Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

பைபிளில் உள்ள முரண்பாடுகளையும் - குழப்பங்களையும் பற்றி தொடர்கட்டுரையை வெளியிட்டு வருகின்றோம். அதன் முதல் பாகத்தை பின்வரும் தலைப்பில் படிக்கவும்.

இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! -01 க்குசெல்ல இங்கே அழுத்தவும்...

இதன் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி...

சாலாவின் தந்தை யார்?

லூக்கா 3:36 ல் ஆதாம் முதல் இயேசு வரை உள்ள வம்சத்தில் அர்ப்பகசாத்தின் மகன் காயினான். அவன் மகன் சாலா என்கிறார். ஆனால் ஆதியாகமம் 10:24 மற்றும் 11:12 ஆகியவை அர்ப்பகசாத்தின் மகன் சாலாதான் என்கிறது. இடையே உள்ள காயீனான் அங்கே வரமாட்டான் என்கிறது. லூக்கா சொல்வது சரியா பழைய ஏற்பாடு சொல்வது சரியா? எதை நம்புவது? ஏது கடவுள் சொன்னது?

தாவீது முதல் இயேசு வரையிலும் மொத்தம் எத்தனைப் பேர்?

தாவீது முதல் இயேசு வரையிலும் மொத்தம் 28 தலைமுறையினர் என்கிறார் மத்தேயு (பார்க்க மத்தேயு 1:6-16) ஆனால் லூக்காவோ மொத்தம் 43 என்கிறார் (பார்க்க லூக்கா 3:21-31) எது சரி? லூக்கா சொல்வதா அல்லது மத்தேயு சொல்வதா?
Image and video hosting by TinyPic
































 மத்தேயு ஆபிரகாம் முதல் இயேசுவரையிலும் மொத்தமே 42 பேர்தான் என்கிறார். ஆனால் லூக்காவோ ஆபிரகாமுக்கும் பலதலைமுறைக்கு பிறகுள்ள தாவீதிலிருந்து இயேசுவரையிலுமே 43 பேர் வந்துவிடுகின்றனர் என்று கூடுதலாக கணக்கு காட்டுகிறார். ஒரே தலைமுறையை புதியஏற்பாட்டு எழுத்தாளர்கள் இப்படி மாற்றி மாற்றி முரண்பாடாக சொல்வதை எப்படி கடவுளின் வார்த்தை என்று ஏற்க முடியும்? எது சரி? மத்தேயு சொல்வதா அல்லது லூக்கா சொல்வதா?

(இது போல் இன்னும் பல முரண்பாடுகளும், பல குழப்பங்களும் இந்த வம்சாவளிப் பட்டியல்களில் தொடர்கிறது. நாம் ஆக்கம் நீண்டுக்கொண்டே செல்வதால் தவிர்த்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.)

இயேசு விபச்சாரர்களின் சந்ததியா?

இயேசுவின் வம்சத்தில் வரும் இவ்வளவு குளறுபடிகளும் ஒரு புறம் இருக்க அவரின் வம்சத்தில் வரும் பலர் விபச்சாரர்களாக இருந்ததாக பைபில் கூறுகிறது.

'யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்' (மத்தேயு 1:3)

இந்த தாமார், யூதா, பாரேஸ் என்பவர்கள் யார்? இந்த தாமார் என்பவள் யூதா என்பவனின் மகனுடைய மனைவி. அதாவது மருமகள். அவளுடன் யுதா கள்ளத்தனமாக உறவு கொள்கிறார். இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் தான் பாரேஸ் என்று பைபிள் சொல்கிறது. பார்க்க ஆதியாகமம்; 38 : 6    (இந்த மாமனார் மருமகள் ஆபாசக்கதையில் உள்ள குழப்பங்களை படிக்க இங்கே அழுத்தவும்)
அடுத்து அவரது தலைமுறையில் வரும் தாவீது பற்றி மத்தேயு (1 : 6) சொல்லும்போது 'தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்'. இப்படி விபச்சார சந்ததிகள் மூலமாகத்தான் இயேசு பிறக்கின்றார் என்கிறார் மத்தேயு. (நவூதுபில்லாஹ்...) அதேபோல் இயேசுவின் வம்சத்தில் வரும் மற்றொருவர் 'ராகாப்'. (மத்தேயு 1:5) இவள் ஒரு விபச்சாரி என்று பழைய ஏற்பாடு கூறுகின்றது.(பார்க்க - யோசுவா 2:5)

இப்படிப்பட்ட விபச்சார சந்ததிகள் மூலமாக வந்தவர்தான் இயேசு என்கிறது பைபிள். இது ஒரு புறம் இருக்க இப்படிப்பட்ட விபச்சார சந்ததியில் பிறக்கக்கூடியவர்கள் எவரும் பரிசுத்தராக முடியாது, என்றும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு - ஒன்றல்ல இரண்டல்ல, தலைமுறை தலைமுறையாக வர முடியாது என்றும் கூறுகிறது பைபிள்.

'வேசிப்பிள்ளையும் (விபச்சார சந்ததிகள்) கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது, அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது' - உபாகமம் 23:2,3

இந்த வசனத்தின் படி பார்த்தால் தாவீது, சாலமோன், இயேசு இவர்களெல்லாம் ஒரு பரிசுத்தராக வரவேமுடியாது என்கிறது பைபிள். (இவர்களெல்லாம் இஸ்லாத்தைப் பொருத்தவரை மிக்க பரிசுத்தவான்கள். இது பற்றி சிறப்புக் கட்டுரை விரைவில்... இறைவன் நாடினால்) கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்படி இயேசு கடவுடைய குமாரன் என்பதை விட்டுவிடுவோம். முஸ்லீம்கள் சொல்வது போல் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதையும் விட்டுவிடுவோம். அவர் ஒரு பரிசுத்தராகக்கூட வரமுடியாது என்கிறது இந்த வமிசாவளிப் பட்டியலும், இந்த கிறிஸ்தவர்களின் புனித பைபிளும். இதுதான் தான் இந்த உபாகமம் 23:2,3 வசனத்தின் மூலமும் பைபிளின் எழுத்தாளர்கள் கொடுத்துள்ள இயேசுவின் வம்சாவளிப்பட்டியல்கள் உணர்த்தும் மறுக்க முடியாத உன்மை.

இது மட்டுமல்ல இப்படி விபச்சார வம்சத்தில் வந்த - தானும் விபச்சாரம் செய்த (?) தாவீது தீர்க்கதரிசி எழுதிய பழையஏற்பாட்டில் உள்ள நூல்களான சங்கீதம் என்ற புத்தகம், சாலமோன் எழுதின நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதபாட்டு, போன்ற புத்தகங்களெல்லாம் எப்படி புனித புத்தகங்களாகும்? காரணம் இவர்களெல்லாம் விபச்சார சந்ததிகளாயிற்றே? அதே போல் இயேசுவே பைபிளின் உபாகமம் 23:2,3ன் படி பரிசுத்தராக முடியாது எனும்போது அவரைப்பற்றி எழுதிய புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களெல்லாம் எப்படி புனித புத்தகங்களாகும்? இப்படி இந்த யூத எழுத்தாளர்கள், தீர்க்கதிரிகளான - நல்லோர்களான - தாவீது, சாலமோன் போன்ற இன்னும் பல பரிசுத்தவான்கள் மீது இட்டுக்கட்டி எழுதிய கட்டுக்கதைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பாhத்தீர்களா? சகோதரர்களே! பைபிளில் பல புத்தகங்கள் இறைவேதம் என்றத் தகுதியை இழக்கும் நிலை ஏற்படும். நீங்கள் பைபிளில் வரும் யூதா தாமார் கள்ள உறவுக் கதைகளை (ஆதியாகமம் 38:6), தாவீது உரியாவின் மனைவியோடு நடத்தியதாகச் சொல்லப்படும் விபச்சாரக்கதைகளை (2 சாமுவேல் 11:1-8) கர்த்தரால் அருளப்பட்ட வசனங்களாக நம்பினால் அது வேறு ஒரு விதத்தல் உங்கள் நம்பிக்கைகளுக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் உணரவேண்டும்.
இதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் இப்படி தலைமுறைத் தலைமுறையாக ஒருவருக்கு பாவம் தொடரும் என்று இஸ்லாம் ஒருபோதும் சொல்லவில்லை. அப்படி தொடராது - அது மடத்தனமான கொள்கை என்று சத்தியமார்க்கமான இஸ்லாம் போதிக்கின்றது. (பார்க்க அல்குர்ஆன் 2 : 233, 281, 286) இப்படி சொல்வது முட்டாள்தனமான வாதமும் கூட. யாரோ செய்யும் தவறுக்கு யாரையோ தண்டிப்பது என்பது மடத்தனமாக கொள்கை என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கின்றது. ஆனால் கிறிஸ்தவமோ, நம் முன்னோர்கள் செய்யும் பாவம் சந்ததி சந்ததியாக தொடரும் என்கிறது. கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடான ஆதிபாவம் - Original Sin என்பதே 'ஆதாம் செய்த பாவம் சந்ததி சந்ததியாய் தொடர்கிறது' என்பது தானே. இப்படிப்பட்ட நம்பிக்கை இவர்களிடம் இருக்கும் நிலையில், நாம் மேலே கூறியுள்ள விவரங்களையும் அதற்கு ஆதாரமாக காட்டியுள்ள உபாகமம் 23:2,3 வசனத்தையும் கிறிஸ்தவர்கள் மறுத்தார்களேயானால், அவர்கள் ஆதிபாவம் என்னும் கிறிஸ்தவத்தின் ஆணிவேரையே மறுத்தவர்களாவர்கள். ஆதிபாவம் உள்ளதா? அல்லது இல்லையா? ஆதிபாவம் என்னும் கொள்கை சரிதான் என்றால் இந்த உபாகமம் 23:2,3 வசனத்தின் படி இயேசுவும், தாவீதும், சாலமோனும் பாவிகளாகிவிடுவார். இவர்களளெல்லாம் பாவிகள் இல்லை என்றால் ஆதிபாவம் தவரானதொன்றாகிவிடும். எது சரி?

தந்தை இல்லாமல் பிறந்தவருக்கு தந்தைவழி வம்சாவழி ஏன்?

கிறிஸ்தாவர்களிடம் கேட்பது இது தான். தந்தை இல்லாமல் பிறந்தார் என்பதற்காக இயேசுவைக் கடவுளின் குமாரன் (?) என்றும் அதனால் அவருக்கு தனிச்சிறப்பே உள்ளது என்றும் ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறம் தந்தையே இல்லாத ஒருவருக்கு தந்தைவழி வம்சாவழியை சொல்லுவதன் அவசியம் என்ன? வரலாற்றைச் சொல்லுகிறோம் என்றப்பெயரில் தந்தையே இல்லாத ஒருவருக்கு தந்தை வழி வம்சத்தை யாராவது சொல்வார்களா? எந்த ஒன்றுக்கும் உதவாத இந்த வம்சாவழியை சொல்லும் கடவுள் (?) முரண்பாடில்லாத வகையிலாவது சொல்ல வேண்டாமா? இந்த வம்சாவழியை சொல்லுவதால் உங்கள் பைபிள் உலகமக்ளுக்கு என்ன நல்வழிகாட்டவருகின்றது? இவைஅனைத்தும் கடவுளால் தான் அருளப்பட்டதென்றால் தனது குமாரனுடைய வம்சத்தை முரண்பாடாக சொல்லுவாரா? இந்த வம்சாவழியால் பைபிளின் பல புத்தகங்களின் புனிதம் கெடுகின்றதே இது ஏன்?

ஓன்றுக்கும் உதவாக இந்த வம்சாவளிப்பட்டியல்கள் கூறும் வசனங்கள் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான வசனங்கள் பழையஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் சேர்த்து வருகின்றது. ஆங்காங்கே அவன் அவன் மகன், இவன் இவன் மகன், இவனை இவன் பெற்றெடுத்தான் அவனை அவன் பெற்றெடுத்தான் என்பது போன்ற நடையில் வரும் வசனங்கள் ஏராளம். இதனால் யாருக்கு என்ன பயன்? ஒரு பிரயோஜனமும் இல்லை.

பொதுவாக வேதவாக்கியங்கள் எதற்காக அருளப்பட்டது என்பது குறித்து பொதுவான நிபந்தனைகளை சொல்வதைவீட பைபில் அது பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்த்தோமேயானால் இது போன்ற வம்சாவளி பற்றிய வசனங்களால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது புலனாகிவிடும். வேதவாக்கியங்கள் அருளப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பது பற்றி பைபில் சொல்லுவதை பாருங்கள் :

'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.- 2 திமெத்தேயு 3:16-17

அதாவது அந்த வேதவசனங்கள் :

1. உபதேசத்திற்கும்
2. கடிந்துக்கொள்ளுதலுக்கும்.
3. சீர்திருத்தலுக்கும்...
4. நீதியைப் படிப்பித்தலுக்கும்...

உதவக்கூடியது என்று சொல்லுகிறது பைபில்.

பைபிளில் வரும் எல்லா வமிசாவளிப்பட்டியல்களை கூறும் வசனங்களை, இந்த பைபிள் வசனத்தோடு உரசிப்பாருங்கள். இதில் ஆயிரக்கனக்கான குழப்பங்களும் முரண்பாடுகளும், அசிங்கமான மரபுகளும் நிறைந்த இந்த வமிசாவளிப் பட்டியல் வசனங்களால் என்ன பயன்? இந்த நான்கு தகுதியில் எந்த தகுதிகளோடு இந்த வம்சாவளிப்பட்டியல் வசனங்கள் ஒத்துப்போகின்றது? அது மட்டுமல்ல புதிய ஏற்பாட்டின் மூலகர்த்தா பவுல் அவர்களே, இந்த வம்சவரலாறு பட்டியல்களெல்லாம் ஒன்றுக்கும் உதவாது, அதனால் எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறுகின்றார்.

புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு. அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். (தீத்து 3:9)

வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,... (1 திமோத்தேயு 1:3)

இங்கே வம்சாவளிப்பட்டியல்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று பவுல் சொன்னதும் கடவுளால் அருளப்பட்டதாம், அங்கே மத்தேயுவும் லுக்காவும் இன்னும் பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கலெல்லாம் சொல்லும் அந்த வம்சாவழிப்பட்டியள்களும் கடவுளால் சொல்லப்பட்டதாம். இது பச்சை முரண்பாடாக தெரியவில்லையா?

அன்புள்ள கிறிஸ்தவ சகோதரர்களே! இவ்வுலகமக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவதற்காக இறைவன் தனது இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக குர்ஆன் எனும் இறுதி இறைவேதத்தை அருளியிருக்கின்றார். இயேசுவைப் பற்றியும் அவரது முன்னோர்களான தாவீது, சாலமோன் இன்னும் பல தீர்க்கதரிசிகள் - இறைத்தூதர்கள் அனைவரும் பரிசுத்தாவன்கள் - அவர்கள் அனைவரும் நல்லடியார்கள் என்று பறைசாட்டுகிறார் இறைவன். யூதர்களும் பைபிளின் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் இயேசுவுக்கும் அவனது மற்ற பரிசுத்தவான்களுக்கும் எற்படுத்தியுள்ள களங்கங்களைத் துடைத்து அவர்களின் உன்மைநிலையை விளக்குவதற்காக வந்த இந்த திருக்குர்ஆனை மனதுறுகிப் படியுங்கள். கண்டிப்பாக நேர்வழி அடைவீர்கள். இறைவன் நம் அனைவரையும் நேரான வழியில் நிலைநிறுத்துவானாக.

விளக்கங்கள் தொடரும்.. இறைவன் நாடினால்...

நன்றி: http://egathuvam.blogspot.com/

உலகில் 100 கோடிக்கும் மேல் வாழும் கிறிஸ்தவர்களால் புனிதவேதமாக கருதப்படும் பைபிள், ஏக இறைவனால் - கர்த்தரால் - பரிசுத்த ஆவியின் மூலமாக - பரிசுத்த எழுத்தர்களுக்கு ஊந்தப்பட்டு எழுதப்பட்டது என்றும் - எனவே, இது இறைவனால் உலகமக்களுக்கென்று கொடுக்கப்பட்ட இறைவேதம் என்றும் நம்புகின்றனர். இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாகும். அதை பைபிளில் பின்வரும் வசனத்தின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது' - 2 திமோத்தேயு 3 : 16

புனித வேதம் என்று சொல்லப்படக்கூடியது, அதுவும் அனைத்தையும் படைத்த - இந்த உலகம் மற்றும் அதில் வசிக்கக்கூடிய உயிரினம், இந்த அன்டசராசரங்கள், இவ்வனைத்தையும் படைத்த - இதுவரை நடந்தவற்றையும் இனி நடக்கப்போவதையெல்லாம் அறிந்திருக்கக்கூடிய இறைவனால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஒரு வேதம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எத்தனையோ அளவு கோல்கள் இருந்தாலும், பொதுவான - அதுவும் மிக மிக முக்கியமான ஒரு அளவுகோல் 'முரண்பாடற்ற - குழப்பமில்லாத வேதமாக இருக்கவேண்டும்' என்பது.

