Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | Aboutஅபூஸைத்அல்அதரி
abuzaidalathary@gmail.com

நுழையு முன்..........

எகிப்தின் அலக்ஸன்டரிய்யா மாநிலத்தில் கிருஸ்தவ மதப்போதகர் "ஸகரிய்யாபத்ரஸ்" என்பவர் மிகப் பிரபல்யமான ஒருவராவார். அவர் எழுதிய "திருச்சபைப் பிளவுகள் வரலாறு" எனும் அறபி நூல் கிருஸ்தவர்களும் முஸ்லிம்களும் அவசியம் வாசிக்க வேன்டிய முக்கிய நூலாகும். காலத்தின் தேவை கருதி அந்நூலின் சுருக்கத்தை தமிழில் தரும் நாம், தங்களது மேலான கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிய ஆவலாய் உள்ளோம்.

இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு கிருஸ்தவர்கள் மத்தியில் பல்வேறுபட்ட மத ரீதியான கருத்து முரண்பாடுகள் தோன்றின. இவ்வாறு முரண்பாடுகள் தோன்றும் போதெல்லாம் உயர்நிலை பாதிரிகள் ஒன்று கூடி தங்களுக்கிடையே கருத்துக் கணிப்புகள் நடாத்தி புதிய சட்டத்தை அல்லது இறுதித் தீர்மானத்தை மேற்கொண்டனர். இவ்வாறு கூட்டப்படும் மாநாடுகளில் ஒன்றில், அனைவருக்கும் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்பட்டு ஒரு புதியசட்டம் உருவானது அல்லது கருத்துவேற்றுமை தோன்றி அதனடிப்படையில் ஒரு புதிய மதப்பிரிவு உருவானது.
இவ்வாறு வரலாறு நெடுகிலும் நடைபெற்ற திருச்சபைகள் மாநாடுகளை இருவகைகளாகப் பிரித்து நோக்கலாம்.

1.உலகளாவியமாநாடுகள்.
2.பிராந்தியமாநாடுகள்.

பிராந்திய ரீதியாகக் கூட்டப்பட்ட முதல் மாநாடாக ஜெருஸலம் நகரில் "போதகர் யாக்கோபு" என்பவர் தலைமையில் "யூதர்கள் அல்லாதவர்கள் விருத்த சேதனம் செய்ய வேண்டுமா?" என்பது தொடர்பில் நடந்த ஒன்று கூடலை குறிப்பிடலாம்.

இவ்வாறு இடம் பெற்ற பல்வேறு திருச்சபைகள் மாநாடுகளில் முக்கியமான சிலதையும் அவைகளில் விவாதித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் பின்வருமாறு சுருக்கமாக நோக்குவோம்.

1.கி.பி 325 இல் "நீகியஹ்" வில் இடம் பெற்ற மாநாடு:

இயேசு கிருஸ்துவின் "கடவுள் தன்மை" தொடர்பில் ஏற்பட்ட!! கருத்து முரண்பாட்டை களைவதற்காக இம்மாநாடு கூட்டப்பட்டது. மதகுரு “ஆரியூஸ் மற்றும் அவரைப் பின்தொடர்ந்தோர் ‘இயேசு கடவுள் இல்லை எனவும் ஏனையோர் ‘இயேசு கடவுள்தான் எனவும் வாதிட இறுதியில் கிருஸ்துவத்தை தழுவிய முதல் ரோமப்பேரரசன் "கொனஸ்தந்தன்" அக்காலத்தில் உலகளாவிய ரீதியில் காணப்பட்ட அனைத்து திருச்சபைகளையும் ஒன்று கூட்டினான். அதில் ‘இயேசு கிருஸ்துவின் கடவுள் தன்மை ஒப்புக்கொள்ளப்பட்டதுடன்" நீகாவிஹ்" நம்பிக்கைச் சட்டமும் வகுக்கப்பட்டது.!!


மதகுரு ஆரியூஸ்

2.கி.பி 381 இல் இடம்பெற்ற "முதலாவது கொனஸ்தாந்து நோபல் மாநாடு":

கொன்ஸ்தாந்து நோபலின் தலைமை மதகுரு "மெக்தினியூஸ்" என்பவர் "பரிசுத்த ஆவி என்பது தேவதூதர்கள் (மலக்குகள்) போல் படைக்கப்பட்டதுஎனக் கருதிய போது இம்மாநாடு கூட்டப்பட்டு பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1.பரிசுத்த ஆவியைக் கடவுளாகக் கருதுதல்
2. ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த "நம்பிக்கைச்சட்டத்தில் "ஆம், பிதாவில் இருந்து தோற்றம் பெற்ற பரிசுத்த ஆவியை கடவுளாக நம்புகிறோம்......." என்ற இரண்டாவது பகுதியை இணைத்தல்.

இவ்வாறே ‘நீகியாஹ் மாநாட்டில் இயேசு கிருஸ்துவையும் "முதலாவது கொன்ஸ்தாந்து நோபல் மாநாட்டில் பரிசுத்த ஆவியையும் கடவுளாகப் பிரகடனம் செய்ததன் மூலம் கிருஸ்துவத்தின் அடிப்படையான "திரித்துவத்தின்" இரு பிரதான பகுதிகள் கி.பி. 381இல் இணைக்பட்டன.

