Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நீலகண்டன் - http://arvindneela.blogspot.com/2006/12/blog-post_20.html - சொல்கிறார், ''ஹராம்'' என்றால் ''இழிவானது'' என்று.

கணவனுள்ள பெண்களும் - ''ஹுர்ரிமத் அலைக்கும்''... - (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளார்கள். 004:024)

எப்படியிருக்கிறதென்று பாருங்கள்? ஏற்கெனவே ஒருவனுக்கு மனைவியாக இருப்பவள் இன்னொருவனைத் திருமணம் செய்து அவனுக்குப் பிள்ளையும் பெற்றாளாம். (இன்னும் மூவரைக் கட்டிக் கொண்டால் சுத்தமாக இருக்கும்) ஒருவனுக்கு மனைவியாய் இருப்பவள் அவனிடமிருந்து விவாகரத்துப் பெறாமல் வேறொருவனை மணமுடிக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. இதில் பிற மதங்கள் என்ன சொல்கின்றன என்பது தெரியவில்லை. இந்திய சட்டமும் இதைத் தடை செய்கிறது என்றே கருதுகிறேன்.

''ஹராம்'' என்பதற்கு நீலகண்டன் அவர்களின் விளக்கவுரை...

//இப்போது இன்னொரு விசயத்தை பார்ப்போம். பெற்றவர் தவறு செய்ததாகவே வைத்துக்கொள்வோம். பிறந்த குழந்தை என்ன செய்யும்? இந்த நவீன உலகில் திருமண பந்தத்தில் பிறந்தாலும் மத நெறிக்கு வெளியே பிறந்ததால் பச்சிளம் குழந்தையை பாவ பிறவி எனக் கூறும் கொடுங்கோரர்களை என்ன என்று சொல்ல? இதுதான் பகுத்தறிவா?
இந்த பகுத்தறிவான பதில் வெளிவந்தது 'முஸ்லீம் முரசு' இதழில் (மார்ச் 1989) இந்த பகுத்தறிவு பெட்டகத்தின் அட்டையை அலங்கரித்த 'பகுத்தறிவு' யார் தெரியுமா?//


ஹராம் என்றால் பாவப் பிறவி, இழிபிறவி என்று தமக்குத் தோன்றியதை அடுக்கிக் கொண்டே போகிறார் நீலகண்டன். ஹராம் என்றால் விலக்கப்பட்டது, தடைசெய்யப்பட்டது, கூடாத உறவு, தகாத உறவு. என்றே பொருள். இஸ்லாமிய வழக்கில் இறைவன் அனுமதிக்காததை ''ஹராம்'' என்று சொல்லப்படும்.

''ஹுர்ரிம அலைக்கும்'' உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும். (003:050)

ஹராம் என்றால் இழிவானது எனப் பொருள் என்றால் ஹராமாக்கப்பட்ட ஒன்றை, இங்கு மீண்டும் இறைவன் அனுமதிக்க மாட்டான். ஹராம் என்பது தடை செய்யப்பட்டவை, இறைவனால் தடை செய்யப்பட்டவற்றிலிருந்து முஸ்லிம்கள் விலகிக்கொள்ள வேண்டும்.

''ஹுர்ரிமத் அலைக்கும்'' - தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை - உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. (005:003) இதே வசனத்தில், ஹராமாக்கப்பட்டவைகளை - நிர்ப்பந்த நிலையில் பாவம் செய்யும் எண்ணமில்லாமல் - புசித்தால் அவர் மீது குற்றமில்லை என்றும் இறைவன் கூறுகிறான்.

விபச்சாரத்தில் பிறந்த குழந்தையின் நிலைப்பாடு.

ஒரு பெண் 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக நான் (தகாத உறவினால்) கர்ப்பமுற்றுள்ளேன்' என்று கூறினார்.

''இல்லை நீ சென்று குழந்தை பெற்றெடு' (பிறகு திரும்பி வா) என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தை எடுத்துக்கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'இது நான் பெற்றெடுத்த குழந்தை' என்று கூறினார்.

''நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்தபின் திரும்பி வா'' என்றார்கள்.
பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண் 'அல்லாஹ்வின் தூதரே இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்' என்று கூறினார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள்.
(முஸ்லிம், நபிமொழியின் சுருக்கம்)

ஒன்றிரண்டு நபிமொழிகளை எடுத்துக்காட்டி, அதோடு //பாகிஸ்தானில் மத சட்டத்தின் படி 'தவறான' உறவில் பிறந்த குழந்தையும் கல்லால் அடித்து கொல்லப்பட்டது குறித்து படித்த ஞாபகம்.// என்று எழுதி விட்டால் ''இஸ்லாம் தவறான உறவில் பிறந்த குழந்தையைக்கூடவாக் கொல்லச் சொல்கிறது'' என்று படிப்பவர்கள் இமைகளை விரிக்கமாட்டார்களா? போகட்டும்.

விபச்சாரத்தின் மூலம் கர்ப்பமடைந்த பெண் - அவர் குழந்தை பெறும் காலம்வரை, குழந்தை பெற்று அந்தக் குழந்தைத் தாய் பால் குடிக்கும் காலம் வரை, பின் பால்குடி மறக்கடிக்கப்பட்டு ரொட்டியை உணவாக உண்ணும் வரை - அந்தப் பெண்ணுக்கு தண்டனை காலம் தள்ளி வைக்கப்படுகிறது. பின் அச்சிறுவனைப் பராமரிக்கும் பொறுப்பு வேறொருவரிடம் ஒப்படைக்கப்பட்டு, விபச்சாரம் செய்த பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இவ்வளவும், இஸ்லாம் தடை செய்த விபச்சாரத்தைச் செய்தவர்கள் தகாத உறவு கொண்டவர்கள் என்றாலும், தகாத உறவில் - ஹராமான உறவில் பிறந்த குழந்தை எந்தப் பாவமும் செய்யவில்லை, தாகாத உறவால் விபச்சாரம் செய்தவர்களுக்காக அந்த உறவில் பிறந்த குழந்தை பொறுப்பாளியாகாது என்பதனால் இஸ்லாம் அந்தக் குழந்தையின் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறது என்பதை விளங்கலாம். ஆனாலும் நீலகண்டன் அவர்கள் இஸ்லாத்தின் மீது வலிய தமது இட்டுக் கட்டலைத் திணித்திருக்கிறார்.

//அவள் பெற்ற குழந்தையும் ஹராமான பிறப்பே.//

விபச்சாரத்தில் பிறந்த குழந்தை, இஸ்லாம் தடை செய்துள்ள தகாத உறவில் பிறந்த குழந்தை என்று முஸ்லிம் முரசு சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. தகாத உறவில் பிறந்த குழந்தையை இஸ்லாம் இழிபடுத்துவதாகத் தவறாக விளங்கிக் கொண்டு இஸ்லாத்தை விமர்சத்திருப்பதுதான் அபத்தம்.

அதே அபத்தத்தோடு பெரியாரையும் சாடியிருப்பது பேரபத்தம். மேல்ஜாதி, கீழ்ஜாதி, தீண்டத்தகாதவன் எனும் தீண்டாமையை ஒழித்த ஒரே மார்க்கம், இஸ்லாம் மார்க்கம் என்று பெரியார் மட்டுமல்ல, அன்றும் இன்றும் நாளையும் யார் சொல்லியிருந்தாலும், சொன்னாலும் அதற்குப் பொருத்தமான - தீண்டாமை இல்லாத மார்க்கம் இஸ்லாம் என்பதில் நேர்மையானவர்களிடையே மாற்றுக் கருத்து இருக்கவா முடியும்?

நீலகண்டன் அவர்கள் எதிலோ உள்ள ஆத்திரத்தை நிதானமிழந்து இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்...

//"தமிழ் மக்களுக்கு இஸ்லாமே பொருத்தமானது" கூறியவர் ஈவேரா (24-2-1935) 1980களிலும் 2000களிலுமே இப்படி என்றால் 1930களில் இந்த கும்பல் எப்படி இருந்திருக்க வேண்டும். அவர்களிடம் போய் இளித்தபடி ஈவேரா இப்படி அறிக்கை விட்டிருந்தால் அந்த ஆள் எப்படிப்பட்ட நயவஞ்சக பசப்பு வார்த்தை ஆசாமியாக இருந்திருக்க வேண்டும்! இப்படிப்பட்ட போலி பகுத்தறிவு ஆசாமி, சுயமரியாதை இல்லாத காட்டுமிராண்டி நயவஞ்சக முட்டாளை, 'பெண் விடுதலை போராளி' என்று சொன்னால், தெரியாமல்தான் கேட்கிறேன்...பெண் ஏன் அடிமையாக மாட்டாள்?//

பொருத்தமில்லாத வசவு மொழிகள்.

அன்புடன்,
அபூ முஹை 

நன்றி:   http://abumuhai.blogspot.com

இஸ்லாம் மார்க்கத்தில் ஜாதிகள் இல்லையா? எனக் கேட்டு இஸ்லாத்தில் ஜாதிகளை நிறுவ, இஸ்லாத்திலிருந்து ஒரு சான்றைக்கூட வைக்காமல் வழக்கம் போல் தமது ரீ மிக்ஸ் கைங்காரியத்தை செய்திருக்கிறார் ஒரு இந்துத்துவவாதி.

அடக் கைச்சேதமே.

//இது சம்பந்தமாக நிறைய இணையக் கட்டுரைகள் இருக்கின்றன. யோகிந்தர் சிக்கந்த் கூட தலித் முஸ்லிம்கள் பற்றியெல்லாம் எழுதியுள்ளார். இருப்பினும், என் சார்பாக இஸ்லாமிய சமுதாயத்தில் இருக்கும் சாதிகளின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு கள ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளை (எழிலின் பதிவில் இட்டது) இங்கு மீண்டும் இடுகிறேன்.

இதன் மூலம் நான் ஒன்றும் இந்து மதத்தில் சாதியில்லை அல்லது சாதிப்பிரச்சினை இல்லை என்று சாதிக்க முயலவில்லை. மாறாக, சாதி இஸ்லாத்தில் இல்லை என்று சாதிக்கும் இஸ்லாமிஸ்டுகளுக்காகவும், இஸ்லாத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இன்னும் இருக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்காகவும் இதை இடுகிறேன்.
***
ஒரு ஆய்வின் போது, ஹதராபாத்தில் இருக்கும் ஜாதிகள் என்று இந்தக் கட்டுரையின் ஆசிரியர் பட்டியலிடும் ஜாதிகள் இவை://


(இது சம்பந்தமாக ஆங்கிலக் கட்டுரைகளை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளலாம்
http://nesakumar.blogspot.com/2006/12/blog-post_07.html)
...