ஓரு இறைவேதத்தில் முரண்பாடு என்பது இருக்கக்கூடாது. இருக்கவும் முடியாது. அப்படி முரண்பாடானதாக இருந்தால் அது ஏக இறைவனால் - காத்தரால் - வழங்கப்பட்ட இறைவேதமாக ஒருபோதும் இருக்க முடியாது. கர்த்தரால் அருளப்பட்ட ஒரு இறைவேதத்தில் முரண்பாடு என்பது இருக்க முடியாது என்ற தகுதியை பைபிலும் ஒத்துக்கொள்கின்றது. கடவுள் குழப்பமாகவோ - முரண்பாடாகவோ எதையும் சொல்லமாட்டார் என்கிறது பைபிள் :

...God is not the author of confusion... (1 corinthians 14:33) (Revised Standard Verison)

...கடவுள் குழப்பத்தின் கடவுளல்ல... (1 கொரிந்தியர் 14:33) (ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வெர்சன் மொழிப்பெயர்ப்பு)

இந்த பொதுவான அளவுகோளின் படி கிறிஸ்தவார்களின் புனித வேதமான பைபிலை ஒப்பிட்டு பார்த்தோமேயானால் நமக்கு அதிர்ச்சியும் - ஆச்சரியமுமாக இருக்கின்றது. ஏனெனில், கர்த்தரால் அருளப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் ஏராளமான முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்து காணப்படுகின்றது. உன்மையிலேயே இது கர்த்தரால் அருளப்பெற்ற ஒரு வேதமாக இருந்தால் - அவனுடைய பரிசுத்தர்களுக்கு பரிசுத்த ஆவியால் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட வேதமாக இருந்தால் எப்படி ஒவ்வொரு ஆகாமங்ளும், ஒவ்வொரு வசனங்களும் முரன்பாடாக இருக்கும்? இறைவேதம் என்ற தகுதியை முழவதுமாக இழந்து விட்ட பைபிளின் அனைத்து முரண்பாடுகளையும் 'முரண்பாடுகள் நிறைந்த பைபிள்' என்றத் தலைப்பில் தொடராக கொடுக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்... அதன் முதல் பாகம் இதோ:

இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்!

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் இரண்டு பாகங்கள் உள்ளது. ஓன்று பழைய ஏற்பாடு. மற்றொன்று புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு என்பது உலகம் படைக்கப்பட்டது முதல் இயேசுவின் பிறப்பிற்கும் முந்தியது வரை சொல்லுகிறது. புதிய ஏற்பாடு என்பது இயேசுவின் பிறப்பு முதல் துவங்கி அவரின் இறப்பு அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்று விவரிக்கப்படுகின்றது. இதில் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டைக் காட்டிலும் புதிய ஏற்பாட்டிற்கே அதிகமுக்கியத்துவம் கொடுக்கின்றனர். கடவுளால் அருளப்பட்டதாக - கிறிஸ்தவ மக்களால் நம்பப்படுகின்ற புதிய ஏற்பாட்டின் முதல் ஆகமத்தின் முதல் வசனம் முதல் 17ம் வசனம் வரையுள்ள வசனங்களில் ஏராளமான குளறுபடிகளும் முரண்பாடுகளும் நிறைந்து காணப்படுகின்றன. அதை சற்று அலசுவோம்.

புதிய ஏற்பாட்டில் மத்தேயு எழுதிய 1ம் ஆதிகாரம் வசனம் 1 முதல் 17ம் வசனம் வரை இயேசுவுடைய வம்சாவழியினர் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான் ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான் யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான். 3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான். எஸ்ரோம் ஆராமைப் பெற்றான 4. ஆராம் அம்மினதாபைப் பெற்றான் அம்மினதாப் நகசோனைப் பெற்றான் நகசோன் சல்மோனைப் பெற்றான் 5. சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான் போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான் ஓபேத் ஈசாயை பெற்றான் 6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான் 7. சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான் ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான் அபியா ஆசாவைப் பெற்றான 8. ஆசா யோசபாத்தைப் பெற்றான் யோசபாத் யோராமைப் பெற்றான் யோராம் உசியாவைப் பெற்றான 9. உசியா யோதாமைப் பெற்றான் யோதாம் ஆகாசைப் பெற்றான் ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான 10. எசேக்கியா மனாசேயைப் பெற்றான் மனாசே ஆமோனைப் பெற்றான் ஆமோன் யோசியாவைப் பெற்றான 11. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான். 12. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான் சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான 13. சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான் எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான 14. ஆசோர் சாதோக்கைப் பெற்றான் சாதோக்கு ஆகீமைப் பெற்றான் ஆகீம் எலியூதைப் பெற்றான். 15. எலியூத் எலெயாசாரைப் பெற்றான் எலெயாசார் மாத்தானைப் பெற்றான் மாத்தான் யாக்கோபைப் பெற்றான 16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான் அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். 17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும் தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.

இப்படி மத்தேயு தனது பங்குக்கு இயேசுவின் வம்சவரலாறை பற்றி தனது புத்தகத்தின் துவக்கதிலேயே எழுதியுள்ளார். இதே போன்று இயேசுவின் வம்சவரலாறை புதிய ஏற்பாட்டின் மற்றொரு எழுத்தாளரான லூக்காவும் தனது 3வது அதிகாரம் 23வது வசனத்திலிருந்து 38வது வசனம் வரை பின்வருமாறு கூறுகின்றார் :

23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். 24. ஏலி மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் லேவியின் குமாரன் லேவி மெல்கியின் குமாரன் மெல்கி யன்னாவின் குமாரன் யன்னா யோசேப்பின் குமாரன். 25. யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன் மத்தத்தியா ஆமோசின் குமாரன் ஆமோஸ் நாகூமின் குமாரன் நாகூம் எஸ்லியின் குமாரன எஸ்லி நங்காயின் குமாரன். 26. நங்காய் மாகாத்தின் குமாரன் மாகாத் மத்தத்தியாவின் குமாரன் மத்தத்தியா சேமேயின் குமாரன் சேமேய் யோசேப்பின் குமாரன் யோசேப்பு யூதாவின் குமாரன் யூதா யோவன்னாவின் குமாரன். 27. யோவன்னா ரேசாவின் குமாரன் ரேசா சொரொபாபேலின் குமாரன் சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன் சலாத்தியேல் நேரியின் குமாரன். 28. நேரி மெல்கியின் குமாரன்ளூ மெல்கி அத்தியின் குமாரன அத்தி கோசாமின் குமாரன் கோசாம் எல்மோதாமின் குமாரன் எல்மோதாம் ஏரின் குமாரன் ஏர் யோசேயின் குமாரன். 29. யோசே எலியேசரின் குமாரன் எலியேசர் யோரீமின் குமாரன் யோரீம் மாத்தாத்தின் குமாரன் மாத்தாத் லேவியின் குமாரன். 30. லேவி சிமியோனின் குமாரன் சிமியோன் யூதாவின் குமாரன் யூதா யோசேப்பின் குமாரன் யோசேப்பு யோனானின் குமாரன் யோனான் எலியாக்கீமின் குமாரன். 31. எலியாக்கீம் மெலெயாவின் குமாரன் மெலெயா மயினானின் குமாரன் மயினான் மாத்தாத்தாவின் குமாரன் மாத்தாத்தா நாத்தானின் குமாரன் நாத்தான் தாவீதின் குமாரன். 32. தாவீது ஈசாயின் குமாரன் ஈசாய் ஓபேதின் குமாரன் ஓபேத் போவாசின் குமாரன் போவாஸ் சல்மோனின் குமாரன் சல்மோன் நகசோனின் குமாரன். 33. நகசோன் அம்மினதாபின் குமாரன் அம்மினதாப் ஆராமின் குமாரன் ஆராம் எஸ்ரோமின் குமாரன் எஸ்ரோம் பாரேசின் குமாரன் பாரேஸ் யூதாவின் குமாரன் யூதா யாக்கோபின் குமாரன். 34. யாக்கோபு ஈசாக்கின் குமாரன் ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன் ஆபிரகாம் தேராவின் குமாரன தேரா நாகோரின் குமாரன். 35. நாகோர் சேரூக்கின் குமாரன் சேரூக் ரெகூவின் குமாரன் ரெகூ பேலேக்கின் குமாரன் பேலேக் ஏபேரின் குமாரன் ஏபேர் சாலாவின் குமாரன். 36. சாலா காயினானின் குமாரன் காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன் அர்ப்பகசாத் சேமின் குமாரன் சேம் நோவாவின் குமாரன் நோவா லாமேக்கின் குமாரன். 37. லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன் மெத்தூசலா ஏனோக்கின் குமாரன் ஏனோக்கு யாரேதின் குமாரன் யாரேத் மகலாலெயேலின் குமாரன் மகலாலெயேல் கேனானின் குமாரன் கேனான் ஏனோசின் குமாரன். 38. ஏனோஸ் சேத்தின குமாரன் சேத் ஆதாமின் குமாரன் ஆதாம் தேவனால் உண்டானவன்.

இப்படி, பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வம்சாவழியைப் பற்றி இரண்டு ஆகாமங்களில் இரண்டு பரிசுத்தர்கள் (?) எழுதியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இது மட்டுமல்லாமல் இதே போன்ற வேறு பலருடைய வம்சாவழிப்பட்டியல்கள் பைபிளின் அனேக இடங்களில் குறிப்பாக, பழையஏற்பாட்டில் பல இடங்களில் விவரிக்கப்படுகின்றது.

இப்படி பலருடைய வம்சாவளியைப் பற்றி இறைவனால் அருளப்பெற்ற ஒருவேதத்தில் சொல்லப்படுவதற்கு என்ன காரணம்? இதனால் இந்த உலகமக்களுக்கு என்ன பயன்? இதன் மூலம் இந்த உலகமக்களுக்கு கடவுள் எதைச் சொல்லவருகின்றார்? எந்த ஒரு பயனும் கிடையாது.

ஒரு வாதத்திற்காக, எந்தப்பயனும் இல்லாத ஒன்றை ஏதோ கர்த்தர் (?) சொல்லிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி சொல்லப்படும் ஒன்றை தெளிவாகவும் - குழப்பமில்லாத வகையிலாவது சொல்லியிருக்க வேண்டாமா? இவ்வுலகம் மற்றும் இந்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த கடவுள்தான், இந்த வசனங்களை எல்லாம் அருளினார் என்றால், தனது குமாரனுடைய (?) வம்சாவழி பட்டியல் பற்றி எப்படித்தெரியாமல் போகும்?

ஆபிரகாம் முதல் இயேசு வரையில் மொத்தம் எத்தனை பேர்?

மத்தேயு 1: 17ம் வசனத்தில் ஆபிரகாம் முதல் இயேசுவரை மொத்தமுள்ள வம்சாவளியினர் பற்றிய மத்தேயு சொல்லும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

'இவ்விதமாய் உன்டான தலைமுறைகளெல்லாம்...

Image and video hosting by TinyPic

(அதாவது ஆபிரகாம் முதல் இயேசுவரையிலும் உள்ள மொத்த வம்சாவழியினர் 14 + 14 + 14 = மொத்தம் 42 பேர் என்கிறார்)

ஆனால் அவரே தனது முதல் அதிகாரத்தின் 2ம் வசனம் முதல் 16ம் வசனம் வரையில் கொடுத்துள்ள பட்டியலில் 41 பேரின் பட்டியல் தான் கொடுத்துள்ளார்.

Image and video hosting by TinyPic
 
மத்தேயு தனது ஆகாமத்தில் இயேசுவின் வம்சாவழிபற்றி கொடுத்துவிட்டு 1 : 17 ம் வசனத்தில் ஆபிரகாம் முதல் இயேசு வரையில் மொத்த வம்சாவளியினர் 42 என்று கூறுகிறார். ஆனால் அதற்கு மாற்றமாக, வேறுயாருமல்ல அவரே அவரது சொந்த ஆகாமத்தில் கொடுத்திருப்பதோ மொத்தம் 41 நபர்களின் பட்டியல்தான். மீதம் ஒருவர் எங்கே??? ஓரு கடவுளுக்கு அல்லது கடவுளின் எழுத்தாளருக்கு தான் வரிசைப்படுத்தியுள்ள நபர்களின் எண்ணிக்கை எப்படித் தெரியாமல் போகும்? இது எப்படி கடவுளால் அருளப்பட்ட வேதமாக இருக்க முடியும்?

இதை சாதாரன தவறு தானே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் அது மத்தேயு என்னும் தனி மனிதன் சுயாமாக எழுதியதாக இருந்தால் நாம் அதை பெரிதாக எடுத்துகொள்ள போவதில்லை. ஆனால் இவையெல்லாம் கடவுளால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டதாம். அப்படி கடவுளால் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட ஒன்று எப்படி முரணாக இருக்கும்? எப்படி கணக்கில் குளருபடி வரும்? அடுத்து பாருங்கள்..

அடுத்து நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், மத்தேயு, தாவீது முதல் இயேசு வரையில் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மொத்தமே 42 இரண்டு பேர்தான். அதற்கு மேல் இல்லை என்று மிகத்தெளிவாகவே கூறுகிறார். நன்றாக மத்தேயு எழுதியதை கவனித்தால் உன்மைப் புரியும் :

'இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும், பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்'

'So all the generations from Abraham to David are fourteen generations; and from David until the carrying away into Babylon are fourteen generations; and from the carrying away into Babylon unto Christ are fourteen generations'.

மொத்தமே இவ்வளவு தலைமுறையினர்தான், அதற்கு மேல் இல்லை என்பதை தெளிவாக குறிக்கும் விதமாக - இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் - 'all the Generations' என்று மத்தேயு கடவுளின் ஊந்துதலோடு (?) எழுதியுள்ளார். ஆனால் பழைய ஏற்பாடோ இதற்கு மாற்றமாக 'மத்தேயு சும்மா சிறுபிள்ளதானமா எழுதிட்டாரு. நாங்க சொல்றது தான் சரி, அவருக்கு கணக்கே சரியா தெரியலப்பா' என்ற தோரனையில் பின்வருமாறு விளக்குகிறது.

தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டுப்போன காலம் வரை எத்தனைப் பேர்?

Image and video hosting by TinyPic

தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டு போகும் காலம் வரை மொத்தம் 14 தலைமுறையினர் தான் என்கிறார் மத்தேயு. ஆனால் பழையஏற்பாடு 1 நாளாகம் 3 : 10-16ல் மொத்தம் 14 நபர்கள் என்பது தவறு. மொத்தம் 18 பேர் என்கிறது. இதில் விடுபட்ட 4 நபர்கள் எங்கே? இது கடவுளுக்கு (?) தெரியாமல் போன மர்மம் என்ன?

1 நாளாகமம் 3:10-16 கணக்குப்படி பார்த்தால் மத்தேயுவின் (1:17) 42 நபர்கள் என்ற மத்தேயுவின் கணக்கு இன்னும் உதைக்கும்.

இப்பொழுதாவது புரிகிறதா பைபில் கடவுளிடமிருந்து வந்தது என்று சொல்வது அனைத்தும் கட்டுக்கதை என்று? மத்தேயு அவருக்கு தெரிந்த அளவுக்கு இயேசுவின் வரலாற்றை எழுதிவிட்டார் என்றால் கூட நாம் இதை பெரிது படுத்தப் போவதில்லை. அதை விடுத்து இவை அனைத்தும் கடவுளிடம் வந்தது - அதாவது 'வேதவாக்கியங்கள் அனைத்தும் தேவஆவியால் அருளப்பட்டது' என்று சொல்லி மக்களை நம்ப வைக்கவும், இப்படிப்பட்டவர்கள் எதை எதையோ தங்கள் மனம் போனப்பபோக்கில் எழுதியதை வைத்துக்கொண்டு உன்மைகளை மறைப்பதற்கும், வரலாறே இவர்கள் எழுதியது மட்டும் தான் என்றும், இவர்களுக்கு மாற்றமாக யார் சொன்னாலும் நாங்கள் நம்பமாட்டோம். ஏனெனில் இவர்கள் சுயமாக எழுதியதல்ல, இவை அனைத்தும் கடவுளின் பரிசுத்த ஆவியால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டது' என்று சொல்வதால் தான் நாம் இந்தக் கேள்விகளை வைக்கின்றோம் என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும்.

எகொனியா யோசியாவின் பேரனா? அல்லது மகனா?

இயேசுவின் வம்சத்தில் வரும் ஒருவரான யோசியாவின் மகன் தான் எகொனியா என்கிறார் மத்தேயு (மத்தேயு 1:11) ஆனால் பழையஏற்பாட்டில் வரும் 1 நாளாகமம் 3:15-16 ல் யோசியாவின் மகன் யோயாகீமாம். அந்த யோயாகீமின் மகன் தான் எகொனியாவாம். இதில் எது சரி? எகொனியா யோசியாவின் பேரனா? அல்லது மகனா?

சொருபாபேலின் மகன் யார்?

இயேசுவின் வம்சத்தில் வரும் சொருபாபேலின் மகன் அபியூத் வழியில் தான் இயேசு ஜனனமானார் என்று மத்தேயுவும் (மத்தேயு 1:13) சொருபாபேலின் மகன் ரேசா வழியில் தான் இயேசு வந்தார் என்று லூக்காவும் (லூக்கா 3:27) கூறுகின்றனர். உன்மையில் இயேசு சொருபாபேலின் மகன்கள் என்று சொல்லப்படக்கூடிய அபியூத் வழியில் வந்தாரா? அல்லது ரேசா வழியில் வந்தாரா?

அடுத்து இதில் மிகப்பெரிய வேடிக்கை என்ன வென்றால் இதே வம்சாவலியைச் சொல்லி வரும் பழைய ஏற்பாடு 1 நாளாகமம் 3 : 19 ல் இந்த சொருபாபேலுக்கு பிறந்தவர்கள் யார் யார் என்பது பற்றி கூறப்படுகிறது. அதில் மத்தேயு சொல்லக்கூடிய சொருபாபேலின் மகன் அபியூத்தோ அல்லது லூக்கா சொல்லக்கூடிய ரேசாவே அங்கே வரவில்லை. மாறாக, அங்கே வேறு ஒரு வம்சப்பட்டியலை எழுதிவைத்துள்ளனர். இதிலிருந்து லூக்காவோ அல்லது மத்தேயுவோ கண்மூடித்தனமாக எதையோ எழுதிவைத்துள்ளனர் என்பதும், இவற்றைத்தான் கிறிஸ்தவர்கள் கடவுளின் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகிறதல்லவா?

