Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

(திருக்குர்ஆன் ஏசுவை கடவுள் என்கிறது என்று அவதூறு பரப்பிய உண்மையடியானுக்கு மறுப்பு)
பாகம் -1 

இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் சர்வ சித்தனான அல்லாஹ்வை மறுத்து, அவனது திருத்தூதர்களின் ஒருவரான மாண்புமிகு நபி ஈஸா (அலை) அவர்களை கடவுளாக சித்தரித்து, முக்கடவுள் கொள்கை என்னும் மாபெரும் வழிகேட்டில் உள்ளவர்களே கிருஸ்தவர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. பவுலின் கற்பனையை மதமாக்கி, மனித சிந்தனையில் உதித்த அசிங்களையும், கூளம் குப்பைகளையும் வேதம் என்று தம் கைப்பட எழுதிவைத்துக் கொண்டு கிஸ்தவமே உண்மையான மதம் என்று ஒப்பாரி வைப்பது காலம்காலமாக நடந்துகொண்டே வருகிறது.

இந்நிலையில் நாற்றமெடுத்து நாறிக்கொண்டிருக்கும் கிருஸ்தவ (மதக் ?) கோட்பாட்டை தூக்கிப்பிடிக்க ஒருவர் கிளம்பியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை உண்மையடியான் என்ற லேபிளில் உலாவரும் டாஸ்மார்க் பொய்யடியான்தான். இறையளித்த இஸ்லாத்தை கொச்சைபடுத்தியும், பரிசுத்த வேதமாம் திருக்குர்ஆனை தொடர்ந்து அவமதித்தும் வரும் இந்த ஆசாமி சில மாதங்களுக்கு முன்னர் குர்ஆன் ஏசுவை கடவுள் என்று சொல்கிறது என பொய்யான தலைப்பில் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தை அவன் இவன் என்று ஒருமை நடையில் பேசி அதை பதிவு செய்து தனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளார்.

நரகத்தின் படுபாதாளத்திற்கு நான் சென்றே தீருவேன், முஸ்லிம்களாகிய நீங்கள் என்னை நேர்வழிபடுத்திட முடியுமோ?’ என்று சவால் விடுவதுபோல, ஆய்வு என நினைத்துக் கொண்டு இணையத்தில் தொடர்ந்து உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார் இந்த உண்மையடியான்.

அவ்வாறான உளறல்களின் வரிசையில், நபி ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்று குர்ஆனையும் ஹதீஸையும் வைத்து நிரூபிக்கின்றேன் பாருங்கள் என்று சூளுரைத்த இவர், தன் தலையில் தானே மண்ணை வாரிபோட்டதுபோல் இந்த உலகத்தில் (இதுவரை வாழ்ந்து மரணித்த, இனி வாழ இருக்கின்ற) இன்று வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய முஸ்லிம்கள் அனைவரும் கிருஸ்தவர்களுக்கு கடவுள்கள் என்று ஆய்வு செய்திருக்கிறார். இதென்னவேடிக்கை என்கிறீர்களா? ஆக்கத்தை தொடர்ந்து படியுங்கள், இறுதியில் புரியும். அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தை பொய்யாக்க முனைபவர்களை வல்ல அல்லாஹ் இப்படித்தான் இழிவுபடுத்துவான் போலும்.

இஸ்லாத்தை பொய்யாக்குகிறேன் பாருங்கள் என்று பலமுறை அவதாறமெடுத்து இறுதியில் முஸ்லிம்களின் பதில்களால் மூக்கறுபட்டு, பல இழிவுகளையும் சந்தித்தவர்தான் இந்த பொய்யடியான். இவரைப் பற்றி எழுதி காலத்தை வீணடிக்காமல் இவரின் அண்டப்புழுகல்களின், ஆகாசப்புழுகல்களின் விளக்கத்திற்கு வருவோம்.

பொய்யடியானின் பொய் கூற்று- 1

//உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைவரையும் சாத்தான் தீண்டுவான், அதனேலேயே பிறந்த குழந்தை அழுகின்றன என்பது இஸ்லாமிய நம்பிக்கை. ஏசுவைத்தவிர உலகத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளும் சாத்தானால் தீண்டப்படும் என்பது நபி மொழி. எனவே ஏசு பரிசுத்தமானவர், மற்றவர்களெல்லாம் சாத்தானால் தீண்டப்பட்டவர்கள். ஆகையால் ஏசு கடவுள். //