//(My note: இக்கட்டுரையைப்படிக்கும், இந்திய இஸ்லாமிய சமூகத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியாத நண்பர்களுக்காக - உயர்ஜாதி முஸ்லிம்கள் - சயீத் - இங்கிருக்கும் பிராம்மணர்களைப் போன்றவர்கள், பிராம்மணர்கள் எப்படி ரிஷி வழி வந்தவர்களாக, ஆன்மீகத்தன்மை உடையவர்களாக தம்மை கற்பிதம் செய்து கொள்கிறார்களோ அவ்வாறே சய்யத்து அல்லது சயீத் சாதியினரும் முகமதின் வழித்தோன்றல்களாக தம்மை கருதிக்கொள்கின்றனர். பதான்கள் தம்மை க்ஷத்திரிய சாதியினராக கருதுகின்றனர். பொதுவாக கான் என்றால் க்ஷத்திரியர்கள், சயீத் அல்லது சாபு அல்லது தங்ஙள் என்றால் பிராம்மண முஸ்லீம்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்)//

-----------------
எமது குறிப்பு:

சய்யத் என்றால்: master, lord, chief, head, leader

சய்யதி: sir

சய்யதத்: lady, woman, mistress, mrs, madem(e)

சய்யதாதி வ சாததீ: ladies and gentlmen

புரட்சி சய்யத்: புரட்சித் தலைவர்.

புரட்சி சய்யதத்: புரட்சித் தலைவி.

''எங்கள் கூட்டத்தின் - சய்யதை - தலைவரை தேள் கொட்டிவிட்டது.'' (புகாரி, 5007)

''என்னுடைய இந்த (புதல்வியின்) புதல்வர் - சய்யதுன் - தலைவர் ஆவார்.'' (புகாரி, 7109)

சய்யது என்பது அரபி மொழியில் மரியாதைக்குரிய ஒரு வார்த்தை ''யா சய்யதி'' ''ஓ தலைவரே'' என்று இன்றும் அழைத்துக் கொள்வார்கள். கடிதத்திலும், அதிகாரிகளுக்கு எழுதும் மனுவிலும் இவ்வாறேக் குறிப்பிட்டு அரபியர்கள் எழுதுவார்கள். இது ஒரு சாதாரண தலைவா என்று தமிழில் சொல்லிக் கொள்வது போல் உள்ள வார்த்தையே அரபியில் சய்யத் என்பதும். இதை ஜாதியாகக் கருதி, அதுவும் உயர் ஜாதியாக கட்டமைத்து வழக்கம் போல் வரலாற்றில் ரீ மிக்ஸ் செய்ய முயற்சித்திருக்கிறார் இந்த இந்துத்துவவாதி.

சயீத் என்றால் அதிர்ஷ்டசாலி. சயீத் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அபூ சயீத் அல் குத்ரீ, அபூ சயீத் பின் முஅல்லா.

இஸ்லாத்தின் நிலைப்பாடு.

மனித குலம் ஒரு தாய் தந்தையிலிருந்தே பல்கிப் பெருகிறது.

நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள் ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டார்.

கருப்பனைவிட வெள்ளையனோ, வெள்ளையனைவிட கருப்பனோ சிறந்தவனல்ல.

அரபியனைவிட அரபியரல்லாதவனோ, அரபியரல்லாதவனைவிட அரபியனோ சிறந்தவனல்ல.

உங்களில் இறையச்சமுடையவர்களே இறைவனிடத்தில் மேன்மையானவர்கள்.

இப்படி ஜாதிகளின் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை வேரோடும், வேரடி மண்ணொடும் அழித்து விட்டது இஸ்லாம். இஸ்லாத்தில் ஜாதிகள் இருப்பதாக நிறுவ முயற்சிப்பவர்கள் இஸ்லாத்திலிருந்தே ஆதாரங்களை வைப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.

அன்படன்,
அபூ முஹை 

நன்றி:   http://abumuhai.blogspot.com

இஸ்லாம் மார்க்கத்தின் நிழலில் நபித்தோழர் பிலால் (ரலி) அவர்களுக்குக் கிடைத்த சிறப்பு - என்பது பாரம்பர்யமோ, குலச்சிறப்பு, குடும்பச் சிறப்பு, பொருளாதார வலிமையோ இல்லாத, விலை கொடுத்து வாங்கிய, எஜமானின் கட்டளைக்கு உழைத்த ஒரு கருத்த அடிமைக்கு இத்தனை மதிப்பா? என்று - குறைஷிகள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு உயர்வாகவே இருந்தது.

''எங்கள் தலைவர் அபூபக்ர், எங்கள் மற்றொரு தலைவர் பிலாலுக்கு விடுதலை வழங்கி விட்டார்'' என்று நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள் சிலாகித்துச் சொல்லுமளவுக்கு - கருப்பின அடிமையாக சிறுமைப்பட்டிருந்த பிலால் (ரலி) அவர்களின் நன் மதிப்பை உன்னதமாக உயர்த்தியது இஸ்லாம். மக்கா வெற்றியின் போது இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காஃபாவினுள் நுழைந்த போது அவர்களுடன் அனுமதிக்கப்பட்ட மூன்றே தோழர்களில் பிலால் (ரலி) அவர்களும் ஒருவர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை பாங்கு சொல்லப் பணித்தார்கள். பிலால் (ரலி) அவர்களும் காஃபாவின் மத்தியில் நின்று பாங்கு சொன்னார்கள்.

''முஹம்மதுக்கு இந்த காஃபா ஆலயத்தில் பாங்கு சொல்ல அடிமை பிலாலைத் தவிர வேறு ஆளே கிடைக்கவில்லையா? இந்த ஆசாமிதான் அங்கே ஏறி நின்று சொல்ல வேண்டுமா? பாரம்பர்யமுள்ளவர்களால் கூட காஃபாவினுள் பிரவேசிக்க சாத்தியமில்லாதிருக்க இந்த ஆசாமியை உள்ளே விட்டது யார்?'' என்றெல்லாம் கூறி தங்கள் எரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டனர் அன்றைய சிலர். இன்றும் அதே எரிச்சலையே வெளிப்படுத்துகிறார்கள், முஹம்மது தன் மகள் ஃபாத்திமாவை பிலாலுக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை? என்று.

அப்படித் திருமணம் செய்திருந்தால் மட்டும் இவரென்ன இஸ்லாத்தைத் தழுவி விடவாப் போகிறார்..?

திருமணத்தைக் கொண்டு ஏற்றத் தாழ்வை நிர்ணயிப்பவர்கள், அதைவிட இந்த முஸ்லிம் சமுதாயத்தில் ஒப்பற்ற மனிதர்களில் ஒருவராக பிலால் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள். பிலால் (ரலி) அவர்களின் இறைநம்பிக்கையும், தூய்மையும், தியாகமும் அவரை உயர்ந்த அந்தஸ்துக்கு உயர்த்தி விட்டன. இந்த உயர்வை அடைவதில் பிலால் (ரலி) அவர்களின் கருத்த மேனியோ, குலசிறப்பின்மையோ, முந்தைய அடிமை நிலை எதுவுமே தடையாக இருக்கவில்லை! முன்னர் யாருமே கண்ணெடுத்தும் பார்க்காத இந்தக் கருப்பு மனிதரை அன்று நபியும், நபித்தோழர்களும் போற்றினார்கள், இன்றும் இச்சமூகத்தினர் அனைவரும் போற்றுகின்றார்கள்.

திருமணம் என்பதும் இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு முஸ்லிமான ஆண், ஒரு முஸ்லிமானப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அனுமதியை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதற்கு மேல் அத்திருமணத்தை நடத்துவதென்பது இரு வீட்டாரின் சம்மதத்தில் அடங்கியுள்ளது. மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் சம்மதித்துக் கொண்டால் சம்பந்தம் செய்து கொள்ளலாம். சம்மதமில்லையென்றால் திருமணத்தை நடத்த வேண்டிய அவசியமில்லை. இதிலும் இஸ்லாம் தலையிட்டு - இன்னாருக்கு, இன்னார் பெண் கொடுத்து சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்ளையையும் - சொல்லியிருக்க வெண்டும் என்பது பைத்தியக்காரத்தனம்.

சாதாரண டீக்கடை வைத்திருப்பவர் கடையில் பணியாளாக இருப்பவருக்கு தனது மகளைத் திருமணம் செய்து கொடுக்க முன் வரமாட்டார். காரணம் பொருளாதார எற்றத் தாழ்வு என்ற தகுதி அவரைத் தடுக்கிறது. இதைத் தவறு என்று எந்த புத்திசாலியும் சொல்ல மாட்டார். மகளின் மீது அக்கறை கொண்ட எந்த தகப்பனுக்கும் வாக்கப்பட்டுப் போகுமிடத்தில் மகள் சந்தோஷமாக வாழ வேண்டும், தன் மகள் வறுமையில் வாடக்கூடாது என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கும்.

சின்ன டீக்கடை வைத்து நடத்தும் ஒரு பெண்ணின் தந்தையின் நிலை இதுவென்றால், சவூத் மன்னரின் குடும்பத்துப் பெண்களை ஒட்டகம் மேய்க்கும் முஸ்லிம்களுக்கு அதுவும் தலித்!? முஸ்லிம்களுக்கு ஏன் திருமணம் செய்து கொடுக்கவில்லை? என்று கேட்கிறார் ஒரு விவரமில்லாதவர். எவ்வளவு பெரிய பொருளாதார வித்தியாசம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் ஏதோ தாக்குதல் நடத்த வேண்டுமென்பதற்காக கேட்கப்பட்டக் கேள்வியாகவே இருக்கிறது.

பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையிலிருக்கும் பெண்ணை மணமுடிக்கும்போது அவளோடு வாழ்க்கை நடத்த முன்வருபவன் அவளுக்கு நிகரான பொருளாதார அந்தஸ்தைப் பெற்றிருக்கவில்லை என்றால் அவனோடு ஒருநாளும் அந்தப் பெண் வாழமுடியாது. அவளுக்கான அன்றாடச் செலவை இவனால் ஈடுகட்ட முடியாது. இப்படிப்பட்ட வறுமை நிலையில் இருக்கும் ஒருவனுக்கு எந்த அரபியனும் தனது மகளை மணமுடித்துத் தரமாட்டான்.

இது உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஜாதி அடிப்படையில் தீர்மானிப்பதில்லை. மாறாக பொருளாதாராம், கலச்சாரம், பண்பாடு அடிப்படையில் தீர்மானிப்படுகிறது. கல்லானாலும் கணவன் என்கிற பண்பாட்டை அரபியப் பெண்களிடம் சொல்ல முடியாது. அதுபோல் கதர் சேலையைக் கட்டிக் கொள் என்ற எளிய ஆடைக் கலாச்சாரத்தையும் அவளிடம் திணிக்க முடியாது. எல்லாவற்றுக்கு தாராளமான பொருளாதாரம் வேண்டும். அப்படியில்லாதவன் அவனுக்குத் தகுந்தமாதிரிப் பெண்ணையேத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் அதுதான் அவனுக்கும் நல்லது.