கிறிஸ்தவர்கள், மத்தேயு சொல்வதுதான் சரி என்றால் லூக்காவும், பழைய ஏற்பாட்டின் 1 நாளாகமும் சொல்வது பொய் என்று ஆகிவிடும். இல்லை லூக்கா சொல்வது தான் சரி என்றால் 1 நாளாகமும் மத்தேயுவும் சொல்வது தவறென்றாகிவிடும். அல்லது 1 நாளாகமம் சொல்வது தான் சரி என்றால் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் ஏதோ கடவுளின் பெயரால் உளறித்தள்ளிவிட்டனர் என்றாகிவிடும். எது உன்மை? எப்படியோ பைபிளின் ஆகாமங்கள் கடவுளின்பெயரால் மக்களை குழப்புகின்றது என்பது மட்டும் நிச்சயம்.

சொருபாபேலின் தந்தை யார்?

இயேசுவின் வம்சத்தில் வரும் சொருபாபேலின் தந்தை சாலத்தியேல் என்று மத்தேயு 1 : 12 லும், லுக்கா 3 : 27லும் ஒருமனதாக சொல்லுகின்றனர். ஆனால் இந்த இருவரும் எதை ஒத்தகருத்துடன் சொல்லுகிறார்களோ அது தவறு என்று பழைய ஏற்பாடு 1 நாளாகமம் 3:19ல் சொல்லப்படுகின்றது. அதாவது சொலுபாபேலின் தந்தை பெதாயா என்கிறது. எது சரி?

சாலத்தியேலின் தந்தை யார்?

இயேசுவின் வம்சாவளியில் வரும் ஒருவர் சாலத்தியேல். இவரின் தந்தை 'எகொனியா' என்பவர் தான் என்று மத்தேயு 1:12 லும், இல்லை 'நேரி' என்பவர் தான் என்று லூக்கா 3:27 லும் தெரிவிக்கின்றனர். உன்மையில் எகொனியாவின் தந்தை யார்?

மரியாளின் புருசன் யோசேப்பின் தந்தை யார்?

இயேசுவின் தந்தை யோசேப்பு என்று மத்தேயு லூக்கா - இரண்டு சுவிசேஷக்காரர்களுமே கூறுகின்றனர். அந்த யோசேப்பின் தந்தை யாக்கோபு என்று மத்தேயுவும் (மத்தேயு 1:16) ஏலி என்று லூக்காவும் (லுக்கா 3:23) கூறுகின்றனர். இங்கே மரியாலுடைய புருஷன் யோசேப்பின் தந்தை யார்? இப்படி தந்தை விஷயத்தில் குழப்பம் வரலாமா? அதுவும் இNசுவுடைய தாய் மரியாலுடைய புருஷனின் தந்தைக்கூட தெரியதா அளவில் தான் கடவுள் இருப்பாரா? அல்லது கடவுளின் பெயரால் பைபில் வேதம் என்று புனையப்பட்டுள்ளதா?

இயேசு ஜனனமானது சாலமோன் வழியிலா? நாத்தானின் வழியிலா?

புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயு 1 : 16ல் இயேசு பிறந்தது தாவீதின் மகன் சாலமோன் வம்சத்தில் என்கிறார். ஆனால் லூக்காவோ 3 : 31ல் இயேசு தாவீதின் மகன் நாத்தானின் வம்சத்தில் பிறந்தார் என்கிறார். இது எப்படி சாத்தியமாகும். தாவீதுக்கு நாத்தான் சாலமோன் என்று இரண்டு மகன்கள் இருந்ததாக பழைய ஏற்பாடு 2 சாமுவேல் 5: 14ல் சொல்லப்படுகின்றது. அப்படியானால் எப்படி இரண்டு பேரின் வழியிலும் இயேசு வந்திருக்க முடியும்? தாவீதின் இரு மகன்களில் எந்த மகன் வழியே இயேசுவின் வம்ச வரலாறு வருகின்றது என்பதைக்கூடவா கடவுளுக்கு அறியாமல் இருக்கின்றார்? இப்படி முரண்பாடாக இருக்கும் ஒன்றை எப்படி கடவுளுடைய வேதம் என்று ஏற்க முடியும்? அல்லது கடவுள் ஒன்றும் அறியாதவர் என்று சொல்ல வருகின்றீர்களா?

இதில் சில கிறிஸ்தவர்கள் இந்த முரண்பாட்டை சமாளிப்பதற்காக - தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக்கொள்வதற்காக - பொருந்தாத வாதமொன்றை வைக்கின்றனர். மத்தேயு, தாவீதின் மகன் சாலமோனுடைய வழியாக மரியாலுடைய புருசன் யோசேப்பின் வம்சாவழியைச் சொல்லுகிறார் என்றும் லூக்கா, தாவீதின் மகன் நாத்தானின் வழியாக இயேசுவின் தாய் மரியாலுடைய வம்சாவழியைச் சொல்லுகிறார் என்றும் இரண்டுமே வேறுவேறான வம்சாவளி என்கின்றனர்.

பொதுவாகவே கிறிஸ்தவர்கள் பைபிளில் உள்ள இந்த முரண்பாடுகளை ஒத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த வாதத்தை வைக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. இது பைபில் உள்ள மிகத்தெளிவான முரண்பாடு என்பதை நன்றாகத் தெரிந்தும் இதை ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்வது தவறு என்பதற்கான காரணங்கள் இதோ :

லூக்காவும் சரி மத்தேயுவும் சரி - இருவருமே மரியாலுடைய புருஷன் சோசேப்பின் வம்சாவலியையே கூறுகின்றனர் என்பது தான் உன்மை. காரணம், மத்தேயு 1 : 16ல் 'யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்' அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். இங்கே இயேசுவின் தந்தை யோசேப்பு என்று மிகத்தெளிவாகச் சொல்லப்படுகின்றது. அதேபோல் லூக்கா 3: 23ல் 'அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். இங்கேயும் இயேசுவின் தந்தை யோசேப்பு என்றே சொல்லப்படுகின்றது. எந்த ஒரு இடத்திலும் மரியலுடைய வம்சத்தைப் பற்றி சொல்லப்படவில்லை என்பதை நன்றாக கவனிக்க வேண்டும்.

அடுத்து மத்தேயுவும் லூக்காவும் சொல்லக்கூடிய வம்சாவளிப்பட்டியல்களின் இடையே இயேசுவின் முன்னோர்களான சாலத்தியேல் அவரது மகன் சொருபாபேல் என்று சொல்லப்படுகின்றது. (பார்க்க மத்தேயு 1:12, லூக்கா 3:27) கிறிஸ்தவர்கள் மறுப்பது போல் இந்த இரண்டும் வேறு வேரான வம்சவராலாறு என்றால் இந்த பட்டியலில் இவ்விருவரும் வரவேண்டிய அவசியம் என்ன? லூக்காவும் மத்தேயும் சொல்வது போல் இவ்விருவரும் பெயர்களில் தான் ஒற்றுமையே யொழிய நபர்கள் தனித்தனி நபர்களே என்றும் மறுக்க இயலாது. ஏனெனில் இரு ஆகமங்களிலும் வரும் இவ்விறுவரும் ஒருவரே என்று அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் ரெஃபரன்ஸ் பைபிள்களில் கோடிட்டு காட்டியுள்ளனர். (உதாரனமாக : தானியேல் தமிழ் ரெஃப்ரன்ஸ் வேதாகமம், ஆங்கிலம் NIV Study bible, RSV. KJV (editod by : C.S. Scofield. இன்னும் பல...). லூக்கா சொல்வதும் மத்தேயு செல்வதும் வேறு வேரான வம்சாவளி என்றால் தந்தை மகன்களாகிய சாலத்தியேலும், சொருபாபேலும் எப்படி இரண்டு வம்சத்திலும் வருவார்கள்?

அடுத்து, இவர்கள் இந்த முரண்பாட்டை சரிகட்டி பைபிள் இறைவேதம் என்று நியாயப்படுத்துவதற்காக சொல்லப்படும் காரணங்கள் திரும்பவும் பைபில் இறைவேதம் இல்லை என்பதை நிரூபிப்பதாகவே அமைந்து விடுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்த முரண்பாட்டை சரிகட்ட தானியே ரெஃபரன்ஸ் வேதாகமம் சொல்லும் காரணத்தைப் பாருங்கள் :

'[503] 3:24 மரியாளின் மூதாதயைர் பட்டியல் : ஏலி யோசேப்பின் மாமாவாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்தச் செய்திகள் மரியாளிடமிருந்து லூக்காவுக்கு கிடைத்திருக்க வேண்டும். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் லூக்கா நூல் வழங்குகிறது. அதற்கு இந்த மரியாளின் பரம்பரைப் பட்டியல் ஒரு சிறந்த சான்று' (பார்க்க : தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமம் - பக்கம் 1098)

இதில் என்ன சொல்ல வருகின்றார். லுக்கா சொல்லும் யோசேப்பின் தந்தை ஏலி என்பவர் உன்மையில் அவரின் தந்தை இல்லையாம். அவரின் மாமாவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாம். இங்கே ஏன் 'அதிக வாய்ப்பு உள்ளது' என்று போட வேண்டும். அது தான் உன்மையாக இருந்தால் அதை பைபில் ஆதரங்களுடன் நிரூபிக்க வேண்டியது தானே. இப்படி சமாளிக்கும் வார்த்தைகளைப் போட்டால் தான், இந்த முரண்பாட்டைக் களைந்து இது கடவுளுடைய வேதம் என்று சொல்லாம் என்பதற்காக தங்களுக்குள்ளே செய்துக் கொள்ளும் சமாதானம்.

அடுத்து 'இந்த செய்திகள் லூக்காவுக்கு மரியாளிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும்'. என்கிறார். இவர் சொல்வது உன்மையானால் இந்தச் செய்தி மரியாளிடமிருந்து கிடைத்தது என்று லூக்காவல்லவா சொல்லவேண்டும். அதைவிடுத்து 20ம் நூற்றான்டைச் சேர்ந்த தானியேல் சொல்லவேண்டிய அவசியம் என்ன?

அடுத்து இவர் 'லுக்காவுக்கு இந்தச் செய்தியை மரியால் தான் சொன்னாh'; என்று ஒத்துக்கொண்டதன் மூலம் இந்தச் செய்தி கடவுள் சொல்லவில்லை, லூக்கா, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் கேட்டுத்தான் தனது புத்தகங்களை எழுதினார் என்பதை அப்பட்டமாக ஒத்துக்கொள்கிறார்களா இல்லையா? அப்படியானால் லூக்காவால் பலரிடம் கேட்டு எழுதப்பட்ட புத்தகத்தை, கடவுளால் அவருக்கு சொல்லப்பட்டு எழுதப்பட்ட வேதமாக எப்படி ஏற்க முடியும்? இவ்வாறு, இவர்கள் இந்த முரண்பாட்டைக் களைவதற்காக எத்தனை மறுப்புக்கள் கூறினாலும், அந்த மறுப்பே வேறு ஒரு விதத்தில் முரண்பாட்டைக் கொண்டுவரும் என்பது தான் நிதர்சமான உன்மை.

அடுத்து வேறு சிலர் இன்னொரு வாதத்தையும் வைக்கின்றார்கள். அதாவது 'யூதர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. ஒரு நபருக்கு மகனில்லாமல் மகள் மட்டும் இருந்தால், தன் மருமகனை தன் மகனாகக் கருதி, தன் வம்ச அட்டவனையில் சேர்த்துக் கொள்வார்கள்' என்கின்றனர். எனவே லூக்கா சொல்லும் 'ஏலி' என்பவர் யோசேப்பின் மாமனார் என்று கூற வருகின்றனர். யோசேப்பின் மாமனார் 'ஏலி' என்பதற்கும், மரியாளுக்கு சகோதரார்களே இல்லை என்பதற்கும் என்ன பைபிள் ஆதாரம்? ஓன்றும் கிடையாது. பவுளும் யோசேப்பும் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகள் என்று இப்பொழுது 2008ல் நான் சொன்னால் அதற்கு எப்படி ஆதாரம் இல்லையோ, அதே போல் தான் இந்த கதைக்கும் ஆதாரம் கிடையாது.

அடுத்து, இப்படி வம்சாவலிப் பட்டியல்களை எழுதிவைப்பது யூதர்களுடைய வழக்கம் - அதனால் தான் வம்சாவலிப் பட்டியல்கள் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர். யூதர்களுடைய பழக்கத்திற்கும் கடவுளின் வேதத்திற்கும் என்ன சம்பந்தம்? தந்தை இல்லாமல் அதியமான முறையில் பிறந்தவர் இயேசு என்று ஒருபக்கம் சொல்லிவிட்டு, அப்படிபட்டவருக்கே தந்தை வழி வம்சத்தை யாராவது எழுதிவைப்பார்களா? இப்படி அதிசயமாக பிறந்த இயேசுவுக்கு தந்தைவழி வம்சத்தை சொல்லுவதால் கடவுள் செய்த அதிசயத்தை மறுப்பதாக ஆகாதா? இப்படி எழுதி வைப்பது யூதர்களுடைய பழக்கம் என்பதால் அதே யூதர்கள் இயேசுவையும் மற்ற பரிசுத்தவான்களையும் கொடுமைப்படுத்தியதும், சிலுவையில் அறைந்ததும் சரி என்று சொல்லி விடுவீர்களா? எனவே இது தேவையற்ற வாதம் என்பதை சம்பந்தப் பட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நன்றி: http://egathuvam.blogspot.com

பைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு !

இந்த மனிதசமுதாயத்திற்கு நல்வழிக் காட்ட வந்த இறைத்தூதர்களான தீர்க்கதரிசிகள் – நல்லோர்கள் பற்றி வரும் சம்பவங்களின் இடையிடையே – சில அபத்தமான – ஆபாசமான – அசிங்கமான வர்ணனைகளுடன் கூடிய இட்டுக்கட்டப்பட்ட கதைகளும் பைபிளில் நிறைந்துக் காணப்படுகின்றன. காரணம் அதைப் பாதுகாக்க வேண்டிய யூதர்கள் தங்கள் மனோஇச்சைப்படி தீர்க்கதரிசிகள் மீதே அபான்டமான – பொய்யான கதைகளை இட்டுக்கட்டியதால் தான் இப்படிப்பட்ட ஆபாசக் கதைகள் நிறைந்து காணப்படுகின்றன.

யூதர்களின் இப்படிப்பட்ட அவதூரான கதைகளுக்கும், அபத்தமான வரலாற்று திரிபுகளுக்கும் பலியான நல்லேர்களில் தாவீது தீர்க்கதரிசியும் ஒருவர். புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் எழுத்தாளரான மத்தேயு கூட இயேசுவை அறிமுகப்படுத்தும் போது ‘ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு’ (மத்தேயு 1:1) என்று தாவீதை மையப்படுத்தி இயேசுவை அறிமுகப்படுத்தும் அளவுக்கு தாவீது ஒரு மிகச் சிறந்த தீர்க்கதரிசியாக அன்னைறய மக்களால் போற்றுதலுக்கு உரியவராக இருந்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட தாவீது என்னும் தாவுத் (அலை) அவர்கள் பற்றி இறுதித் திருமறையாம் திருக்குர்ஆன் கூறும் போது ‘இவர் ஒரு மிகச்சிறந்த தீர்க்கதரிசி என்றும் ஒழுக்க சிலர்களான நல்லோர்களில் ஒருவர்’ என்றும் சாண்று பகர்கிறது.

“தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம் – அதற்கு அவ்விருவரும்: ‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்’ என்று கூறினார்கள்.” (அல்குர்ஆன் – 27:15)

“இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார்.” (அல்குர்ஆன் 38:17)

இப்படிப்பட்ட பல நற்பெயருக்கு சொந்தக்காரரான – பரிசுத்தரரான – தாவீது என்னும் தாவுத் (அலை) அவர்கள் பற்றி யூத எழுத்தாளர்கள் செய்துள்ள கற்பனைக் கதையையும் அதனால் அது இடம் பெற்றுள்ள பைபிலின் புத்தகங்களுடைய புனிதம் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றது என்பதையும் சற்று அளசுவோம்.

தாவீது ஒரு தரங்கெட்ட – ஒழுக்கங்கெட்ட செயலைச் செய்தார் என்று ஒரு கதை பைபிளில் வருகின்றது.

1. மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான். 2. ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். 3. அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். 4. அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான் அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான். பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள். 5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள். (2 சாமுவேல் 11 : 1 – 5)

ஒரு தீர்க்கதரிசி – மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஒருவர் – இறைவழியில் ஆட்சி நடத்தும் ஒரு ஆட்சியாளர் என்ற நற்பெயருக்கு சொந்தக்காரின் பெயரில் யூத எழுத்தாளர்கள் இட்டுக்கட்டியுள்ள கதையைப் பார்த்தீர்களா கிறிஸ்தவர்களே!

ஒரு அன்னியப்பென்ணை – அதுவும் தனக்காக – தனது நாட்டுக்காக – தான் அனுப்பிய படையில் – எதிரி நாட்டவரை எதிர்த்து போரிட சென்ற ஒரு உன்மையாக போர்வீரனுடைய மனைவியை – தெரிந்திருந்தும் வேண்டும் என்றே அப்பெண்னை தவறான கண்னோட்டத்தோடு பார்த்தது மட்டுமல்லாமல் அவளை அழைத்து விபச்சாரமும் செய்தார் என்று பைபிளில் எழுதிவைத்துள்ளனர்.

ஒரு புனிதர் மீது அபாண்டமான – இட்டுக்கட்டப்பட்ட இந்தக் கதையை இந்த யூத எழுத்தாளர்கள இதோடு நிருத்தினார்களா? என்றால் இல்லை. அதைத் தொடர்ந்து அவர் மேலும் மேலும் அடுக்கடுக்கான துரோகங்களைக் (?) செய்தாகவும் எழுதிவைத்துள்ளதைப் பாருங்கள் :

6. அப்பொழுது தாவீது: எத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான். உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது. 9. ஆனாலும் உரியா தன் வீட்டுக்குப் போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூடப் படுத்துக்கொண்டிருந்தான். 10. உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான். 11. உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். 12. அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு. நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான் அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமிலே இருந்தான். அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான். 7. உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். 8. (2 சாமுவேல் 6 – 12)

நல்லோர்களிள் ஒருவரான தாவீது மேலும் மேலும் தவறு செய்ததாக பைபிளில் இந்த வசனங்களின் மூலம் இட்டுக்கட்டப்பட்டுள்ளது.