நமது விளக்கம்:-


ஹதீஸின் தமிழ் மொழிபெயர்ப்பு

புதிதாகப் பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைக் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்) மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் சொன்னார்கள். பிறகு அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் நீங்கள் விரும்பினால், இந்தக்குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து காக்குமாறு உன்னிடம் நான் வேண்டுகிறறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்) எனும் 3:36 வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (புகாரி 4548) இன்னுமொரு அறிவிப்பில்-ஒவ்வொரு மனிதனையும் அவர் தாய் பெற்றெடுக்கும்போது அவரை ஷைத்தான் தீண்டுகிறான், மர்யமையும், அவர் புதல்வரையும் தவிர எனக் கூறப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக வரும் மற்றொரு ஹதீஸ்
ஆதம் (அலை) அவர்களின் வழித் தோன்றல்களில் எந்தக் குழந்தையும் பிறக்கும் பொழுது ஷைத்தான் அதனைக் கிள்ளாமலில்லை. எனவே அவன் அதனைக் கிள்ளி விடுவதன் காரணமாக, அது அழுது கத்துகிறது – ஆனால் மர்யமும் அவர்களின் மகனாரும் தவிர, (எல்லாக் குழந்தைகளும் பிறக்கும் பொழுது அவற்றை ஷைத்தான் கிள்ளி விடுவதன் காரணமாக அழுது கத்துகின்றன’) என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர்.’
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரழி) ஆதாரம்:புகாரி,முஸ்லிம்,அஹ்மத்.

அன்பிற்குரியவர்களே! மேற்கண்ட ஹதீஸை அரைகுறையாக படித்துவிட்டு திருவாளர் உண்மையடியான் ஏசுவை கடவுளாக இஸ்லாம் கூறுகிறது என்கிறார். திருவாளர் உண்மையடியானின் கருத்துப்படி ஏசுவை ஷைத்தான் தீண்டவில்லை அதனால் அவர் கடவுள் என்றால், ஷைத்தான் மர்யம் (அலை) அவர்களையும்தான் தீண்டவில்லை என்று அந்த ஹதீஸ் கூறுகிறது. அதனால் திருவாளரின் லாஜிக்படி அன்னை மர்யம் (அலை) அவர்களையும் கடவுள் என்று அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே இவர் மர்யமையும் கடவுள்தான் என்கிறாரா? (சொன்னாலும் சொல்வார்).

அதுமட்டுமல்லாது (உண்மையடியானின் நம்பிக்கைபடி) ஏசு என்ற கடவுளை பெற்றெடுத்த (லேட்டஸ்ட் கடவுளான) மர்யம் (அலை) அவர்களுடைய தாயாரையும் சேர்த்தே இவர் வணங்கவேண்டும். ஏனெனில் வாரிசு அடிப்படையில் உண்மையடியானுக்கு இரண்டு கடவுள்களை கொடுத்த மர்யம் (அலை)அவர்களின் தாயார்தான் கடவுளுக்கெல்லாம் கடவுள்.

மேலும் ஏசுமட்டும்தான் பரிசுத்தமானவர், ஷைத்தானின் தூண்டுதலுக்கு அப்பாற்பட்டவர் என்கிறார் உண்மையடியான். அப்படியானால் இவ்வுலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும், யூதர்களும், கிருஸ்தவர்களும், தீர்க்கதரிசிகள் என்று விசுவாசிக்கும் நோவா, டேவிட், ஆப்ரஹாம், ஐசக், இஸ்மவேல், மோஸே (அவர்கள் அனைவர் மீதுமும் இறைசாந்தி என்றும் நிலவட்டுமாக) போன்ற இறைத்தூதர்களின் நிலை என்ன? இவர்களைப் பற்றி உண்மையடியான் என்ன சொல்ல வருகிறார்? அவர்களெல்லாம் ஷைத்தானால் வழிகெடுக்கப்பட்டவர்கள் என்கிறாரா? (நவ்வூதுபில்லாஹ்).

மக்களே! உண்மையடியானின் லாஜிக் எப்படியெல்லாம் உதைக்கிறது, எங்கே போய் முடிகிறது என்பதை பார்த்தீர்களா? இவ்வாறு உளறிக் கொண்டிருப்பதை இனியும் இவர் நிறுத்தவில்லையெனில், அட ஞான சூனியமே! உந்தன் மறுபெயர்தான் உண்மையடியானோ!! என்று கிருஸ்தவ மக்களே இவர் முகத்தில் காரி உமிழ்ந்து, இவரை செருப்பால் அடித்து விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

சரி மேற்கண்ட ஹதீஸின் விளக்கத்திற்கு வருவோம். இந்த ஹதீஸில் ஷைத்தான் குழந்தையை தீண்டுவது என்றால் என்ன என்பதை சற்று நிதானமாக சிந்தித்தால் அந்த ஹதீஸை மிகத் தெளிவாக விளங்கலாம்.