இதை ஒட்டகம் மேய்ப்பவனுக்கு பெண் கொடுக்கத் தடையிருப்பதாக விளங்கக்கூடாது. பொருளாதாரத்திலுள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக பெண் தரமாட்டார்கள். எல்லா நாட்டிலும் இந்த ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. மற்றபடி இஸ்லாம் இதைத் தடை செய்திருக்கிறதா என்றால் அதைக் காட்ட வேண்டும். எந்தக் கோடீஸ்வரனும் யாசகம் செய்பவனுக்கு தன் பெண்ணை மணமுடித்துத் தர மாட்டான். அது யாராக இருந்தாலும் சரியே.

இந்தியாவிலுள்ள ஒரு முஸ்லிம் தன்னிடம் ஆடு மேய்க்கும் முஸ்லிமுக்கு தன் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கமாட்டான். இந்த விஷயத்தில் முதலில் தன்னை சுயவிமர்சனம் செய்துகொண்டு பிறகு பொது விமர்சனம் செய்ய வேண்டும். மேல் ஜாதி, கீழ் ஜாதி என்றெல்லாம் இஸ்லாத்தில் இல்லையென்றாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அடிப்படையில் திருமணம் என்பது இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. இதில் இஸ்லாம் தலையிடுவதில்லை.

கீழ்கண்ட கேள்விக்கான விளக்கங்களே மேற்சொன்னவைகள். -

- //முகமது சமூக நீதியின் மீது அக்கறை கொண்டவராக இருந்தால், பிலாலுக்கு தமது மகள் ஃபாத்திமாவை மணம் செய்து கொடுத்திருக்க வேண்டியதுதானே. முகமதின் குடும்பத்தில் எதாவது ஒரு பெண்ணை கறுப்பின முஸ்லிம்களுக்கு மணம் செய்து கொடுத்தார்களா? தமது அடியார் அபுபக்கர் தமது பெண் பாத்திமாவை மணந்துகொள்ள(ஆயிஷாவை முகமது மணந்து கொண்டதைப் போல) கேட்டதற்கு வஹி வருகிறது, வஹி வருகிறது என்று சொல்லி கடைசியில் தமது (உயர்குல) தம்பி(கஸின்) அலிக்கு தமது மகள் பாத்திமாவை கட்டிக் கொடுத்து ஏமாற்றியவர்தானே உங்களது போலி இறைத்தூதர்?

இவ்வளவும் ஏன், இன்றைய சவுது மன்னர் குடும்பத்து பெண்களை இந்தியாவிலிருந்து அங்கு சென்று மலம் அள்ளும் உங்களைப்போன்ற 'முஸ்லீம்களுக்கு' கட்டிக் கொடுப்பார்களா? எத்தனை அரபி உயர்குலப் பெண்களை இங்கிருந்து சென்று ஒட்டகம் மேய்க்கும் தலித் முஸ்லிம்கள் மணந்திருக்கின்றார்கள் - விபரம் தர முடியுமா?

6. கடைசியாக, கேள்விகளை கேட்ட இஸ்லாமிய பதிவர் ஒருவர் 'சமஸ்காரம் தெரியாத அசடுகளை' வீட்டிற்குள் அழைத்துவந்தது குறித்து எழுதியிருக்கிறார். இது இஸ்லாத்திலும் இருக்கிறது. அரபிக்கள் எத்துனை பேர் இந்திய இஸ்லாமிய வேலையாட்களுக்கு தத்தமது பெண்மக்களை, சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்றொரு கேள்வியைக் கேட்டேன் - எந்த இஸ்லாமியரும் இன்றுவரை பதிலளிக்கவில்லை. எனக்குத் தெரிந்து எத்தனையோ பிராம்மணரல்லாதோர் பிராம்மணப் பெண்களை மணந்திருக்கின்றனர். ஆனால், எத்தனை அரபியல்லாதோர் குவைத் அரபிப்பெண்களை மணந்திருக்கின்றனர்? இது ஒரு பிரச்சினை என்றால், இந்தப் பிரச்சினை இந்து மதத்தையும் விட தீவிரமாக இஸ்லாத்தில் இருக்கிறது.//

அன்புடன்,
அபூ முஹை 

நன்றி:   http://abumuhai.blogspot.com

மனுதர்மத்தைக் குர்ஆனில் தேடுகின்ற சூபியின் மாறாத்தனம் கடந்த வாரத் திண்ணையில் [சுட்டி-1] வெளிப் பட்டிருக்கிறது.

“மனிதர்களே!” என்று மொத்த மனுக்குலத்தையும் விளித்து, “நீங்கள் அனைவரும் ஒரேயொரு தாய்-தகப்பனின் வழி வந்தவர்கள்” என்றும் “உங்கள் அனைவரின் இறைவனும் ஒரேயொருவனே!” [004:001] என்றும் தீண்டாமையை அழித்தொழிக்கும் குர்ஆனில் மனு தர்மத்தைத் தேடி அலையும் சூபியை எதில் சேர்ப்பது? என்பதை வாசகர்களே முடிவு செய்யட்டும்.
இனி, அபூலஹபைக் குறித்து சூபி கேட்டிருப்பதற்கு விளக்கம்:

அபூலஹப் என்பவன் யார்? 

அப்துல் உஸ்ஸா என்ற இயற் பெயருடைய அபூலஹப், அப்துல் முத்தலிபின் மகன்களுள் ஒருவனும் வஹ்ஹாபிகளின் தலைவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையுமாவான். ஹர்புடைய மகளும் அபூஸுஃப்யானின் சகோதரியுமான அர்வா என்பவள் அபூலஹபின் மனைவியாவாள். 

“உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுப்பீராக!” [026:214] என்ற இறைகட்டளை வந்தவுடன், நபி (ஸல்) அவர்கள், மக்காவில் உள்ள ‘ஸஃபா’ என்ற குன்றின் மீதேறி நின்று, ”யா ஸபாஹா! யா ஸபாஹா!!” என்று குரலெழுப்பினார்கள். (எதிரிப் படையொன்று சூழ்ந்துகொண்டதை அல்லது ஏதேனும் பேராபத்து வந்துவிட்டதை அறிவிக்க இந்த அரபுச் சொல் பயன்படுத்தப்படும்.)

பிறகு குறைஷி வமிசத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்தார்கள்: ஃபஹ்ர் குடும்பத்தாரே! அதீ குடும்பத்தாரே! அப்து முனாஃபின் குடும்பத்தாரே! அப்துல் முத்தலிபின் குடும்பத்தாரே! என்று அழைத்தார்கள். 

அவர்களது அழைப்பைச் செவியேற்றவர்கள், “இவ்வாறு அழைப்பவர் யார்?” என வினவ சிலர் ”முஹம்மது” என்று கூறினர். உடனே குறைஷியர்களில், அபூலஹப் உட்பட பலரும் அங்குக் குழுமினர். வர இயலாதவர்கள் தங்கள் சார்பாக ஒருவரை அவர் சொல்வதைக் கேட்டு வருமாறு கூறியனுப்பினார்கள்.
அனைவரும் ஒன்று கூடியபோது நபி (ஸல்), ”இம்மலைக்குப் பின்னாலுள்ள கணவாயில் உங்களைத் தாக்குவதற்காக குதிரை வீரர்கள் காத்திருக்கிறார்கள் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள். 

அதற்கு அம்மக்கள், ”ஆம்! உங்களை நம்புவோம்; உங்களை உண்மையாளராகவே கண்டிருக்கிறோம்; பொய்யுரைத்துக் கண்டதில்லை” என்றனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”குறைஷியரே! அல்லாஹ்விடமிருந்து உங்களது ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது.
கஅபு இப்னு லுவய்யின் வழித்தோன்றல்களே! முர்ரா இப்னு கஅபின் வழித்தோன்றல்களே! குஸைய்யின் வழித்தோன்றல்களே! அப்துல் முனாஃபின் வழித்தோன்றல்களே! அப்து ஷம்ஸ் வழித்தோன்றல்களே! ஹாஷிம் வழித்தோன்றல்களே! அப்துல் முத்தலிபின் வழித்தோன்றல்களே! அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது.
முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! எனது செல்வத்திலிருந்து விரும்பியதைக் கேட்டு பெற்றுக்கொள். உன்னை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்! நிச்சயமாக நான் உனது நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை விட்டு உனக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது. 

எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உறவு இருக்கிறது. உரிய முறையில் இரத்தப் பந்தத்திற்கானக் கடமைகளை நிறைவேற்றுவேன்” என்று கூறி முடித்தார்கள்.

இந்த எச்சரிக்கை முடிந்ததும் மக்கள் எதுவும் கூறாமல் கலைந்து சென்றார்கள். ஆனால், அபூ லஹப் மட்டும் குரோதத்துடன் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டான். ”நாள் முழுவதும் உனக்கு நாசமுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களைக் கூட்டினாயா?” என்று கூறினான். அவனைக் கண்டித்து ”அழியட்டும் அபூ லஹபின் இரு கரங்கள்; அவனும் அழியட்டும்…” என்ற 111வது அல்குர்ஆன் அத்தியாயம் அருளப் பட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத்திர்மிதீ, [சுட்டி-2 & 3]. 

அபூலஹபின் மீது தணியாத பாசம் கொண்ட சூபியின் கேள்வி யாதெனில், “கருணையாளனான அல்லாஹ் தெருச் சண்டைக்காரன் போல் சாபமிடலாமா?” என்பதே!

முஸ்லிம்களின் இறைவனைக் குறித்து எதுவுமே தெரியாத அறிவிலித்தனத்தால் விளைந்த கேள்வியைத்தான் சூபி கேட்கிறார்.

அல்லாஹ் கருணையாளன்தான். அதேவேளை கையாலாகாதவன் அல்லன். அடக்கியாள்பவனும் அவனே! அவனுடைய அன்பிற்குரிய அடியார்கள் பலரையே அடக்கி வைத்தவன்; வைத்திருப்பவன் எனும்போது அபூலஹப் அவனுக்கு எம்மாத்திரம்? 

அடுத்து, “இது அல்லாவின் வார்த்தையா?” என்று சூபி ஒரு கேள்வியை வைக்கிறார் – அந்தக்கால அபூலஹபைப் போலவே.

மேற்காணும் 111ஆவது அத்தியாயம் அருளப் பட்ட பின்னரும் பத்தாண்டு காலத்திற்கு மேல் அபூலஹப் உயிர் வாழ்ந்திருந்தான். அந்தப் பத்தாண்டுகளில் அவனுடைய குரைஷிக் குலத்தினரில் பெரும்பாலோர் சத்திய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டனர். 

சூபியைப் போலவே இறைவாக்கைப் பொய்ப் படுத்திவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்த அபூலஹப், சற்றே அறிவைப் பயன் படுத்தி இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? 

“நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டேன்” என்ற ஓர் அறிவிப்பு அபூலஹபிடமிருந்து வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

1 – “குர்ஆன் இறைவாக்கு இல்லை” என்று நிறுவுவதற்கு 1400 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்க வேண்டிய பரிதாப நிலை தொடந்திருக்காது. 

2 – நபி (ஸல்) அவர்களை, அல்லாஹ்வின் தூதர் என்ற உயர் பதவியிலிருந்து இறக்கி, வெறும் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று ஆக்குவதற்கு இன்றுவரை செய்யப் பட்டுக் கொண்டிருக்கும் பூனையைக் கட்டி வைத்து சிரைக்கும் வேலை மிச்சமாகிப் போயிருக்கும்.

3 – உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பின்பற்றுகின்ற – எதிர்ப்புகளை எதிர்கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து செம்மாந்து நிற்கின்ற – வாழ்க்கை நெறியான இஸ்லாம், இல்லாமலாகி இருக்கும். 

கேள்வி: அபூலஹப் ஏன் அதைச் சொல்லாமலே அழிந்து போனான்?
பதில்: அல்குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கு இன்னொரு சாட்சியாக!

சுட்டிகள்
1 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=80611233&format=html
2 – http://www.a1realism.com/history/Raheequl_makthooom/second_stage.htm#3
3 – http://www.usc.edu/dept/MSA/quran/maududi/mau111.html

நன்றி: வஹ்ஹாபி

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.
”இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.” (திருக்குர்ஆன், 004:082)
”இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.” (திருக்குர்ஆன், 41:42)
ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக விமர்சிப்பவர்களுக்குத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.
What will be the food for the people in Hell? The food for the people in Hell will be only “Dhari” [Sura 88:6], or only foul pus from the washing of wounds [S. 69:36], or will they also get to eat from the tree of Zaqqum [S. 37:66]? Together, these verses constitute three contradictions.

கேள்வி:- 4. நரகில் இருப்போரின் உணவு என்ன? நரகிலிருப்போரின் உணவு “தரி” [சூரா 88:6] அல்லது புண்களில் இருந்து வடியும் சீழ் [69:36] அல்லது ஜக்கும் என்ற மரத்தின் கனிகள் [37:66] இந்த மூன்று வசனங்களும் முரண்படுகின்றன.

நரகவாசிகளின் உணவாக திருக்குர்ஆன் கூறும் வசனங்களில் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. என்று சொல்லி, 037:066, 069:036, 088:006 ஆகிய வசனங்களை சுட்டிக் காட்டியுள்ளார்கள். இந்த வசனங்களைப் பார்ப்பதற்கு முன் பொதுவாக தண்டனைகளின் அடிப்படையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

எல்லாக் குற்றவாளிகளும் சமமில்லை. குற்றங்களின் அளவைப் பொறுத்து குற்றவாளிகளுக்கு குறைந்த அல்லது அதிகபட்சத் தண்டனைகள் விதிக்கப்படுகிறது. சில நாட்கள் கைதியும், சில மாதங்கள் கைதியும், சில வருடங்கள் கைதியும், ஆயுட்கைதியும், மரணதண்டனை கைதியும் இப்படி தண்டனை வழங்கப்பட்ட எல்லாக் கைதியும் சிறையில் இருக்கிறார்கள் என்பதற்காக இவர்கள் அனைவரும் தண்டனை பெறுவதில் சமமாகி விட மாட்டார்கள். ஆனால் இவர்கள் சிறைக் கைதிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! தண்டனை பெறுவதில் வித்தியாசப்படுவார்கள்.

நரகவாசிகளின் உணவாகச் சொல்லப்படும் திருக்குர்ஆன் வசனங்களும், நரக தண்டனைப் பெற்றவர்களின் வேறுபட்ட செயல்களுக்கான தண்டனையாகவே மாறுபட்ட உணவுகள் வழங்கப்படுவதாகக் கூறுகிறது. இதை முரண்பாடாகச் சொல்பவர்கள், அந்த வசனங்களின் முன் வசனங்களையும் படித்து சிந்தித்திருந்தால், முரண்படுவதாகச் சொல்வது தவறு என்பதை மிகச் சாதாரணமாகவே விளங்கியிருக்கலாம். வசனங்களைப் பார்ப்போம்… 

”இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா.?”
”அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம்.”
”அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம்.”
”அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.”
”அவர்கள் அதிலிருந்து சாப்பிடுபவர், அதிலிருந்து வயிறுகளை நிரப்புவர்.” (037:062-066)
********************************************
”அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான்.”
”ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை.”
”இன்றைய தினம் அவனுக்கு இங்கே உற்ற நண்பன் எவனுமில்லை.”
”சீழைத் தவிர, அவனுக்கு வேறு உணவுமில்லை.” (069:033-036)
********************************************
”அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.”
”அவை (தீயவற்றில்) உறுதியாகச் செயல்பட்டன.”
”சுட்டெரிக்கும் நெருப்பில் அவை கருகும்.”
”கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.”
”முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை.” (088:002-006)
****************************************

இவ்வுலக வாழ்க்கையில் செயல்பட்ட தீமைகளுக்குத் தக்கவாறு மறுமையில் நரக தண்டனை விதிக்கப்படும். அப்படி தண்டனை பெற்றவர்கள் ஒரே தரத்தில் இருக்க மாட்டார்கள். அவர்களின் உணவும் வெவ்வேறாக இருக்கும் என்பதை மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து மேலதிக விளக்கம் இல்லாமலேப் புரிந்து கொள்ள முடியும். 

அதாவது, 037:066வது வசனத்தில் சொல்லப்படும் நரகவாசிகளின் உணவு, 069:036வது வசனத்தில் சொல்லப்படுபவர்களுக்கில்லை. 088:006வது வசனத்தில் சொல்லப்படும் உணவு மற்ற இரு வசனங்களிலும் சொல்லப்படும் நரகவாசிகளுக்கு இல்லை. மொத்தத்தில், தண்டனை பெற்றவர்கள் அனைவரும் நரகவாசிகள் என்றாலும் தண்டனையின் படித்தரத்தில் வித்தியாசம் இருக்கும், அதுபோல் உணவும் மாறுபட்டிருக்கும். எனவே திரக்குர்ஆனின் இந்த வசனங்கள் முரண்படுவதாகச் சொல்வது முறையாக விளங்காத நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது.

அன்புடன்,
அபூ முஹை

நன்றி: http://www.islamkalvi.com/    

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.
”இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082)
”இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.” (திருக்குர்ஆன், 41:42)

ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக விமர்சிப்பவர்களுக்குத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.
Were Warners Sent to All Mankind Before Muhammad? Allah had supposedly sent warners to every people [10:47, 16:35-36, 35:24], Abraham and Ishmael are specifically claimed to have visited Mecca and built the Kaaba [2:125-129]. Yet, Muhammad supposedly is sent to a people who never had a messenger before [28:46, 32:3, 34:44, 36:2-6]. This article also raises other issues: What about Hud and Salih who supposedly were sent to the Arabs? What about the Book that was supposedly given to Ishmael? Etc.

கேள்வி:- 3. எச்சரிப்பவர்கள் முஹம்மதுக்கு முன் இருந்த மனிதர்களுக்கு அனுப்பப்பட்டார்களா? அல்லாஹ் எல்லா மக்களுக்கும் எச்சரிப்பவர்களை அனுப்பி உள்ளான் [10:47, 16:35-36, 35:24], ஆப்ரஹாமும் இஸ்மவேலும் மக்கா சென்று காஅபாவைக் கட்டியவர்கள் [2:125-129]. இருப்பினும் இதற்கு முன் ஒரு தூதரும் அனுப்பப்படவில்லை என்று நம்பப்படும் மக்களுக்கு முஹம்மது தூதராக அனுப்பப்பட்டார் [28:46, 32:3, 34:44, 36:2-6]. இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஹூத், ஸாலிஹ் என்று அரபுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்வது? இஸ்மவேலுக்குக் கொடுக்கப்பட்ட வேதம் என்னாயிற்று?

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று திருக்குர்ஆன் 010:047வது வசனம் கூறுகிறது. இந்த விளக்கத்தின்படி அனைத்துச் சமுதாய மக்களுக்கும் இறைவன் தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறான். அது பற்றிய வசனங்கள்…

முதல் வகையான வசனங்கள்.

”ஒவ்வொரு சமூகத்தாருக்கும் தூதர் உண்டு. அவர்களுடைய தூதர் வந்ததும் அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும், அவர்கள் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.” (010:047) 

”அல்லாஹ் வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்” என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.” (016:036)

”எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை.” (035:024)

(இன்னும் ஒரு சமுதாயத்துக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளார்கள் பார்க்க: 010:075. 036:13,14.)

010:047. 016:036. 035:024 ஆகிய திருக்குர்ஆன் வசனங்கள் எல்லா சமூகத்தினர்களுக்கு நபிமார்களை அனுப்பியதாகக் கூறி. அச்சமூட்டி எச்சரித்து இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே இல்லை என்றும் கூறுகிறது. இனி இதற்கு முரண்பாடாகக் கருதும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்…

இரண்டாம் வகையான வசனங்கள்.
”இதற்கு முன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத சமுதாயத்துக்கு நீர் எச்சரிக்கை செய்பவராகவும், அவர்கள் படிப்பினை பெறுவதற்காகவும் (இது கூறப்படுகிறது) (028:046)

”உமக்கு முன்னர் எச்சரிப்பவர் வராத சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காகவும், அவர்கள் நேர்வழி பெறுவதற்காகவும் (இது) உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்த உண்மை.” (032:003)

”அவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி செய்பவரையும் அனுப்பவில்லை.” (034:044)

”எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இவர்களை நீர் எச்சரிப்பதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.” (036:005,006)

முதல் வகையான (010:047. 016:036. 035:024) வசனங்கள், அறிவுரை கூறியும் எச்சரிக்கை செய்தும், நபிமார்கள் அனுப்பப்படாத சமுதாயங்கள் எதுவும் இல்லை என்று கூறுகிறது.

இரண்டாம் வகையான (028:046. 032:003. 034:044. 036:005,006) வசனங்கள், இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், இதுவரை தூதர் அனுப்பப்படாத சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டார்கள் என்றும் கூறுகிறது. இந்த இருவகையான வசனங்களிலும் முரண்பாடு இருப்பதாகக் கொள்ள முடியாது. ஏற்கெனவே எல்லா சமுதாயத்தினருக்கும் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பது, இறுதியாக தூதர் அனுப்பப்படாமலிருந்த சமுதாயத்திற்கும் அச்சமூட்டி எச்சரித்துத் தூதரை அனுப்பி நிறைவு செய்யப்பட்டது. 