தனது படைவீரனின் மனைவியை வேண்டுமென்றே தெரிந்தும் அவளோடு விபச்சாரம் புரிந்ததோடு மட்டுமல்லாமல், அவள் தாவீதால் கற்பம் அடைந்து விட்டால் என்று தெரிந்ததும் அதை மறைப்பதற்காக – போர்க்களத்தில் இருந்த அவளின் கனவனான உரியாவை அழைத்து வந்து அவளோடு உடளுறவு கொள்ள வைத்து, அதன் மூலம் தாவீதால் உன்டான குழந்தை – உரியாவுக்கு பிறந்ததாக சொல்வதற்கு சூழ்சி செய்த ஒரு கொடியவர் என்றும் இதை அறியாத உரியா தாவீதுக்கு மிகவும் விசுவாசியாக இருந்தாகவும் இங்கே குறிப்பிடப்படுகின்றது. அதன் பிறகு தாவீது என்ன செய்தார்? அதையும் யூத எழுத்தாளர்கள் இப்படி கதை எழுதி வைத்துள்ளனர்:

13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான். ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக் கொண்டான். 14. காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். 15. அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். 16. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான். 17. பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாப்போடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள் ஏத்தியனாகிய உரியாவும் செத்தான். 18. அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி, 19. தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது, 20. ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டினத்திற்கு இத்தனை கிட்டப் போய் யுத்தம பண்ணவேண்டியது என்ன? அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா ? 21. எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு எந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான் நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான். 22. அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து, 23. தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம். 24. அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின் மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள் உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான். 25. அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய் இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்பட வேண்டாம் பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும் நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான். 26. தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். 27. துக்க நாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான். அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது. (2 சாமுவேல் 11: 13-27)

இந்த அளவுக்கு ஒரு கொடுமையாமையான ஆட்சியாளராக – கொடூரமணம் படைத்தவராக – சூழ்ச்சிக்காராக – தனக்காக போர்க்களத்திற்குச் சென்ற ஒரு உன்மையான வீரனின் மனைவியை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் அதை மறைப்பதற்காக செய்த சூழ்ச்சியில் அவன் கணவன் விழவில்லை என்பதால் அவனை மீண்டும் போர்களத்திற்கு அனுப்பி கொல்லப்பட வைத்த கொலைகாராகத் தான் இந்த பைபிள் – கர்த்தரால் மக்களுக்கு நல்வழிப்படுத்த வந்த தாவீது தீர்க்கதரிசியைக் – காட்டுகின்றது. இன்றைய நடையில் சொல்வதென்றால் இ.பி.கோ சட்டத்தின் படி விபச்சாரம், கற்பழிப்பு, சதிதிட்டம் தீட்டுதல், கொடூரமாக கொலை செய்தல், நாட்டுக்கு துரோகம் செய்தல், தான் எடுத்துள்ள இரகசிய காப்பு பிரமானத்துக்கு மாறாக நடத்தல் இன்னும் எத்தனைவிதமான குற்றங்கள் இருக்கின்றதோ அவை அனைத்து குற்றத்தையும் ஒரு சேர செய்த கொடியவராகவும், இப்படிப்பட்டவருக்கு எவ்வளவு கொடுமையான தண்டனைக் கொடுத்தாலும் அது தகும் என்று சொல்லும் அளவுக்கு, அத்தனை தவறுகளையும் ஒரு தீர்க்கதரிசி – கடவுளின் பெயரால் மக்களைத் நல்வழிப்படுத்த வந்த ஒரு தீர்க்கதரிசி செய்தார் என்று எழுதிவைத்துள்ளனர்.

இந்த தீர்க்கதரிசி செய்த இந்த அநாகரிகமான – கொடூரமான செயல் – கடவுளின் பார்வைக்கு பொல்லாததாயிருந்ததாகவும் பைபிலிலேயே சொல்லப்பட்டுள்ளது. (பார்க்க 2 சாமுவேல் 11:27)

கடவுளுக்கு இந்த செயல் பொல்லாப்பாகத் தெரிந்ததாக சொல்லப்பட்டுள்ளதே அப்படிப்பட்ட இந்த கேடுகெட்ட செயல்களையெல்லாம் உன்மையிலேயே தாவீது செய்திருப்பாரோயானால் இந்த கொடுஞ்செயலுக்கு அன்றையக்காலத்தில் என்ன தண்டனை இருந்ததோ அந்த தண்டனையின் படி தாவீது தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா?

அன்றைய காலத்தல் ஒருவன் அடுத்தவன் மனைவியோடு விபச்சாரம் செய்தால் என்ன தண்டனை என்று பைபிளே சொல்கின்றது :

“ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலை செய்யப்படக்கடவர்கள்.”
(லேவியராகமம் – 20:10)

கடவுள் மாமா வேலை செய்பவரா? 
 
தாவீது பற்றிய இந்தக் கதை உன்மை என்றால் கடவுளின் – பைபிளின் – க்குற்றவியல் சட்டத்தின்படி கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால் இந்த தவீதுக்கு கடவுள் கொடுப்பதாகச் சொன்ன தண்டனை என்ன? அதையும் பைபிளே சொல்கின்றது?
- ‘கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய், நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்’ (2 சாமுவேல் 12: 11 – 12)

எந்த அளவுக்கு கடவுளை கேடுகெட்டவராக – தரம் தாழ்ந்தவராக – மாமா வேலைப் பார்ப்பவராக எழுதி வைத்துள்ளனர் என்று பார்த்தீர்களா? தாவீது செய்த அந்த ஈனச்செயலுக்கு (?) கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய தண்டனையான மரணத்தண்டனையை கடவுள் நிறைவேற்றாதது மட்டுமின்றி அதற்கு வேறு ஒரு தண்டனையின் மூலம் கடவுள் – தாவீதின் மகள்களைக் மற்றவனுக்கு கூட்டிக்கொடுக்கும் தண்டனையை கொடுப்பதாகச் சொன்னார் என்ற சொல்கின்ற அளவுக்குத் துணிந்தவர்கள் தான் இந்த யூத எழுத்தாளர்கள்.
ஆதாவது தாவீது செய்த இந்தச் செயல்களுக்கான தண்டனையாக, ஊரார் முன்பாக தாவீதுடைய மகள்களை கடவுளின் ஆணைப்படி சிலர் கற்பழிப்பார்கள் என்று கடவுள் சொன்னாராம். எந்த அளவுக்கு கடவுளை கேவளமானவராக எழுதி வைத்துள்ளனர் என்று பார்த்தீர்களா சகோதரர்களே.

ஒரு குற்றவியல் சட்டம் – அதுவும் கடவுளால் வழங்கப்பட்ட – அன்றைய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட சட்டம் நடைமுறையில் இருக்க – அதற்கு மாற்றமாக அந்தச்சட்டங்களை கேளி செய்வது போல் அசிங்கமான செயலை செய்ய கடவுள் தூண்டினார் – கூட்டிக்கொடுக்கும் ஒரு சட்டத்தை சொன்னார் – என்று எழுதிவைத்துள்ளனர். இதை எப்படி எழுத மணம் வந்தது இவர்களுக்கு? ஒரு விபச்சாரகனை தண்டிக்க நூறு விபச்சாரகனை கடவுளே உருவாக்கினார் என்று கடவுளுடைய வேதத்திலேயே திரித்து எழுதும் தைரியம் எப்படி வந்தது இவர்களுக்கு? கிறிஸ்தவ சகோதரர்கள் இதை சிந்திக்க வேண்டும். இந்த ஆபாபசமான – அபாண்டமான வரலாற்றுத் திரிபுகளை தான் நீங்கள் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள் கிறிஸ்தவ சகோதரர்களே. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக, முதலிலே தாவீது தீர்க்கதரிசியின் மீது கலங்கம் கற்பித்த யூத எழுத்தாளர்கள் கடைசியில் கடவுளின் வேதத்திலேயே கடவுளை கேவலப்படுத்தி எழுதியிருப்பதை பார்த்தீர்களா கிறிஸ்தவ சகோதரர்களே!

இந்தக் கதை பொய் என்று எப்படி சொல்கின்றீர்கள் என்று உங்களுக்கு சந்தேகம் எழழாம். இந்தக் கதை உன்மையிலேயே கடவுளால் அருளப்பட்டதாக இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது. அதை பைபிள் ஒளியிலேயே சற்று அளசுவோம்.
  காரணம் 1 : ஒரு பரிசுத்தமான தீர்க்கதரிசி – மக்களுக்கு நல்வழிக்காட்ட வந்த தீர்க்கதரிசி – இறைவனுடைய சட்டத்தின் படி ஆட்சி செய்த தீர்க்கதரிசி இந்த இழிவான காரியத்தில் கண்டிப்பாக ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் புத்தகங்கள் இன்றைக்கும் பைபிளிலேயே ஒரு புனித புத்தகமாக இருக்கும் அளவுக்கு ஒரு பரிசுத்தர் இந்த அளவுக்கு கொடியவராக இருந்திருக்க மாட்டார்கள். கண்டிப்பாக இது சிலரால் பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட கதையாகத்தான் இருக்க வேண்டும். இது முதல் காரணம்.

காரணம் 2 : நாம் மேற்கூறியுள்ள படி ஒருவன் அடுத்தவன் மனைவியிடம் விபச்சாரம் செய்தால் அவன் கொள்ளப்பட வேண்டும் என்பது சட்டம் அன்றைய காலத்தில் இருந்த குற்றவியல் சட்டம் (பார்க்க லேவியராகமம் – 20:10) ஆனால், அடுத்தவன் மனைவியுடன் கள்ள உறவு கொண்டது – தனது படையிலேயே தனக்காக போரிடசென்றவனுடைய மனைவியுடன் விபச்சாரம் செய்தது – தனது படைவீரனுக்கு துரோகம் செய்தது, விபச்சாரத்தின் மூலம் தாவீதால் பிறக்கப்போகும் குழந்தையை உரியாவின் தலையிலேயே கட்ட நினைத்தது, இந்த சூழ்சிக்கு பலியாகாத உரியாவை கொலைசெய்வதற்கு சூழ்ச்சி செய்து அதை நிறைவேற்றியது போன்ற – கடும் குற்றத்தை செய்த தாவீதுக்கு – எல்லோருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட தண்டனையான மரணத் தண்டனையை கடவுள் கொடுக்க வில்லை என்பது போல் இந்த சம்பவத்தின் மூலம் காட்டப்படுகின்றது. (அதாவது கடவுள் தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு விதமாகவும், தனக்கு வேண்டாதவர்களுக்கு வேறு ஒரு விதமாகவும் நடந்துக் கொள்வர் என்பது போல் காட்டப்படுகின்றது.) தாவீது இந்தத் தவறைச் உன்மையிலேயே செய்திருந்தால் கண்டிப்பாக அந்த சட்டத்தின் படி கடவுள் தண்டித்திருக்க வேண்டுமே. அவ்வாறு செய்யாமல் அவரை கடவுள் தப்பவிட்டதாக காட்டப்படுகின்றது. இது இரண்டாவது காரணம்.

காரணம் 3: கடவுள் வழங்கியுள்ள குற்றவியல் சட்டங்கள் என்பது சக்தியும் பலமும் உள்ளது என்பது பைபிளின் சான்று. (சங்கீதம் 19:7) அவரது சட்டங்கள் மனித சமுதாயத்தில் குற்றங்களை ஒழித்து மக்களை நிம்மதியாக வாழச்செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. அப்படிப்பட்ட கடவுளின் சட்டங்களை கேளிக்குறியவை என்பது போல் இங்கே காட்டப்படுவடுவதுடன், ‘கடவுள் மாமா வேலைப்பார்ப்பவர் – கூட்டிக்கொடுப்பவர்’ என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வசனங்கள் சாத்தானின் தூண்டுதலால் திரித்து எழுதப்பட்டிருக்குமே யொழிய கடவுளால் அருளப்பட்டிருக்காது என்பதுதான் மறக்க முடியாத உன்மை.

காரணம் 4 : 2 சாமுவேல் 12: 11 – 12 வசனங்களின் மூலம் கடவுளைத் தரங்கெட்டவராகவும் – மாமா வேலைப்பார்ப்பவராகவும் – கூட்டிக்கொடுப்பவராகவும் காட்டப்படுகின்றது. அதாவது ஒரு விபச்சாரத்திற்குரிய தண்டனையால் அந்த விபச்சாரம் ஒழிக்கப்படுவதற்கு பதிலாக பல விபச்சாரகர்களை ஏற்படுத்தி கேவலமான – நகைப்பிற்குறிய சட்டங்களை கொடுப்பவர் தான் கடவுள் என்று காட்டப்படுகின்றது. இது போன்ற வசனங்களை கடவுள் அறிவிக்க மாட்டார் என்று பைபிளே சொல்கின்றது.

சங்கீதம் 33:4 : கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

For the word of the LORD is right; and all his works are done in truth. (kjv)
அது மட்டுமல்ல இது போண்ற அசிங்கமான சட்டங்களை துன்மார்க்கன் தான் சொல்வான் என்றும் பைபிளே சான்று பகர்கின்றது.

துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும். அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை. அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான். அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது

இவற்றை வைத்துப் பார்க்கும் போது கண்டிப்பாக இந்த சம்பவம் அந்தக் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தாவீது தீர்க்கதரிசியின் மீது கடவுளின் பெயரால் இட்டுக்கட்டித்தான் எழுதியிருக்க வேண்டும் என்பது நிரூபணம்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க இந்த கேவலமான கதையால் பைபிளே கேள்விக்குறியாக்கப்படுவது தான் வேதனையிலும் வேதனை.

‘வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது’ - (உபாகமம் 23:2)

இந்த வசனத்தின் படி பார்த்தால் தாவீது, அவரது மகன் சாலமோன் மற்றும் அவரின் சந்ததியின் மூலம் பிறந்த இயேசு உட்பட பரிசுத்தவான்கள் யாவரும் கடவுளுடைய சபைக்கு வரமுடியாதாம் – அதாவது அவர்களெல்லாம் பரிசுத்தவானாக – கடவுள் ஊழியம் செய்தத் தகுதியற்றவர்களாகிவிடுவர் என்கிறது பைபிள். விபச்சாரம் செய்பவருக்குப் பிறக்கும் ஒருவர் இருவரல்ல.. பத்து தலைமுறை யானாலும் வரமுடியாது என்கிறது பைபிள். இந்த தாவீது எழுதின புனித புத்தகங்கள் பைபிளில் உள்ளது. அவரது மகன் சாலமோன் எழுதிய புனித புத்தகங்கள் பைபிளில் சேர்க்கப்பட்டுள்ளது. உபாகமம் 23:2 ன் படி இவர்களே பரிசுத்தவான்களாக முடியாது எனும் போது இவர்கள் எழுதிய புத்தகங்கள் எம்மாத்திரம். தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்றல்லவா?

தாவீது பற்றிய இந்தக் வரலாற்றுத் திரிபை நம்பினால் கிறிஸ்தவர்கள் இந்த முடிவுக்குத்தான் வரவேண்டும். அந்த ஒரு கதையை தூக்கி எறிகின்றீர்களா? அல்லது பைபிலையே ஒதுக்கித்தள்ளப்போகின்றீர்களா? நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். (சங்கீதம் 33 : 1-2)

நன்றி: egathuvam.blogspot.com

கிறித்தவ நண்பர் ஒருவர் நபி(ஸல்) அவர்களின் திருமணங்களைப் பற்றி கீழ் கண்ட வினாக்களை எழுப்புகிறார்;.
 
இறைத்தூதர் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் போது ஒன்று - இரண்டு திருமணங்கள் மட்டும் செய்திருக்கலாம். 11 திருமணங்கள் முடித்ததால் அதையே காரணங்காட்டி அரபுகள் 3 - 4 திருமணம் முடித்து அநீதம் இழைக்கிறார்கள் என்கிறார்.

இறைத்தூதர் தம்மை விட வயது முதிர்ந்த பெண்களை திருமணம் முடிக்கக் காரணம் என்ன? என்றும் கேட்கிறார் இது பற்றி தெளிவான விளக்கம் வேண்டும்  முபாரக் அலி - யாஹூ மெயில் வழியாக.

அரபுகளும் சரி உலகின் இதர பகுதிகளில் வாழும் முஸ்லிம்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களும் சரி இவர்களெல்லாம் திருமணத்தின் மூலம் ஒரே நேரத்தில் 3 - 4 மனைவிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்கு காரணம் இறைத் தூதர் பலதாரமணம் புரிந்துள்ளார் என்பதனால் அல்ல மாறாக ஒரே நேரத்தில் நான்கு பெண்கள் வரை ஒருவனுக்கு மனைவியாக இருக்கலாம் என்ற இறைவனின் அனுமதிதான் இதற்கு காரணமாகும்.
 
فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً
'....பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ - மும்மூன்றாகவே - நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கிடையில் நீதமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே போதுமாக்கிக் கொள்ளுங்கள்....' (அல் குர்ஆன் 4:3)

அரபுகள் உட்பட முஸ்லிம்களில் வசதிவாய்ப்புள்ளோர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வதற்கு இந்த வசனம்தான் காரணமாகும்.

