபலமான செய்தி.) நபி (ஸல்) அவர்களைக் கண்ட குறைஷியர், இதோ முஹம்மது வந்துள்ளார், நம்பத்தகுந்தவரான இவரை நாங்கள் முழு மனதுடன் ஏற்கிறோம் என்றனர்.

(இங்கே குறைஷியருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்தால் நபித்துவ வாழ்விற்கு முன்பு நபியவர்களின் மீது குறைஷியர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை நமக்குக் காட்டுகிறது. குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் மற்ற குலத்தாருக்கு எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தமக்கு வேண்டாத குலத்தார் யாராவது ஆலயத்திற்குள் முதலில் வந்திருந்தால் அது மற்ற குலத்தாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்முதலில் ஆலயத்தின் வாசல் வழியாக நுழைந்தது குறைஷியர் அனைத்து குலத்தாருக்கும் திருப்திகரமாக இருந்தது. அந்த அளவுக்கு எல்லா மக்களிடமும் நற்பெயர் பெற்றிருந்தார்கள். நபியவர்களை ''அல்அமீன்'' நம்பிக்கைக்குரியவர் என்று ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.)

நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அந்த மக்கள் செய்தியைத் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஒரு துணியைக் கொண்டு வாருங்கள்' என்றார்கள். அது கொண்டு வரப்பட்டது. கருப்புக் கல்லைத் தமது கையால் அந்தத் துணியில் வைத்த நபி (ஸல்) அவர்கள், ''இந்தத் துணியின் ஒவ்வொரு ஓரத்தையும் ஒவ்வொரு கோத்திரத்தாரும் பிடித்துக்கொண்டு அனைவருமாகச் சேர்ந்து அதைத் தூக்கிக் கொடுங்கள்'' என்றார்கள். அவ்வாறே அவர்கள் தூக்கித் தர, அந்தக் கல் அதற்குரிய இடத்திற்கு வந்தபோது தமது கையால் அதை உரிய இடத்தில் பதித்துப் பூசினார்கள். (அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது மறுமை நாள்வரை என்றென்றும் உண்டாகட்டும்)

நபித்துவ வாழ்விற்கு முன், குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டிய அந்த அறப்பணியில், நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டு கல் சுமந்திருக்கிறார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக்கட்டிய காபாவின் சுவர்கள் பலவீனப்பட்டதால் குறைஷியர் காபாவை இடித்து விட்டு மீண்டும் புதுப்பித்துக் கட்டினார்கள். ஆனால் இப்ராஹீம்(அலை) அவர்கள் எழுப்பிய காபாவின் அளவை சுருக்கி விட்டார்கள். இதற்குக் காரணம் குறைஷியரிடம் பொருளாதாரம் இல்லாமலிருந்ததேயாகும்.

அன்புடன்,
அபூ முஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டிய காபா ஆலயம், பலவீனமாக இருந்ததால் குறைஷியர் அதை இடித்துவிட்டுப் புதுப்பித்துக் கட்டினார்கள். நபித்துவ வாழ்வுக்கு முன், காபாவைப் புதுப்பித்துக் கட்டும் அறப்பணியில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டு கல் சுமந்திருக்கிறார்கள். குறைஷியர் காபாவைக் கட்டும்போது பொருளாதார நெருக்கடியினால் காபாவைச் சுருக்கி விட்டனர். பார்க்க: முதல் படம்.



"நான் காபா ஆலயத்தில் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன், அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்து ஆலயத்தின் உள்ளே நுழைய நீ விரும்பினால் இங்கே தொழுவாயாக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் காபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கி விட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்தி விட்டனர்" என்று கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ)

இந்த செய்தியை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மாஷா அல்லாஹ், இதை இறைவன் இந்த சமுதாயத்துக்கு வழங்கிய மாபெரும் அருள் என்றே சொல்ல வேண்டும்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சரியான அடித்தளத்திலிருந்து (002:127) உயர்த்திப் புதுப்பித்துக்கட்டிய காபா நான்கு மூலைகளைக் கொண்டதாக இருக்கவில்லை. இரு யமனிய மூலைகள் (ருக்னைன் யமானீயன்) என்று சொல்லப்படும் வடகிழக்கு, தென் கிழக்கு ஆகிய இரு மூலைகளை மட்டும் கொண்டதாக இருந்தது. இப்போது இருக்கும் காபாவுக்கு வடக்கே உள்ள ஷாமியா மூலைகள் (ருக்னுஷ் ஷாமியா) இருக்கவில்லை. படம் 1ல் ஒட்டகத் திமில் போல் வளைந்து காணப்படும் 'ஹிஜ்ர்' அல்லது 'ஹத்தீம்' என்று அழைக்கப்படும் அரைவட்டப் பகுதியும் சேர்த்து காபா செவ்வையான வடிவத்தில் இருந்தது. குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டியபோது பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஹத்தீம் பகுதியில் ஐந்து அல்லது ஆறு முழங்களைக் கொண்ட அரைவட்டப் பகுதியை அப்புறப்படுத்தி, சதுர வடிவத்தில் சுருக்கிக்கட்டி விட்டனர். ஆயினும், இன்றும் ஹிஜ்ர் அல்லது ஹத்தீம் என்று அழைக்கப்படும் அரைவட்டப் பகுதியும் காபாவைச் சேர்ந்த பகுதியே என்பதற்கு காபாவைத் தவாஃப் செய்பவர்கள் அந்த அரைவட்டப் பகுதியையும் சேர்த்தே சுற்றுகிறார்கள் என்பதிலிருந்து விளங்கலாம். மேலும் நபி (ஸல்) அவர்களும் அரைவட்டப் பகுதியும் காபாவைச் சார்ந்தது என்றே அங்கீகரித்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் பல நபிவழித் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன.

இப்போது இருக்கும் சதுர வடிவான காபாவை, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டியிருந்தது போல் செவ்வக வடிவான அமைப்பில் கட்டுவதற்கும், காபாவுக்கு கிழக்கு, மேற்குமாக இரு வாயில்களை அமைக்கவும் நபி (ஸல்) அவர்கள் நாடியிருந்தார்கள். ஆனால் குறைஷியர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றிருந்ததால் அதை வெறுப்பார்கள் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) அவர்கள் அதைக் கைவிட்டார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த அறிவிப்பை தமது சிறிய தாயார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகச் செவியேற்றிருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மறைவுக்குப்பின் ஹிஜ்ரி 64ம் ஆண்டில், நபி (ஸல்) அவர்கள் காபாவை எவ்வாறு கட்டுவதற்கு நாடியிருந்தார்களோ அதைப் போன்று ஹிஜ்ர், ஹத்தீம் என்ற அரைவட்டப் பகுதியையும் காபாவோடுச் சேர்த்துக் கட்டினார்கள், காபாவுக்குள் நுழைந்து வெளியேற மேற்கு, கிழக்கு என இரு வாயில்களையும் அமைத்தார்கள்.

அதற்கான காரணம்...

யஸீது பின் முஆவியா ஆட்சிக் காலத்தில் ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை முற்றுகையிட்டு) போர் தொடுத்தபோது, இறையில்லம் காபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்று கூடும்வரை இறையில்லத்தை அது நிலையிலையிலேயே விட்டு வைத்தார்கள். (பனூ உமய்யாக்களான) ஷாம்வாசிகளுக்கு எதிராக மக்களுக்கு எழுச்சியூட்டுவதற்ாகவே அல்லது அவர்களை ரோஷம் கொள்ளச் செய்வதற்காகவே அவ்வாறு விட்டு வைத்தார்கள். (ஹஜ்ஜை முடித்து) மக்கள் புறப்பட்டபோது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், ''மக்களே காபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அதை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதா அல்லது பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?'' என்று கேட்டார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ''எனக்கு இது தொடர்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் நீங்கள் செப்பனிடுங்கள். மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதிருந்த அதே நிலையில் காபாவை விட்டுவிடுங்கள், மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதும், நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பெற்றபோதும் இருந்த நிலையில் அதன் கற்களையும் (விட்டுவிடுங்கள்)'' என்றார்.

அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், ''உங்களில் ஒருவரது இல்லம் தீக்கிரையானால் அதைப் புதுப்பிக்காத வரை அவரது மனம் திருப்தியடைவதில்லை. இந்நிலையில் இறையில்லத்தின் விஷயத்தில் மட்டும் எப்படி (நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள்)? நான் (காபாவை இடித்துப் புதுப்பிப்பதா, அல்லது பழுதடைந்ததைச் செப்பனிடுவதா எனும் விஷயத்தில்) என் இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வருவேன்'' என்றார். நன்முடிவு வேண்டி பிரார்த்தித்தபின், இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார்.

அப்போது மக்கள் முதலில் காபாவின் மீது ஏறும் மனிதர் மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கிவிடும் என அச்சம் தெரிவித்தனர். இறுதியாக ஒரு மனிதர் காபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லைக் கீழே தள்ளினார். அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள் ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத் தரைமட்டமாக்கினர். பின்னர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கட்டுமானப்பணி நிறைவடையும்வரை (இறையில்லத்திற்குத் தற்காலிகத்) தூண்கள் அமைத்து அவற்றின் மீது திரையும் தொங்க விட்டார்கள்.

மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் ''என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உன்னுடைய சமுதாய) மக்கள் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின் - என்னிடம் காபாவின் கட்டடத்தை வலுப்படுத்தக்கூடிய அளவு பொருளாதாரம் இல்லை என்பது (ஒருபுறம்) இருக்க - நான் 'ஹிஜ்ர்' பகுதியில் ஐந்து முழங்களை காபாவுடன் சேர்த்து விட்டிருப்பேன். பின்னர் மக்கள் நுழைவதற்கு ஒரு வாயிலும் வெளியேறுவதற்கு ஒரு வாயிலுமாக (இரு வாயில்களை) அதற்கு அமைத்திருப்பேன். என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

இன்று என்னிடம் பொருளாதாரமிருப்பதைக் காண்கிறேன். மக்களை அஞ்சும் நிலையிலும் நான் இல்லை'' என்று கூறி(விட்டு காபாவைப் புதுப்பிக்கலா)னார்கள்.

பின்னர் காபாவில் 'ஹிஜ்ர்' பகுதியில் ஐந்து முழங்களைக் கூடுதலாக்கினார்கள், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கவே (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து) ஓர் அடித்தளத்தை வெளியாக்கினார்கள். அதன் மீதே காபாவை எழுப்பினார்கள். (முடிவில்) காபாவின் உயரம் பதினெட்டு முழங்களாக இருந்தது. அதன் உயரத்தை அதிகமாக்கிய பின்பும் அது குறைவாகவே பட்டது. எனவே மேலும் பத்து முழங்கள் அதிகமாக்கினார்கள், அத்துடன் உள்ளே நுழைவதற்கும் ஒரு வாயில், வெளியேறுவதற்கு ஒரு வாயில் என இறையில்லத்திற்கு இரு வாயில்களை அமைத்தார்கள். (முஸ்லிம்)

குறைஷியர் சுருக்கிக் கட்டிய காபாவை - அன்று மக்காவின் ஆட்சியாளராக இருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் - இடித்து விட்டு விரிவுபடுத்தி புதுப்பித்துக் கட்டினார்கள். இப்னு ஸுபைர் கொலை செய்யப்பட்டபோது, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் மக்காவின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதன் பிறகு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் காபாவை இடித்து விரிவாக்கிக் கட்டிய காபா, மீண்டும் ஹிஜ்ரி 74ல் இடிக்கப்பட்டு, குறைஷிகள் கட்டியது போல சுருக்கிக் கட்டப்படுகிறது.

ஹிஜ்ரி 74ல் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப்.

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இந்த விவரங்களைத் தெரிவித்து (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் ''அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து அங்கிருந்த) ஓர் அடித்தளத்தின் மீது காபாவை எழுப்பியுள்ளார், அதை மக்காவின் நியாயவான்கள் பலரும் பார்த்துள்ளனர்'' என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், ''நாம் இப்னு ஸுபைரை எந்த விஷயத்திலும் களங்கப்படுத்த விரும்பவில்லை, எனவே அவர் உயர்த்திக் கட்டியதை அப்படியே விட்டுவிடுவீராக! 'ஹிஜ்ர்' பகுதியிலிருந்து அவர் அதிகப்படுத்தியதை (மட்டும்) பழையபடியே மாற்றி அமைப்பீராக! அவர் புதிதாகத் திறந்துவிட்ட வாயிலை மூடிவிடுவீராக!'' என்று பதில் எழுதினார். எனவே, ஹஜ்ஜாஜ் ('ஹிஜ்ர்' பகுதிச் சுவரை) இடித்து முன்பிருந்த அமைப்பிற்கே மாற்றி அமைத்தார். (முஸ்லிம்)

பிறகு...

அப்துல் மலிக் மர்வான் ஆட்சிக் காலத்தில், அவரிடம் ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள் ஒரு தூதுக் குழுவில் சென்றார்கள். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான், ''அபூகுபைப் (இப்னுஸ் ஸுபைர்) ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் கேட்டதாகக் கூறும் செய்தியை, அவர் அவர்களிடமிருந்து கேட்டிருக்கமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன்'' என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், ''ஆம் (அபூகுபைப் உண்மையே சொல்கிறார்) இதை நானும் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்'' என்றார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான் ''ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதைக் கூறுங்கள்'' என்றார்.

அதற்கு ஹாரிஸ் (ரஹ்) கூறினார், ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள், என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''உன்னுடைய சமுதாயத்தார் இறையில்லம் காபாவின் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர். அவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், அவர்கள் விட்டுவிட்டதை நான் மறுபடியும் இணைத்துக் கட்டியிருப்பேன். எனக்குப் பின் உன் சமுதாயத்தாருக்கு அதை (விரிவாக்கிக்) கட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றினால் (அவ்வாறு செய்யட்டும்!) என் அருகில் வா! அவர்கள் விட்டுவிட்ட (இடத்)தை உனக்கு நான் காட்டுகிறேன்'' என்று கூறிவிட்டு, (காபா அருகில்) ஏழு முழங்கள் அளவிற்கு இடத்தை எனக்குக் காட்டினார்கள். (முஸ்லிம்)

பிறகு ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் அப்துல் மலிக் பின் மர்வான் ''ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?'' என்று கேட்டார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் ''ஆம்'' என்றார்கள். பிறகு அப்துல் மலிக் பின் மர்வான் தம்மிடமிருந்த குச்சியால் தரையைச் சிறிது நேரம் குத்திக் கீறி (யபடி ஆழ்ந்து யோசித்து) விட்டு, ''இறையில்லத்தையும் இப்னுஸ் ஸுபைர் மேற்கொண்டதையும் (அதே நிலையில்) விட்டிருக்க வேண்டுமென (இப்போது) விரும்புகிறேன்'' என்றார். (முஸ்லிம்)

இவ்வாறாக...

- நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காபாவைப் புதுப்பித்துக் கட்டினார்கள்.

- பிறகு, குறைஷியர் காபாவை இடித்துவிட்டுப் புதுப்பித்துச் சுருக்கிக் கட்டினர்.

- பிறகு, ஹிஜ்ரி 64ல் மக்காவின் ஆட்சியாளாராக இருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் காபாவை இடித்துவிட்டு ஹத்தீமை காபாவோடு இணைத்து விரிவாக்கிக் கட்டினார்கள்.

- பிறகு, ஹிஜ்ரி 74ல் மக்காவின் ஆட்சியாளராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப், விரிவாகக் கட்டப்பட்டிருந்த காபாவில் ஹத்தீம் எனும் அரைவட்டப் பகுதியை இடித்து நீக்கிவிட்டு குறைஷியர் கட்டியிருந்த அளவுக்குச் சுருக்கிக் கட்டினார்.