முரண்படுவதாகச் சொல்பவர்களும் இந்த வசனங்களைச் சொல்லி முரண்படுவதாகச் சொல்லவில்லை. இந்த வசனங்களைச் சுட்டிக் காட்டி, இவற்றோடு வேறு வசனங்களையும் ஒப்பிட்டு அதனால் முரண்படுவதாகச் சொல்கிறார்கள். அவற்றையும் பார்ப்போம்.

(இதையும் எண்ணிப் பாருங்கள்; ”கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம். இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் ‘என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்’ என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.

(இன்னும் நினைவு கூறுங்கள்) ”இறைவா! இந்த ஊரைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று இப்ராஹீம் கூறியபோது, ”(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன், பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன், வேருமிடத்தில் அது மிகவும் கெட்டது” என்று அவன் கூறினான்.

இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, ”எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினர்).

”எங்கள் இறைவனே! எங்களை உனக்கு முற்றிலும் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன், நிகரற்ற அன்புடையோன்.

”எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக – நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”
(002:125-129)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை முன் வைத்து ஏற்கெனவே நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர் மைந்தர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் மக்காவாசிகளுக்கு நபியாக அனுப்பப்பட்டவர்கள்தானே, இந்த இரு நபிகளின் மூலம் வேதங்களும் வழங்கப்பட்டவர்கள் தானே என்றும் கேட்டு, அரபியர்களுக்கு ஏற்கெனவே நபிகள் அனுப்பப்பட்டிருக்கிறது அதனால் இரண்டாவது வகையான (028:046. 032:003. 034:044. 036:005,006) வசனங்கள் முரண்படுகிறது என்று சொல்ல வருகிறார்கள். 

அதாவது மக்காவாசிகளுக்கு முன்பு தூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறது ஆனால் ஏற்கெனவே தூதர்கள் அனுப்பப்பட்ட சமுதாயத்துக்கு மீண்டும் தூதராக முஹம்மது (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார் என்ற வாதத்தை வைத்து -
”அவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.” (034:044) – திருக்குர்ஆன் இந்த வசனத்தையும் இது போன்ற இரண்டாம் வகையான வசனங்களையும், 002:125-129 ஆகிய வசனங்களோடு ஒப்பிட்டு முரண்படுத்துகிறார்கள்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்திற்கு, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை திருக்குர்ஆன் (002:125-129 ) வசனங்கள் விவரிக்கின்றது. இந்த 2500 ஆண்டுகளுக்கிடையில் அரபு நாட்டில் வேறெந்த இறைத்தூதரும் அனுப்பப்படவில்லை! இங்கே அரபிய சமுதாயங்கள் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்…

அரபிய சமுதாயங்கள்.
வரலாற்றாசிரியர்கள் அரபிய சமுதாயத்தை வம்சாவழி அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கின்றனர்.

1. அல் அரபுல் பாயிதா.
இவர்கள் பண்டையக் கால அரபியர்களான ஆது, ஸமுது, தஸ்மு, ஜதீஸ், இம்லாக், உமைம், ஜுர்ஹும், ஹழூர், வபார், அபீல், ஜாஸிம், ஹிழ்ர மவ்த் ஆகிய வம்சத்தினர் ஆவர். முதல் வகையைச் சேர்ந்த இவர்கள் காலப்போக்கில் அழிந்து விட்டதால் இவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் ஏதும் தெரியவில்லை.

2. அல் அரபுல் ஆரிபா.
இவர்கள் எஷ்ஜுப் இப்னு யாஃருப் இப்னு கஹ்தானின் சந்ததியினராவர். கஹ்தான் வம்ச அரபியர் என்றும் இவர்கள் அழைக்கப்படுவார்கள்.

3. அல் அரபுல் முஸ்தஃரிபா.
இவர்கள் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினராவர். இவர்களை அத்னான் வம்ச அரபிகள் என்றும் அழைக்கப்படும்.

இந்த வரலாற்று குறிப்புகளிலிருந்து ஆது, ஸமூது கூட்டத்தினர் அழிக்கப்பட்டார்கள் என்று அறிய முடிகிறது. இதையேத் திருக்குர்ஆனும் உறுதி செய்கிறது. ஆது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதையும், ஆது சமுதாயத்துக்குப் பின் வந்த ஸமூது கூட்டத்தினரும் அழிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் 007:072-078 வசனங்கள் கூறுகிறது.

மக்காவில் எவருமே குடியிருக்காத நிலையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவி அன்னை ஹாஜராவையும் கைக்குழந்தையாக இருந்த தமது மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் மக்காவில் குடியமர்த்தியதற்கு முன்பே இரண்டாம் ஜுர்ஹும் என்ற யமன் கோத்திரத்தினர் மக்கா வழியாக போக்குவரத்திலிருந்தனர். அன்னை ஹாஜரா, மகன் இஸ்மாயீல் (அலை) இவர்களின் பொருட்டு இறைவன் ஜம் ஜம் என்ற நீரூற்றை வெளிப்படுத்தினான் இந்த நீரூற்றின் காரணமாக ஜுர்ஹும் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் அன்னை ஹாஜராவின் அனுமதியோடு மக்காவில் குடியேறினார்கள்.

ஜுர்ஹும் குலத்தார் மக்காவில் தங்கியதோடு, தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்பி அவர்களும் மக்காவில் குடியேறினார்கள். இதனால் ஜுர்ஹும் குலத்தார்களின் வீடுகள் மக்காவில் தோன்றின. குழந்தை இஸ்மாயீல் (அலை) அவர்களும் வளர்ந்து வாலிபமானார். ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அரபு மொழியைக் கற்றுக் கொண்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜுர்ஹும் குலத்தாருக்கு மிகவும் பிரியமானவராகவம், விருப்பமானவராகவும் திகழ்ந்தார். இஸ்மாயீல் (அலை) பருவ வயதை அடைந்தபோது ஜுர்ஹும் குலத்தார் தம் குலத்திலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இந்தச் சம்பவங்களும் இன்னும் கூடுதலான விவரங்களையும் (புகாரி 3364 ) நபிவழிச் செய்தியிருந்து தெரிந்து கொள்ளலாம். நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் வம்சா வழித் தோன்றல்கள் இங்கிருந்துத் துவங்குகிறது.

”இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவூட்டுவீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.” (019:054)

இஸ்மாயீல் (அலை) அவர்கள் இறைவனால் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார் என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது. ஆனால் அவருக்கு வழங்கிய வேதம், காலப்போக்கில் அழிந்து விட்டன என்றே விளங்க முடிகிறது. அதற்குப் பின் – முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன் – வந்த இறைத்தூதர்களுக்கு வழங்கிய வேதங்களே உருப்படியாக இல்லையெனும்போது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு வழங்கிய வேதத்தின் நிலைப்பற்றி சொல்லத் தேவையில்லை.

இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பின் – இறுதி இறைத்தூதருக்கு முன் – அரபு நாட்டில் எந்தத் தூதரும் தோன்றியிருக்கவில்லை. இந்த 2500 ஆண்டுகளாக எந்த வழிகாட்டியும் அனுப்படாத, வேதமென்று எதுமில்லாத ஒரு சமுதாயத்தின் தான்தோன்றித்தனமான ஆன்மீகம் எப்படியிருந்திருக்கும்? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள், ஆனால் இப்ராஹீம் நபியின் மார்க்கத்துக்கு எதிரான மூட நம்பிக்கைகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் மூழ்கிக் கிடந்தனர்!

திருக்குர்ஆன் ஒரு வசனத்திற்கு வேறு ஒரு வசனமே விளக்கமாகும் என்ற அடிப்படையில், அன்றைய சமுதாயங்களில் வேதம் வழங்கப்பப்படாத சமுதாயம் இருந்தது என்பதை கீழ்வரும் வசனத்திலிருந்து விளங்கலாம்…

”எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கே வேதம் அருளப்பட்டது. நாங்கள் அதைப் படிக்கத் தெரியாமல் இருந்தோம்” என்றும், ”எங்களுக்கு வேதம் அருளப்பட்டிருந்தால் அவர்களை விட நேர்வழி பெற்றிருப்போம்” என்றும் நீங்கள் கூறாதிருக்கவும் (இவ்வேதத்தை அருளினோம்) (006:156,157)

எங்களுக்கு வேதம் அருளப்படவில்லை என்ற நியாயமான கோரிக்கையை வைக்கும் சமுதாயம் ஒன்று அன்று இருந்தது.
மட்டுமல்ல, எங்களுக்கு வேதம் வழங்கப்படவில்லை அதனால் நாங்கள் நேர்வழி பெறவில்லை என, நாங்கள் நேர்வழி பெறாதது எங்கள் குற்றமில்லை என்ற நேர்மையானக் காரணத்தை சமர்ப்பிக்கும் நிலையிலும் அந்தச் சமுதாயம் இருந்தது. 

எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கு வேதம் அருளப்பட்டது அதை நாங்கள் படிக்கத் தெரியாமல் இருந்தோம் என்பது அந்த சமுதாயத்திற்கு சமீப காலமாக அவர்களின் தாய்மொழியாகிய அரபி மொழியில் வேதம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது இதையே – 

”அவர்கள் வாசிக்கக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.” (034:044) – என்று திருக்குர்ஆன் விளக்குகிறது.

”அவர்கள் வாசிக்கக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை எனும் போது, வேதம் வழங்கப்படாத சமுதாயத்துக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் தூதராக அனுப்பியிருக்கவில்லை என்பதே பொருள். அதாவது 2500 ஆண்டுகளுக்கிடையில் எந்தத் தூதரும் அனுப்பப்படாமல், வேதமும் வழங்கப்படாமலிருந்த அரபி சமுதாயத்துக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை நியமிக்கிறான் இறைவன். மேலும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையும் (002:129) இங்கு நிறைவேற்றப்படுகிறது.

அச்சமூட்டி எச்சரிக்க இறைத்தூதர் அனுப்பப்படாத சமுதாயத்துக்கு, முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்ற திருக்குர்ஆன் கூற்றில் எவ்வித முரண்பாடும் இல்லை! அதோடு, முழு மனித குலத்துக்கும் இறைத்தூராகவும், இறுதித்தூதராவும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நியமிக்கப்பட்டு தூதுப்பணி நிறைவு செய்யப்பட்டது.

நன்றி: http://www.islamkalvi.com/ 

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

”இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082)

”இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.” (திருக்குர்ஆன், 41:42)

ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக விமர்சிப்பவர்களுக்குத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.
Can Allah be seen and did Muhammad see his Lord? Yes [S. 53:1-18, 81:15-29], No [6:102-103, 42:51].