1-பிறப்பு:-என்பது- அக்குழந்தை பிறந்து முதலாவதாக இடும் சப்தத்தை குறிக்கிறது என்பதை (مولود يولد) பிறக்கும் வேளையில் என்ற நபியவர்களின் வார்த்தை குறிப்பிடுகிறது.

2-தீண்டுதல்:- என்றால் ஷைத்தானால் வழிகெடுக்கப்படுவது என்று பொருளல்ல. பிறந்த குழந்தையை அவன் எப்படி வழிகெடுக்க இயலும்?. தீண்டுதல் என்றால் ஷைத்தான் தன் கரத்தினால் அக்குழந்தையின்; மீது அடித்து ‘இவர் என் கட்சிக்காரர் அவர்களை நான் வழி கெடுப்பேன்’ என்று கூறுவான். அக்குழந்தையை அவன் பிற்காலத்தில் தன் வலையில் வீழ்த்த முயற்சிப்பான் என்ற குறிப்பு இந்த ஹதீஸில் காணப்படவில்லை, என்றாலும் அவன் மக்களை (தற்போது உண்மையடியான் வழிகெட்டு இருப்பது போல) வழிகெடுக்க முயற்சிப்பான் என்று பிற திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் வாயிலாக நாம் விளங்க முடிகிறது. ஆக தீண்டுதல் என்பது கிள்ளிவிடுவது, அடிப்பது என்ற பொருளைத் தருகிறது.

3-மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர, என்றால் ஷைத்தான் அவ்விருவரையும் தீண்டுவதற்கு சென்றான், ஆனால் அவனால் அது முடியாமல் போய்விட்டது (மர்யம் (அலை) அவர்கள் தாயின் பிராத்தனைதான் அதற்குக் காரணம் என்பதை பின்னர் விரிவாக விளக்குவோம்). அதே போன்று உண்மை விசுவாசிகளையும் ஷைத்தானால்; தீண்ட முடியாது. நபிமார்கள் மற்றும் இறைநம்பிக்கை கொண்ட முஸ்லிம்களின் பாதுகாப்புத் தன்மையில் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் மேற்கண்ட நபிமொழி அமையவில்லை. ஏனெனில் உண்மையான இறைவிசுவாசிகளை ஷைத்தானால் வழிகெடுக்க முடியாது என்று அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.

15:42. ”நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை – உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர” என்று கூறினான்.

16:99. எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக ஷைத்தானுக்கு எவ்வித அதிகாரமுமில்லை.
ஆகவே ஷைத்தானின் தீண்டுதல் இறைநம்பிக்கை கொண்ட முஃமின்களை எதுவும் செய்து விடமுடியாது.

4-”பிறக்கும் குழந்தை எதுவாயினும்”, ”எந்தக் குழந்தையும் பிறக்கும் பொழுது” என்ற சொற்றொடர்கள்;, பொதுவாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தீண்டுதல் என்பதை ஷைத்தான் வழிகேடு என்று பொருள் கொண்டால், நோவா, டேவிட், ஆப்ரஹாம், ஐசக், இஸ்மவேல், மோஸே (அவர்கள் அனைவர் மீதுமும் இறைசாந்தி என்றும் நிலவட்டுமாக) உட்பட அனைத்து நபிமார்களும், நல்லோர்களும் ஷைத்தானின் வழிகேட்டிலிருந்து இருந்து தப்பிக்க முடியாது என்ற பொருள் வரும். அவ்வாறு இல்லையெனில் ஏசு மற்றும் மர்யம் இவ்இவ்விருவர் மட்டுமே வழிகேட்டிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்ற கருத்து அடிப்பட்டுப் போய்விட்டது. எனவே இந்த ஹதீஸில் ஷைத்தானின் தீண்டுதல் என்பதை ஷைத்தானின் வழிகேடு என்ற பொருளில் குறிப்பிடப்படவில்லை என்பதை அறியலாம்.

இதுபோன்று மோலோட்டமாக ஆய்வுசெய்தால் பலபேரை நாம் வழிகெட்டவர்கள் என்று சொல்லி விடலாம். உதாரணமாக

38:41. ”மேலும் (நபியோ) நமது அடியார் ஐயூபை நினைவு கூறுவீராக! அவர் தன் இரட்சகனை அழைத்துப் பிரார்த்தனை செய்து நிச்சயமாக என்னை ஷைத்தான் துன்பத்தையும், வேதனையையும் கொண்டு தீண்டிவிட்டான்” (என்று கூறியபோது அதற்கு நாம்)….