3.கி.பி. 431இல் இடம்பெற்ற "முதலாம் அப்ஸஸ் மாநாடு:

கொன்ஸ்தாந்து நோபல் தலைமை மதகுரு "நொஸ்தூர்" இயேசுவின் கடவுள் தன்மையை மறுக்க ஆரம்பித்து "மரியாள் கடவுளை பெற்றெடுக்கவில்லை, ஏனெனில் ஒரு உடல் மற்றொரு உடலையே பெற்றடுக்க முடியும். ஒரு ஆத்மாதான் இன்னொரு ஆத்மாவைப் பெற்றெடுக்க முடியும். எனவே, கன்னி மரியாள் கடவுளை அடையாளங்காட்டும் ஒருமனிதனையே பெற்றெடுத்தாள். ஆகவே, இயேசு யதார்த்தத்தில் ஒரு கடவுள் அல்ல. மாறாக, கடவுள் அருள் நிறம்பப் பெற்ற ஒரு மனிதர் அல்லது கடவுளின் உந்துதலால் செயற்பட்ட ஒரு பாவமற்றவர்" என்ற வாதத்தை முன்வைத்தார்.

இவ்விடயங்களை விவாதிக்க இம்மாநாடு கூட்டப்பட்டு அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.இயேசு ஒரே இயல்பையும் ஒரே நாட்டத்தையும் கொண்டவர். (அதாவது, பிரிக்க முடியாத கடவுள் இயல்பையும், மனித இயல்பையும் ஒரே நேரத்தில் கொண்டிருப்பவர். அதேபோல் பிரித்து நோக்கமுடியாத கடவுள் நாட்டத்தையும் மனித நாட்டத்தையும் கொண்டிருப்பவர்.)

2. கன்னி மரியாள் கடவுளையே பெற்றெடுத்தாள், இதனால் அவள் "கடவுளின் தாய்" என அழைக்கப்படுவாள்.
3. "ண்மையான ஒளியின் தாயே உம்மை துதிக்கிறோம்,              கடவுளின் தாயாகிய புனித கன்னியே உம்மைப் போற்றுகிறோம் ............" என ஆரம்பிக்கும் நம்பிக்கைச் சட்டத்தின்" முகவுரை இம்மாநாட்டிலேயே உருவாக்கி இணைக்கப்பட்டது.

இந்த இடத்தில் "ஒரே இயல்பு, ஒரேநாட்டம்" என்று குறிப்பிடப்படுவதன் விளக்கம் என்ன என்பதை நோக்குவது அவசியமாகும்.

1.இயல்பு (கடவுள் மற்றும் மனித இயல்பு)
இயேசு கிருஸ்து சாப்பிட்டார் என்றால் கிருஸ்தவர்கள் கருத்துப் பிரகாரம் சாப்பிட்டவர் கடவுளா? அல்லது மனிதனா? என்ற கேள்வி தோன்றும்.
இரு இயல்புக் கொள்கை கொண்டுள்ளோர் ‘கடவுள் இயேசு சாப்பிடவில்லை, மனித இயேசுவே சாப்பிட்டார் எனக்கூறுவர்.
இவர்கள்  "இயல்பு" என்பதை இயேசு அணியும், களையும் ஆடைபோல் கருதுகின்றனர். இயேசு சாப்பிடும் போது ‘மனிதஇயல்பு என்றும் அற்புதங்கள் நிகழ்த்தி நோயாளர்களைக் குணப்படுத்தும் போது ‘கடவுள்இயல்பு என்றும் கூறுகின்றனர்.

ஓர் இயல்புக் கொள்கையைக் கொண்டிருப்போர் "இரு இயல்புகளையும் பிரித்து நோக்கக்கூடாது. குறித்த ஒரு சம்பவத்தில் ஒரு இயல்பை மட்டும் குறிப்பிட்டு மற்றதை விட்டு விடக்கூடாது. இயேசு சாப்பிட்டார் என்றார் (கடவுள், மனிதன்என்ற வேறுபாடு இன்றி) சாப்பிட்டார் என்று மட்டுமே கூறவேன்டும் கடவுள் இயல்பும் மனிதஇயல்பும் (இயேசுவில்) ‘கலப்படைந்தது ‘ஒன்றிணைந்தது என்று கூறாமல் அவர் ஓர் இயல்பை மாத்திரம் கொண்டிருந்தார் என்று கருதுகிறார்கள்.

2. நாட்டம் (மனித மற்றும் கடவுள் நாட்டம்)

இவ்வாறே கிருஸ்துவர்களின் கருத்துப் பிரகாரம் இயேசு ஒரு இடத்துக்குப் போக விரும்பினால் (நாடினால்) கடவுள் என்ற வகையில் போக நாடினாரா அல்லது மனிதன் என்ற ரீதியில் போக விரும்பினாரா என்ற கேள்வியாகும்.

‘இயல்பு தொடர்பில் காணப்பட்டது போன்றே நாட்டம் தொடர்பிலும் ‘இரு வேறுபட்ட நாட்டங்கள் இயேசுவுக்கு இருப்பதாக ஒருசாராரும், ஒரேநாட்டம் மாத்திரம் இருப்பதாக மறுசாராரும் கருதுகின்றனர்.

