Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

3. இறைத்தூதர்களின் வரலாற்றைக் கூறுமிடத்து புரோகித வர்க்கத்தின் கற்பனையில் உருவான பல அபத்தமான கருத்துக்கள் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன. தங்கள் மன இச்சைகளுக்கேற்ப அவர்களின் வரலாற்றைத் திரித்து, வெளியில் சொல்வதற்கே வெட்கக் கேடான பல தீமைகளையும் தீர்க்கதரிசிகள் எனப்படுவோர் புரிந்ததாக பைபிளைத் தொகுத்தவர்கள் கதை கட்டியுள்ளனர். சாதாரண மக்கள் பாவமான காரியத்தில் ஈடுபட்டுவிட்டு, ஏன் புரோகித வர்க்கமே கூட இத்தகைய மானக்கேடான செயல்களைச் செய்துவிட்டு தீர்க்கதரிசிகளே அவற்றைச் செய்தபோது நாங்கள் செய்வதொன்றும் பெரிதல்ல என்று கூறித் தீமைகளை நியாப்படுத்தும் நிலையைத்தான் பைபிளின் இக்கதைகள் ஏற்படுத்தியுள்ளதே தவிர இக்கதைகள் மூலம் சமூகத்திற்கு எந்த படிப்பினையையும் வழங்கவில்லை.

சில உதாரணங்கள்:

1. நோவா என்ற தீர்க்கதரியைப் பற்றி “நீதிமான்” , “உத்தமன்” என்றெல்லாம் புகழும் அதே பைபிள் (ஆதி: 6:9,10) மற்றொரிடத்தில் அவரைப்பற்றிக் கூறும்போது முதன்முதலில் மதுபானத்தைத் தயாரித்தவர் என்றும் மதுபானம் அருந்தியதால் போதை தலைக்கேறி அதனால் ஆடை விலகிப் படுத்திருந்ததாகவும் அதனால் அவரது சொந்தப் புதல்வர்களே வந்து அவரது நிர்வாணத்தை மறைத்த அவலமான நிலைக்கு ஆளானதாகவும் கதை கட்டியுள்ளது. (ஆதி-9:20-23)

2. லோத்து என்னும் தீர்க்கதரிசியைக் குறித்து அவர் பரிசுத்தமானவர் என்றும் நீதிமான் என்றும் அடையாளப்படுத்தும் அதே பைபிளில் (2 பேதுரு 2:7,8) வேறொரிடத்தில் மது அருந்தி போதையில் படுத்திருந்ததாகவும் அதனால் அவருடைய புதல்விகள் அவருடன் சல்லாபித்து அதன் மூலம் அவருக்கு சந்தததிகள் உருவாயின என்றும் கற்பனை செய்துள்ளது. (ஆதி: 19:31-36)

3. இஸ்ரவேல் இனத்தின் பிதாவாகிய யாக்கோபு ஏமாற்றுக்காரனும் வஞ்சகனுமாக இருந்தான் என்றும் பைபிள் (ஆதி: 27:1-46) கூறுகின்றது.

4. தமது படைவீரனின் மனைவியுடன் தகாத உறவு கொண்டு அவள் கற்பமானதும் அப்பழியைத் தனது வீரனின் தலைமேல் சுமத்த முயன்று முடியாமல் போகவே அவனைத் தந்திரமாகக் கொலை செய்ததுடன் அவனது மனைவியையும் தனதுடமையாக்கிக் கொண்ட ஒரு கொடூரனாக தாவீது என்ற தீர்க்கதரிசையை பைபிள் சித்தரிக்கின்றது. (இரண்டாம் சாமுவேல் 11: 1-27)

5. “தாவீதின் குமாரனும், பூமியில் சகல ராஜாக்களிலும் ராஜாவும்” என்றும், “அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கியவனும்” என்றெல்லாம் பைபிள் அறிமுகப்படுத்தும் சாலமன் (1 இராஜாக்கள்: 10:23) திருமணம் முடிக்க விலக்கப்பட்டவர்களுடன் உறவு கொண்டு அவர்கள் மீது அதிகமாக மோகம் கொண்டிருந்ததாகவும் (1 இராஜாக்கள் 11:2) அவர்களுடைய ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி அந்நிய தேவர்களைப் பூஜித்ததாகவும் (1 இராஜாக்கள் 11:3-7) கூறுகின்றது.

6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் (மத்தேயு 12:34, 12:39, யோவான் 8:44) முன்கோபம் உடையவராகவும் (யோவான் 2:13-17, மத்தேயு 21:19) திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.

ஆனால் இவற்றுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட நிலையில் திருக்குர்ஆன் இறைத்தூதர்களை உண்மையாளர்களாகவும் , மகான்களாகவும், இறைவனின் வாக்குறுதியை நிறைவேற்றியவர்களாகவும், சமூகத்திற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த உத்தம புருஷர்களாகவும் சுட்டிக்காட்டுகின்றது. மட்டுமன்றி இறைதூதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதன் மூலம் இறைவிசுவாசிகளின் இறையச்சமும் நல்லொழுக்கமும் அதிகரிக்கும் விதத்தில் அவர்களின் வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது.

“(நபியே) தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தை பலப்படுத்தும் அனைத்தையும் உமக்கு விவரித்துள்ளோம், மேலும் இதன் மூலம் உண்மையும், நல்லுபதேசமும், விசுவாசிகளுக்கு அறிவுரையும் உமக்கு வந்துள்ளன.” (அல்குர்ஆன் 11:120)

இவர்களுக்குத் தான் வேதத்தையும் ஞானத்தையும் நபித்துவத்தையும் நாம் வழங்கியிருந்தோம். ஆகவே அவைகளை இவர்கள் நிராகரித்துவிட்டால் நிராகரிக்காத மக்களை நிச்சயமாக நாம் ஏற்படுத்தி விடுவோம். இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே அவர்களுடைய நேரான வழியை நீங்களும் பின்பற்றுங்கள். நீர் கூறுவீராக. இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 6: 89,90)

அன்றி, நம் கட்டளைக்கேற்ப நேர் வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். மேலும் நன்மை செய்யும்படியும் தொழுகையைக் கடைபிடித்து ஜக்காத் கொடுத்து வரும்படியும் அவர்களுக்கு வஹ்யி அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தனர். (அல்குர்ஆன் 21:73)

இன்னும் வழிகேட்டில் இல்லாத நூஹையும் (7:61) சன்மார்க்கப் பிரச்சாரம் செய்த லூத்தையும் (7:80-84) நல்லடியார்களுள் ஒருவராகிய யாக்கூபையும் (21:72) அடக்கமும் பணிவும் கொண்டு இறைமார்க்கத்தில் உறுதியுடன் நிலைத்து நின்றவர்களான தாவூது மற்றும் சுலைமானையும் (27:15, 38:50) 

இறைவனுக்கு நெருக்கமான அடியாராகவும், பரிசுத்தமானவராகவும் (3:45) தாயை கண்ணியப் படுத்தியவருமான (19:32) ஈஸா (இயேசு)வையும் (அவர்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்) திருக்குர்ஆன் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது.

நன்றி: http://www.islamkalvi.com/

0 Comments:

Post a Comment