- இன்று இருக்கும் காபாவின் அமைப்பு, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் கட்டியது. தற்போது புனித காபாவின் கட்டட அமைப்பு: சதுர வடிவம். இதற்குப்பின் மாற்றம் செய்வதை அறிஞர்கள் சிலர் விரும்பவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலாம்.

இறைநம்பிக்கையாளரின் தலைவர் ஹாரூன் அர்ரஷீத் அல்லது அவருடைய தந்தை மஹ்தீ, காபாவை இடித்துவிட்டு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் செய்த மாற்றத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் யோசனை கேட்டார். அதற்கு அவர்கள், ''இறைநம்பிக்கையாளரின் தலைவரே! இறையில்லம் காபாவை அரசர்களின் விளையாட்டுத் தலமாக ஆக்கி விடாதீர்கள். ஆளாளுக்கு அதை இடிக்க நினைப்பார்கள், இடித்தும் விடுவார்கள்'' என்று கூறினார்கள். எனவே ஹாரூன் அர்ரஷீத் அந்த முடிவைக் கைவிட்டார். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்)

காபா சிலமுறைகள் இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்தாலும் காபாவின் பழைய அஸ்திவாரத்திற்குள்ளேயே கட்டப்பட்டிருக்கிறது. பழைய அஸ்திவாரத்தை விட்டு வெளியே கட்டப்படவில்லை. குறைஷியர் காபாவைச் சுருக்கி விட்டனர் என்பது பழைய அஸ்திவாரத்திற்குள்ளேயே சுருக்கிக் கட்டினார்கள். மேலும் ஹத்தீம் என்ற வளைந்த பகுதியை அப்புறப்படுத்திச் சுருக்கிக் கட்டினார்கள். அதனால் காபா இடம் மாற்றிக் கட்டப்படவில்லை! காபாவுக்குள்ளேயே காபா சுருக்கப்பட்டது இடம் மாறி காட்டியதாக ஆகாது. இன்றும் காபாவை வலம் வருபவர்கள் ஹத்தீம் - வளைந்த அரைவட்டப் பகுதியையும் சேர்த்து சுற்றி வருகிறார்கள். பார்க்க: 2வது படம்.



மேலும்,

காபாவின் மேல் பகுதி முகடுகளைத் தாங்கி நிற்க காபாவின் உட்பகுதியில் மூன்று தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. பார்க்க: 3வது படம்.



இப்போது இருக்கும் தரையை விட்டு சற்று மேல் பகுதியில் அமைந்த காபாவின் நுழைவாயில் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கும் செய்தியில்,

நான் நபி(ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, 'இது காபாவில் சேர்ந்ததா?' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம்!'' என்றார்கள். பிறகு நான் 'எதற்காக அவர்கள் இதனை காபாவோடு இணைக்கவில்லை?' எனக் கேட்டேன். அதற்கவர்கள் 'உன்னுடைய சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!'' என்று பதிலளித்தார்கள். நான் 'காபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதின் காரணம் என்ன?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவுமே உன்னுடைய கூட்டத்தார் அவ்வாறு செய்தார்கள். 'உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்' என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை காபாவினுள் இணைத்து அதன் கதவைத் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தால் போலாக்கியிருப்பேன்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி)

இன்றும் காபாவின் வாயில் கதவு தரையோடு இல்லாமல் சற்று உயரமான இடத்திலேயே அமைப்பட்டிருக்கிறது. காபாவின் நிர்வாகத்தினர் நாடினாலன்றி காபாவினுள் எவரும் செல்ல முடியாது. ஆனாலும் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் காபாவினுள் நுழைந்து தொழ விரும்புபவர்கள் காபா புனித ஆலயத்தின் ஒரு பகுதியாகிய திறந்தவெளியாக இருக்கும் ஹத்தீம் எனும் அரைவட்டப் பகுதியில் நுழைந்து தொழுது கொள்ளலாம். இதுவும் காபாவைச் சேர்ந்ததுதான். மக்கள் ஹத்தீம் பகுதிக்குள் செல்வதை யாரும் தடுக்க மாட்டார்கள். இன்னும் இறுதி காலம்வரை, அல்லாஹ் நாடியவரை காபா இந்த நிலையிலேயே இருக்கும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

(அல்குர்ஆன், மற்றும் ஹதீஸ் தொகுப்புகள், தப்ஸீர், திருக்குர்ஆனின் நிழலில் ஆகிய நூற்களிலிருந்து ஆதாரங்களைத் திரட்டி இத்தொடர் எழுதப்பட்டது.)

அன்புடன்,
அபூமுஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

மதீனாவிலிருந்து ஷாம் நாட்டை நோக்கிச் செல்லும் பாதையில் சுமார் 170 கீ.மீ தொலைவிலுள்ள ஒரு நகரத்தின் பெயர் தான் கைபர். இங்கு யூதர்கள் வசித்து வந்தனர். இவர்கள், மதீனா நகர்ப்புற யூதர்களுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தனர்.

மதீனா மீது போர் தொடுக்கவும், முஸ்லிம்களைத் தாக்கவும் மக்கா இணைவைப்பாளர்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளும் செய்து வந்தனர். மதீனா புறநகர்ப் பகுதியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 'பனூ நளீர்' குலத்து யூதர்களும் கைபர் வாசிகளுடன் சேர்ந்து கொண்டு குழப்பம் விளைவித்து வந்தனர். இதனால் நபி (ஸல்) அவர்கள் 1500-க்கும் அதிகமான முஸ்லிம்களுடன் புறப்பட்டுச் சென்று 10 நாட்களுக்கும் அதிகமாக முற்றுகையிட்டு, போர் செய்து கைபர் நகரைக் கைப்பற்றினார்கள். கைபரில் தோல்வி கண்ட பிறகே யூதர்களின் விஷமத்தனம் அடங்கியது. இது கைபர் போர் காரணியின் சுருக்கமான வரலாறு.

ஆனால், இஸ்லாத்தை விமர்சிக்கும் ஒரு மன நோயாளி, கைபர் போரின் காரணத்தையே தலை கீழாக புரட்டிப் போடுகிறார். நபி (ஸல்) அவர்கள், ஒர் யூதப் பெண்ணை அடைவதற்காகவே படை திரட்டிக் கொண்டு கைபர் நகரத்தை நோக்கிச் சென்றதாகவும், ஸஃபிய்யாவின் கணவரையும், தந்தையையும் கொடுரமாகக் கொன்று விட்டு ஸஃபிய்யாவை, நபி (ஸல்) அவர்கள் பலவந்தமாக அடைந்ததாக பிதற்றியிருக்கிறார்.

இது தொடர்பாக வைத்த இரு ஹதீஸ்...

Volume 5, Book 59, Number 524:

Narrated Anas:

The Prophet stayed for three rights between Khaibar and Medina and was married to Safiya. I invited the Muslim to h s marriage banquet and there wa neither meat nor bread in that banquet but the Prophet ordered Bilal to spread the leather mats on which dates, dried yogurt and butter were put. The Muslims said amongst themselves, "Will she (i.e. Safiya) be one of the mothers of the believers, (i.e. one of the wives of the Prophet ) or just (a lady captive) of what his right-hand possesses" Some of them said, "If the Prophet makes her observe the veil, then she will be one of the mothers of the believers (i.e. one of the Prophet's wives), and if he does not make her observe the veil, then she will be his lady slave." So when he departed, he made a place for her behind him (on his and made her observe the veil.

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/059.sbt.html#005.059.524
*****************

Volume 5, Book 59, Number 522:

Narrated Anas bin Malik:

We arrived at Khaibar, and when Allah helped His Apostle to open the fort, the beauty of Safiya bint Huyai bin Akhtaq whose husband had been killed while she was a bride, was mentioned to Allah's Apostle. The Prophet selected her for himself, and set out with her, and when we reached a place called Sidd-as-Sahba,' Safiya became clean from her menses then Allah's Apostle married her. Hais (i.e. an 'Arabian dish) was prepared on a small leather mat. Then the Prophet said to me, "I invite the people around you." So that was the marriage banquet of the Prophet and Safiya. Then we proceeded towards Medina, and I saw the Prophet, making for her a kind of cushion with his cloak behind him (on his camel). He then sat beside his camel and put his knee for Safiya to put her foot on, in order to ride (on the camel).