இயேசுவின் ஓரியல்பு , ஈரியல்பு தொடர்பிலும் ஓரே நாட்டம், இருநாட்டங்கள் தொடர்பிலும் கிருஸ்துவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளைக் களைவதற்காக சில மாநாடுகள் நடாத்தப்பட்டு அதில் பின்வரும் மதப்பிரிவுகள் தோற்றம் பெற்றன:

4.கி.பி. 449 இல் இடம்பெற்ற "இரண்டாம் அப்ஸஸ் மாநாடு":

கொன்ஸ்தாந்து நோபல் திருச்சபைகளின் தலைவர் "இயேசுவின் உடல் மூலக்கூறில் வேறுபட்டுள்ளதால் எமது உடல்கள் போன்றது கிடையாது. ஏனெனில், கடவுள் இயல்பு மனித இயல்பை மறைத்துவிட்டது, அதாவது, இயேசுவில் கடவுள் தன்மை மனிதத் தன்மையுடன் கலந்துவிட்டது" என்று கூறினார்.

இதுவே, இன்று ள்ள கிருஸ்தவப் பிரிவுகளிடையே பெரும் கருத்து முரன்பாடுகள் தோன்றக் காரனமாக அமைந்தது.

இவ்விடயத்தை விவாதிக்க மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் கொன்ஸ்தாந்து நோபல் திருச்சபைகளின் தலைவரின் கருத்தை மறுத்து "இயேசுவின் கடவுள்தன்மை அவரது மனிதத் தன்மையுடன் கலப்போ, மாற்றமோ இன்றி ஒன்றினைந்துவிட்டது " என்ற கருத்தை ஏற்றுக்கொண்டனர். இதுவே இன்றைய ‘ஓர்தோடெக்ஸ் (வைதீகக்) கிருஸ்தவர்களது நம்பிக்கையுமாகும்.

எனினும், மேற்படி தீர்மானத்தை ரோமாபுரியின் பாப்பரசர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இத்தீர்மானத்தை மறுத்தவர்களுக்காக இதன் பிறகு "கல்கீதூனியா மாநாடு" என்ற பேரில் இன்னுமொரு மாநாடு கூட்டப்பட்டு அதில் "இயேசுவின் கடவுள் தன்மையும் மனிதத்தன்மையும் ஒன்றிணையவில்லைஎன்று தீர்மானிக்கப்பட்டது.
அதாவது ‘ஓர்தோடெக்ஸ் (வைதீகக்) கிருஸ்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் இயேசுவுக்கு இரு இயல்புகலும் இருநாட்டங்களும் உள்ளன என கருத்து உடன்பாடு கண்டனர்.

எனவேதான், ‘ஓர்தோடெக்ஸ்(வைதீகக்) கிருஸ்தவர்கள் கி.பி. 449 இல் நடந்த ‘இரண்டாம் அப்ஸஸ் மாநாட்டுக்குக்குப் பின் நடந்த எந்தத் திருச்சபைகள் மாநாடுகளையும் ஏற்றுக்கொள்வதில்லை .அவ்வாறே ஏனைய மதப்பிரிவுகள் இரண்டாம் அப்ஸஸ் மாநாட்டை அங்கீகரிப்பதில்லை.

5. கி.பி. 451இல் இடம்பெற்ற கல்கீதூன் மாநாடு:

(இதில் ஓர்தொடெக்ஸ் பிரிவினர் தவிர ஏனையவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.)
இம்மாநாட்டில் பின்வரும் இருதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.முந்தையமாநாட்டின் (இயேசுவின் கடவுள் தன்மை மனிதத்தன்மையுடன் கலந்துவிட்டது என்பது போன்ற) தீர்மானங்கள் இரத்து செய்யப்பட்டன.
2. இயேசுவுக்கு (கடவுள், மனிதன்என) ‘இருஇயல்பு நிலைகளும் ‘இருநாட்டங்களும் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளல்.
இதன் மூலம் கிருஸ்துவர்கள் இரு பெரும் பிரிவினராக தங்களுக்கிடையே பிரிந்துவிட்டனர்

1. ஓர்தொடெக்ஸ்பிரிவினர்: இவர்கள் இயேசுவுக்கு ‘ஒரே இயல்பு நிலையும் ‘ஒரேநாட்டமும் மாத்திரம் இருப்பதாக நம்புகின்றனர். அதாவது ‘இயேசுவின் கடவுள் பண்புகள் மனிதப்பண்புகளுடன் மாற்றமோ, கலப்போ இன்றி ஒன்றித்து விட்டதாகக ருதுகின்றனர். இன்றுவரை இப்பிரிவில் இருந்து குறிப்பிடத்தக்க எந்தபெரும் பிரிவுகளும் தோன்றவில்லை.

2.கத்தோலிக்கர்கள்: நாம் ஏலவே விளக்கியது போல் இவர்கள் இயேசுவுக்கு ‘இருஇயல்புநிலைகளும் இருநாட்டங்களும் உள்ளதாகநம்புகின்றனர்.