கேள்வி 2. அல்லாஹ்வைப் பார்க்க முடியுமா? முஹம்மது அல்லாஹ்வைப் பார்த்தாரா? ஆம் (53:1-18, 81:15-29) இல்லை (6:102-103, 42:51)

ஆன்மீகத்தின் உயர்வான நிலை இறைவனைக் காண்பது என்பார்கள். ஆன்மீகவாதிகள் சிலர் இறைவனைப் பார்த்ததாகச் சொல்வார்கள். ஆனால் இவ்வுலகில் இறைவனைப் பார்க்க முடியாது என இஸ்லாம் கூறுகிறது. இறைத்தூதர்கள் உள்பட எந்த மனிதனும் நேரில் இறைவனைப் பார்க்க முடியாது என்றே திருக்குர்ஆன் உறுதியாகக் கூறுகிறது.

”பார்வைகள் அவனை அடையாது, அவனோ பார்வைகளை அடைகிறான்” (திருக்குர்ஆன், 006:103)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ”நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘(அவனைச் சுற்றிலும்) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். என்று அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். நூல், முஸ்லிம் தமிழ் 291. ஆங்கிலம், 0341.

இந்த உலகில் எந்த மனிதரும் இறைவனைப் பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன், 006:103வது வசனம் கூறுகிறது. இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் – ”இறைவன் ஒளியாயிற்றே அவனை எப்படிப் பார்க்க முடியும்?” – இம்மையில் இறைவனைப் பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள். இம்மையைப் பொருத்தவரை இறைவனைக் காண முடியாது என்று சொல்லும் இஸ்லாம், மறுமையில் இறைவனைப் பார்க்க முடியும் என்றும் கூறுகிறது.

”அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும், தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்” (075:022,023. இன்னும் பார்க்க: 002:046. 010:007,011.15,45. 018:105. 025:021. 032:010. 041:054. 083:015.)

நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி ‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக (மறுமையில்) உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!” என்று கூறிவிட்டு, ‘சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!” (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள். புகாரி, 554. (முஸ்லிம் தமிழ், 299. ஆங்கிலம் 0349.)

இனி… முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்று விளங்கும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

முஹம்மது அல்லாஹ்வைப் பார்த்தாரா? ஆம்: பார்த்தார்! என்பதற்கு திருக்குர்ஆன் 053, 081 ஆகிய அத்தியாயத்திலுள்ள வசனங்கள்…
 
(அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரயீல்) இறங்கக் கண்டார்.
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே. (திருக்குர்ஆன், 053:006-14)
அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். (திருக்குர்ஆன், 081:23)

திருக்குர்ஆன் 053, மற்றும் 081 ஆகிய இரு அத்தியாயத்திலுள்ள வசனங்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்கிறதே? என்று, இது 006: 103வது வசனத்திற்கு முரண்படுகிறது எனச் சொல்ல வருகிறார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த வசனங்களுக்கு என்ன விளக்கம் தந்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கு முன், மிகச் சாதாரணமாக நடுநிலையோடு இந்த வசனங்களை அணுகினால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பார்த்ததாக இந்த வசனங்கள் சொல்லவில்லை என்ற விளக்கத்தைத் தெளிவாகவே நாம் பெற முடியும்.

”அவர் திட்டமாக அவரைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்” (081:23) இந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களில்…
”இது மரியாதைக்குரிய தூதரின் சொல்லாகும்” (19)
”(அவர்) வலிமை மிக்கவர், அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்” (20)
”வானவர்களின் தலைவர் அன்றியும் நம்பிக்கைக்குரியவர்” (21) இந்த மூன்று வசனங்களும் சந்தேகத்திற்கிடமின்றி வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றியேப் பேசுகிறது என்பது தெளிவு. ”அவர் திட்டமாக அவரைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்” (081:23) என்று சொல்வது இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சேர்ப்பிக்கும் வானவர் தூதரான ஜிப்ரீல் (அலை) அவர்களையே குறிப்பிடுகிறது.

”ஸிராத்துல் முன்தாஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்” (053:13,14) இந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களில்…
”அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை” (3)
”அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை” (4)
”மிக்க வல்லமையுடையவர் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்” (5)
”(அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் அடி வானத்தில் இருக்கும் நிலையில் தோன்றினார்” (6,7)
”பின்னர் இறங்கி நெருங்கினார்” (8)
அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு, அல்லது அதைவிட நெருக்கமாக இருந்தது” (9)
”தனது அடியாருக்கு அவன் அறிவித்ததை அறிவித்தார்” (10)
”அவர் பார்த்ததில் அவருடைய உள்ளம் பொய்யுரைக்கவில்லை” (11)
”அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?” (12) 

இந்த வசனங்களும் இறைவனுக்கும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குமிடையில் தூதராக இருந்து வானுலக இறைச் செய்திகளை இறைத்தூதருக்கு அறிவிப்பவராக இருந்த வானவர் ஜிப்ரீலைப் பற்றியே இங்கு சொல்லப்படுகிறது. அதாவது…

”அவர் திட்டமாக அவரைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்” (081:23) என்று இந்த வசனத்தில் யாரைக் குறிப்பிட்டு சொல்லப்படுகிறதோ, அவரையே மீண்டும் சந்தித்தாக – ”ஸிராத்துல் முன்தாஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்” (053:13,14) – இந்த வசனத்தில் சொல்லப்படுகிறது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு தடவை சந்தித்ததும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களைத்தான் என்பது இதன் முன் பின் வசனங்களிலிருந்து விளங்கலாம். மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்தது இறைவனை அல்ல என்பதை அவர்களே விளக்கியுள்ளார்கள்…

நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) ”அபூ ஆயிஷா, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரிய இட்டுக் கட்டியவர் ஆவார்” என்று கூறினார்கள். நான் ”அவை எவை”? என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், ”யார் முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டிவிட்டார்” என்று சொன்னார்கள். உடனே நான் சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, ”இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசப்படாதீர்கள். வலிவும் மண்புமிக்க அல்லாஹ் ‘அவரைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்” (081:023) என்றும், ‘நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவரைக் கண்டார்’ (053:13) என்றும் கூறவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பின் வருமாறு விளக்கமளித்தார்கள்.

இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அது (வானவர்) ஜிப்ரீலை (நான்) பார்த்ததையே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரண்டு தடவைகள் தவிர வேறேப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்கள்.

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) ”அல்லாஹ் (பின் வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள்.
”கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது. அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும், நன்கறிந்தவனும் ஆவான்” (006:103)
அல்லது (பின் வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? ”எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசியதில்லை. ஆயினும் வஹியின் மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை (வேதமாக) அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை, நிச்சயமாக அவன் உயர்ந்தோனும் ஞானமிக்கோனும் ஆவான்” (042:051) முஸ்லிம் தமிழ், 287. ஆங்கிலம் 0337. இன்னும் பார்க்க: புகாரி, 3232, 3233, 3234, 3235.

திருக்குர்ஆனுக்கு விளக்கமாகவே வாழ்ந்து காட்டிய இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் விளக்கமே மிகச் சரியானது! எல்லா நேரத்திலும் வானுலக இறைச் செய்திகளை கொண்டு வந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சேர்ப்பித்தது வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களே என்றாலும், இறைவன் தன்னைப் படைத்த நிஜமான, அசல் தோற்றத்தில் ஜிப்ரீல் (அலை) இரண்டு தடவைகள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்திருக்கிறார் என்பதை விளக்கவதோடு, மற்ற நேரங்களில், ஜிப்ரீல் (அலை) தமது நிஜத் தோற்றத்தில் அல்லாமல் சாதாரண மனிதரைப் போலவே இறைத்தூதர் (ஸல்) அவர்களை சந்தித்து இறைவனின் வஹியை அருளியிருக்கிறார் என்றும் விளங்கலாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு தடவை வானவர் ஜிப்ரீலை நிஜத் தோற்றத்தில் சந்தித்தது சர்ச்சையாக இருந்ததால் அது பற்றிய தர்க்கத்தையும் சந்தேகத்தையும் நீக்கிடவே ”அவர் பார்த்ததில் அவருடைய உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?” (053:11,12) என ஏக இறைவன் தனது தூதரை மெய்ப்பிக்கிறான்.
இம்மையில், இறைத்தூதர்கள் உள்பட மனிதர்கள் எவரும் இறைவனைப் பார்க்க முடியாது (006:103) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு! எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்ததாகக் குறிப்பிடுவது (081:23, 053:13,14) நிஜத் தோற்றத்தில் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களை என்பதால் இங்கு திருக்குர்ஆன் வசனங்களில் முரண்பாடு எதுவுமில்லை என்பது தெளிவு!
**************************************

கேள்வி:- 3
Were Warners Sent to All Mankind Before Muhammad? Allah had supposedly sent warners to every people [10:47, 16:35-36, 35:24], Abraham and Ishmael are specifically claimed to have visited Mecca and built the Kaaba [2:125-129]. Yet, Muhammad supposedly is sent to a people who never had a messenger before [28:46, 32:3, 34:44, 36:2-6]. This article also raises other issues: What about Hud and Salih who supposedly were sent to the Arabs? What about the Book that was supposedly given to Ishmael? Etc.

எச்சரிப்பவர்கள் முஹம்மதுக்கு முன் இருந்த மனிதர்களுக்கு அனுப்பப்பட்டார்களா? அல்லாஹ் எல்லா மக்களுக்கும் எச்சரிப்பவர்களை அனுப்பி உள்ளான் [10:47, 16:35-36, 35:24], ஆப்ரஹாமும் இஸ்மவேலும் மக்கா சென்று காஅபாவைக் கட்டியவர்கள் [2:125-129]. இருப்பினும் இதற்கு முன் ஒரு தூதரும் அனுப்பப்படவில்லை என்று நம்பப்படும் மக்களுக்கு முஹம்மது தூதராக அனுப்பப்பட்டார் [28:46, 32:3, 34:44, 36:2-6]. இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஹூத், ஸாலிஹ் என்று அரபுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்வது? இஸ்மவேலுக்குக் கொடுக்கப்பட்ட வேதம் என்னாயிற்று?
மேற்கண்ட கேள்விகளில் சுட்டியுள்ள முரண்பாடு!? பற்றி அடுத்தப்பதிவில் இன்ஷா அல்லாஹ்.

நன்றி: http://www.islamkalvi.com/    

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

”இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082)

”இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.” (திருக்குர்ஆன், 41:42)

ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.
கேள்வி:- 1. முதல் முஸ்லிம் யார்? – Who Was the First Muslim? Muhammad [6:14, 163], Moses [7:143], some Egyptians [26:51], or Abraham [2:127-133, 3:67] or Adam, the first man who also received inspiration from Allah [2:37]?

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முதல் முஸ்லிம் யார்? முஹம்மது (6:14, 163) மோசஸ் (7:143) சில எகிப்தியர்கள் (26:51) ஆப்ரஹாம் (2:127-133, 3:67) அல்லது ஆதம் அல்லாஹ்வின் கட்டளை பெற்ற முதல் மனிதன் (2:37)?