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/059.sbt.html#005.059.524

கைபர் போர் நிகழ்ச்சிகள் சம்பந்தமாக வரும் பல அறிவிப்புகளில், புகாரியில் இடம்பெறும் மேற்கண்ட இரு ஹதீஸ்களை தனது புரட்டல்களுக்கு சாதகமாகத் தேர்ந்தெடுத்து மூடத்தனமாக உளறியிருக்கிறார் மனநோயாளி. ஒரு செய்தியை விமர்சிக்குமுன், அது தொடர்பாக அறிவிக்கப்படும் எல்லா செய்திகளையும் ஓரளவுக்கு ஆய்வு செய்ய வேண்டும் என்பதையாவது அறிந்திருக்க வேண்டாமா? இந்த நியாயத்தை துவேஷிகளிடம் எதிர்பார்க்க முடியாது.

கைபர் போர் பற்றி அதிகமான விபரங்களுடன் முஸ்லிம் நூலில் இடம்பெற்ற செய்தி...

Book 008, Number 3325:

Anas (Allah be pleased with him) reported that Allah's Messenger (may peace be upon him) set out on an expedition to Khaibar and we observed our morning prayer in early hours of the dawn. The Apostle of Allah (may peace be upon him) then mounted and so did Abu Talha ride, and I was seating myself behind Abu Talha. Allah's Apostle (may peace be upon him) moved in the narrow street of Khaibar (and we rode so close to each other in the street) that my knee touched the leg of Allah's Apostle (may peace be upon him). (A part of the) lower garment of Allah's Apostle (may peace be upon him) slipped from his leg and I could see the whiteness of the leg of Allah's Apostle (may peace be upon him). As he entered the habitation he called: Allah-o-Akbar (Allah is the Greatest). Khaibar is ruined. And when we get down in the valley of a people evil is the morning of the warned ones. He repeated it thrice. In the meanwhile the people went out for their work, and said: By Allah, Muhammad (has come). Abd al-'Aziz or some of our com- panions said: Muhammad and the army (have come). He said: We took it (the territory of Khaibar) by force, and there were gathered the prisoners of war. There came Dihya and he said: Messenger of Allah, bestow upon me a girl ont of the prisones. He said: Go and get any girl. He made a choice for Safiyya daughter of Huyayy (b. Akhtab). There came a person to Allah's Apostle (may peace be upon him) and said: Apostle of Allah, you have bestowed Safiyya bint Huyayy, the chief of Quraiza and al-Nadir, upon Dihya and she is worthy of you only. He said: Call him along with her. So he came along with her. When Allah's Apostle (may peace be upon him) saw her he said: Take any other woman from among the prisoners. He (the narrator) said: He (the Holy Prophet) then granted her emancipation and married her. Thabit said to him: Abu Hamza, how much dower did he (the Holy Prophet) give to her? He said: He granted her freedom and then married her. On the way Umm Sulaim embellished her and then sent her to him (the Holy Prophet) at night. Allah's Apostle (may peace be upon him) appeared as a bridegroom in the morning. He (the Holy Prophet) said: He who has anything (to eat) should bring that. Then the cloth was spread. A person came with cheese, another came with dates, and still another came with refined butter, and they prepared hais and that was the wedding feast of Allah's Messenger (may peace be upon him)

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/008.smt.html#008.3325

கைபர் போரில் முஸ்லிம்கள் அணியில் 15 பேரும், யூதர்கள் அணியில் 93 பேரும் உயிரிழந்தனர். இந்தப் போரில் யூதப் பெண் ஸஃபிய்யாவின் (இரண்டாவது) கணவர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரும் கொல்லப்படுகிறார். நபி (ஸல்) அவர்களுக்கு, ஸஃபிய்யா என்ற யூதப் பெண் யாரென்றே தெரிந்திருக்கவில்லை. ஸஃபிய்யாவைப் பற்றிய எணணமும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. போர் முடிந்து கைபர் நகரத்தைக் கைப்பற்றிய பின், திஹ்யா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்குத் தாருங்கள்' என்று கேட்கிறார். ''நீங்கள் சென்று ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் திஹ்யா (ரலி) ஸஃபிய்யாவைப் பெற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில் ''அல்லாஹ்வின் தூதரே! பனூ குறைழா, பனூ நளீர் குலத்தாரின் தலைவரான ஹுயையின் மகள் ஸஃபிய்யாவை திஹ்யாவுக்கு வழங்கி விட்டீர்களே! என்று ஒருவர், யூதர்களின் அரச குடும்பத்துப் பெண்ணாக ஸஃபிய்யாவை அடையாளம் காட்டிய பிறகு, திஹ்யா (ரலி) அவர்களிடம் வேறு அடிமைப் பெண்ணை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி, நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து மணமுடித்துக் கொள்கிறார்கள். (இன்னொரு அறிவிப்பில் ஏழு அடிமைகளைக் கொடுத்தார்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது)
அடிமைப் பெண்ணாகிய ஸஃபிய்யா அழகு படைத்தவர் என்றிருந்தாலும் அவரை அடிமையாகவே வைத்திருந்திருக்க முடியும். குறைழா, நளீர் குலத்தாரின் தலைவரின் மகள் என்று அவருடைய பாரம்பரியத்துக்காக ஸஃபிய்யா அவர்களை விடுதலை செய்து பிறகு நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

மணப் பெண்ணின் சம்மதமில்லாத திருமணம் செல்லாது என்பதால் ஸஃபிய்யா (ரலி) அவர்களின் சம்மதமில்லாமல் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை மணமுடிக்கவில்லை.

மாதவிடாய்க்கான காத்திருப்பு நிகழ்ந்திருக்கிறது. மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது மனைவி ஸஃபிய்யாவுடன் உடலுறவு கொண்டார்கள்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை வல்லுறவு கொண்டதாக கதையளக்கும் இந்த மன நோயாளியின் இஸ்லாம் பற்றிய விமர்சனம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணை வல்லுறவு கொண்டார் என்பது உண்மையாக இருந்திருப்பின் அன்றே இஸ்லாம் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். இன்று நேசமானவர்களுக்கு இஸ்லாத்தை விமர்சிக்கும் வாய்ப்பே இருந்திருக்காது.

//சஃபியாவின் கணவனைக் கொன்று விட்டு அன்றே அப்பெண்ணுடன் வல்லுறவு கொண்டது(ஒரு நாள் கூடத் தாமதிக்கவில்லை முகமது, அதுவும் சஃபியா அழகானவள் என்று கேள்விப்பட்டவுடன் கூப்பிட்டு பார்த்துவிட்டு ஆசை வந்தவுடன் அடைந்தார்),// - நேசகுமார் -

- மேற்கண்ட கருத்து வாசித்த நூல் எது சொல்ல முடியுமா? 
 
நன்றி: http://www.islamkalvi.com/

வாடகை, வட்டி இவை இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. வாடகைக்கு குடியிருப்பதும், வாடகைக்கு பொருள் எடுப்பதும் தவறில்லை என்றால் பணத்தைக் கடனாகக் கொடுத்து அதற்கு வட்டி வாங்குவதும் வாடகை போன்றது தான். அதாவது வீடு, பொருட்களை வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது போல பணத்தை வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது வட்டியில் சேராது என்று வாடகையும், வட்டியும் ஒரு தன்மையைக் கொண்டது என நண்பர் ரியோ கருத்து வைத்திருக்கிறார்.

வாடகையும் வட்டியும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் அடிப்படையில் இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. வீடு வாடகைக்கு எடுத்தவர் அதில் குடியேறியவுடன், வாடகைக்காரரின் பொறுப்புக்கு அந்த வீடு வந்து விடுகிறது. ஆனால் வீடு இடிந்து விழுந்தாலும் எரிந்து போனாலும், கலவரங்கள் போன்ற செயல்களால் நாசப்படுத்தப்பட்டாலும் இதற்கு வாடகைக்குக் குடியிருப்பவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை. வீட்டின் உரிமையாளரே பொறுப்பாளியாவார்.