இந்த வசனம் நபி(ஸல்) அவர்களின் 52ம் வயதின் இறுதிப் பகுதியில் இறங்கியது என்று விளங்க முடிகிறது. இந்த வசனம் இறங்கும் போது இறைத் தூதர் அவர்களுக்கு மூன்று திருமணங்களே முடிந்திருந்தன. அதில் முதல் மனைவி இறந்துப் போக இரண்டு மனைவிகளே உயிரோடு இருந்தனர். இறைத்தூதர் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்ததால் தான் முஸ்லிம்கள் பலதாரமணம் செய்கிறார்கள் என்று அந்த கிறித்துவ சகோதரர் விளங்கி இருப்பது தவறு என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். இறைத்தூதர் இரண்டு மனைவிகளோடு இருந்தபோதே முஸ்லிம்கள் அதிகப்பட்சமாக நான்கு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற அனுமதி இறைவன் புறத்திலிருந்து கிடைத்து விட்டது.

நான்கு திருமணங்கள் செய்பவர்கள் பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்ற வாதமும் தவறு. ஒரு மனைவியோடு வாழ்பவர்கள் தங்கள் மனைவிகளுக்கு அநீதியே இழைப்பதில்லை என்று யாராவது சான்றிதழ் கொடுக்க முடியுமா... அநீதி இழைத்தல் என்பது  ஆண்களின் மன நிலையைப் பொருத்ததாகும். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து பல மனைவியரோடு அவர்களுக்கு மத்தியில் பேதம் பாராட்டாமல் - பாராபட்சம் காட்டாமல் -  சமமாக நடக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். சமூகத்திற்கோ - சட்டத்திற்கோ பயந்து ஒரு திருமணம் செய்து மனைவி வீட்டில் இருக்கும் போது அன்னிய பெண்கள் மீது கையை வைக்கும் கெடுமதியாளர்களும் ஆண்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். (பலதாமணம் பெண்களுக்கு அநீதி இழைக்கக் கூடியதா... என்ற விவாதத்திற்கு உள்ளே நாம் செல்லவில்லை காரணம் கேள்வி அதுபற்றியதல்ல)

பலதாரமணத்தில் மட்டும் அநீதி இருக்கிறது என்று கூறுவது ஆண்களின் மனநிலையைப் புரிந்துக் கொள்ளாதவர்களின் வாதமாகத்தான் இருக்க முடியும்.

இறைத்தூதர் தம்மை விட வயது முதிர்ந்தப் பெண்களைத் திருமணம் செய்ததற்குரிய காரணங்களை விளங்க வேண்டுமானால் அந்த திருமணங்களின் பின்னணியை நாம் விளங்க வேண்டும். அது விரிவாக விளக்கப்பட வேண்டிய வரலாறாகும்.

சுருக்கமாக புரிந்துக் கொள்ள வேண்டுமானால்,

முதிர்ந்த வயது என்பது சமூகத்தில் பிறரால் புறக்கணிக்கப்பட்டு அவலங்களை சந்திக்கக் கூடிய - பிறரது அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் மனம் விரும்பக் கூடிய ஒரு வயதாகும். இறைத் தூதர் வயது முதிர்ந்தப் பெண்களை திருமணம் செய்ய முன் வந்ததும் அந்தப் பெண்கள் மறுக்காமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததும் இந்த பின்னணியைக் கொண்டதாகும் இது முதல் காரணம். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளிப்பது ஆட்சியாளரின் கடமையாகும் என்பதை மிக அழுத்தமாக உலகில் உரைத்து அதை செயலாக்கப்படுத்திக் காட்டியவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்கள். அன்னியப் பெண்ணாக வைத்து ஆதரவு அளிப்பதை விட சொந்த மனைவியாக்கிக் கொண்டு ஆதரவளித்தால் அந்தப் பெண்களால் கூடுதல் பலன் பெற முடியும் என்பதால் மனைவி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதர ஆட்சியாளர்கள் இதே வழியைப் பின்பற்றலாமா என்றால் அனுமதிக்க முடியாது. ஏனெனில் முஹம்மத்(ஸல்) அவர்கள் வெறும் ஆட்சியாளராக இருந்து மட்டும் இந்த திருமணங்களை செய்யவில்லை. இறைவனின் தூதராக இருந்தும் செய்தார்கள். தம் செயல்களுக்கு நாளை இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்ற அவர்களின் உள்ளச்சத்தை உலகில் எந்த ஆட்சியாளரின் உள்ளச்சத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. இந்த அளவுகோள் தான் இத்துனை மனைவிகளுக்கு மத்தியிலும் அவர்களை நீதமாக நடக்கச் செய்தது.

எல்லா வீடுகளிலும் நடக்கும் சக்களத்தி சண்டை இறைத் தூதரின் வீட்டிலும் நடந்ததுதான். அதற்கு கூட 'உன்னை விட நான்தான் அவர்களை அதிகமாக கவனிப்பேன்... உன்னை விட நான் தான் அவர்களை அதிகமாக கவனிப்பேன்... என்ற உபசரிப்பு போட்டி மனப் பான்மையில் நடந்ததாகும். அந்த மனைவிகளின் வீட்டில் பல சந்தர்பங்களில் வறுமை கவ்வி கிடந்த போதும் கூட அவர்கள் தங்கள் கணவரை போட்டிப் போட்டுக் கொண்டு நேசித்ததற்கு நீதி வழுவா அவர்களுடைய வாழ்க்கை முறையே காரணமாகும்.

அந்த இறைத்தூதருக்கு பிறகு வந்த எந்த ஆட்சியாளருக்கும் (அவர்களுடைய அன்புத் தோழர்கள் உட்பட) அவர்களுடைய பண்பு இருக்கவில்லை - இருக்க முடியாது என்பதால் அவர்களைப் போன்று மனைவிகளின் எண்ணிக்கையை - ஆதரவு அளிக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் - கொடுக்க முடியாது.
அவர்கள் பல திருமணங்கள் செய்ய வேண்டியதற்கு இன்னொரு முக்கியமான - அவசியமான காரணமும் இருந்தது.

அவர்கள் இறைவன் புறத்திலிருந்து வந்த இறுதி தூதராக இருந்ததால் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் ஒளிவு மறைவு இல்லாமல் மொத்த உலகுக்கும் சொல்ல வேண்டிய நிலை உருவானது. வெளி உலக வாழ்க்கையை அறிவிப்பதற்கு ஆயிரக்கணக்கான தோழர்கள் (தோழிகளும் அடங்குவர்) இருந்தனர். சரிபாதி வாழ்க்கையை வெளி உலகில் கழிக்கும் மனிதன் மீதி பாதி வாழ்க்கையை வீட்டில் தான் கழிக்க வேண்டும். இறைத் தூதரின் நிலையும் இதுதான்.

வெளி உலகத்தில் அவர்கள் வாழ்ந்த பாதி வாழ்க்கையை அறிவிக்க ஆயிரக்கணக்கான மக்கள் இருந்த போது மறுபாதி வாழ்க்கையை அறிவிப்பதற்கு ஒருவரோ - இருவரோ போதியவர்களாக இருக்க முடியாது. இதை ஈடு செய்வதற்காகவும் இவர்கள் நான்குக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

காலையில் எழுந்தது தொடங்கி இரவில் இல்லறத்தில் ஈடுபட்டு ஓய்வெடுக்கும் வரையிலான அனைத்து வழிமுறையையும் அவர்களின் மனைவிகள் மூலமே இவ்வுலகிற்கு கிடைத்துள்ளது. வெளி உலக வாழ்க்கையின் அறிவிப்பாளர்களுடன் ஒப்பிடும் போது இந்த மனைவிகளின் எண்ணிக்கை மிக மிக சொற்பமே... இன்னும் கூட அவர்களுக்கு மனைவிகள் தேவைப்பட்டிருக்கும் என்று நம் மனங்கள் நியாயம் கற்பித்தாலும் 'இதற்கு மேல் வேறு திருமணங்கள் செய்யக் கூடாது' என்று இறைவன் தடுத்து விட்டான். (பார்க்க அல் குர்ஆன் 33:52)
 
لَا يَحِلُّ لَكَ النِّسَاء مِن بَعْدُ وَلَا أَن تَبَدَّلَ بِهِنَّ مِنْ أَزْوَاجٍ وَلَوْ أَعْجَبَكَ حُسْنُهُنَّ إِلَّا مَا مَلَكَتْ يَمِينُكَ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ رَّقِيبًا

வயது முதிர்ந்தவர்கள் உட்பட நபி(ஸல்) பல திருமணங்கள் செய்ததற்கு இது போன்ற நியாயமான காரணங்கள் இருந்தன.

அவர்களின் கேள்விகள்:

1) என்னிடம் நிறைய கேள்விகள் தங்களது பதிலுக்காக காத்திருக்கின்றன. எனக்கு எப்போது நேரம் கிடைக்கும்போது தங்களிடம் கேட்கிறேன். தயவு செய்து பதில் அளிக்கவும். அது பிறருக்கு பயனளிக்குமாயின் அதை தங்களது இணையதளத்தில் பதிப்பிக்கவும்.

கேள்வி: ஒரு கிறிஸ்தவர் கூறினார்…, அல்லாஹ், முஸ்லிம்கள் திருமணம் செய்துகொள்வதற்கு அதிலும் ஒரு வயதுள்ள குழந்தைகளையும் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளான் என்று ஒரு இமாம் அவருக்கு கூறியதாக கூறினார். ஏனெனில் நமது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் 54 வயதுடயவர்களாக இருக்கும் போது 9 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டார்கள். இதனடிப்படையில் அவர் இந்த கேள்வியை கேட்கிறார். இதைப்பற்றிய தெளிவான விளக்கத்தை எனக்கு தரவும் ஏனெனில் நான் அவருக்கு இதைப்பற்றி தெளிவாக விளக்குவதற்கு ஏதுவாக இருக்கும்.
Name: ansar
email: hssnansar@……
Location: srilanka
Subject: Question
--------------------------------------------------------------------------------
2) எனக்கு இஸ்லாத்தைப் பற்றி நிpறைய கேள்விகள் உண்டு. அதற்கு போகுமுன் என்னுடைய நிலைமையைத் தெரிவிக்கிறேன். எல்லா முக்கியமான மதங்களைப்பற்றியும் எனக்கு தேவைப்படும் அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பிறகு எல்லா மதங்களுமே மனிதனால்தான் இயற்றப்பட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.

கடவுள் இருந்தாலும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் எந்தவிதத்திலேயும் ஒரு மதம் மற்றவற்றை விட உயர்ந்தாக இருக்க முடியாது. எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் எல்லா மதங்களிலும் நல்லதைச் சொல்வதுபோல் கெட்டதையும் சொல்கிறது. நீங்கள் இந்த கருத்தில் மாறுபடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் உங்களிடமிருந்து கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
குர்ஆனை நான் பார்ப்பதற்கு முன்னால் எனக்கு நபிகளைப் பற்றியும் அவர்களுடைய நபித்துவத்தைப் பற்றியும் சந்தேகம் உள்ளது. மேலும்

ஏன் அவர் வன்முறையை பரப்பினார்?

ஏன் தனது 54வது வயதில் ஆறு வயது சிறுமியை மணந்து 9 வயதில் அவருடன் உறவு வைத்துக் கொண்டார்? 1400 வருடங்களுக்கு முன் உள்ள கலாச்சார முறையாக இருப்பினும் நபி என்பவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டாமா?மேலும்,

ஏன் இஸ்லாமிய மதம் எந்த விதமான கேள்விகளுக்கும் இடம் கொடுக்காமல் நம்பவேண்டும் என்கிறது. மேலும் கேள்வி கேட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்பது சர்வாதிகார முறையில் அமைந்திருக்கிறது.

உங்களை குறைசொல்ல வேண்டும் என்று இதை நான் கேட்கவில்லை மாறான உண்மையாக இந்த கேள்விகள் என்னுள் எழுகின்றபடியால் கேட்டிருக்கிறேன். பதில் தரவும்.
annapala@…..au


சிந்தனை மற்றும் பகுத்தறிவு ரீதியாக எதையும் அலசிப் பார்க்கும் மனோ பக்குவத்திற்கு தடைப் போடும் எந்த சித்தாந்தத்தின் மீதும் (அது இஸ்லாமாக இருந்தாலும் சரி) எங்களுக்கு நம்பிக்கையில்லை என்ற கொள்கையுடன் உங்களை இதுதான் இஸ்லாம் இணையத்திற்குள் வரவேற்றுக் கொள்கிறோம்.தேவையான அளவு அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மதங்களை அணுகுவது ஒரு ஆரோக்யமான நிலையாகும். அறிந்துக் கொண்டதை பகிர்ந்துக் கொள்வதும், அறிந்துக் கொண்டதில் வரும் சந்தேகங்களை மேலும் தெளிவுப்படுத்திக் கொள்வதும் அதன் மீது நமக்குள்ள ஈடுபாட்டின் அடையாளம் என்பதால் அந்த மனநிலை ஒரு பரந்த சிந்தனையாளனுக்குரியதாகவே இருக்கும்.

இதில் நீங்கள் மூன்று கேள்விகளை வைத்துள்ளீர்கள்.

1) நபி ஏன் வன்முறையைப் பரப்பினார்?

2) 6 வயது சிறுமியை ஏன் திருமணம் செய்தார்?

3) இஸ்லாம் கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் சர்வாதிகாரத்துடன் எதையும் நம்பச் சொல்வது ஏன்?

இவற்றில் மூன்றாவது கேள்வியை முதலில் எடுத்துக் கொண்டால் தான் மற்ற இரண்டிற்கும் பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இஸ்லாம் கேள்விகளுக்கே இடம் கொடுக்காது என்பது உண்மை என்றால் மற்ற இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டு விடும். அதனால் மூன்றாவது கேள்வியை முதலில் பரிசீலிப்பது தான் பொருத்தமானதாகும்.

விருப்பு - வெறுப்பு இன்றி நீங்கள் திறந்த மனதுடன் மதங்களை அணுகுவீர்கள் என்றால் கேள்விகளால் நிறைந்த மார்க்கமும் வளர்ந்த மார்க்கமும் இஸ்லாம் ஒன்றுதான் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துக் கொள்வீர்கள். ‘நாங்கள் இப்படித்தான் பதில் சொல்வோம்’ என்று அவசரப்பட்டு எங்களைப் பற்றி முடிவெடுத்து விடாமல் சற்று நிதானத்துடன் தொடருங்கள்.
ஹிந்துத்துவம் - கிறிஸ்த்துவம் - இஸ்லாம் இந்த மூன்றும் பெரிய மதங்களாகும். (கேள்விகளுக்கு இடங்கொடுக்கும் பக்குவம் கம்யூனிஸத்தில் இருந்தாலும் அது தன்னை மதம் என்று அறிமுகப்படுத்தாததால் அதை இங்கு சற்று தள்ளி வைப்போம்) இந்த மூன்று பெரிய மதங்களில் அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், செயலாக்கங்கள், வழிகாட்டிகள் (வேதங்கள் - அதை விளக்குபவர்கள்) இவற்றின் மீது உலகில் நடக்கும் வாதங்களையும் அந்த வாதங்களை சந்திப்பவர்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது,ஹிந்துத்துவத்திலும் - கிறிஸ்த்துவத்திலும் (நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி) கேள்விகள் கேட்காமல் நம்ப வேண்டும் என்ற நிலை இருப்பதை உணர்வீர்கள்.

இஸ்லாத்தில் அந்த நிலை இல்லை. இதற்கு மிக சிறிய அளவில் ஓர் உதாரணம் சொல்ல முடியும். இதுதான் இஸ்லாம் என்ற இந்த இணையத் தளம் உட்பட தமிழில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பல இணையங்கள் உள்ளன. அவற்றில் பல தளங்கள் ‘மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்’ என்ற வசதியை செய்து வைத்துள்ளன. இது போன்ற வசதி பிற மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா? அந்த மதங்கள் பற்றி கேள்விக் கேட்டு - விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்).

ஹிந்து மதத்திற்கென்று ஆன்மிக பிரச்சாரவாதிகள் (காஞ்சி பெரியவாள்) உட்பட எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் நீங்கள் கேள்விக் கேட்கலாம். ஆனால் அந்தக் கேள்விகள் அவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் என்ற அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர விவாதித்து மேலும் தெளிவுப் பெறும் வகையில் அமைந்திருக்கக் கூடாது. (சிலை வணக்கம் - பெண்ணியம் - மறுஜென்மம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்).

பால் தினகரன் உட்பட அதே அடிப்படையில் அமைந்த பல குழுக்கள் கைகளில் பைபிளை வைத்துக் கொண்டு ‘கர்த்தரை விசுவாசியுங்கள்’ என்ற பிரச்சாரத்தை முன் மொழிந்துக் கொண்டிருக்கின்றன. கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு அற்புதங்கள் பற்றிக் கூறவும் அவர்களில் பலவீனமானவர்களை அழவைக்கவும் தான் இவர்களால் முடியுமே தவிர ”எவரும் கிறிஸ்த்துவம் பற்றி, பைபிள் பற்றி இங்கு பகிரங்கமாகக் கேள்விக் கேட்கலாம்” என்று அவர்களால் சொல்ல முடிவதில்லை. (அவர்களின் பணிகளை குறைச் சொல்வதற்காக இதை நாம் இங்கு குறிப்பிடவில்லை. கேள்விகளுக்கு இடங்கொடுக்காத நிலையை சுட்டிக் காட்டுவதற்காகத் தான் குறிப்பிடுகிறோம்).

இஸ்லாத்தை குர்ஆனிலிருந்தும் நபியின் வாழ்விலிருந்தும் கற்றுணர்ந்த அடிப்படைவாதிகள் மாற்றுக் கொள்கையுடையவர்களிடமிருந்து கேள்விகளை சந்திப்பதில் சற்றும் சலைத்தவர்களல்ல. ஏனெனில் இஸ்லாம் வளர்ந்தது அந்த அடிப்படையில் தான்.