எனினும் கி.பி 667 இல் கத்தோலிக்கர்களில் இருந்து "யோவான் மாறோன்" என்பவர் தலைமையில் ஒரு கூட்டம் பிரிந்து சென்று "இயேசுவுக்கு (கடவுள், மனிதன் என) ‘இரு இயல்பு நிலைகளும் ‘ஒரே ஒருநாட்டமும் மாத்திரம் இருக்கின்றது என்ற கருத்தைக் கொண்டதால் இதுதொடர்பில் கலந்தாலோசனை செய்ய மற்றுமொரு மாநாடு கூட்டப்பட்டது.


6. கி.பி.680 இல் இடம்பெற்ற "இரண்டாம் கொனஸ்தந்து நோபல்மாநாடு":

இம்மாநாட்டில் இயேசுவுக்கு ‘இருஇயல்புநிலைகளும் ‘இருவகையான நாட்டங்களும் உள்ளன என (மீண்டும்) தீர்மானிக்கப்பட்டு "யோவான் மாறோன்" என்பவரைப் பின்பற்றிய ‘மாறோனியர்கள் "நிராகரிப்பாளர்கள்" என பிரகடனம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மாறோனியர்கள் லெபனான் மலையில் தஞ்சமடையும் வரை கத்தோலிக்கர்களால் தொடந்தும் விரட்டியடிக்கப்பட்டார்கள் இவர்களுக்கென லெபனானில் ஒரு   தலைமை மதகுருவும் இருந்தார். "மாறோனியர்கள்" என தனியாக அடையாளங்காட்டப்பட்ட இப்பிரிவினர் தனித்துவமாக செயற்பட்டனர். பின்னர் கி. பி.1182ம் ஆண்டு "தங்கள் பிரிவின் தனித்துவத்தைப் பேணிக்காப்பதுடன், ரோமாபுரியை தலைந‌கராகக் கொண்ட கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமாக நடப்பதாகவும்"  அறிவித்தனர்.

இவ்வாறு கிருஸ்தவர்களுக்குள் மூன்று மதப்பிரிவினர் தோற்றம் பெற்றனர்:

1.ஓர்தொடக்ஸ் பிரிவினர்: (இயேசுவுக்கு ஒரே இயல்புநிலை, ஒரே நாட்டம்).
2.கத்தோலிக்க பிரிவினர்: (இயேசுவுக்கு இருஇயல்புநிலைகள் , இருநாட்டங்கள்).
3.மாறோனிய பிரிவினர்: (இயேசுவுக்கு இருஇயல்புநிலைகள், ஒருநாட்டம் மாத்திரம்)

இவ்வாறு மூன்று பிரிவாகக் காணப்பட்ட கிருஸ்தவர்களுள், குறிப்பாக, கத்தோலிக்கர்களுல் ரோமாபுரியில் இருந்த தேவாலயத்திற்கும், கொனஸ்தந்துநோபலில் இருந்த தேவாலயத்திற்கும் இடையே "மகன் (சுதன்) எனும் அடிப்படையை நம்பிக்கைச் சட்டத்தில் இணைக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் பெரும் கருத்து முரண்பாடு உருவாகியது.

"பரிசுத்த ஆவியானது பிதாவில் இருந்து தோற்றம்பெற்றது" என ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த "நம்பிக்கைச் சட்டத்தில்" ரோம தேவாலயம் ‘சுதனில் இருந்தும் என்ற வார்த்தையைச் சேர்த்து ‘பரிசுத்த ஆவியானவர் பிதாவிலிருந்தும், சுதனில் (மகனில்) இருந்தும் தோற்றம் பெற்றவர் என நம்பலானார்கள்.

இது தொடர்பில் ஆராய கொனஸ்தாந்து நோபல் தேவாலயத்தினர் கீழ்வருமாறு ஒரு மாநாட்டைக் கூட்டி ரோம தேவாலயத்தின் கருத்தை நிராகரித்துவிட்டனர்.

7. கி.பி. 879 இல் இடம் பெற்ற மூன்றாவது கொன்ஸ்தாந்து நோபல் மாநாடு:

கொன்ஸ்தாந்து நோபல் தேவாலயத்தால் கூட்டப்பட்ட இம்மாநாட்டில் ரோம தேவாலயத்தினருக்கு மாற்றமாக "பரிசுத்த ஆவியானது பிதாவிடம் இருந்து மாத்திரம் தோற்றம் பெற்றது" என தீர்மானித்தனர்.

இவ்வாறு கத்தோலிக்க மதப்பிரிவினர்:
1.மேற்குக்கத்தோலிக்கர் என்ற ரோமதேவாலயத்தினர்
2. ரோம ஓர்தொடக்ஸ் அல்லது கிழக்கு/கிரேக்க கிருஸ்தவர் என்ற கொன்ஸ்தாந்து நோபல் தேவாலயத்தினர்.