கடன் வாங்கும் போது, அந்தத் தொகையின் இழப்புக்கும், லாபத்துக்கும் கடன் வாங்கியவரே பொறுப்பாளியாவர். பணம் தொலைந்து போனாலும், எரிந்து போனாலும் கடன் கொடுத்தவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை.

வீட்டை வாடகைக்கு விடுபவர் லாபத்திலும், நஷ்டத்திலும் பங்கேற்பதால் இங்கு வட்டி ஏற்படுவதில்லை.

கடன் கொடுத்தவர், கடன் வாங்கியவரின் நஷ்டத்தில் பங்கெடுப்பதில்லை. கடன் கொடுத்த பணத்தை விட கூடுதலாக லாபம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார் என்பதால் இங்கு வட்டி ஏற்படுகிறது.

சைக்கிளை வாடகைக்கு எடுப்பவர் அதை உபயோகித்து, அதிலிருந்து பயன் பெற்று அதற்கான வாடகையைச் செலுத்துகிறார். சைக்கிளை வாடகைக்கு விடுபவர், சைக்கிளை உபயோகிப்பதால் சைக்கிளின் பாகங்களுக்கு ஏற்படும் தேய்மான இழப்பிற்கு வாடகை வாங்குகிறார். வாடகைக்கு விடும் பொருட்கள், வாடகைக்கு எடுப்போர் பயன்படுத்துவதால் அதனால் பொருள் நசிந்து போவதற்கானக் கூலியை வாடகையாகப் பெறுகிறார்.

ஆனால்...
தன்னிடமுள்ள மேலதிகமானப் பணத்தை கடன் கொடுத்துத் திரும்பப் பெறுவதில், பணத்துக்கு எந்தத் தேய்மானமும் ஏற்படுவதில்லை. வட்டியாக லாபம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார்.
அதனால் எவ்விதத்திலும் வாடகையும், வட்டியும் சமமாகாது!

மற்றவை நண்பர் ரியோவின் விளக்கத்திற்குப் பின்...

மேலும்,
மனிதாபிமானத்துடன் தாராளமாகக் கடன் கொடுத்து உதவும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது. கடனை வாங்கி திரும்பத் தராமல் ஏமாற்றுகிறானே அவனை விட்டு விடுவோம், ஏமாற்றுபவன் என்று தெரிந்தால் அவனுக்குக் கடன் கொடுக்க வேண்டியதில்லை. நாணயமுள்ளவர்களாக இருப்பவருக்கு அவசியத் தேவையின் காரணமாக கடன் பெறும் நிலையிலிருந்தால் அவர்களுக்கு கடன் கொடுத்து உதவுங்கள் என்று சொல்லி, கடனைத் திரும்பத் தரும் எண்ணமிருந்தும், இயலாதவர்களுக்கு கடன் தொகையைக் குறைத்துத் தள்ளுபடி செய்யுங்கள் என்றும், நீங்கள் பொருளாதார வசதியில் மேன்மையாக இருந்தால், கொடுத்த கடன் முழுவதும் தள்ளுபடி செய்யுங்கள் என்றும் மனிதர்களிடம் இரக்கம் காட்டும்படி இஸ்லாம் கூறுகிறது.

வட்டி ஒரு பொருளாதாரச் சுரண்டல். வட்டியின் வாடையைக் கூட இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எந்த அளவுக்கென்றால், காசுக்குக் காசை விற்பதை இஸ்லாம் தடை செய்கிறது. ஒருவருக்கு பத்து ரூபாய் கொடுத்து, திரும்பத் தரும் போது பதினோரு ரூபாயாகத் தரவேண்டும் என்பது பத்து ரூபாயை பதினோரு ரூபாய்க்கு விற்பது காசுக்குக் காசை விற்பதாகும். கடன் வாங்கியவர், கடன் கொடுத்தவருக்கு அன்பளிப்பு, மற்றும் உதவிகள் செய்தாலும் அது வட்டியாகும். அவர்களுக்குள் கடன் வாங்குவதற்கு முன் ஏற்கெனவே இவ்வாறு பகிர்ந்து கொண்டிருந்தால், அன்பளிப்பும் உதவிகளும் தவறில்லை.

கடன் வாங்கியவரை ''நீ இந்த இடத்தில் வந்து பணத்தைக் கொடு'' என்று வேறு இடத்துக்கு அலைய விடுவது வட்டியாகும்.

கடன் கொடுத்தவரை இன்று, நாளை என்று பணம் தராமல் இழுத்தடித்தால் அது கடன் வாங்கியவர் பெறும் வட்டியாகும். இப்படி வட்டியைப் பற்றி இன்னும் பல எச்சரிக்கைகளை விடுக்கிறது இஸ்லாம்.

அப்படியானால் முஸ்லிம்களில் பலர் வட்டியைத் தொழிலாக்கித் தங்களை வளர்த்து வாழ்கிறார்களே? என்ற கேள்வியெழுமானால். முஸ்லிம்களின் செயல்களுக்கு இஸ்லாம் பொறுபேற்காது, 

நன்றி:   http://abumuhai.blogspot.com

இரத்த பந்தத்தால் ஏற்படும் உறவுகளில் திருமணம் செய்து கொள்ள எந்ததெந்த உறவு முறைகளெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளதோ, அதே திருமண உறவு முறைகள் பால்குடி உறவுகளிலும் இஸ்லாம் தடை செய்திருக்கிறது.

''உங்களுக்கு பாலூட்டிய செவிலித் தாய்மார்களையும்'' (நீங்கள் மணப்பது விலக்கப்பட்டுள்ளது. 004:023)

திருமணம் செய்வதற்குத் தடை செய்யப்படும் இரத்த சம்பந்தப்பட்ட உறவுகள், பால்குடி உறவுகள் பற்றியும் முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள். என்றாலும், இஸ்லாத்தை விமர்சிக்கும் மேதகு நண்பர்களுக்கு இது பற்றி அரிச்சுவடி கூட தெரியாமல் விமர்சித்திருக்கிறார்கள். மணமுடிக்கத் தடை செய்யப்பட்ட உறவுகள் பற்றி மேலும் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்,

முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவார்கள் என்று திருக்குர்ஆன் (003:103, 049:010) வசனங்கள் கூறுகிறது. இனம், நிறம், மொழி, நாடு என்று பகுப்பில்லாமல் முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மார்க்க சகோதரர்கள் என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

இந்த சகோதரத்துவம் இரத்தம் பந்தம், அல்லது பால்குடி சம்பந்தமான உறவு முறைகள் அல்ல. ஒரே மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் உலக முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். இஸ்லாம் யார் யாருக்கிடையில் திருமண உறவை தடை செய்திருக்கிறதோ அந்த உறவுகள் தவிர, மார்க்க சகோதரர்கள் என்பது திருமணத்திற்கு ஒரு தடை இல்லை. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு பெண் கொடுப்பதோ, பெண் எடுப்பதோ தடை செய்யப்பட்டதல்ல. என்பதை புரிந்து கொண்டிருந்தால், அறியாமல் தவறாக விளங்கிய இரு நபிமொழிகளிலும் ஏற்படுத்திய முரண்பாடு அடிபட்டுப் போகும். நண்பர்கள் இரண்டு நபிமொழிகளை புரிவதில் இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த நபிமொழிகளைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) ''நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள். (புகாரி, 5081)

நண்பர்கள் வைத்த ஆங்கில மொழியாக்கமும், அதன் சுட்டியும்,

Narrated 'Ursa:The Prophet asked Abu Bakr for 'Aisha's hand in marriage. Abu Bakr said "But I am your brother." The Prophet said, "You are my brother in Allah's religion and His Book, but she (Aisha) is lawful for me to marry."