என்று திருக்குர்ஆனின் மற்றொரு வசனம் கூறுகிறது. நபி ஐயூப் (அலை) அவர்களை ஷைத்தான் தீண்டினான் என்றால் அவர்கள் வழிகெட்டுவிட்டார்கள் என்று பொருளல்ல.

கிருஸ்தவ நண்பர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வது என்னவெனில், முஸ்லிம்களாகிய நாங்கள் அன்னை மர்யம் (அலை) முதல் இறைத்தூதர் நபி ஈஸா (அலை) அவர்கள் உட்பட இவ்வுலகில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளையும் புனிதமானவர்களாகவே கருதுகிறோம். ஷைத்தானின் கெடுதல்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட பரிசுத்தவான்களாக அவர்கள் அனைவரையும் விசுவாசங்கொள்கிறோம். திருக்குர்ஆனின் வசனமான 3:36 வசனமோ, மேற்கண்ட ஹதீஸோ இல்லாவிட்டாலும் முஸ்லிம்களாகிய நாங்கள் அன்னை மர்யம் (அலை) அவர்களையும், நபி ஈஸா (அலை) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களையும் இறைவனால் பாதுகாக்கப்பட்ட பரிசுத்தவான்களாக உறுதியாக நம்புவோம் என்பதையும் பதிவுசெய்கிறோம்.
ஆனால் இதே நேரத்தில் இன்னுமொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது நபி ஈஸா (அலை) அவர்களை ஷைத்தான் சுமார் 40 நாட்கள் சோதித்திருக்கிறான் என்று பைபிள் கூறுகிறது (பார்க்க மத்தேயு 4 1-11). ஷைத்தான் ஏசுவை ஆக்கிரமித்திருக்கிறான் என்பதை பைபிளின் வார்த்தைகளே (அதாவது மலையில் அவரை ஏற்றி இருக்கிறது என்ற வாசகம்) சான்றுகளாக இருக்கிறது. ஏசு ஷைத்தானின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிக்கவில்லை என்று பைபிள் கூறுகிறது, ஆனால் குர்ஆனோ அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்று கூறுகிறது. இவற்றில் எதை உண்மையடியான் போன்றோர் நம்பப்போகிறார்கள்? கிருஸ்தவர்களுக்கு ஏசுமீது உண்மையாக அக்கரையிருந்தால் பைபிளை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு புனிதக் குர்ஆனை பற்றிப்பிடுத்து இஸ்லாத்தில் இணைவார்களாக!
பாகம் -2
பொய்யடியானின் பொய் கூற்று- 2

// குர்ஆனின் 3:36 கூற்றுப்படி ஏசு சாத்தானை விட்டும் பாதுகாக்கப்பட்டவர். ஏசுவின் தாயார் மர்யம் அவர்கள் ஏசுவை பெற்ற காரணத்திற்காக அவரும் பாதுகாக்கப்பட்டார். எனவே ஏசு கடவுள் //

நமது விளக்கம்:-
திருக்குர்ஆனின் 3ம் அத்தியாயம் ஆலஇம்ரானின் வசனங்கள் 35,36,37 வது வசனங்கள்

3:35. இம்ரானின் மனைவி ”என் இரைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்;. எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்.

3:36. (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்; ”என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்;. ஆண், பெண்ணைப் போலல்ல. (மேலும் அந்தத்தாய் சொன்னாள்;) ”அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;. அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்;. அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், ”மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; ”இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது – நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.

மேற்கண்ட வசனத்தொடர்களில் 3:36 வது வசனத்தை மட்டும் படித்துவிட்டு திருவாளர் உண்மையடியான் மர்யம் (அலை) அவர்கள் ஏசுவை பெற்ற காரணத்திற்காக அவரும் பாதுகாக்கப்பட்டார் என்று அன்னை மர்யம் (அலை) அவர்களை தரம்தாழ்த்தி எழுதியுள்ளார்.

முஸ்லிம்களைப் பொருத்தவரையில் அவ்விருவருமே சங்கைக்குரியவர்கள், மரியாதைக்குரியவர்கள் என்று ஏற்கனவே எழுதிவிட்டோம். இன்னும் ஒருபடி மேலே சொன்னால் அன்னை மரியம் (அலை) அவர்களை முஸ்லிம்களின் முன்மாதிரி என்று திருக்குர்ஆனில் (பார்க்க 66:12) இறைவன் பறைசாற்றுகிறான். முஸ்லிம்களிடத்தில் அன்னை மரியம் (அலை) அவர்களுக்கு தவிர்க்க இயலாத தனிப்பெரும் இடமிருக்கிறது. (விரிவாக அறிந்து கொள்ள ஸூரா மர்யம் என்ற பெயரிலுள்ள திருமறை குர்ஆனின் 19 அத்தியாயத்தை படித்துப் பாருங்கள்.)