ஆக இதுவரை தோன்றிய பிரிவுகளை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்:
1..ஓர்தொடக்ஸ்பிரிவினர்: இயேசுவுக்கு ‘ஒரே இயல்பு நிலை, ஒரே நாட்டம்  பரிசுத்த ஆவியானவர் ‘பிதாவில் இருந்து மட்டுமே தோற்றம் பெற்றவர்.
2.கத்தோலிக்கபிரிவினர்: இயேசுவுக்கு ‘இரு இயல்பு நிலைகள் ‘இரு நாட்டங்கள் பரிசுத்த ஆவியானவர் ‘பிதாவில் இருந்தும் சுதனில் (மகனில்) இருந்தும் தோற்றம் பெற்றவர்.
3. ரோமஓர்தொடக்ஸ்பிரிவினர்: இயேசுவுக்கு ‘இரு இயல்பு நிலைகள் இருநாட்டங்கள். பரிசுத்த ஆவியானவர் ‘பிதாவில் இருந்து மட்டுமே தோற்றம் பெற்றவர்.
4.மாறோனிய பிரிவினர்: (இயேசுவுக்கு ‘இரு இயல்புநிலைகள் ஒருநாட்டம் மாத்திரம்)

இவ்வாறே ஒவ்வொரு பிரிவினருக்குக்கும் வேறுபட்ட மதசட்டங்கள் உருவாகி தனித்துவமான மாநாடுகளும் நடைபெற்றன.

உதாரணமாக: ரோம கத்தோலிக்கர்களால் மாநாடுகளாக:

1.கி.பி. 1225 இல் இடம்பெற்று "ரோம கத்தோலிக்க பாப்பரசர் தேவாலயத்திற்கு பாவமன்ணிப்பு வழங்கும் உரிமை உள்ளதாகவும் அதைதான் விரும்புபவர்களுக்கு வழங்கமுடியும்" எனத் தீர்மானிக்கப்பட்ட "ரோம்" மாநாட்டையும்,

2. கி.பி. 1869 இல் இடம்பெற்று "பாப்பரசர் என்பவர் பாவங்கள், தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்!!" எனத் தீர்மானம் எட்டப்பட்ட "ரோம்" மாநாட்டையும் குறிப்பிடலாம்.

புரொடஸ்தாந்து பிரிவினரின் தோற்றம்:

ரோம கத்தோலிக்க தேவாலயம் அக்கால மன்னர்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டது. இது அரசியல் அதிகாரத்துக்கும் மத அதிகாரத்துக்குமிடையிலான போட்டியாக உருவெடுத்து பாப்பரசரின் அதிகாரத்தை பலவீனமடையச் செய்தது.

இப் பலவீன நிலையை பயன்படுத்தி சில மத சீர்திருத்த இயக்கங்கள் தோன்றலாயின. அவைகளுள் பிரதானமானதாக "மார்டின்லூதர்" என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டு கத்தோலிக்க திருச்சபையில் இருந்து பிரிந்து தனியான திருச்சபையாக பிரகடனப்படுத்தப்பட்ட "புரொடஸ்தாந்து”  திருச்சபையாகும்.


"மார்டின் லூதர்"

கத்தோலிக்க பாதிரியாராகவும் ஜேர்மன் நாட்டில் "விட‌ன் பிரிஜ்" பல்கலைக்கழகத்தில் மதம் சார்ந்த கலைகளுக்கான பேராசிரியராகவும், ஒரு தேவாலயத்தின் பொறுப்பாளாராகவும் இருந்த ‘மார்டின் லூதர் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து பிரிந்து அதற்கெதிராக செயற்படுவதாக அ றிவித்தார்.

பின்பு "பாப்பரசர் எனும் நிலை கடவுளின் மூலம் அல்ல என்பதை அறிவித்தார். இதனால் பாப்பரசர் மார்டினை ரோமுக்கு அழைத்த போது பாப்பரசரை சந்திக்க மறுத்து தனது நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் பிரச்சாரம் செய்த காரனத்தால் 1526 இல் பாப்பரசர் ‘மார்டின் லூதரை குற்றவாளியாக பிரகடனம் செய்து அவரது நூற்கள் அனைத்தையும் எரித்து விடும்படி கட்டளையிட்டார்.

கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக ‘மார்டின் லூதர்தெரிவித்த பல ஆட்சேபனைகளுள் பிரதானமானதாக இரண்டைக்குறிப்பிடலாம்.

1."புனிதப்பலி" எனும் சடங்கை மறுத்தல்:

இச் சடங்கின் போது பாதிரி ஒருவர் ‘ரொட்டிகளில் ஒன்றை எடுத்து மத ஜெபங்களை உச்சரிக்கும் போது (கிருஸ்தவர்கள் நம்பிக்கைப் பிரகாரம்) அந்த ரொட்டியில் கர்தராகிய இயேசு கிருஸ்து முழுமையாக இடம்பிடித்துக் கொள்கிறார். அவ்வாறே பூசைக்கிண்ணத்தில் இருக்கும் மதுவும் கர்த்தரின் இரத்தமாக மாறிவிடுகிறது.