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.018

நபி (ஸல்) அவர்கள், தமது தோழர் அபூ பக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களை பெண் கேட்கிறார்கள். மார்க்க ரீதியாக சகோதரர்களாகி விட்டதால் ''நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று அபூ பக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அதாவது, நபி (ஸல்) அவர்களும், அபூ பக்ர் (ரலி) அவர்களும் மார்க்க சகோதரர்களாகி விட்டதால் தமது மகள் ஆயிஷாவை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது என்று கருதியிருந்த அபூ பக்ர் (ரலி) அவர்கள் இங்கே தமது கருத்தைத் தெரிவிக்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் ''அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள்'' என்று கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள், அபூ பக்ர் (ரலி) அவர்கள் இருவருக்கும் இரத்த பந்த உறவு இல்லை. பால்குடி உறவும் இல்லை என்பதால் மார்க்க சகோதரர்கள் என்ற சகோதரத்துவம் திருமண உறவுக்குத் தடை இல்லை என்று அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள். இதிலிருந்து ஒரு மார்க்க சட்ட விளக்கம் முஸ்லிம்களுக்குக் கிடைக்கிறது என்பது தனி விஷயம்.

இதற்கு முரணாக நண்பர்கள் வைக்கும் நபிமொழி.

நபி(ஸல்) அவர்களிடம் 'தாங்கள் ஹம்ஸா(ரலி) அவர்களின் புதல்வியை மணந்துகொள்ளக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அவள் பால்குடி உறவு முறையினால் எனக்குச் சகோதரர் மகள் ஆவாள்'' என்று கூறினார்கள. (புகாரி,5100)

நண்பர்கள் வைத்த ஆங்கில மொழியாக்கமும், அதன் சுட்டியும்,

Narrated Ibn 'Abbas:It was said to the Prophet, "Won't you marry the daughter of Hamza?" He said, "She is my foster niece (brother's daughter)

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.037

நண்பர்கள் - புகாரி, 5081, 5100 ஆகிய - இரு நபிமொழிகளையும் முரணாக விளங்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது அவதூறு மோசடியை சுமத்தியிருக்கிறார்கள். ஏமாற்றும் இரட்டை வேடக்காரர் என்றும் இறைத்தூதர் (ஸல்) மீது பொய்யான களங்கத்தை வீசியிருக்கிறார்கள். அவர்களின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை என்பதை வரலாற்றிலிருந்து விளங்கலாம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இன்னொரு நபிமொழியிலிருந்து...

நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களுடைய மகளின் விஷயத்தில், ''அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்படவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் ஹராம் (தடை செய்யப்பட்டதாக) ஆகுமோ அவையெல்லாம் (செவிலித் தாயிடம்) பால்குடிப்பதாலும் ஹராம் ஆகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்'' என்று கூறினார்கள். (புகாரி, 2645)

புகாரி, 2645, 5100 இரு நபிமொழிகளில் இடம்பெறும் ஹம்ஸா பின் முத்தலிப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை என்ற வரலாறு தெரியாமல் பிதற்றியிருக்கிறார்கள். வரலாறு இதுதான்...

''ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை ஆவார். இது இரத்த உறவு இதன்படி ஹம்ஸா (ரலி) அவர்களின் மகளை நபி (ஸல்) அவர்கள் மணப்பதில் தடையில்லை. எனினும் ஹம்ஸா (ரலி) அவர்களும், நபி (ஸல்) அவர்களும் ஒரே செவிலித் தாயிடம் சிறு வயதில் பால் அருந்தியுள்ளனர். அபூலஹபின் முன்னாள் அடிமைப் பெண்ணான ஸுவைபா (ரலி) அவர்களே அந்த செவிலித் தாய். இதன்படி நபி (ஸல்) அவர்களும் ஹம்ஸா (ரலி) அவர்களும் சகோதரர்கள் ஆவர். எனவே ஹம்ஸாவின் மகளை தாம் மணந்து கொள்ள முடியாது நபி (ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (உம்தத்துல் காரீ)
 
பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, மக்களை மணமுடிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இந்த உறவில் மணமுடிக்கும் இருவர் சிறு வயதில் ஒரு செவிலித் தாயிடம் பால்குடித்திருந்தால் இருவரும் சகோதரர், சகோதரியாகக் கருதப்படுவார்கள். அவர்களிடையே திருமணம் உறவு தடை செய்யப்பட்டது.

நபி (ஸல்) அவர்களுக்கு ஹம்ஸா (ரலி) அவர்கள் இரத்த பந்த உறவு முறையில் பெரிய தந்தை, அதனால் ஹம்ஸா (ரலி) அவர்களின் மகளை நபி (ஸல்) அவர்கள் மணமுடிப்பதில் தடையில்லை என்றாலும் ஹம்ஸா (ரலி) அவர்களும், நபி (ஸல்) அவர்களும் ஒரு செவித் தாயிடம் சிறு வயதில் பால்குடித்திருக்கிறார்கள் அதனால் இருவருக்கும் சகோதரர்கள். சகோதரரின் மகளை மணமுடிக்கக் கூடாது என்ற அடிப்படையில் பால்குடி சகோதரரின் மகளை மணமுடிப்பது ஆகுமானதல்ல.

அபூ பக்ர் (ரலி) மார்க்க ரீதியாக, நபி (ஸல்) அவர்களுக்குச் சகோதரர் ஆவார்.

ஹம்ஸா (ரலி) பால்குடி உறவு முறையில் நபி (ஸல்) அவர்களுக்குச் சகோதரர் ஆவார்.

என்று...
நபிமொழிகளில் உள்ளதை உள்ளபடி விளங்கினாலே போதும்,

அபூ பக்ர் (ரலி) மகளை நபியவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.

ஹம்ஸா (ரலி) மகளை நபியவர்கள் மணமுடிக்க விலக்கப்பட்டது.

5081, 5100 இரு நபிமொழிகளும் முஸ்லிம் சமுதாயத்துக்கு இரு சட்ட விளக்கங்களை முன் வைக்கிறது. மற்றபடி ஏமாற்றுவது, மோசடி செய்வது இறைத்தூதர்களுக்கு அழகல்ல.

நபி முஹம்மது அவர்களின் மீது இறைவன் சாந்தியை வழங்குவனாக!

நன்றி:   http://abumuhai.blogspot.com

மக்காவில் அமைந்துள்ள காபத்துல்லாஹ் எனும் இறையில்லம் முஸ்லிம்களின் முதன்மை வணக்கத்தலமாகத் திகழ்கிறது. இது மிகவும் தொன்மையான ஆலயம். ”பழமையான அந்த ஆலயத்தை அவர்கள் தவாஃப் செய்யட்டும்” (022:029) ”மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம்” (003:096) என்று திருக்குர்ஆன் சான்று பகர்கின்றது.

இங்கு காபத்துல்லாஹ்வின் வரலாறு பற்றி எழுதும் நோக்கமல்ல. சவூதி அரபியா நாட்டில் மக்கா எனும் நகரத்தில் அமைந்த இந்த இறையில்லம், உலக முஸ்லிம்களுக்கு தொழும் திசையாக இருக்கிறது. முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை முன்னோக்கித் தொழுவதை அரபு நாட்டுத் திசை நோக்கித் தொழுவதாக சிலர் கருதிக்கொண்டு, அரபு நாட்டுக்கு அடிமைபட்டவர்கள் என்று முஸ்லிம்களின் மீது பொருத்தமில்லாத வசவு மொழிகளை அடுக்குகிறார்கள். இவர்களை ”அறியாத சமுதாயம்” என்று புறக்கணித்து விடுவோம்.