ஆனால் பொய்யடியானோ மர்யம் (அலை) அவர்கள் ஏசுவை பெற்ற காரணத்திற்காகவே அவரும் பாதுகாக்கப்பட்டார் என்கிறார். இதற்கு ஆதாரம் எங்கிருந்து இவருக்குக் கிடைத்தது என்று நமக்குத் தெரியவில்லை.

பொய்யடியான் தவறாக விளங்கிய அதே வசனம்; (3:36), இம்ரானின் மனைவியும், மர்யம் (அலை) அவர் தாயருமாகிய அந்த பெண்மணி ”அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்குகளிலிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்” என்று இறைவனிடம் பிராத்தித்ததாகக் கூறுகிறது. அந்த பிராத்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டதாகவும் அதற்கு அடுத்த வசனம் (3:37) தெளிவுபடுத்துகிறது. எனவே மர்யம் (அலை) மற்றும் நபி ஈஸா (அலை) ஆகிய இருவர்களுமே ஷைத்தானின் தீண்டுதலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள், காரணம் அவர்களுடை தாயார் கேட்ட பிராத்தனை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஏசுவை பெற்ற காரணத்திற்காகவே மர்யம் பாதுகாக்கப்பட்டார் என்பதில் பொய்யடியானுக்கு உறுதியிருந்தால், குர்ஆன் ஏசுவை கடவுள் என்கிறது என்பதை அவரால் நிரூபிக்க முடியுமென்றால் இதையே தலைப்பாக வைத்து நம்முடன் ஒரே மேடையில் விவாதிக்க வரட்டும். இவரோடு நேரடி விவாதத்திற்கு இஸ்லாமிய இணையப்பேரவை என்றும் தயார் என்பதை நாம் என்றோ அறிவித்துவிட்டோம். நம் விவாத அழைப்பைக் கண்டு பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடிஒழிந்த பொய்யடியானின் சரித்திர சாதனையை நீங்களும் அறிவீர்கள். இந்நிலையில் ஏசுதான் கடவுள் என்ற தலைப்பில் விவாதிக்கவாவது உண்மையடியானுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் தைரியம் இருக்கிறதா? (அது எங்கே இருக்கப்போகிறது?)

பொய்யடியானின் பொய் கூற்று -3

//ஆனால் இத்தகைய பாதுகாப்பு முஹம்மதுக்கு நபிக்கு இல்லை. குர்ஆன் 48:2 வது வசனத்தின் மூலம் முஹம்மது நபி பாவம் செய்வதற்கு அல்லாஹ்வே அனுமதி (License) கொடுக்கிறாhன். எனவே அவர் பெரும் பாவங்களை செய்தார்.//

நமது விளக்கம்:-

திருவாளர் உண்மையடியான் அல்லாஹ்வின் இறுதித்தூரர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது இரண்டு அவதூறுகளை அள்ளிவீசுகிறார். அவைகள்

1)நபி (ஸல்) அவர்களுக்கு ஷைத்தானின் தீண்டுதலிலிருந்து பாதுகாப்பு இல்லை

2)நபி பாவம் செய்வதற்கு அல்லாஹ்வே அனுமதி
(License)  கொடுக்கிறான். எனவே அவர் பெரும் பாவங்களை செய்தார். என்பதாகும்

ஹதீஸின் தமிழ் மொழிபெயர்ப்பு
‘நிச்சயமாக, உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஷைத்தான் அவருடன் இருக்கும் சகாவாகவும், ஒரு வானவரை அவருடன் இருக்கும் சகாவாகவும் சாட்டப்படாமலில்லை. என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர். ‘நாயகமே! தங்களுக்குமா? (அவ்விதம் சாட்டப்பட்டிருக்கிறது)’ என்று தோழர்கள் வினவினர். ‘ஆம்’ எனக்கும் தான். ஆனால் நிச்சயமாக, அல்லாஹ் (எனக்குப் பேரருள் புரிந்து) என்னை அவன் மீது மிகைக்கச் செய்துள்ளான். எனவே அவன் இஸ்லாமாகி நன்மையைத் தவிர வேறு எதனையும் எனக்கு ஏவுவதில்லை’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர்.’
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரழி)
ஆதாரம்: முஸ்லிம்.