விளக்கம்:- ஆண்களில், முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்கள்தான் முதல் முஸ்லிம்! பெண்களில், ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஹவ்வா (அலை) அவர்கள்தான் முதல் முஸ்லிம்! என்பது முறையாக இஸ்லாத்தைப் படித்தவர்களின் சாதாரணப் பதிலாக இருக்கும். இதைப் புரியும்படி விளக்குவதற்கு முன், இவர்களிடையே இந்தக் கேள்விகள் எழுவதற்கு ”என்ன காரணம்?” என்பதையும் தெரிந்து கொள்வோம்!

முஹம்மது (ஸல்) அவர்கள்தாம் இஸ்லாத்தைப் போதித்தார்கள். அதனால் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் இஸ்லாத்தின் நிறுவனர் என்ற தவறானக் கருத்து மேலைநாட்டவரிடம் நிலவுகிறது. மேற்கத்தியர்களின், அந்தத் தவறானக் கருத்தின் தாக்கம் மேற்கண்ட கேள்விகளிலும் பதிந்திருக்கிறது. இறைவனின் தூதர்கள் அனைவருக்கும் இஸ்லாம்தான் மார்க்கமாக இருந்தது. தூதர்கள் அனைவருமே இறைச் செய்தியைத்தான் கொண்டு வந்தார்கள். இஸ்லாத்தின் நிறுவனராக எந்த இறைத்தூதரும் இருந்ததில்லை. எல்லாக் காலத்திலும் இறைத்தூதர்கள் மூலம் மனித குலத்துக்காக இறைவனால் அருளப்பட்ட நற்போதனைகள் இஸ்லாம். இதை அறியாததால், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முன்பு இஸ்லாம் என்றொரு மார்க்கம் இருக்கவில்லை, அதனால் முஸ்லிம் என்பவர்களும் இருந்ததில்லை எனப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அகிலங்கள் அனைத்திற்கும் ஒரே இறைவன்தான் இருக்கிறான் என்னும் ஓரிறைக் கொள்கை, மற்றும் மறுமை இருக்கிறது என்பது போன்ற கொள்கைகளே, முதல் நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களும் போதித்தார்கள் சில கிளை சட்டங்கள் மட்டுமே வித்தியாசமாக சிலருக்கு வழங்கப்பட்டன. மற்றபடி அடிப்படைக் கொள்கைகள் எவ்வித மாற்றமும் இல்லாமல், எல்லா நபிமார்களுக்கும் ஒரே மார்க்கமே அருளப்பட்டது…

(முஹம்மதே) ”உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.” (திருக்குர்ஆன், 041:043)

”என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியடைந்து, ‘இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?’ என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன்.” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, 3535.

அனைத்து இறைத்தூதர்களுக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களே அருளப்பெற்றது என்று திருக்குர்ஆன் 041:043வது வசனம் கூறுகிறது. எல்லா இறைத்தூதர்களும் சேர்ந்து இஸ்லாம் என்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார்கள் என்ற அழகிய உதராணத்தை நபிமொழி கூறுகிறது. ஆதியிலிருந்து இறுதிவரை எல்லா நபிமார்களுக்கும் இறைவன் வழங்கிய மார்க்கம் இஸ்லாம். ஒவ்வொரு நபியும் கொண்டு வந்த இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்! எனவே முஸ்லிம் என்ற பெயர், இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தாருக்கு மட்டும் உள்ள பெயர் அல்ல. முந்தைய நபிமார்களின் உபதேசத்தை ஏற்றுப் பின்பற்றியவர்களும் இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்களே!

இதற்கு விளக்கமாக திருக்குர்ஆனில் பல வசனங்களைப் பார்க்கலாம் குறிப்பாக திருக்குர்ஆன், 022:078வது வசனத்தில் ”உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில்…” என நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாம் என்றே இறை வசனங்கள் கூறுகிறது. ”இதற்கு முன்னரும் இதிலும் அவன்தான் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்…” என்று இறைத்தூதர்களைப் பின்பற்றியவர்கள் ”முஸ்லிம்கள்” எனப் பெயர் சூட்டப்பட்டார்கள் என்பதை விளங்கலாம். நபி நூஹ் (அலை) அவர்களும் முஸ்லிமாக இருந்தார். (010:072) இஸ்லாத்தின் எதிரி ஃபிர்அவ்னும் மரணிக்கும் நேரத்தில், தன்னை முஸ்லிம் எனச் சொல்லிக் கொண்டான். (010:090)

இன்னும் முந்தைய நபிமார்களையும் அவர்கள் கொண்டு வந்த வேத வசனங்களையும் நம்பிக்கைக் கொண்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என மறுமையில் சொல்லப்படும் என்பதை கீழ்வரும் வசனத்திலிருந்து…

”இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, முஸ்லிம்களாக இருந்தனர்.” (திருக்குர்ஆன், 043:069)
************************************

கேள்விக்கு வருவோம்:- முதல் முஸ்லிம் யார்?

முஹம்மதா?

”கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவானக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்!” (006:014)

”முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்றும் கூறுவீராக!” (006:163)

மூஸாவா?

”நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” என்று (மூஸா) கூறினார். (007:143)

சில எகிப்தியர்களா?

”நம்பிக்கை கொண்டோரில் முதலாமானோராக நாங்கள் ஆனதற்காக…” (026:051)

ஆப்ரஹாம் என்ற இப்ராஹீமா?

”எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் சந்ததிகளை உனக்குக் கட்டப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக!” (002:128)

”அவரது இறைவன் ‘கட்டுப்படு’ என்று அவரிடம் கூறினான். ‘அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்’ என்று அவர் கூறினார்.” (002:131)

”என் மக்களே அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக்கூடாது.” என்று இப்ராஹீமும், யாகூப்பும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினார்கள். (002:132)

”…நாங்கள் அவனுக்கேக் கட்டுப்பட்டவர்கள்” என்றே (பிள்ளைகள்) கூறினார்கள். (002:133)

”இப்ராஹீம்… அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார்…” (003:067)

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள், திருக்குர்ஆன் வசனங்கள் சில ஒன்றுக்கொன்று முரண்படுகிறது என்று மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல் மனிதருக்கு அருளியதிலிருந்து தொடர்ந்து இறைவன் வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாமாகும். முதல் மனிதரிலிருந்து தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள்! என்பதற்கு விளக்கமாக திருக்குர்ஆன் வசனங்களை மேலே சொல்லியுள்ளோம். 

இனி…

”முஸ்லிம்களில் நான் முதலாமவன்” என்று முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னது அதற்கு முன் முஸ்லிம்களே இருந்திருக்கவில்லை என்று அர்த்தமாகிவிடாது! இந்த ஆண்டு படித்த மாணவர்களிலேயே முதல் மாணவனாகத் தேர்வுப் பெற்றது ஒரு மாணவன் என்பதால் அதற்கு முன் எந்த மாணவனும் முதலிடத்தைப் பெறவில்லை என்று பொருளாகி விடாது.

ஒரு குடும்பம் இஸ்லாத்தைத் தழுவியது என்றால், முதன் முதலில் முஸ்லிமானது நான்தான் என்று முதலில் இஸ்லாத்தை ஏற்ற அந்தக் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சொன்னால், அதற்கு முன் முஸ்லிம்களே இல்லை என்று பொருள் கொள்ள மாட்டோம்!

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக எற்றுப் பின்பற்றும் இந்த முஸ்லிம் சமுதாயத்தில், முஹம்மது (ஸல்) அவர்களே முதல் முஸ்லிம் ஆவார்கள். இறைச் செய்தி அவர்களுக்குத்தான் முதலில் அறிவிக்கப்படுகிறது. தமக்கு அறிவிக்கப்பட்ட இறைக் கட்டளையை முதலில் நிறைவேற்றும், முதல் முஸ்லிமாக அவர்கள் இருந்தார்கள். ”உங்களையெல்லாம் விட நான் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். இறை வணக்க வழிபாடுகளை நிறைவேற்றியதிலும் இந்த சமுதாயத்தின் அனைத்து முஸ்லிம்களை விடவும் உயர்வான முதன்மை இடத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்படி இருக்க வேண்டுமென இறைவனால் கட்டளையிடப்பட்டிருந்தது…

”முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆக வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” எனக் கூறுவீராக. (039:012)

இறைத்தூதர்கள் அனைவருமே அந்தந்த சமூகத்தினர் பின்பற்றியொழுக வேண்டிய முன்னோடிகள் என்பதால், இறைத்தூதர்கள் யாவரும் அந்த சமுதாயத்தின் முதல் முஸ்லிமாக இருந்தார்கள். முஸ்லிம்களில் முதன்மையானவர்களாகவும் இருந்தார்கள். இது போல்…

”நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” என்று (மூஸா) கூறினார். (007:143)

இறைச் செய்திகள் முதலில் நபிமார்களுக்கே அறிவிக்கப்படுவதால், நம்பிக்கை கொள்வதிலும் நபிமார்களே முதலிடம் வகிப்பார்கள். இறைத்தூதரைப் பின்பற்றி இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் அதாவது, நபியை உண்மைப்படுத்திய சமூகத்தவரில் முதலாமவர்களாக இருக்க விரும்புபவர்களைப் பற்றியே கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் பேசுகிறது…

”நம்பிக்கை கொண்டோரில் முதலாமானோராக நாங்கள் ஆனதற்காக…” (026:051)

இன்னும், இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வருகை நேரத்தில் முந்தைய வேதம் வழங்கப்பட்டவர்கள் தங்களை ”முஸ்லிம்கள்” என்று சொல்லிக் கொண்டார்கள்…

”… இதற்கு முன்னரே நாங்கள் முஸ்லிம்களாக இருந்தோம்” என்று கூறுகின்றனர். (028:053)
*****************************************************************************

கேள்வி:- 2.

Can Allah be seen and did Muhammad see his Lord? Yes [S. 53:1-18, 81:15-29], No [6:102-103, 42:51].
இறைவனைப் பார்க்க முடியுமா? முஹம்மது இறைவனைப் பார்த்தாரா? ஆம் (53:1-18, 81:15-29) இல்லை (6:102-103, 42:51)

மேற்கண்ட கேள்வியில் சுட்டியுள்ள முரண்பாடு!? பற்றி அடுத்தப்பதிவில் இன்ஷா அல்லாஹ்.