எனவே, குறித்த ரொட்டியை தின்று மதுவையும், குடிப்பவரின் உடலில் இயேசு கிருஸ்து இடம்பிடித்து அவருக்கு நல்வழியைக்காட்டுவார் எனகிருஸ்தவர்கள் அனைவரும் நம்பி செய்துவரும் திருப்பூசையை ‘மாடின்லூதர் கடுமையாக விமர்சித்து மறுத்தளித்தார். (இன்று வரை புறொடஸ்டான்ட் தவிர ஏனயை பிரிவினர்கள் இப்பூசையை செய்து வருகின்றனர்)

2. பாவ மன் னிப்புப் பட்டயங்களை மறுத்தல்:

1517 ம் ஆண்டு பாப்பரசர் "பத்தாம் லியோ"  உலகம் முழுவதற்குமான பொது மன்னிப்புப் பட்டயங்களை வெளியிட்டார். இதன் மூலம் அப்பட்டயமொன்றை விலை கொடுத்து வாங்குபவர் மன்னிப்புப் பெறலாம் என்றாகிவிட்டது. ரோம்நகரில் உள்ள புனித "பத்ரஸ்" தேவாலயத்தைக் கட்டுவதற்குத் தேவையான நிதியை திரட்டவே பாப்பரசர் மன்னிப்புப் பட்டயங்களை வெளியிட்டார் என்பதால் ‘மார்டின் லூதர் இதையும் மறுத்துரைத்தார்.
           பாவ ன்னிப்புப் பட்டயம்

தேவாலயங்களும் பாப்பரசரும் கிருஸ்தவர்கள் மீது விதித்த கடுமையான வரிச்சுமையில் இருந்தும் அறிவியல் மற்றும் சிந்தனை மீது இவர்கள் செலுத்திய ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறவேண்டி அக்காலமக்கள் பலரும் புதிய பிரிவான புறொடஸ்டன்ட் இல் இணைந்து கொண்டார்கள். இவ்வாறு இணைந்து கொண்டவர்கள் திருச்சபைகளின் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க அன்றைய புதிய உலகமான அமெரிக்காவுக்கு பெருமளவில் இடம்பெயர்ந்து அமெரிக்க சமூகத்தில் பெரும்பான்மையினர் என்ற இடத்தைப் பிடித்துக் கொண்டனர்.

மக்களை தனது கொள்கையின் பால் ஈர்க்க மார்டின் லுதர் மூன்று பிரதான வழிமுறைகளைக் கையாண்டார்.

1.தேவாலயங்களின் பேரில் பெருமளவு குவிந்திருந்த சொத்துகளை அபகரிக்கும்படியும் தேவாலயங்களை, மடங்களை பொதுமக்கள் பயனடையும் விதத்தில் பாடசாலைகளாக, வைத்தியசாலைகளாக மாற்றிவிடும்படி அக்கால அரசர்களை தூண்டி விடும் வகையில் நூல்களை வெளியிட்டார்.

2. "ஹேஷ்" ஆட்சியாளன் தனது முதல் மனைவி உயிருடன் இருக்கதான் விரும்பிய இன்னுமொரு பெண்ணை மணமுடிக்க விரும்பியபோது, இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் முடிக்க முடியும் என ‘மார்டின் லூதர் அனுமதித்ததுடன் அதற்கான புதியசடங்குகளையும் நடாத்த அனுமதித்ததன் மூலம் ஆட்சியாளரின் அன்பைப் பெற்றார்.

3.துறவறத்தினால் அவதியுற்றிருந்த பாதிரிகளையும், மதகுருக்களையும் தன் பக்கம் ஈர்க்கதானே முன்மாதிரியாக மாறி "கார்தரீன்" எனும் பெண் துறவியை பலவந்தமாக அடைந்து திருமணம் முடித்ததன் மூலம் அருட்தந்தை எனும் பதவியை அவமதித்ததுடன், தனது பொறுப்பிலிருந்த தேவாலயத்திலேயே குடும்ப வாழ்வில் ஈடுபட்ட ‘மார்டின் லூதர் நோய்வாய்ப்பட்டு 1546 இல் மரணித்தார்.

புரொடஸ்தாந்து பிரிவினரின் அடிப்படைகள்:

1.விவிலியநூற்களே சட்டமூலாதாரமாகக் கொள்ளப்படுமே அன்றி பாப்பரசர்களின் போதனைகள் அல்ல.

2.விவிலியநூற்களை சொல்ரீதியாக விளக்கமளிக்கவேன்டுமே அல்லாமல் சிலேடை என்ற ரீதியில் விளக்களிக்கக்கூடாது.

3.மதகுருக்கள், பாதிரிகள் என்று மட்டும் இல்லாமல் ஒவ்வொரு கிருஸ்தவராலும் வேதநூலுக்கு விளக்கமளிக்க முடியும்.

இவ்வாறு தோற்றம் பெற்ற புரொடஸ்தாந்து பிரிவினரும்கூட ‘லூதரிகள், ‘மோர்மோனிகள் என பல்வேறுபட்ட உட்பிரிவுகளாக பிரிந்துவிட்டார்கள்.

ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கும் ரோமன் கத்தோலிக்கருக்குமிடையே உள்ள முக்கிய முரண்பாடுகள்:

1.கத்தோலிக்கர்கள் இயேசுவுக்கு (கடவுள், மனிதன்என) ‘இரு இயல்புநிலைகளும் ‘இரு நாட்டங்களும் உள்ளதாக நம்ப, ஓர்தொடெக்ஸ் பிரிவினரோ ‘ஒருஇயல்பு நிலையும் ‘ஒரு நாட்டமும் மாத்திரம் இருப்பதாக நம்புகின்றனர்.