பழமையான காபத்துல்லாஹ் சிதலமடைந்து, இறைவனின் கட்டளையின்படி இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) புதுப்பித்தார்கள், மீண்டும் காபத்துல்லாஹ்வைக் கட்டியெழுப்பியபின், ”ஹஜ்” செய்வதற்கான அழைப்பையும் அறிவிக்கச் சொல்கிறான் இறைவன்.(022:027)

ஒரே இறைவனுக்கு அடியார்களாக வாக்குக் கொடுத்து இறைவனுக்கு கீழ்படியும் மக்களனைவரும் – அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்காளாக இருப்பினும் – அவர்கள் இந்த ஹஜ்ஜின் அழைப்பையேற்று கூடும் மையமாக காபத்துல்லாஹ்வை இறைவன் நிர்ணயித்தான்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹஜ்ஜிற்கான அழைப்பை அறிவித்தபோது, சவூதி அரபியா எனும் எல்லைக் கோடுகள் வரையப்பட்ட நாட்டிற்குள் காபத்துல்லாஹ் இருக்கவில்லை! மாறாக, காபத்துல்லாஹ் இருந்த இடத்தில் மக்கள் குடியேறினார்கள் அதன் பிறகு நாடு உருவாகி அந்நாடு சவூதி அரபியா எனும் பெயர் பெற்றது.

”எனக்கு எதையும் இணையாக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!” (002:125. 022:026) என்று காபத்துல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தும் பணியை, நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரது மைந்தர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் மேற்கொண்டார்கள். 

காலங்காலமாக இந்தப் பணிகள் பல சமூகத்தாரின் கைகளுக்கு மாறி, இன்று சவூதி அரபியாவை ஆட்சி செய்யும் மன்னரின் கண்காணிப்பில் காபத்துல்லாஹ்வின் பணிகள் நிர்வாகமாக இயங்குகிறது. இறைவன், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ”எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!” என்று கட்டளையிட்ட அதே பணிகள், இன்றும் தூய்மைப்படுத்துவதோடு, அதிகமான மக்கள் வருகையை கணக்கில் கொண்டு புனித ஆலயம் விரிவாக்கப் பணியும் சிறப்பாக செய்யப்பட்டு பராமரிப்புப் பணியின் நிர்வாகம் நீடிக்கிறது.

காபத்துல்லாஹ்வை யார் நிர்வகித்தாலும், காபத்துல்லாஹ்வின் மீது அவர்களுக்குள்ள உரிமை போன்று உலக முஸ்லிம்களுக்கும் உண்டு என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

”மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும், தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்” (022:025)

ஜாதியின ஏற்றத் தாழ்வு அடிப்படையில் குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கே வழிபாட்டுத்தலங்களில் முக்கியத்துவம் – முன்னுரிமை வழங்கப்படும். 

இஸ்லாம் சமத்துவத்தின் பிறப்பிடமாக, காபத்துல்லாஹ்வுக்கு அருகில் வசிக்கும் ஒரு அரபியனுக்கு காபத்துல்லாஹ்வின் மீது என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை உலகில் எந்த மூலையில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உண்டு! என்று ஏற்றத் தாழ்வு வேற்றுமையை வேரோடு அறுத்தெறிகிறது. புனித ஆலயம், ”எனது இல்லம்” என்று இறைவன் கூறியிருக்கும்போது, அந்த ஆலயத்தில் இறையடியார்கள் அனைவரும் சமமானவர்களே! அங்கு எவருக்கும் முன்னுரிமை – முதலிடம் என்பதில்லை!

நன்றி:   http://abumuhai.blogspot.com

கணவன் – மனைவி – ஆடை! என்ற தலைப்பில் இப்னு ஹம்துன் அவர்கள் தமது வலைப்பூவில் ஒரு பதிவெழுதியிருந்தார். இஸ்லாம் மார்க்கத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ்கிறார்கள் என்பதை திருக்குர்ஆன், 002:187வது வசனத்தை மேற்கோள் காட்டி இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் சமமே என இஸ்லாத்தின் இயல்பை மிக அழகாக பதிவின் வழியாக பகிர்ந்து கொண்டார்.

சகோதரத்துவம், சமத்துவம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு இது பொருக்குமா..? அவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியாமல், அபத்தமான உளறல்களைக் கொட்டியிருக்கிறார்  பாருங்கள்!

திருக்குர்ஆன், 002:187வது வசனத்தில்…

”ஹுன்ன ”லிபாஸு”ல்லகும்” – ”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும்”

”வ அன்தும் ”லிபாஸு”ல்லஹுன்ன” – ”நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும்” இருக்கின்றீர்கள் என்று மிகத்தெளிவாக கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆடை போன்ற உதராணமாக இறைவன் குறிப்பிடுகிறான்.

லிபாஸ் என்றால் – dress, robe, garment, gown, apparel, attire, clothing, cloths, suit, costume, wear

லிபாஸ் என்பதை எப்படிப் பொருள் கொண்டாலும் சேலை, சல்வார் கமீஸ், கவுன் போன்ற ஆடை, உடை மற்றும் நீதிபதிகள், பாதிரியார்கள், பட்டம் பெறுவோர் மற்றும் சாதாரண ஆண்கள், பெண்கள் அணிந்து கொள்ளும் அங்கி என்றே பொருள்படும். மேலும் ஆடைகள் பற்றிச் சொல்லும் திருக்குர்அன் வசனங்கள்…

”ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும் அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம் (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது” (007:026, 27வது வசனத்ததையும் பார்க்கவும்)

மனிதன் மானத்தை மறைத்துக் கொள்ள உடம்பில், அணிந்து கொள்ளும் ஆடை அலங்காரத்தைப் பற்றிச் சொல்லும் இறைவன், உள்ளத்தில் அணிந்து கொள்ளும் ஆடையைப் பற்றியும் சிலாகித்து உதாரணமாக: தக்வா – இறையச்சம் எனும் ஆடையே சிறந்தது என்று உள்ளத்திற்கு அணிய வேண்டிய ஆடையைப்பற்றியும் இங்கே சிறப்பித்துக் கூறுகிறான்.

அங்கு அவர்களுக்கு ஆணிவிக்கப்படும் ஆடை பட்டாக இருக்கும். – …and their garments there will be of silk (022:023. 035:033)

மறுமையில் சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் ஆடைகள் பற்றிச் சொல்லப்படுகிறது.

உதாரண ஆடை:

அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம். (078:010. 025:047)
 
மனிதன் ஓய்வெடுத்து உறங்குவதை நிம்மதியெனும் ஆடையாக இரவை ஆக்கினோம் என்று இறைவன் உதாரணமாகக் கூறுகிறான்.

”அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவர்களுக்கு அணிவித்தான்” (016:112)

இங்கும் பசியையும், பயத்தையும் ஆடைகளென்று உதராணமாக இறைவன் குறிப்பிடுகின்றான். 

இங்கு குறிப்பிட்ட வசனங்களில் ”லிபாஸ்” என்ற வாசகமே இடம்பெறுகிறது, தமிழறிஞர்கள் மற்றும் சில ஆங்கில அறிஞர்கள் லிபாஸ் என்பதை ஆடை என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள் ஆடை என்பதுதான் சரியான – பொருத்தமான மொழிபெயர்ப்பு! 

இந்தப் பொருத்தத்தின்படி அழகிய முன்னுதாரணத்தில்: கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் மானம் – மரியாதை – கெளரவம் எனும் விலை மதிப்பற்ற ஆடையாகத் திகழ்கிறார்கள்.

மேதகு நண்பர் ஏமாறாதவனின் கூற்றுப்படி, ”They are the keepers of your secrets, and you are the keepers of their secrets.” என்று மொழி பெயர்த்தால்…

ஆடை என்பதை secrets என்று மொழிபெயர்த்துப் பாருங்களேன், குழப்பந்தான் மிஞ்சும்.
நன்றி: http://www.islamkalvi.com/ 

இஸ்லாம் மார்க்கத்தில் சமூகம், இனம், குலம், கோத்திரத்திற்கெல்லாம் எந்த மதிப்பீடுமில்லை என்று வரும் 049:013ம் இறைவசனம் எடுத்துக் கூறுகிறது. குலங்கள், கோத்திரங்களாக இருப்பதும் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவேயன்றி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற அடிப்படையில் பெருமை பாராட்டுவதற்கல்ல. நீங்கள் எந்தக் கோத்திரத்தையும் - எந்த குலத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதனால் உங்களில் ஒருவர் உயர்ந்தவராகவே, தாழ்ந்தவராகவோ ஆகிவிட மாட்டார். இறைவனை எவர் அஞ்சுகின்றரோ அவரே இறைவனிடத்தில் அதிகம் சிறந்தவராவார்.