‘நீங்கள் அறியாதவற்றை வேதஞானம் உள்ளவர்களிடம் கேள்விக் கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள்’ என்கிறது குர்ஆன். (16:43)

கேள்வி ஞானம் ஊக்கப்படுத்தப்பட்டுள்ள மார்க்கத்தில் போய் ‘கேள்வி ஞானத்திற்கு இடமில்லை’ என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்?

‘இறைவனின் வசனங்கள் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டால் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் அதன் மீது அடித்து விழ மாட்டார்கள்.(மாறாக அந்த வசனம் குறித்து சிந்தித்து செயல்படுவார்கள்) (அல் குர்ஆன் 25:73).

சிந்தனையின் வாசல் திறந்தே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் இந்த வசனமும்,கேள்விகளின்றி மத போதகர்கள் சொல்வதை அப்படியே ஏற்பது மனிதனை கடவுளாக்கும் பாவச் செயலாகும் என்று இறைத்தூதர் எச்சரித்துள்ளதும் ‘இஸ்லாம் கேள்விகளுக்கு இடமிளிப்பதில்லை’ என்ற கருத்தில் இருப்பவர்களின் சிந்தனைக்குரியதாகும்.

அது மட்டுமின்றி குர்ஆனை நீங்கள் மேலோட்டமாகப் படித்தால் கூட ‘அது மூன்று கொள்கையுடையவர்களை சந்தித்ததையும் - அவர்களின் கொள்கைத் திரித்தல்கள், அதில் ஏற்படுத்திய இடற்பாடுகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டி விமர்சித்துள்ளதையும் காண்பீர்கள்.அந்த மூன்றுக் கொள்கையாளர்கள்.

1) மக்கா நகரில் வாழ்ந்து வந்த சிலை வணக்கக் கொள்கையுடையவர்கள்.
2) மதீனாவிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழ்ந்து வந்த யூதர்கள்.
3) கிறிஸ்த்துவர்கள்.

விமர்சனங்களை வெளிப்படுத்துவதும் - விமர்சனங்களை சந்திப்பதும் கேள்வி ஞானம் உள்ள இடங்களில் மட்டும் தான் நிகழும் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால் உலக அளவில் உள்ள மாற்றுக் கொள்கையுடையவர்களை கொள்கை ரீதியாக துணிச்சலுடன் விமர்சிக்கும் குர்ஆனில் - இஸ்லாத்தில் எத்துனை கேள்வி ஞானத்திற்கு இடமிருக்கும் என்பதை புரிந்துக் கொள்வீர்கள்.

எனவே ‘இஸ்லாம் கேள்விகளுக்கு இடங்கொடுப்பதில்லை’ என்ற வாதம் தவறானது என்பதை முதலில் கூறிக் கொள்கிறோம்.இரண்டு கேள்விகள், அது குறித்த சர்ச்சைகளில் மட்டும் தான் ஈடுபடக் கூடாது என்று தடை வந்துள்ளது அவை,
ஒன்று - விதி,
இரண்டு - இறைவனின் பிறப்பு.

இவை விடைகளுக்கு அப்பாற்பட்ட கேள்விகள். இவை இரண்டைத் தவிர வேறு எது பற்றி வேண்டுமானாலும் - எத்தகைய கேள்விகளையும் - விமர்சனங்களையும் இஸ்லாத்தின் மீது வைக்கலாம். அவற்றிற்கு முறையான பதில் இஸ்லாத்தில் உண்டு.

நீங்கள் சில முஸ்லிம்களிடம் கேள்விக் கேட்டு அவர்கள் பதில் சொல்லாமல் போயிருக்கலாம். அத்தகைய முஸ்லிம்களை நீங்கள் சந்தித்தால் ‘அது அவர்களின் கல்வியின் குறைப்பாடு’ என்று விளங்கிக் கொள்ளுங்கள். அவர்களின் குறைப்பாட்டை இஸ்லாத்தின் குறைப்பாடாக முடிவு செய்ய வேண்டாம். இதுவே உங்கள் மூன்றாவது கேள்விக்குரிய பதிலாகும்.

2) நபி ஏன் வன்முறையைப் பரப்பினார்?

தனி மனிதருக்கும் - ஆட்சியாளருக்கும் உள்ள வித்தியாசத்தையும்,கலகத்துக்கும் - போருக்கும் உள்ள வித்தியாசத்தையும் அறியாதவர்கள் மட்டுமே இது போன்ற வாதத்தை எடுத்து வைப்பார்கள்.இயேசு போர் செய்யவில்லை என்பது உண்மை. சமாதான வாழ்வையே அவர் விரும்பினார் என்பதும் உண்மை. இதை காரணம் காட்டி ஒரு கிறிஸ்த்துவர் இயேசுவிடம் இல்லாத முரட்டுக் குணம் முஹம்மதிடம் இருந்தது என்று கூறினால் (அவ்வாறு பரவலாக கூறத்தான் செய்கிறார்கள். அதன் விளைவுதான் இந்தக் கேள்வி) நிச்சயம் அவரது அறியாமைக்கு நாம் அனுதாபப்படுவோம்.

தம்மைத் தாக்க வருபவர்களை - தமக்கு சொந்தமான ஒன்றை அபகரிக்க வருபவர்களை ஓர் ஆட்சியாளர் எதிர்த்துப் போராடுவது வன்முறை என்றால் ‘போர்’ என்ற சொல்லை நாம் தமிழ் மொழியிலிருந்து எடுத்து விடத்தான் வேண்டும். முதலாம் உலக (ப்போர்) வன்முறை, இரண்டாம் உலக (ப்போர்) வன்முறை, கார்கில் வன்முறை, வளைகுடா வன்முறை என்று போர்கள் அனைத்தையும் வன்முறையாக மாற்றியாக வேண்டும்.ஒரு நாட்டுடைய ராணுவம் தங்களுடைய எதிரிகளை களத்தில் சந்திப்பதை ‘வன்முறை’ என்று நீங்கள் கருதுவீர்களா..? சுதந்திரப் போராட்டத்தில் போராடி மடிந்தவர்களையும் - கார்கிலில் போராடி உயிர் நீத்தவர்களையும் ‘வன்முறையாளர்கள் ஒழிந்தார்கள்’ என்று பாராட்டுவீர்களா..? வெள்ளையர்களுக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் ஒருங்கிணைத்த தேசிய ராணுவத்தை ‘வன்முறையார்கள்’ என்று வர்ணிப்பீர்களா..?

இதுவெல்லாம் வன்முறை என்பது உங்கள் எண்ணம் என்றால் முஹம்மத் வன்முறையாளர் என்ற உங்கள் கருத்தும் உண்மைதான். ராணுவமும் - போரும் வன்முறையல்ல என்று நீங்கள் வாதித்தால் முஹம்மத் என்ற ஓர் ஆட்சியாளர் தலைமையில் இயங்கிய இஸ்லாமிய ராணுவத்தையும் அவர்கள் சந்தித்தப் போர்களையும் மட்டும் எப்படி வன்முறை என்று கருதுகிறீர்கள்?

மதீனா என்பது இஸ்லாமிய ஆட்சியாளர் ஆட்சிப் புரியும் ஒரு நாடு. இங்கு இஸ்லாமிய ஆட்சி அமைவதற்கு முன்னால் அந்த ஆட்சியாளரும் அவரைச் சார்ந்த கனிசமான மக்களும் தமது சொந்த பூமியிலிருந்து (மக்காவிலிருந்து) நாடு துறந்து வெளியேறுகிறார்கள். பத்தாண்டு காலம் பெரும் துன்பங்கள் அனைத்தையும் சகித்து - இழக்க வேண்டிய அனைத்தையும் இழந்து - கொள்கை ஒன்றுதான் முக்கியம் என்ற உறுதியுடன் அகதிகளாக அந்நிய மண்ணுக்குச் செல்கிறார்கள். இவர்களின் கொள்கையும் வாழ்க்கையும் பரிசுத்தமானது என்பதை உணர்ந்த - விளங்கிய அந்த மண்ணின் மக்கள் தங்களின் ஆளுமைக்குரியவராக இறைத்தூதரை நியமித்துக் கொள்கிறார்கள்.
இறைத்தூதர் ஆட்சியாளராக ஆன பிறகு எல்லா நாடுகளும் (இன்றைக்கும்) சந்திக்கும் அச்சுறுத்தல்களை அந்த நாடும் சந்தித்தது, எதிரிகளின் கூடுதல் வெறித்தனத்துடன். எதிரிகளிடமிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக ஓர் ஆட்சியாளர் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் முஹம்மத் என்ற அந்த இறைத் தூதரும் செய்தார்கள். இதைத்தான் நீங்கள் வன்முறை என்கிறீர்களா..?

மனிதத்துவத்திற்கும் - மனித நேயத்திற்கும் எதிராக முஹம்மத் நடந்தார் என்பதற்கு வரலாற்றிலிருந்து ஒரேயொரு சம்பவத்தைக் கூட யாராலும் காட்ட முடியாது. காரணம் அவர் சாதாரண மனிதரல்ல. அவர் ஓர் இறைத்தூதர்.

முஹம்மத்(ஸல்) அவர்கள் சந்தித்தவைகள் அனைத்தும் போர்கள் தான் என்றாலும் இதர ஆட்சியாளர்களின் போர் குணங்களுடன் எந்த வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் சந்தித்தப் போர்களில் அனேக நியாயங்கள் இருந்தன.

நாடு பிடிக்கும் பேராசையுடன் உலகை வளம் வந்த நெப்போலியனை ‘மாவீரன் நெப்போலியன்’ என்கிறது உலகம். அக்கம் பக்கம் ஆட்சிப் புரிந்த சிற்றரசர்களையெல்லாம் கருவறுத்து - பெண்களை நாசமாக்கி - யானைப் படை, குதிரைப் படைகளால் விளைச்சல் நிலங்களையெல்லாம் அழித்தொழித்து உலா வந்தவர்களையெல்லாம் வரலாற்று வீர நாயகர்களாக எழுதி வைத்துள்ளோம். (தேவைப் பட்டால் விபரங்கள் வெளியிடுவோம்) ஆனால் முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் சந்தித்தப் போர்களில் இத்தகையப் பேராசையில் - வரம்பு மீறலில் ஒன்றையாவது காட்டமுடியுமா..? போர்களங்கள் தவிர இதர நேரங்களில் அந்தத் தலைவரும் இதர ராணுவ வீரர்களும் ‘வாளெடுத்த’ சம்பவம் ஒன்று உண்டா..?

ஓர் ஆட்சித் தலைவராக அவர் சந்தித்த தற்காப்புப் போர் - மற்றும் சில அவசியப் போர்களைத் தவிர அந்த சகிப்புத் தன்மை மிக்க மாமனிதரிடம் வேறென்ன வன்முறை இருந்தது? அவர் ஈடுபட்ட வன்முறையை ‘இது’ என்று குறிப்பிட்டு சுட்டிக் காட்டுங்கள். அது பற்றி விவாதிப்போம்.

3) உங்களின் அடுத்த சந்தேகம் நபி ஏன் 6 வயது சிறுமியை திருமணம் செய்து ஒன்பது வயதில் உறவு வைத்துக் கொண்டார்? நபி என்பவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டாமா?

இந்த சந்தேகத்தில் உள்ள நியாயத்தை நாம் மறுக்க மாட்டோம். இது நியாயமான சந்தேகம் என்பதால் இது பற்றிய கூடுதல் தெளிவை நாம் பெற்றுதான் ஆக வேண்டும்.

பால்ய விவாகம் தவறு என்பது இன்றைய சிந்தனையே!

பால்ய விவாகம் தவறு என்பது சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சிந்தனையாகும். அதற்கு முன் இது குறித்த சிந்தனையே மக்களிடம் இருக்கவில்லை என்று கூறலாம். இந்த சிந்தனை ஏற்பட்டப் பிறகும் கூட பால்ய வயது என்பதில் ‘வயதை’ தீர்மாணிப்பதில் இன்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரும் வேறுபாடு இருந்தது.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் கூட 8 வயது பெண்ணை மணக்கலாம் என்ற சட்டம் இந்தியாவில் இருந்தது. புகழ் பெற்ற பாரதியார் கண்ணம்மாவை திருமணம் முடிக்கும் போது கண்ணம்மாவிற்கு வயது 8 என்பதை இங்கு நினைவுக் கூறலாம். திருமண வயது 13 என்றும் 16 என்றும் 18 என்றும் 21 என்றும் மாற்றங்கள் நடந்தது கடந்த 25 - 30 ஆண்டுகளுக்குள் தான்.

பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத - தவறாகக்கூட கருதப்படாத - ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு ‘அது தவறு’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும்.

கம்யூனிஸ சிந்தனையே முன்வைக்கப்படாத ஒரு காலகட்டத்தைப் பற்றி இன்றைக்கு ஒரு கம்யூனிஸவாதி ‘அவர்கள் ஏன் கம்யூனிஸ சிந்தனையைப் பின்பற்றவில்லை?’ என்று கேட்டால் அது எப்படி பொருத்தமற்றதோ அது போன்றதுதான் இதுவும். ஒரு காரியம் தவறு என்று தெரிந்த பிறகு அந்தக் காரியத்தை செய்தால் தான் அது தவறு என்ற நிலையைப் பெறும். இறைத்தூதர் ஆய்ஷாவை திருமணம் செய்தது தவறு என்றே கருதப்படாத காலத்தில் நடந்ததாகும். இது முதலாவது பதிலாகும்.

உறவு முறையை வலுப்படுத்திக் கொள்ளுதல்.

மனதிற்கு பிடித்த நல்லவர்களுடனான உறவை பலப்படுத்திக் கொள்வதற்கு விருப்பமில்லாதவர் என்று உலகில் யாரும் இருக்க முடியாது. உறவை எந்த வகையிலெல்லாம் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களும் அதை நடைமுறைப் படுத்துபவர்களும் உலகில் ஏராளமாக உள்ளனர். உறவு முறையை வலுப்படுத்துவதில் உலகில் முக்கியப் பங்கு வகிப்பது திருமண பந்தமாகும்.

பல மாதங்களுக்குப் பின் - பல வருடங்களுக்குப் பின் நடக்கவிருக்கும் திருமணங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்படுகிறது. பல இடங்களில் பிறந்தக் குழந்தையைக் கூட இன்னாருக்கு என்று முடிவு செய்யப்பட்டு விடுவதை பரவலாகப் பார்க்கலாம்.

‘அக்காள் மகள் மாமனுக்குத் தான்’ என்ற ஹிந்து பாரம்பரியம் நீடிப்பதை நாம் கண்டு அனுபவிக்கிறோம். தம்பியோடு - சகோதரனோடு உள்ள குடும்ப உறவை மேலும் பலப்படுத்திக் கொள்ளவே இத்தகைய திருமண உறவுகள் நீடிக்கின்றன. இவைகளையெல்லாம் மனதில் நிறுத்திக் கொண்டு ‘முஹம்மத் - ஆய்ஷா’ திருமணத்தை அணுகுவோம்.

வேறு எவரும் விஞ்ச முடியாத அளவிற்கு முஹம்மத் அவர்களின் மீது பாசத்துடன் இருந்தவர் அபூபக்கர் என்ற நபித்தோழர். சுக துக்கம் அனைத்திலும் தோளோடு தோள் நின்று இறைத்தூதரோடு தன் வாழ்க்கையைப் பகிர்ந்துக் கொண்டவர். இந்த உறவு இன்னும் வலுப்பட விரும்பியே தனது மகளை இறைத்தூதருக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார்கள்.

திருமணம் என்ற ஒப்பந்தத்துடன் அன்றைக்கு அது நடந்தாலும் இன்றைக்கு நிச்சயதார்த்தத்தின் நிலை என்னவோ இதேதான் அன்றைக்கு நடந்த அந்த திருமணத்தின் நிலையுமாகும். பெயருக்கு அது திருமணமாக இருந்தது.

ஒரு பெண் பருவமடைதல் (வயதுக்கு வருதல்) என்பது அவள் தாய்மையடையும் பக்குவத்திற்குரிய அடையாளமாகும். அதன் பின்னரே அன்றைக்கு இல்லறம் துவங்கியது.

முஹம்மத் அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆய்ஷா மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் - சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணுடன் அவர்கள் இல்லறத்தில் சேராமல் போயிருந்தால் அவர்களின் ஆண்மையில் கூட சந்தேகம் எழும். இந்த திருமணத்தின் வழியாக அத்தகைய சந்தேகம் எழாமல் போயிற்று.

இல்லறம் மட்டுமே குறிகோளல்ல.

என்னதான் தனது நண்பர் அபூபக்கர் விரும்பினாலும் சின்னப் பெண் என்பதால் முஹம்மத் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாமே.. என்ற சந்தேகம் கூட எழலாம். ஆய்ஷா போன்ற ஒரு பெண் தேவை என்பதை முஹம்மத் அவர்கள் உணர்ந்ததால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

அந்தத் தேவை என்ன?