இது சம்மந்தமாக வரும் மற்றொரு ஹதீஸ்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓரிரவு என்னிடமிருந்து புறப்பட்டுவிட்டனர். அப்பொழுது அவர்கள் மீது எனக்கு உரோஷம் பொத்துக்கொண்டு வந்தது – அவர்கள் தம் மனைவியரில் எவரிடமாவது சென்றிருக்கக்கூடும் என்பதனால். பின்னர் அவர்கள் வந்தார்கள். அப்பொழுது நான் செய்த வேலையைப் பார்த்துவிட்டு, ‘உமக்கு உரோஷம் பிறந்துவிட்டதா?’ என்று வினவினர். அதற்கு நான், ‘என் போன்றவள் தங்களைப் போன்றவர்கள் மீது உரோஷம் கொள்ளாமல் இருக்க முடியுமா?’ என்று வினவினேன். அப்பொழுது அவர்கள், ‘உம்முடைய ஷைத்தான் உம்மிடம் நிச்சயமாக வந்துவிட்டான்’ என்று கூறினர். ‘என்னோடு ஷைத்தான் இருக்கிறானா?’ என்று கேட்டேன். ‘ஒவ்வொரு மனிதரிடமும் ஷைத்தான் இருக்கவே செய்கிறான்’ என்று அவர்கள் கூறினார்கள். ‘தங்களுடனுமா?’ என்று நான் கேட்டேன். ‘ஆம்;;’ எனினும் அல்லாஹ் என்னை அவன் மீது மிகைக்கச் செய்திருக்கிறான். எனவே அவன் எனக்குக் கீழ்ப்படிந்துவிட்டான்’ என்று கூறினர்.”
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரழி)
ஆதாரம்: முஸ்லிம், நஸயீ

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தானின் தீண்டுதல் மற்றும் சூழ்ச்சிகளை விட்டும் முழுபாதுகாப்பைப் பெற்றவர்கள் என்பதை விளக்கத் துவங்கினால் இக்கட்டுரை முடிவுக்கு வராது. பல புத்தகங்களாக வெளியிடவேண்டிய அளவிற்கு செய்திகளைக் கொண்ட தலைப்பு இது. உண்மையடியானின் போலி முகத்திரையை கிழித்தெறிவதற்காக இரண்டு ஹதீஸ்களை மட்டும் இங்கு எடுத்தாளுகிறோம்.

மேற்கண்ட ஹதீஸ்களை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு வானவரும், ஒரு ஷைத்தானும் இருக்கிறான். இருப்பினும் நபி (ஸல்) அவர்களிடமிருந்த ஷைத்தானை வல்ல இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட வைத்துவிட்டான். மேலும் அந்த ஷைத்தானை மிகைக்கும் சக்தியை வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கியுள்ளான் என்பதும் தெளிவு. எனவே அவன் நன்மையைத் தவிர வேறு எதனையும் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்க இயலாது. இதற்குமேல் இந்த ஹதீஸ்களை விளக்கவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறோம்.
ஒவ்வொரு மனிதனும் அவரை தாய் பெற்றெடுக்கும்போது ஷைத்தான் தீண்டுகிறான், மர்யமையும், அவர் புதல்வரையும் தவிர என்று கூறிய நபி பெருமானர்; (ஸல்) அவர்கள்தாம் தனக்குள்ள பாதுகாப்பைப் பற்றியும் தெரிவிக்கிறார்கள். எனவே நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி வந்த அந்த ஹதீஸை தூக்கிப்பிடிக்கும் உண்மையடியான், நபி (ஸல்) அவர்களைப் பற்றிவரும் இவ்விரு ஹதீஸ்களையும் நம்பித்தான் ஆகவேண்டும், தவிர்க்க இயலாது.

2) நபி (ஸல்) பாவம் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி (License) கொடுத்தானா?

யாருக்கு? யார்? License கொடுத்திருக்கிறார் என்பது இத்தலைப்பின் இறுதியில் புரியும்.

மக்களே! 21ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மெண்டல் என்ற பட்டம் வழங்குவதாக இருந்தால், அதை உண்மையடியானைத் தவிர வேறு எவருக்கும் வழங்க இயலாது. அப்பட்டத்தை உண்மையடியானைத் தவிர வேறு எவரும் பெற்றிடவும் இயலாது.

இவ்வுலகில் வாழும் 160 கோடி முஸ்லிம்களும் தங்களுக்கு வழிகாட்டியாக நம்பும் ஒரு மனிதப் புனிதரை விமர்ச்சிக்க வேண்டுமென்றால், குறைபட்சம் சப்பைகட்டுகள் கட்டி விவாதிக்கும் அளவிற்குள்ள ஆதாரங்களாவது இவர் அளிக்கவேண்டும்.  நபி (ஸல்) பாவம் செய்வதற்கு அல்லாஹ்வே அனுமதி (License) கொடுத்தான் என்கிறார். கொஞ்சம்கூட அறிவுக்கும் இவருக்கும் சம்மந்தமில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார் இந்த உண்மையடியான். இதற்குத்தான் இவருக்கு டாஸ்மார்க் பொய்யடியான் என்ற பட்டம் கிடைத்திருக்கிறது. இனி என்னென்ன பட்டங்களை எல்லாம் வாங்கிக் குவிக்க இருக்கிறாரோ தெரியவில்லை. 