மனிதர்களே! நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக பல கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அஞ்சுபவர்தான் அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன், நன்கறிபவன். (திருக்குர்ஆன், 049:013)

சிந்திக்கும் திறன் பெற்ற எவரும் மறுத்துப் பேச முடியாத அளவுக்கு மேற்கண்ட வசனம் இனமாச்சரியங்களுக்கு சாவுமணி அடிக்கிறது. ஆனாலும், எதற்கோ - யாருக்கு தமது விசுவாசத்தைக் காண்பிக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பவர்கள் தொடர்ந்து இஸ்லாம் மார்க்கத்தைத் திரிப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

அந்த வரிசையில் குரைஷியர்கள் பற்றி இஸ்லாம் உயர்வாகப் பேசியிருக்கிறது, குரைஷியரல்லாதவர்கள் குரைஷியரை விடத் தாழ்ந்தவர்கள் - தாழ்ந்த ஜாதியினர், இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் - குரைஷிக் குலத்தை சேர்ந்தவர் என்பதால் மக்களை ஆள்வதற்குத் தகுதியானவர்கள் குரைஷி குலத்தவர்களே என்று - தீர்ப்பு சொல்லி விட்டதாக, புதிய திரிபுகளை சலவை செய்யப்பட்ட தங்கள் அறிவுக்கேற்ற மாதிரி விளங்கி கீழ்கண்ட நபிமொழியை எடுத்து வைக்கிறார்கள்.

''நான் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அதை என் அடிமை நாஃபிவு வசம் கொடுத்தனுப்பினேன். அதில் '' நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கேட்டிருந்தேன்.

அவர்கள் எனக்குப் பதில் கடிதம் எழுதினார்கள். (அதில் பின் வருமாறு தெரிவித்திருந்தார்கள்.
ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று (மாயிஸ்) அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் (விபச்சாரக் குற்றத்திற்காக) கல்லெறிந்து கொல்லப்பட்ட மாலைப் பொழுதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''மறுமை நாள் நிகழ்வதற்கு முன் உங்களை பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் ஆளும்வரை இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்'' ... (முஸ்லிம், 3723)

ஒரு அடிமட்ட மூடன் கூட, ஜாதி வெறியைக் காட்டுவதற்காக, அல்லது ஆண், பெண் என பாலின வேறுபாடுகளை தூண்டுவதற்காக இந்த நபிமொழியைக் கையாள மாட்டான். ''மறுமை நாள் நிகழ்வதற்கு முன்'' என்று நபிமொழியில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதே இது ஒரு முன்னறிவிப்பு என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அப்படியிருக்கும்போது இதை இனவெறிக்கு சான்றாக வைத்தவரின் அறிவுத் திறமையை எந்த பட்டியலில் சேர்க்க...?

''ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த (மறுமை)நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் எதுவும் ஏற்படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

''பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் ஏறத்தாள முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதிநாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 3609)

மக்களை வழிகெடுக்கும் கொடியவன் தஜ்ஜால் தோன்றாமல் மறுமை நாள் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் ஏராளமான முன்னறிவிப்புகள் செய்திருக்கிறார்கள். இதனால் தஜ்ஜால் உயர்ந்தவன் - உயர்ந்த ஜாதிக்காரன் என்று பொருள் கொண்டால் அது முட்டாள்தனம்.

''பன்னிரண்டு ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள், அனைவரும் குரைஷிகளாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 7223)

தனக்குப்பின் தொடர்ந்து ஆட்சிக்கு வரும் பன்னிரண்டு பேர்கள் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்று எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி அறிவிக்கப்பட்டதே இந்த முன்னறிவிப்பு. மற்றபடி குரைஷியர்களை சிறப்பித்துக் கூறியதல்ல...

''இந்தக் குரைஷிக் குலத்தவர் (களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், (அப்படியொரு நிலை வந்தால்) 'நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று' கேட்டார். ''அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாக இருக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 3604)

'உண்மையாளரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தரின் அழிவு குரைஷி இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது' என்று சொல்ல நான் கேட்டேன்'' - அபூ ஹூரைரா (ரலி) (புகாரி, 3605, 7058)

குரைஷியர்கள் உயர் குலத்தினரோ - உயர் ஜாதியினரோ அல்ல. அவர்களும் சராசரி மனிதர்களைப் போன்றவர்களே! குரைஷியரிடமும் நல்லவர்களும் கெட்டவர்களும் தோன்றுவார்கள். ஆட்சிக்கு வரும் குரைஷியர்களால் சமுதாயத்திற்கு அழிவும் ஏற்படும் என்று சேர்த்தே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதையெல்லாம் சாதாரணமாகப் படித்தாலே புரிந்து கொள்ள முடியும் ஆனால் சிந்தனை சுத்தமாக இருக்க வேண்டும்.

முஹம்மது இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார்

முஆவியா(ரலி) அவர்களிடம் குறைஷிகளின் ஒரு தூதுக் குழுவில் ஒருவனாக நான் வருகை தந்திருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு அம்ர் பின் ஆஸ்(ரலி) அவர்கள் 'கஹ்தான் குலத்திலிருந்து மன்னர் ஒருவர் தோன்றுவார்'' என்று அறிவிப்பதாகச் செய்தி வந்தது. முஆவியா(ரலி) கோபமடைந்து எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிப் படியுள்ள வர்ணனைகளால் புகழ்ந்துவிட்டு பின்னர், 'இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகிறேன். உங்களில் சிலர், அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத, அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிக்கப்படாத செய்திகளைப் பேசுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறியாதவர்கள் ஆவர். வழி கெடுத்து விடுகிற வெற்று நம்பிக்கைகளைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன் - ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும். அவர்களுடன் அது தொடர்பாகப் பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான். மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டி வரும் வரை இந்நிலை நீடிக்கும்'' என்று கூற கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள். (புகாரி, 3500, 7139)

குரைஷியர்கள் மட்டுமல்ல எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியாளராக வந்தாலும், மார்க்கத்தை நிலை நாட்டும் வரை அவர்கள் ஆட்சியில் நீடிப்பார்கள், தீனை நிலைநாட்டத் தவறினால் மக்களால் அகற்றப்படுவார்கள். குரைஷியர்களும் மக்களால் அகற்றப்பட்டார்கள். பிறகு கஹ்தான் எனும் குலத்திலிருந்து ஒருவர் ஆட்சியாளராக வந்து மக்களை வழி நடத்திச் செல்வார் என்பதை வரும் நபிமொழி கூறுகிறது...

''கஹ்தான் குலத்திலிருந்து ஒரு மனிதர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 3517)

உயர்ந்த குலம் - உயர்ந்த ஜாதி என்று பார்த்து தலைவரைத் தேர்ந்தெடுக்க இஸ்லாம் சொல்லவில்லை. மாறாக...

நபி (ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையில், ''அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்படியுங்கள்'' என்று கூறினார்கள். (முஸ்லிம், 3750)

இன்னும், பல அறிவிப்புகள் குரைஷிகள் அல்லாதவர்களும் ஆட்சியாளராக வருவார்கள் என்பதைச் சொல்லி, அப்படி வருபவர் எந்த ஜாதியினர் என்று பார்க்காமல், அல்லாஹ்வின் வேதப்படி மக்களை வழி நடத்தும், உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட கருப்பு நிற அடிமையொருவர் தலைவராக வந்தாலும் அவருக்குக் கீழ்படிந்து நடக்கவே இஸ்லாம் கட்டளையிடுகிறது.

நிறம் - இனம் - மொழி - உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுக்கு இஸ்லாத்தில் இடமில்லை, இஸ்லாத்தில் ஜாதியை நிறுவ முயற்சிப்பவர்கள் தக்க சான்றுகளுடன் எழுதலாம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை 
 
நன்றி: http://www.islamkalvi.com/