2.கத்தோலிக்கர்கள் பரிசுத்த ஆவியானவர் ‘பிதாவிலும், சுதனிலும் இருந்து தோற்றம் பெற்றவர் என நம்ப ஓர்தொடெக்ஸ் பிரிவினர் பிதாவில் இருந்து மட்டும் தோற்றம் பெற்றவர் என நம்புகின்றனர்.

3.புனித பூஜையின் போது கத்தோலிக்கர்களிடத்தில் ‘அப்பம் மாத்திரம் வினியோகிக்கப்பட ஓர்தொடெக்ஸ் பிரிவினரிடத்தில் ‘அப்பமும் மதுபானமும் விநியோகிக்கப்படும்.
4. கன்னிமரியாள் ‘ஆதிபாவத்திலிருந்து நீங்கியவளாக பிறந்தாள் என கத்தோலிக்கர் நம்ப ஓர்தொடெக்ஸ் பிரிவினரோ கன்னிமரியாள் ‘ஆதிபாவத்துடன் பிறந்ததாகவும் பரிசுத்தஆவியானவர் அவளை ஆதிபாவத்தில் இருந்து தூய்மைப்படுத்தியதாகவும் நம்புகின்றனர்.

5.கத்தோலிக்கர்கள் ஏனைய பிரிவுகளை விடவும் கன்னிமரியாளை அளவு கடந்து புகழ்ந்து ‘இயேசுவின் பலியில் அவளுக்கும் பங்கிருப்பதாகவும், அவள் மூலமகவே அனைத்து அருட்கொடைகளும் வழங்கப்படுவதாகவும் அவள் ‘பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவள் எனவும் நம்புகின்றனர்.

6.கத்தோலிக்கர்கள் ஏனைய பிரிவினருக்கு மாற்றமாக பாப்பரசர் தவறுகள், பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவர் என்றும் ரோம் நகரே உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களின் தலைமையகம் என்றும் நம்புகின்றனர்.

7. 1965 இல் இடம் பெற்ற வத்திக்கான் மாநாட்டில் கத்தோலிக்கர்கள் இயேசுவின் இரத்ததில் இருந்து ‘யூதர்கள் குற்றமற்றவர்கள் என அறிவித்தனர்!!.

ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கும், புரொடஸ்தாந்து பிரிவினருக்குமிடையே உள்ள முக்கிய முரண்பாடுகள்:

1.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் போன்று, ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக இயேசுவுக்கு ‘இரு இயல்பு நிலைகளும் ‘இரு நாட்டங்களும் உள்ளதாக நம்புகின்றனர்.

2. புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் போன்று, ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக பரிசுத்த ஆவியானவர் ‘பிதா மற்றும் சுதனில் இருந்து தோற்றம் பெற்றவர் என நம்புகின்றனர்.

3.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக மதகுருவிடம் பாவமன்னிப்பு தேடாமல், நேரடியாகவே கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என கருதுகின்றனர்.

4..புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக புனித பூஜையையோ, ரொட்டி மற்றும் மது இயேசுவின் சதை இரத்தமாக மாறுகிறது என்ற சித்தாந்தத்தையோ நம்புவதில்லை.

5.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக சுவிசேசத்தின் சில பகுதிகளை நீக்கிவிட்டனர்.

6.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக இயேசு மீண்டும் இப்பூமிக்கு வந்து ஆயிரம் வருடம் ஆட்சிசெய்வார் என நம்புகின்றனர்.

7.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக இயேசுவுக்குப் பின்பு மரியாள் வேறுபிள்ளைகளையும் பெற்றதாக நம்புகின்றனர்.

8.புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக, பாப்பரசரின் அதிகாரத்தை மறுத்து சுவிசேசத்தை சொல் அடிப்படையிலேயே விளக்க வேண்டும், ஒவ்வொரு கிருஸ்தவருக்கும் சுவிசேசத்தை விளக்கும் உரிமை உண்டு என்றும் நம்புகின்றனர்.

9.‌புரொடஸ்தாந்து பிரிவினர் கத்தோலிக்கர் மற்றும் ஓர்தொடெக்ஸ் பிரிவினருக்கு மாற்றமாக சுவிசேசத்தில் காணப்படும் வழிபாட்டு முறைகளை மாத்திரமே பேணிவருகின்றனர்.

புரொடஸ்தாந்து பிரிவினரின் தோற்றமும் அதன் விளைவுகளும்:

பாப்பரசரின் அதிகாரத்தை நிராகரித்து கிருஸ்தவ மதத்தின் அஸ்திவாரத்தை ஆட்டங்காணச் செய்யும்விதமாக புரொடஸ்தாந்து பிரிவினரின் தோற்றம் அமைந்ததால் இப்பிரிவினர் மீது பாப்பரசர்கள் பல இலட்சக் கணக்கான மக்களை பலிகொண்ட யுத்தங்களைத் தொடுத்தார்கள். அவைகளுள்:

1.பதினாறாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் சுமார் நாற்பது ஆண்டு காலமாக தொடர்ந்து கத்தோலிக்கர்களுக்கும், புரொடஸ்தாந்து பிரிவினருக்குமிடையே நடந்து வந்த யுத்தம்......