நன்றி: http://www.islamkalvi.com/    

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், மறுமை நாள் – இறுதித் தீர்ப்பு நாள் என்ற அந்த நாள் நிச்சயமாக வரும் என நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்களில் மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இருந்தார்கள். மறுமை வாழ்க்கையை அவர்களால் நம்ப முடியாமல் போனது, இந்த மண்ணுலக வாழ்க்கையைத் தவிர வேறு எந்த வாழ்க்கையும் இல்லை என்ற நம்பிக்கையும்தான் நபிமார்களையும் அவர்களின் போதனைகளையும் நிராகரிக்கும்படிச் செய்தது…

”இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது, நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்” என்று அவர்கள் கூறினார்கள். (திருக்குர்ஆன், 006:029) 

”மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.” (திருக்குர்ஆன், 083:004 – 006)

இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் இறுதி நாளை மறுத்து வந்ததையும், அவர்கள் மறுப்புக்கு பதிலடியாக இறுதி நாள் நிச்சயமாக நிகழ இருக்கிறது என்று இறைவன் கூறியதையும் திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில் காணமுடியும். இறுதித் தீர்ப்பு நாள் எப்போது வரும் – எந்த நேரத்தில் சம்பவிக்கும் என்பது இறைத்தூதர்கள் உள்பட – மனிதர்கள் எவருக்கும் தெரியாது. அது பற்றிய ஞானம் இறைவனிடமே உள்ளது…

”நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை மறைத்து வைத்திருக்கிறேன்.” (திருக்குர்ஆன், 020:015)

”அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது..” (திருக்குர்ஆன், 31:34) 

இன்னும், மறுமை நாள் என்று சொல்லப்படும் அந்த இறுதி நாள் எப்போது வரும் என்பது இறைவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்பதை ஆணித்தரமாக மேற்கண்ட இரு வசனங்களும், இன்னும் இது போன்ற பல இறை வசனங்களும் கூறிக் கொண்டிருக்கிறது. இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அந்த நாள் எப்போது வரும் என்று தெரியாது என்பதையும் சேர்த்தே இந்த வசனஙகள் உள்ளடக்கியுள்ளது. ஒரு முறை வானவர் ஜிப்ரீல் மனித உருவத்தில் வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ”மறுமை நாள் எப்போது வரும்”? கேட்கிறார்…

…”மறுமை நாள் எப்போது?’ என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல், மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்” என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ‘மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.” (திருக்குர்ஆன் 31:34) புகாரி, 50 (இது ஒரு நீண்ட நபிமொழியின் சுருக்கம்)

”மறுமை நாள் எப்போது வரும்”? என்றக் கேள்விக்கு அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது என்று 031:034வது வசனத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். மேலும் ”மறுமை நாள் எப்போது சம்பவிக்கும்”? என்பது பற்றி இறைவன் எனக்கும் அறிவித்துத் தரவில்லை என்று பொருள்படும் வகையில் ”அதைப் பற்றிக் கேள்வி கேட்பவரை விட நான் அறிந்தவரல்ல” என்று தமக்கு மறுமை நாள் எப்போது சம்பவிக்கும் என்பது தெரியாது என்று பதிலளிக்கிறார்கள்!

இறுதி நாள் எப்போது நிகழும் என்பது பற்றிய அறிவு இறைவனிடம் மட்டுமே உள்ளது என்றாலும் அந்த நாள் வருவதற்கு முன் நிகழவிருக்கும் சில சம்பவங்களை, அடையாளமாக, இறைவன் தனது தூதருக்கு அறிவித்திருக்கிறான். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் மனித சமுதாயத்திற்கு அதை அடையாளங்காட்டி முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்…

இறுதி நாள் வருவதற்கு, முன் அடையாளமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல அறிவிப்புகள் செய்துள்ளார்கள். அதில் மிக முக்கியமானதாக 10 அடையாளங்களை அறிவித்திருக்கிறார்கள்.

1. புகை மூட்டம்
2. தஜ்ஜால்
3. (அதிசயமானப்) பிராணி
4. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது.
5. ஈஸா (அலை) இறங்கி வருவது.
6. யாஃஜுஜ் மஃஜுஜ்
7,8,9. அரபு தீபகற்பத்தில் கிழக்கில் ஒன்று, மேற்கே ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது.
10. ஏமனிலிருந்து கிளம்பும் தீப்பிழம்பு மக்களை விரட்டி ஒன்று சேர்ப்பது.

”இந்த பத்து நிகழ்ச்சிகளையும் நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு நிமிட நேரத்தில் உலகெங்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேற்கண்ட முன்னறிவிப்பு அடையாளங்களில் ஏதாவது ஒன்று எங்கு நடந்தாலும், நடந்து முடிந்தவுடன் அந்த செய்தி உடனடியாக உலகத்திற்கே செய்திகள் மூலம் தெரிந்துவிடும்.

மேலும், தஜ்ஜாலின் வருகை, நபி ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வருவது, இவையெல்லாம் நிகழும் நேரத்தில் அந்த அதிசயங்கள் உலகெங்கும் அறிவிக்கப்படும். அதிலும் முக்கியமாக சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதை செய்திகள் இல்லாமலே ஒவ்வொருவரும் நேரில் காண முடியும். அதிசயப் பிராணி பற்றி திருக்குர்ஆன்…

”அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.” (திருக்குர்ஆன், 027:082)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிரினம், இறுதி நாளுக்கு முன்பு, இறுதி நாளின் அடையாளமாகத் தோன்றும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த அதிசயப் பிராணி தோன்றி மனிதர்களிடம் பேசினால் அதுவும் மிக அதிசயமாக உலகிற்கு அறிவிக்கப்படும். 

இங்கு நாம் அறிந்து கொள்வது:

இறுதி நாள் எப்போது? என்ற ஞானம் அல்லாஹ்வைத் தவிர, இறைத்தூதர்கள் உட்பட வேறு யாருக்கும் தெரியாது.

இறுதி நாள் ஏற்படும் முன் சில நிகழ்வுகள் சம்பவிக்கும். அந்த சம்பவங்கள் நிகழாமல் இறுதி நாள் ஏற்படாது!

”அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராதென்றோ அல்லது, அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று அந்த நாள் வராது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா”? (திருக்குர்ஆன், 012:107)

”வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது, அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.” (திருக்குர்ஆன், 016:077)

இவை அனைத்தும் இறைவனால் வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது. இறுதி நாள் பற்றிய, அந்த சம்பவம் எப்போது நிகழும்? என்ற ஞானம் தமக்கு இல்லை என்றே சத்திய நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுப் பணியைக் களங்கப்படுத்திட முயற்சிக்கும் நோக்கத்தில், ”இறுதி நாள் பற்றிய இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டது” என்று சில நபிமொழிகள் வைக்கப்பட்டிருக்கிறது… 

//muslim/Book 041, Number 7050:அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.” 
Book 041, Number 7051:

அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், “இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்”//

இது ஒரு சாதரண விஷயும். சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் மேற்கண்ட நபிமொழியின் முன்னறிவிப்பு பொய்ப்பித்து விட்டதாகத் தோன்றுகிறது. மேற்கண்ட நபிமொழிகளை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விளங்குவதற்காக கீழ்காணும் நபிமொழி…

”மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது. 

இரண்டு பேர் (விற்பனைக்காத்) துணிகளை விரித்து(ப் பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள், சுருட்டிக்கூட வைத்திருக்க மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும்.
மேலும், ஒரு மனிதர் மடிகனத்த தமது ஒட்டகத்தி(ல் பால் கறந்து அப்போது தா)ன் பாலுடன் (வீடு) திரும்பியிருப்பார், இன்னும் அதைப் பருகி கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.

ஒருவர் தம் நீர் தொட்டியை (அப்போதுதான்) கல்வைத்துப் பூசியிருப்பார், இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.

உங்களில் ஒருவர் தம் உணவை (அப்போதுதான்) வாயருகில் கொண்டு சென்றிருப்பார், அதை உண்டிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி, 6506

உணவை வாயருகில் கொண்டு சென்றவர், அந்த ஒரு கவள உணவை உண்டிருக்க மாட்டார் அதற்குள் மறுமை சம்பவித்துவிடும் என்றால் அப்போ அன்றிலிருந்து இன்றுவரை யாருமே உணவு உண்ணாமல் இருந்தார்களா? அல்லது உங்களில் ஒருவர் உணவை வாயருகில் கொண்டு சென்றால் மறுமை சம்பவித்து விடும் என்று அர்த்தமா? இல்லை! பின் வேறென்ன பொருள் கொள்வது?…

அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது, அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.” (திருக்குர்ஆன், 016:077)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘நானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறி, தம் இரண்டு விரல்களையும் (-சுட்டுவிரல், நடுவிரல் இரண்டையும்) நீட்டியவாறு சைகை செய்தார்கள். புகாரி, 6503

இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன்பு, எந்த நபிமார்களுக்குப் பின்னும் மறுமை நாள் ஏற்படாது. இறுதித்தூதர் வருகைக்குப் பிறகுதான் மறுமை சம்பவிக்கும். அதையே ”நானும் மறுமையும் மிக நெருக்கத்தில் இருக்கிறோம்” என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள்.

சிறுவருக்கு முதுமை ஏற்படுமுன்..

”கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘மறுமை நாள் எப்போது?’ என்று கேட்பார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி ”இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்களின் மீது மறுமை சம்பவித்து விடும்” என்று கூறுவார்கள். ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி, 6511 (இதே ஹதீஸ் முஸ்லிம் நூலிலும் இடம் பெற்றுள்ளது)

”மறுமை நாள் எப்போது?” என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், அங்கே இருந்தவர்களிலேயே வயதில் சிறியவரைக் காட்டி ”இவர் முதுடையடையும் முன்பே உங்கள் மீது மறுமை சம்பவித்துவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதாவது அந்தச் சிறுவர் உயிரோடு இருந்து, வளர்ந்து வாலிபமாகி, முதுமை வயதையடையும்போது, அங்கேயிருந்த அச்சிறுவரை விட வயது கூடியவர்கள் – முதியவர்கள் எவரும் உயிரோடு இருக்க மாட்டார்கள். அவர்கள் மீது மறுமை – இறுதிநாள் – Last Hour சம்பவித்து விடும்.

மனிதன் இறந்தவுடன், இறுதி நாள் என்ற மறுமை வாழ்வு துவங்கி விடுவதால் ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பும் மறுமை நாள்தான். மொத்தமாக உலகம், உலகத்திலுள்ளவைகளும் அழிந்து விடும் நேரத்தையும் மறுமைநாள் – இறுதிநாள் – Last Hour என்று சொன்னாலும் அந்த உலகம் அழியும் நாள் எப்போது என்று ”எனக்குத் தெரியாது” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அது பற்றிய அறிவு அல்லாஹ்வைத் தவிர எவரிடத்திலும் இல்லை! 

”அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள். நீர் கூறும், ‘அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது – அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும். திடுகூறாக அது உங்களிடம் வரும் அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள், அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.” (திருக்குர்ஆன், 007:187) 

”நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான். இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளைய தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை. தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன் நுட்பம் மிக்கவன்.”(திருக்குர்ஆன், 031:034) 

அன்புடன்,
அபூ முஹை

நன்றி: http://www.islamkalvi.com/