இறைவன் புறத்திலிருந்து மனித சமுதாயத்திற்காக வந்துக் கொண்டிருந்த தூதர்களில் இறுதியானவர் முஹம்மத் நபி அவர்கள். அவர்கள் மொத்த மனித சமுதாயத்திற்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்று குர்ஆன் கூறுகிறது. அதனால் அவர்களின் பணி விசாலமானதாகவும் - விரிவானதாகவும் இருந்தது. அவர்களின் முழு வாழ்க்கையும் அகில உலகின் முன்னும் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகியது. அவர்களின் வெளியுலக வாழ்க்கையை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் இருந்தார்கள். வீட்டிற்குள் வாழும் வாழ்க்கையை எடுத்துச் செல்ல வேண்டுமானால் மனைவி என்ற அந்தஸ்த்தில் வாழ்பவரால் மட்டும் தான் முடியும். அந்த வகையில் சுறுசுறுப்புமிக்க கண்காணிப்புத் திறனும், நினைவாற்றலும் - மிக்க மனைவி தேவைத்தான் என்பதால் அதற்கு பொருத்தமானவராக ஆய்ஷாவை அவர்கள் கண்டதால் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

முஹம்மத் - ஆய்ஷா இவர்களுக்கு மத்தியில் நடந்த வாழ்க்கையை வெறும் திருமணம், இல்லறம் என்று மட்டும் பார்க்காமல் அதில் பொதிந்துள்ள இந்த உண்மைகளை விளங்கினால் அந்த உறவின் அவசியத்தில் யாரும் குறைக் காண முடியாது. காரணம், இந்த உலகில் - நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடந்த தனது இல்லற வாழ்க்கையின் நல் அமசங்களைக் கூட மனித சமுதாயத்திற்கு பயனளிக்கக் கூடிய வகையில் பகிரங்க பிரகடனம் செய்ய வேறு எந்தத் தலைவராலும் முடியாது. இறைவனின் இறுதித் தூதரைத் தவிர.
--------------------------------------------------------------------------------
பால்ய விவாகம் அந்த சமுதாயத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்தாலும் இறைத்தூதரின் இறுதிக் காலத்தில் அத்தகையத் திருமணங்கள் இல்லாமலாக்கப்பட்டு விட்டன. திருமணம் என்பதை வலுவான உடன்படிக்கை என்று இறைவன் குறிப்பிட்டு வசனத்தை இறக்கியவுடன் பால்யவிவாகம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. எனவே இன்றைக்கு அத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை. இது குறித்து வாய்ப்பு வரும் போது விளக்குவோம்.ஆனாலும் பால்ய வயது என்னவென்பதை தீர்மானிப்பதற்கு உலகம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அவதூறுகளும்... விளக்கங்களும்...


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியரை மணந்து கொண்டதற்காக செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் விஷேசமாகவும் எதிரிகளால் விமர்சனம் செய்யப்படுவதுண்டு. நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் காமுகராகச் சித்தரிக்க இந்தத் திருமணத்தை அவர்கள் சான்றாகக் கூறுகின்றனர்.
.
இதில் மாற்றாரின் மீது ஆத்திரப்படுவதில் நியாயமில்லை. நம்மவர்களே இத்திருமணத்திற்கு கொச்சையான கற்பனைக் கதையை உருவாக்கி ஏடுகளில் எழுதி வைத்திருப்பதால் அதனடிப்படையில் இத்திருமணம் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றது. எனவே இது குறித்து முழுவிபரங்களையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும்.
.
'உக்காழ்' எனும் அரேபியச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஜைத் (ரலி) அவர்களை கதீஜா (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா(ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்தவுடன் அந்த அடிமைச் சிறுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இந்த சிறுவரை அடிமையாகவே வைத்துக்கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் இவரை விடுதலை செய்து விடலாம் என்று கூறிவிட்டார்கள்.
.
அதன் பின்னர் அவர், நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் பணியாளராக இருக்கலானார். இந்த நிலையில், தம் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த 'ஹாரிஸா'வும் அவரது சகோதரர் 'கஃபு' என்பாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். தம் மகனை விடுதலை செய்யுமாறும், அதற்குரிய விலையைத் தந்துவிடுவதாகவும் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உங்களுடன் வருவதற்கு 'ஜைத்' ஒப்புக் கொண்டால் நீங்கள் தாராளமாக அவரை அழைத்துச்செல்லலாம். எனக்கு நஷ்ட ஈடு எதுவும் நீங்கள் தர வேண்டியதில்லை. அவர் உங்களுடன் வர விரும்பாவிட்டால் அவரை உங்களுடன் அனுப்ப இயலாது' என்று கூறிவிட்டனர்.
.
இதன் பிறகு ஜைது (ரலி) அவர்களிடம், வந்தவர்கள் பேசிப்பார்த்தனர். 'முஹம்மது என்னை மிகவும் சிறந்த முறையில் நடத்துகிறார். அவரை விட்டு என்னால் வர இயலாது' என்று ஜைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் 'ஜைத் இனிமேல் என் மகனாவார். அவர் இனி அடிமை இல்லை. நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார். எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஜைதுக்கும் உறவை புரிந்துக்கொண்ட அவரது தந்தை மகிழ்வுடன் திரும்பிச் சொன்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும் போது முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்வில்லை (ஆதாரம் : அல் இஸாபா)
.
அன்றிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்ட பின் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை 'ஜைது இப்னு முஹம்மது' (முஹம்மதுவின் மகன் ஜைத்) என்றே ஜைத் குறிப்பிடப்பட்டார்.
.
'அவர்களை அவர்களின் தந்தையர் பெயராலே குறிப்பிடுங்கள்' (அல்குர்ஆன் 33:5) என்ற வசனம் அருளப்படும் வரை 'முஹம்மதின் மகன் 'ஜைத்' என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம்' என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் செய்தி புஹாரி, முஸ்லீம் என்ற நபிமொழிக் கிரந்தங்களில் காணப்படுகின்றது.
.
சொந்த மகன் போலவே ஜைதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்தி ஐந்தாம் வயது முதல் தமது ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஜைது அவர்களின் எல்லாக் காரியங்களக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். அது போல் ஜைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே சார்ந்து இருந்தார்கள் என்பதை தெளிவு படுத்தவே இந்த விபரங்கள்.
.
நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி 'உமைமா' என்பாரின் மகள் 'ஜைனப்' அவர்களை, அதாவது தமது சொந்த மாமி மகளை ஜைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள் மிகவும் உயர்ந்த குலம் என்று பொருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணை தமது மாமி மகளை ஒரு அடிமைக்கு திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அமைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாகும்.
.
ஜஹ்ஷ் உடைய மகள் ஜைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஜைதுக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின. குடும்ப அமைதியே குலைந்து போகும் நிலை உருவாயிற்று. கடைசியில் ஜைனபைத் தலாக் கூறும் நிலைக்கு ஜைது (ரலி) ஆளானார்கள். இது பற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது.
.
'அல்லாஹ் எவருக்கு பேரருள் புரிந்தானோ அவரிடம் - எவருக்கு பேருபகாரம் செய்து வருகிறீரோ அவரிடம் 'உம் மனைவியைத் (தலாக் கூறாது) தடுத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!' என்று (நபியே) நீர் கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம்முடைய மனதினில் மறைத்துக்கொண்டீர். மக்களுக்கு நீர் அஞ்சினீர்! அல்லாஹ்வே நீ அஞ்சுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவன். (அல்குர்ஆன் 33:37)
.
ஜைது தம் மனைவி ஸைனபைத் தலாக் கூற விரும்பியதும் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் ஆலோசனைக் கலந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தலாக் கூற வேண்டாம்!' என்று அவருக்கு போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.
.
இதே வசனத்தின் இறுதியில் 'அல்லாஹ் வெளிப்படுத்த கூடிய ஒன்றை உம் மனதிற்குள் மறைத்து கொண்டீர்! மக்களுக்கு அஞ்சனீர்! ஏன்று இறைவன் கடிந்துறைக்கின்றான். தம் உள்ளத்தில் மறைத்து கொண்ட விஷயம் என்ன? என்பது இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படவில்லை. அதைக் கண்டுபிடிக்க முயன்ற அறிவிளிகள் எவ்வித ஆதாரமுமின்றி பல்வேறு கதைகளைப் புனைந்து தம் திருமறை விரிவுரை நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.
.
ஜைது வெளியே சென்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்களாம். அவர்களின் சொக்க வைக்கும் பேரழகை கண்டவுடன் அவர்களை அடைந்து விட வேண்டும் என மனதுக்குள் எண்ணினர்hகளாம். ஜைத் தலாக் கூற முன் வந்ததும் 'தலாக் கூற வேண்டாம்' என்று வாயளவில் கூறிவிட்டு மனதுக்குள் 'அவர் தலாக் கூற வேண்டும்' அதன் பிறகு தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களாம். இதைத்தான் இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றானாம். இப்படிப் போகிறது கதை.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபை பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைந்திருந்த எண்ணத்தை நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி அறிந்தார்களா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தை கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்த கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
.
இந்தக் கதை எவ்வளவு பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட மர்மம் என்ன? என்பதையும் கண்டறிய வேண்டும். அவற்றை விரிவாகக் காண்போம்.
.
ஜைது (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை திருமணம் செய்த போது ஜைனப் (ரலி) அவர்களின் வயது முப்பத்தி நான்கு அல்லது முப்பத்தி ஐந்து இருக்கலாம். நேரடியாக இது பற்றிக் கூறப்படாவிட்டாலும் கிடைக்கின்ற குறிப்புகளை வைத்து இதை நாம் முடிவு செய்ய இயலும்.
.
அது வருமாறு :
ஜைத் (ரலி) அவர்களும், ஜைனப் (ரலி) அவர்களும் ஒரு ஆண்டு அல்லது அதைவிட சற்று அதிகம் இல்லறம் நடத்தியுள்ளனர் என்ற விபரம் கிடைக்கிறது. (பார்க்க இப்னு கஸீர் 33:37 வசனத்தின் விளக்கவுரை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபைத் திருமனம் செய்த போது ஜைனபுடைய வயது முப்பத்தி ஐந்து (பார்க்க : அல் இஸாபா) ஜைனப் (ரலி) அவர்களின் இந்த முப்பத்தி ஐந்து வயதில் ஜைதுடன் வாழ்ந்த ஒரு ஆண்டைக் கழித்தால் ஜைதுடன் திருமனம் நடந்த போது ஜைனபின் வயது 34 ஆகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் ஜைது தலாக் கூறியவுடம் (இத்தா முடிந்ததும்) உடனேயே நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்ததை அல்குர்ஆன் 33:38 வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
.
ஜைனப் (ரலி) அவர்களுக்கு 34 வயதில் தான் முதல் திருமணம் நடந்திருக்கும் என்பதும் நம்புவதற்கு சிரமமானது, சாத்தியக் குறைவானது. ஜைதை மணப்பதற்கு முன் அவர்களுக்கு வேறு கணவருடன் வாழ்ந்து விதவையாகி இருக்க வேண்டும் அல்லது தலாக் கூறப்பட்டிருக்க வேண்டும். 34 வயது வரை முதல் திருமணம் நடக்காமிலருக்கும் அளவுக்கு வரதட்சனை போன்ற கொடுமைகள் அன்றைய சமுதாயத்தில் இருந்திருக்கவில்லை. வேறு காரணங்களும் இல்லை. இந்த அனுமானம் தவறாகவே இருந்தாலும் ஜைதைத் திருமணம் செய்யும் போது ஜைனப்பின் வயது 34 என்பது நிச்சயமான ஒன்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்யும் போது 35 என்பது அதைவிடவும் நிச்சயமானது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு அந்தக் கதையின் தன்மையை நாம் அலசுவோம்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகளாகிய ஜைனப் (ரலி) அவர்கள் சிறு வயது முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஒருவராக வளர்கிறார். ஜைனப் (ரலி) பதினைந்து வயதில் பருவமடைந்தார்கள் என்று வைத்துக்கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது 37, எவ்வாறெனில் நபிகள் நாயம் அவர்கள் ஜைனபுடைய 35 வயதில் அவரை திருமணம் செய்த போது நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் வயது 56.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 37வது வயதில் (56 வயதில் நாடுவதை விட அதிகம் பெண்கள் நாடக்கூடிய 37வது வயதில்) பருவ வயதிலிருந்த ஜைனப் (ரலி) அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும் அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக்கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஜைனப் அவர்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாய்த்திருந்தது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஜைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஜைனபப் பார்த்திருக்கின்றார்கள். 20 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். 25 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15 முதல் 30 வயது வரையிலான பல்வேறு பருவங்களில் ஜைனபைப் பார்த்துப் பேசிப் பழகி இருக்கிறார்கள்.
.
இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஜைனபின் அழகில் சொக்கிவிடாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 34 வயதை ஜைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 50 வயது வரை அவர்களுக்கு கதீஜா (ரலி) மனைவியாக இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனைவியின் பால் தேவையிருந்தது. கதீஜா (ரலி) மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உன்மையானால் கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஜைனப்பை மணந்திருக்கலாமே! அதற்கு தடை எதுவும் இருக்க வில்லை. இன்னும் சொல்வதென்றால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தா (ரலி) அவர்களைவிட – அயிஷா (ரலி) அவர்களைவிட அதிக சிரத்தையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தைகளைக் கவனித்து கொள்ள இவர்களுக்கல்லவா அக்கரை அதிகமிருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்க மட்டும் தான் இருந்தது.
.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) அவர்கள் விரும்பாதிருந்திருக்கலாம், அதன் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காதிருந்திருக்கலாம் அல்லவா? என்ற சந்தேகம் எழக்கூடும். அந்த சந்தேகத்தையும் பின் வரும் சான்று அகற்றி விடுகின்றது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஜைதை மண முடித்துக்கொள்ளுமாறு ஜைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) மறுத்து வீடுகிறார்கள். உடன் பின் வருமாறு இறை வசனம் இறங்கியது.
.
'அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார். (அல் குர்ஆன் 33:36). இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஜைனப் (ரலி) அவர்கள் ஜைதை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கஸீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
.
இந்த நிகழ்ச்சியின் மூலம், ஆரம்பம் முதலே ஜைத் (ரலி) அவர்களை மணந்து கொள்ள ஜைனப் (ரலி) விரும்பவில்லை என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்கு பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகிறார்கள் என்பதும் தெளிவாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காக தமக்கு விருப்பமில்லாத இன்னொருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஜைனப் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க முடியாது. ஜைது (ரலி) விவாகரத்துச் செய்ததும், ஜைனப்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ததும், ஜைனப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்து கொள்ள ஆரம்ப காலத்தில் மறுத்திருக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்கின்றது.
.
இன்னொரு கோணத்தில் சிந்திக்கும் போது அந்த கதை பொய்யானது என்பதைத் தெளிவாக உணரலாம். ஜைனபைப் பார்க்கத் தகாத நிலையில் நபிகள் நாயகம் அவாகள் பார்த்து ஆசைப்பட்டார்கள் என்றால், அந்தக் கதையை அன்றைய மக்கள் நன்றாகவே அறிவர். (அவர்களில் யாரும் அறியா விட்டால் இதை எழுதி வைத்த நூலாசிரியர்களுக்குத் தெரிய முடியாது)
.
இந்தச் செய்தியை ஜைத் அவர்களும் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி, தம் மனைவியைத் தலாக் கூறுவது சம்பந்தமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே ஆலோசனைக் கேட்கிறார்கள். அதன் பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில், எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை. இதுவும் அந்த கதை பொய் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
.
இந்தக் கதை பொய்யானது என்று தெளிவான பின், மற்றொரு சந்தேகம் நீக்கப்பட வேண்டியுள்ளது. 'உமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருந்தீர்!' மனிதர்களுக்கு அஞ்சினீர்!' என்று அல்லாஹ் குறிப்பிடுவது எதை? இந்த கேள்விக்கு விடைகாண வேண்டும்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது உள்ளத்தில் எதையோ மறைத்தார்கள் என்பது உன்மையே. அது எது என்பதை அவர்களும் சொல்லவில்லை. அல்லாஹ்வும் சொல்லவில்லை. இதனாலேயே இப்படிக் கதை கட்டி விட்டு விளக்கம் என்ற பெயரால் களங்கத்தை ஏற்படுத்திவிட்டனர்.
.
கதைகளை அடிப்படையாகக் கொண்டு அதை தீர்மானிப்பதைவிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வையும், இது போன்ற கட்டங்களில் சகஜமாக மனித உள்ளங்கள் எவ்வாறு இயங்கும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்த எண்ணம் எது வென்பது தெளிவாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சியோ, ஆதாரமோ தேவைப்படாது. ஓவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவங்களே அதை அனுமானிக்கப் போதுமானதாகும்.
.
ஜைத் (ரலி) அவர்கள் இயல்பிலேயே கொஞ்சம் முன்கோபியாக இருந்தார்கள். ஜைனப்பைத் திருமணம் செய்வதற்கு முன் உம்மு ஐமன் என்ற பெண்ணை ஜைத் (ரலி) திருமணம் செய்திருந்தார்கள். இவ்விருவருக்கும் 'உஸாமா' என்ற மகன் பிறந்தார். ஜைதைப் போலவே உஸாமாவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதன் பின்னர் ஜைத் (ரலி), ஜைனப்பைத் திருமணம் செய்தார். ஜைனபைத் தலாக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்முகுஸ்ஸூமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்முகுஸ்ஸூமையும் தலாக் கூறினார் ஜைத். அதன் பிறகு அபூலகபின் மகள் 'துர்ரா' என்பவரைத் திருமணம் செய்தார் (ஆதாரம் : அல் இஸாபா)
.
இந்த விபரங்களை இங்கே கூறுவதற்கு காரணம் ஜைத் (ரலி) அவர்களின் முன் கோபத்தை எடுத்துக் காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்தும், ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஜைத் (ரலி) அவர்கள் தொடர்ந்து தலாக் விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் முன் கோபத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
.
ஜைனப் (ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்து ஜைதை விரும்பவில்லை. அவர்களது சுபாவத்திலும் தமது குரைஷிக் குலம் பற்றிய உயர்ந்த எண்ணம் இருந்தது. அவ்விருவருக்குமிடையே சுமூகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இவ்விருவரின் முரண்பட்ட இந்த சுபாவமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப்போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சண்டையும் சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போண்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார். ஆனாலும் அவர் தலாக் விடுவதாகக் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவது தான் அவ்விருவருக்கும் நல்லது. (தாம் திருமனம் செய்வதற்காக அல்ல) என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்ல தயங்குகிறார்கள். கணவன் மனைவியரிடையே பிளவு ஏற்பட, தான் காரணமாகிவிட்டோம் என்று மக்கள் எண்ணுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். இது தான் உன்மையில் நடத்திருக்க முடியும். இதனடிப்படையில் இந்த வசனத்தைக் காண்போம்.
.
'உன் மனைவியைத் தலாக் கூறாது தடுத்து கொள்! ஏன்று கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம் மனதில் மறைத்துக் கொண்டீர். மேலும் மக்களுக்கு அஞ்சினீர். அல்லாஹ்வே நீர் ஆஞ்சுவதற்கு மிகவும் தகுதியானவன். (அல் குர்ஆன் 33:37)
.
ஒரு தம்பதியினரிடையே சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும் போது அவ்விருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது என்று விரும்பக்கூடிய எந்த மனிதரும் வெளிப்படையாக அதை கூறத் துணிவது இல்லை. அவ்விருவரும் பிரிந்து வாழ்வது என்ற முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் அவ்விருவரும் பிரிந்து விடுவதே அவ்விருவருக்கும் நல்லது என்று மனப்பூர்வமாக விரும்புகின்ற ஒருவர், அதை மனதுக்குள் மறைத்து விட்டு அவ்விருவரும் சேர்ந்து வாழுமாறு தான் வாயளவில் உபதேசம் செய்வார். இது நடிப்பு என்றாலும் எந்த மனிதரும் பகிரங்கமாக அதை வெளிப்படுத்த துணிவதில்லை. அனுபவப் பூர்வமாக பலரும் இந்த நிலைமையைச் சந்திக்கின்றனர்.
.
இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் சராசரி மனிதனுக்கும் ஏற்படக்கூடிய ஒரு எண்ணம் தான் ஏற்பட்டதே தவிர, அடுத்தவர் மனைவியை ஆசைப்படக்கூடிய அளவுக்கு கீழ்த்தரமான எண்ணம் நிச்சயமாக ஏற்படவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்த கால பரிசுத்த வாழ்க்கையும், இந்தப் பொய்ச செய்திளை முற்றாக நிராகரித்து விடுகின்றது.
.
இனி விஷயத்துக்கு வருவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆலோசனைக்குப் பின்னரும் ஸைத் தம் மனைவியை விவாகரத்துச் செய்வதில் உறுதியாக இருந்து அதை செயல்படுத்தி விட்டார். இந்த நிலையில் ஸஜனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தானே மனைவியாக ஆக்கியதாக வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அதன் காரணத்தையும் அவனே கூறுகின்றான்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த பகுதியிலும் உலகில் பல்வேறு பகுதிகளிலும் போலியான உறவு முறை ஒன்று நடைமுறையில் இருந்து வந்தது. சந்ததியற்றவர்களும் அல்லது ஆண் சந்ததியற்றவர்களும், சில சமயங்களில் உதவாக்கரையான ஆண் சந்ததிகளைப் பெற்றவர்களும் பிறரது மகனை வளர்ப்பு மகனாக - சுவீகாரப் புத்திரனாக - எடுத்துக்கொள்வர். 'வளர்ப்பு மகன்' எனப் பிரகடனம் செய்யப்பட்டவர், பெற்ற மகனுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளையும் பெற்றவராக கருதப்படுவார்.
.
வளர்த்தவர் இறந்துவிட்டால் அவரது சொத்துக்களுக்கு வளர்ப்பு மகன் வாரிசாவார். பெற்ற மகனுக்கு கிடைப்பது போன்ற அதே சொத்துரிமை, கூடுதல் குறைவின்றி அவருக்கும் கிடைத்து வந்தது. தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டங்களில் அவர் தமது தந்தையாக அவரை - வளர்த்தவரையே குறிப்பிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வந்தது. 'தந்தை மகன்' எனும் உறவு அவ்விருவருக்குமிடையே உன்மையிலேயே ஏற்பட்டுவிடடதாக அவர்கள் நம்பினர்.
.
இதனால் இன்னும் சில சம்பிரதாயங்களும் ஏற்படுத்தப்பட்டன. வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்துச் செய்த பின், அல்லது அவன் இறந்த பின், அவனது மனைவியை வளர்ப்புத் தந்தை, திருமணம் செய்வது கூடாத ஒன்றாக கருதப்பட்டு வந்தது. ஏனெனில் அப்பெண் உன்மையிலேயே வளர்ப்புத் தந்தைக்கு மருமகளாகி விட்டதாக அவர்கள் நம்பி வந்தனர். இது போல் வளர்ப்புத் தந்தைக்கு மகள் ஒருத்தி இருந்தால் அவளை அவரது வளர்ப்பு மகன் திருமணம் செய்ய முடியாது. ஏனெனில் அவ்விருவரும் உடன் பிறந்தவர்களாகிவிட்டனர் என்பது இவர்களது நம்பிக்கை.
.
போலித்தனமான இந்த உறவு முறையையும், முட்டாள் தனமான இந்த சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டுமென்பது இறைவனின் விருப்பம். தெளிவான - தீர்க்கமான சிந்தனை உடையவர்களின் பார்வையில் இது தகர்க்கப்பட வேண்டிய உறவாகவே இருந்தது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கையாக இறைவனாலும் இது கருதப்பட்டு வந்தது. இத்தகைய உறவுகளை அனுமதித்தால் அது ஏற்படுத்தக்கூடிய தீய விளைவுகள் ஏராளம். இதைத் தகர்க்தெறிவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான 'ஜைது'டைய மனைவியை 'ஜைது' விவாகரத்து செய்தபின், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மணமுடித்து வைத்ததாகக் கூறுகின்றான். அது பற்றி இறைவன் கூறும் வசனங்களைப் பார்க்கும் முன், இந்த போலித்தனமான உறவுகள் தகர்க்கப்படவேண்டியவை தாம், என்பதற்கான காரணங்களை நாம் பார்ப்போம்.
.
முதல் காரணம் :
தந்தை மகன், அண்ணன் தம்பி போன்ற உறவுகள் இறைவனால் தீர்மானிக்கப்படுபவை. இறை நம்பிக்கையற்றவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால் இயற்கையானவை. இவன் தான் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று எந்தத் தந்தையும் தீர்மானிக்க இயலாது. இவர்தான் எனக்கு தந்தையாக இருக்க வேண்டுமென்று எந்த மகனும் தீர்மானம் செய்ய முடியாது. எனக்கு அண்ணனாக இவர் தான் இருக்க வேண்டும் எனக்குத் தம்பியாக இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் எவரும் முடிவு செய்ய முடியாது. அது இறைவனின் தீர்மானப்படி நடக்கக்கூடியதாகும். (அல்லது இயற்கையின் நியதிப்படி நடக்கக்கூடியதாகும்)
இது போன்ற போலித் தனமான உறவு முறைகள் செயற்கையை - இயற்கையை போல் ஆக்கும் ஏமாற்று வேலையாக உள்ளது.
.
இரண்டாவது காரணம் :
யாருடைய உயிரணுவின் மூலமும், எவருடைய சினை முட்டை மூலமும் ஒருவன் பிறந்தானோ, அந்த இரத்த உறவை ரத்து செய்துவிட்டு ஒரு சம்மந்தமுமில்லாதவர்களைப் பெற்றோர் எனப் பிரகடனம் செய்வது இரத்த சம்மந்தத்தை அர்த்தமற்றதாக ஆக்கிவிடுகின்றது.
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும், பாசத்தைப் பொழிந்து வளர்த்த தந்தையும், தாம் பெற்ற பிள்ளையை 'மகன்' என்று உரிமையுடன் அழைக்க முடியாமல் போவதைவிட வேறு கொடுமை என்ன இருக்க முடியும்? வசதி இல்லை என்ற காரணத்திற்காக வசதியான இடத்தில் நம் பிள்ளை வளரட்டுமே என்று சுவீகாரம் வழங்கினாலும், அதனால் அவர்கள் படும் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம் பிள்ளையை நாமே வளர்க்க வேண்டும் என்று இயல்பாகவே இருக்கின்ற நல்ல பண்பு நாளடைவில் மங்கி, யாராவது செல்வந்தர்கள் 'தத்து' எடுக்க மாட்டார்களா? ஏன்ற வியாபார நோக்கம் பெற்றோர்களிடமே மேலோங்கிவிடும். இதனால் இதை அடியோடு கிள்ளி எறிய வேண்டும் என்று இஸ்லாம் கருதியது.
.
மூன்றாவது காரணம்:
எவ்வளவு தான் பாசத்தை பொழிந்த ஒருவனை 'தத்து' எடுத்து வளர்த்தாலும், பெற்ற மகன் போல வளர்ப்பு மகன் தந்தை மீது உண்மையான பாசம் கொள்ள முடிhயது. வசதியான இடத்தில் வாழ வேண்டுமென்பதற்காக அவரைத் தந்தை என ஏற்கத் துணிந்தவனிடம் இதயப் பூர்வமான நேசத்தை எதிர்ப்பார்க்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?
வளர்ப்புத் தந்தைக்குப் பின், அவரது வாரிசாக போகிறோம் என்று கருதும் வளர்ப்பு மகன், அவர் சீக்கிரமாக சாகமாட்டாரோ? என்று எதிர்பார்ப்பான். சீக்கிரத்தில் சாகமாட்டேன் என்று அவர் பிடிவாதமாக வாழ்ந்து கொண்டிருந்தால் இவனே சாவூக்கு அனுப்பவும் தயங்கமாட்டான். இரத்த சம்மந்தம் இல்லாததாலும், இதயப்பூர்வமான நேசம் இல்லாததாலும். சுவீகாரத்தின் நோக்கமே வசதியான வாழ்க்கைப் பெறுவது தான் என்று ஆகிவிட்டதாலும் இதைத் தான் சுவீகாரப் புத்திரனிடம் எதிர்ப்பார்க்க முடியும்.
.
நான்காவது காரணம்:
ஒருவனுக்கு அண்ணன, தம்பி, அக்கா, தங்கை போன்ற ஆயிரம் உறவினர்கள் இருந்தாலும், அவன் இறந்த பின் அவனது சொத்துக்களை அவனது பெற்ற மகனே அடைவான். இவ்வாறு அவன் அடையும் போது, அவனது தந்தையின் அண்ணன் தம்பிகளோ, அக்கா தங்கைகளோ பொறாமைக் கண்ணுடன் பார்க்க மாட்டார்கள். தமக்கொல்லாம் கிடைக்காமல் இவனுக்கு கிடைத்துவிட்டதே என்று எண்ணமாட்டார்கள். எண்ணுவதற்கு எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் 'மகன்' என்ற உறவு மற்ற உறவுகளைவிட மேலானது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் யாருக்கோ பிறந்தவன், திடீரென நுழைந்து 'மகன்' என்ற போலி உறவின் மூலம் சொத்துக்களை அடையும் போது வசதிகளை அனுபவிக்கும் போது இரத்த சம்பந்தமுடைய அவனுடைய அண்ணன் தம்பி போன்றவர்கள் பொறாமைக் கண்ணுடனேயே நோக்குவார்கள். இவ்வாறு நோக்குவதில் நியாயமும் இருக்கிறது. உண்மையிலேயே இந்த போலி மகனை விட உண்மையான சகோதர சகோதரிகள் நெருக்கமானவர்கள் அல்லவா?
.
ஐந்தாவது காரணம்:
மேற்கூறிய அதே காரணத்தினால் எப்பொழுது ஒருவன் யாரோ ஒருவனைத் தத்து எடுக்கின்றானோ அப்போதிருந்தே அவனது ஏனைய உறவினர்களை அவன் பகை;கும் நிலை உருவாகும். உறவினர்களைப் பகைத்து கொள்ள, இந்த சுவீகாரம் முக்கிய காரணமாகிவிடுகின்றது. ஒரு போலித் தனமான உறவுக்காக உண்மையான உறவுகளைத் துறக்க வேண்டுமா? என்று இஸ்லாம் கேட்கிறது.
.
ஆறாவது காரணம் :