குறிப்பாக, 1572/08/24 அன்று பாப்பரசர் ப‌தின்மூன்றாம் ஜிரிகோரி என்பவரின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்ற "சென்பர்த்தோலோமோவ் (st.Bartholomew' s Day massacre) கொலைக்களத்தில் பண்டிகை தினமண்று கத்தோலிக்கர் புரொடஸ்தாந்து பிரிவினர் மீது தாக்குதல் நடாத்தி ஆயிரக்கணக்கான மக்களை வெட்டியும் மரங்களிள் தூக்கிலிட்டும் கொலை செய்தார்கள்.


"சென்பர்த்தோலோமோவ் கொலைக்களம்

இதில் முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டதாக புரொடஸ்தாந்து பிரிவினர் உறுதிசெய்ய கத்தோலிக்கர்களோ, தாங்கள் வெறும் இரண்டாயிரம் பேரைத்தான் படுகொலை செய்ததாக சமாளித்தார்கள்!!.

2.1536ம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்கள் அயர்லாந்தில் புரொடஸ்தாந்து சித்தாந்ததை திணிக்க முற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட யுத்தம் ‘பதினெட்டாம் நூற்றாண்டு வரை நீடித்து பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்தது.
3. ஜேர்மனியில் 1618 முதல் 1648 வரை முப்பது ஆண்டுகளாக கத்தோலிக்கர்கலுக்கும், புரொடஸ்தாந்து பிரிவினருக்குமிடையே நடந்த யுத்தகளங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.
4. ஸ்பெயின் நாட்டில் 1936 முதல் 1939 வரை கத்தோலிக்கருக்கும் புரொடஸ்தாந்து பிரிவினருக்குமிடையே நடந்த உள்நாட்டு யுத்தத்தில் 6845 கத்தோலிக்க மதகுருக்கள் உட்பட மூன்று இலட்சத்து ஆறாயிரம் மக்கள் உயிரிழந்தனர்.

அவ்வாறே புரோடஸ்தாந்து காலப்பகுதியில் அச்சுஇயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் விவிலியநூற்கள் பல்வேறுபட்ட மொழிகளில் பொழிபெயர்க்கப்பட்டன.  புரோடஸ்தாந்து சித்தாந்தப்படி விவிலியத்தை விளக்கும்உரிமை அனைத்து கிருஸ்தவர்களுக்கும் உள்ளது என்பதால் பலநூற்றாண்டு காலமாக மதகுருக்களின் கைகளில் தேவாலயங்களுக்குள் முடங்கிக்கிடந்த ‘பழையஏற்பாடு சகலரது கைகளிலும் கிடைக்கைக் கூடியநிலை உருவாகி ‘திருத்தூதுவர் வாழ்க்கை வரலாற்றை கொண்டிருந்த கிருஸ்தவ இலக்கியங்களில் ‘யூத,எபிரேய சித்தாந்தங்கள் இடம்பிடிக்க ஆரம்பித்தன.

யூதர்கள் கர்த்தரின் விருப்பத்திற்குரிய சமுதாயத்தினர், ஆப்ரஹாமுடன் கர்த்தர் உடன்படிக்கை செய்து கொண்டகாலம் முதல் உலகம் அழியும்வரை பலஸ்தீன் யூதர்களின் பூர்வீகம், யூதர்கள் பலஸ்தீனத்தில், சியோனிஸ சாம்ராஜ்யத்தை உருவாக்கியதும் அங்கே இயேசு கிருஸ்து மீண்டும் தோன்றுவார் என்பது போன்ற யூதநம்பிக்கைகள் கிருஸ்துவ சமுதாயத்துக்குள் பரவ ஆரம்பித்தன.

இதுவே சுமார் 60%  புரோடஸ்தாந்து பிரிவினரைக் கொண்ட அமெரிக்கா இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குவதற்கான மதரீதியான காரணமாவும் அமைந்துவிட்டன.

யஹ்வஹின் சாட்சியாளர்கள்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் 'பென்ஸ்லபீனியா மாநிலத்தில் ‘ஷார்லஸ்ராசல் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட கிருஸ்தவப் பிரிவே ‘யஹ்வஹின் சாட்சியாளர்கள் (கடவுளின்சாட்சியாளர்கள்) என அழைக்கப்படுகிறார்கள்.

கிருஸ்தவப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டும் இவர்கள் இன,மொழி பேதமின்றி பலரையும் தங்கள் கொள்கையில் இணைத்துள்ளனர்.
"யஹ்வஹ்" எனும் கடவுளின் பெயர் விவிலியத்தின் மூலப்பிரதியில்7200 இடங்களில் காணப்படுவதாகவும் மொழிபெயர்ப்பாளர்கள் அதை "கர்த்தர்" என திரிபடையச் செய்துவிட்டார்கள் என நம்பும் இப்பிரிவினர் ஏனைய பிரிவினர்களை கிருஸ்தவர்களாக அங்கீகரிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments:

Post a Comment