திருக்குர்ஆனின் 48வது அத்தியாயம் Fபதஹ்ஹின் 2து வசனம்

48:2. உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
மேற்கண்ட குர்ஆன் வசனத்தைத்தான் ஆய்வுசெய்கிறேன் பேர்வழி என்று படித்துவிட்டு இப்படியொரு அபத்தக்கருத்தை அள்ளி வீசியுள்ளார். மேற்கண்ட கண்ட அந்த வசனத்திலேயே     (வ யஹ்தியக ஸிராத்தம் முஸ்தகீமா) உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும் என்று வந்துள்ளதை இவர் திட்டமிட்டு மறைப்பதின் உள்நோக்கம் என்ன?

தன்னுடைய அடிமைகளின் பாவங்களை மன்னிப்பதும், அல்லது தண்டிப்பதும் எஜமானான அல்லாஹ்வின் தனிப்பெரும் அதிகாரமாகும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நபி (ஸல்) அவர்களுடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்துவிட்டதாக சொன்னால், பாவம் செய்ய அல்லாஹ்வே நபிகளுக்கு அனுமதி வழங்குவதாக பொருள் கொள்ள முடியுமா? இது சர்வசித்தனான வல்ல இறைவனின் மீதே இட்டுக்கட்டிய பெரும் அவதூறு இல்லையா?

நபி பாவம் செய்வதற்கு அல்லாஹ்வே அனுமதி (License) கொடுக்கிறான். எனவே அவர் பெரும் பாவங்களை செய்தார் என்று அவதூறாக எழுதியுள்ள உண்மையடியான், தன் தவறை உணர்ந்து, வருந்தி பாவமீட்சி பெறவில்லையெனில் அதற்கான கூலியை மறுமையில் வாங்கிக்கொள்வார், வசமாக மாட்டிக்கொள்வார்.

உண்மையடியான் தன் கூற்றில் உண்மையாளராக இருந்தால் இதையாவது தலைப்பாக வைத்து நம்மோடு பகிரங்க நேரடி விவாதத்திற்கு தயாராகட்டும். அந்த விவாதத்தில் நபிகள் செய்த பாவங்களை ஒவ்வொன்றாக நம்முன்னர் பட்டியலிடட்டும். இறைவன் நபிகளாருக்கு கொடுத்ததாகக் கூறும் (License) அனுமதியையும் மறக்காமல் கொண்டுவந்து தரட்டும். அவர் எடுத்துவைக்கும் சொத்தை வாதங்கள் ஒவ்வொன்றுக்கும், அவருடைய குறுக்கை நொருக்கும் அளவிற்கு நாம் பதில் கூறுவோம் இன்ஷா அல்லாஹ்.

நண்பர்களே! நம்முடைய அனுபவத்தில் பல்வேறு கிருஸ்தவ பெருமக்களோடு உரையாடியிருக்கிறோம், விவாதித்திருக்கிறோம். இன்றும் கூட இஸ்லாத்தை விமர்ச்சிக்கும் பல கிருஸ்தவகளிடம் தொடர்போடு இருக்கிறோம். இஸ்லாத்தை விமர்சிக்கும் எவரும் உண்மையடியான் என்ற புனைப் பெயரில் உலாவரும் இந்த தறுதலையின் அளவிற்கு விஷமத்தனமான போக்கில் விமர்சித்ததில்லை.

நமக்கு ஆரம்பம் முதலே இவர் மீது சந்தேகம் உள்ளது. நமது தேசபிதா காந்தியை சுட்டுக் கொன்ற தேசதுரோகி கோட்சே, காந்தியடிகளை கொலைசெய்யும் முன் தன் கையில் இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சை குத்திக்கொண்டான். காரணம் கொலைப்பழியை முஸ்லிம்களின் மீது போடுவதற்காக. அதே சங்பாரிவார பாணியில் இந்தத் தறுதலையும், முஸ்லிம்-கிருஸ்தவர்களிடையே நிலவும் பரஸ்பர நட்பை சீர்குழைக்க, கிருஸ்தவர்களின் லேபிலில் இஸ்லாத்தை விமர்ச்சிக்கிறதோ என்றும் நாங்கள் கருதுகிறோம். காரணம் ஒரு கிருஸ்தவரிடம் இருக்கவேண்டிய பைபிளைப் பற்றிய குறைந்த பட்ச அறிவுகூட இந்த தறுதலைக்கு இல்லாதது நம் சந்தேகத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது.