தன் தந்தை அல்லாதவர்களைத் தந்தை, என ஒருவன் கூறுவது மனிதனது ரோஷ உணர்வை மழுங்கச் செய்து விடும். அப்துல்லாஹ்வுக்குப் பிறந்தவனை 'இப்ராஹீமுக்குப் பிறந்தவன்' என்று செல்லிப் பாருங்கள்! அதன் பின் அவனது எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்று கண்டு கொள்வீர்கள். தந்தை இல்லாத ஒருவனைத் தந்தை என்று கூறுவது தன்மான உணர்வுக்கு இழுக்கு என்று கருதுவதுதான் மனிதனின் இயல்பு.
எவனோ ஒருவனைத் தந்தை என்று – அதுவும் உண்மையான தந்தை போன்று - கருதுவதைவிட மானங்கெட்ட நிலை என்ன இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் இருந்து வருகின்ற - இருக்க வேண்டிய இந்த ரோஷ உணர்வை இது போன்ற போலித்தனமான உறவுகள் அடியோடு நாசப்படுத்தி விடுகின்றன.
.
இது போன்ற இன்னும் பல காரணங்களால் இந்த போலித் தனமான உறவை அடியோடு ஒழித்திட இறைவன் எண்ணுகிறான். வளர்ப்பு மகனுடைய முன்னால் மனைவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மனைவியாக்கியதாகச் சொல்லி காட்டுகிறான். இது பற்றி இறைவன் கூறுவதை இப்போது பார்க்கலாம்.
.
'ஜைது, அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம். ஏனென்றால் முஃமீன்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவியரை விவாகரத்து செய்து விட்டால் அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக இது நடை பெற்றே தீர வேண்டியது அல்லாஹ்வின் கட்டளையாகும்' (அல்குர்ஆன் 33:37)
.
'எந்த மனிதனுக்கும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் உண்டாக்க வில்லை. உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் தாயைப் போன்றவள் என்று கூறுவதால் அவர்களை அல்லாஹ் உங்கள் தாய்களாக ஆக்கமாட்டான். உங்களுடைய சுவீகாரப்புத்திரர்களை உங்களுடைய புதல்வர்களாக அல்லாஹ் ஆக்கவில்லை. இவையாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைளேயாகும். அல்லாஹ் உண்மையே கூறுகின்றான். இன்னும் அவன் நேர் வழியையே காட்டுகிறான்' (அல்குர்ஆன் 33:4)
.
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளை யென) அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும் (அல்குர்ஆன் 33:5)
.
உங்களில் சிலர் தம் மனைவியரைத் தாய்கள் எனக் கூறி விடுகின்றனர். அதனால் அவர்கள் இவர்களுடைய தாய்களாக ஆவதில்லை. இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம், இவர்களுடைய தாய்கள் ஆவார்கள். எனினும் இவர்கள் சொல்லில் வெறுக்கத் தக்கதையும் பொய்யானதையுமே கூறுகின்றார்கள். (அல்குர்ஆன் 58:2)
.
உங்களுக்கு பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்யலாகாது (அல்குர்ஆன் 4:23)
.
இந்த வசனங்களில் போலித்தனமான உறவுகளை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்பதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனப்பை இதனாலேயே திருமணம் செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.
.
இங்கே ஒரே ஒரு சந்தேகம் மட்டும் சிலருக்கு இன்னமும் இருக்கலாம். அந்த உறவுகள் தகர்க்கப்படத்தான் வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டித் தான் தகர்க்க வேண்டுமா? வெறும் ஆணையிட்டால் அல்லது அதற்கு அனுமதி உண்டு என்று சொன்னாலே போதுமே! மற்றவர்கள் அதைச் செய்து விடுவார்களே! என்பதே அந்தச் சந்தேகம்.
.
மேலோட்டமான பார்வையில் இது நியாயம் போலத் தோண்றினாலும் சிந்திக்கும் போதே இது தவறு என்பது தெளிவாகும்.
.
திருமணத்தைப் பொருத்தவரை இவரைத் தான் திருமணம் செய்ய வேண்டுமென ஆணையிட முடியாது. அது தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தின்பாற்பட்டது. அனுமதிக்கத்தான் முடியும். அவர்களை மணம் செய்ய அனுமதி உண்டு என்று சொன்னவுடன் செய்து காட்ட முன்வரமாட்டார்கள். அனுமதிக்கப்பட்டவைகளை செய்து தான் ஆக வேண்டுமென்று கட்டாயம் எதுவுமில்லை.
.
காலம் காலமாக 'மகனுடைய மனைவி' என்றே நம்பி வந்திருக்கும் போது, சொந்த மருமகளாக அவளைக் கருதி வந்திருக்கும் போது, அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறவு கொள்ள அவர்கள் உள்ளம் எளிதில் இடம் தராது. தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தைத் தலைமுறை தலைமுறையாக வளர்த்துக் கொண்டு விட்டார்கள். சமுதாயம் பரிகாசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின் தயக்கத்தை அதிகமாக்கும்.
.
உலகத்தின் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப் படாமல், பாரம்பரியத்துக்கு எள்ளளவும் இடம் தராமல் அதைச் செய்து காட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தகுதியானவர்கள் என்று கருதியே இறைவன் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே தேர்வு செய்தான். இதனால் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அதற்கடுத்த வசனத்தில் இறைவன் மறைமுகமாக சொல்கிறான்.
.
'இறைத்தூதர்கள் இறைவனின் செய்திகளை எடுத்துச்சொல்ல வேண்டும். அவனுக்கு அஞ்ச வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சக் கூடாது (அல் குர்ஆன் 33:39)
.
எவருக்கும் அஞ்சலாகாது என்று இங்கே இறைவன் குறிப்பிடுவதிலிருந்து 'அஞ்சுவதற்குரிய' ஒன்றாக இத்திருமணம் இருந்தது என்று அறியலாம்.
.
இதுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த திருமணத்திற்கு சிலர் சொல்வது போல் அவற்றிற்கு காமவெறி காரணம் அல்லவென்பதை அறிவுடையோர் விளங்களாம். இறைவனே நன்கறிந்தவன்.
.
(நபிகள் நாயகம் - பல திருமணங்கள் செய்தது ஏன்? - என்றப் புத்தகத்திலிருந்து...)