ஷைத்தான் யாரைத் தீண்டியிருக்கிறானோ இல்லையோ, உண்மையடியானை உடும்புப் பிடியாக பிடித்துள்ளான் என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை. இஸ்லாத்திற்கு எதிரான கயமைத்தனமான இவரின் போக்கு, ஷைத்தானின் நேரடி ஏஜண்டாக இவர் மாறிவிட்டதை காட்டுகிறது. இவர் இஸ்லாத்தை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு அவதூறுகள் பல பரப்பி தனது பாவங்களின் கணக்கில் பெருமளவு வரவு வைத்துள்ளார்.ஒருவேளை இஸ்லாத்திற்கெதிராக பொய்களையும், அவதூகளையும் வெளியிட்டு, பெரும் பாவங்கள் செய்வதற்கு ஷைத்தானிடமிருந்து விஷேஷ அனுமதி (Special License)  வாங்கியிருப்பாரோ? பெரும் பாவங்கள் செய்வதற்கு யாருக்கு? யார்? License கொடுத்திருக்கிறார் என்பதை தற்போது அறிந்து கொண்டீர்களா நண்பர்களே?


பாகம் -3

பொய்யடியானின் பொய் கூற்று-4

//9:28 ல் குர்ஆன் அனைவரையும் கெட்டவர்கள் என்று கூறுகிறது. ஏசு மட்டும்தான் பரிசுத்தமானவர். ஏசுவை சாத்தான் தீண்டாததற்குக் காரணம் அவர் கடவுளாக இருக்கிறார். கடவுளை ஷைத்தான் தீண்ட இயலுமா? //

நமது விளக்கம்:-

அன்பு நண்பர்களே! பைபிளின் மத்தேயு 4 அதிகாரம் 1-11 வசனங்கள் ஏசு சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டார் என்று தெரிவிப்பதை முன்னர் பார்த்தோம். ஏசுவை திருக்குர்ஆனும் நபிமொழியும் கடவுள் என்கிறது என்று உண்மையடியான் எடுத்து வைத்த வாதங்கள் அனைத்தும் தவிடு பொடியாகிக் கொண்டிருப்பதை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள். வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக தற்போது குர்ஆன் அனைவரையும் கெட்டவர்கள் என்று கூறுகிறது என்கிறார் இவர்.

உண்மையடியான் கெட்ட ஷைத்தானாக இருப்பதால், தன்னைப் போன்றுதான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைத்துவிட்டார் போலும். திருக்குர்ஆனின் 9:28 வசனத்தை பார்ப்பதற்கு முன்னர் ஏசுவை ஷைத்தான் தீண்டததற்குக் காரணம் அவர் கடவுளாக இருக்கிறார். கடவுளை ஷைத்தான் தீண்ட இயலுமா? என்ற அவரது வினாவிற்கு விடையை காண்போம்.

நபி ஈஸா (அலை) அவர்கள் பிறந்த போது ஏன் ஷைத்தான் தீண்டவில்லை என்பதை நாம் ஏற்கனவே விளக்கிவிட்டோம். அதற்குக் காரணம் மர்யம் (அலை) அவர்கள் தாயாரின் பிரார்த்தனை என்பதை பொய்யடியான் எடுத்துவைத்த இறைவசனத்திருந்தே நாம் நிரூபித்தோம். இறை தீர்க்கதரிசிகளான நபிமார்களையும், இறைவிசுவாசங்கொண்ட முஃமின்களையும் ஷைத்தானால் தீண்ட இயலாது என்பதையும் முன்னர் நாம் விளக்கினோம். அந்த வரிசையில் மற்றுமொரு ஹதீஸ்


ஹதீஸின் தமிழ் மொழிபெயர்ப்பு
”என் உயிரை தன் கையில் வைத்திருப்பவனின் மீது சத்தியமாக! ஒரு தெருவில் உமரே நீங்கள் நடந்து செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவை விட்டு வேறொரு தெருவில் தான் செல்வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி:368
அதாவது உமர் (ரழி) அவர்களுக்குப் பயந்து ஷைத்தான் வெருண்டோடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நன்மக்களே! உண்மையடியானின் வாதம் சுருக்கமாக சொல்லப்போனால் இரண்டுதான்.

1) ஏசு பரிசுத்தமானவர் அதனால் அவர் கடவுள்.

2)ஏசுவை ஷைத்தான் தீண்டாததற்குக் காரணம் அவர் கடவுளாக இருக்கிறார். 

இவரின் ஆராய்ச்சிபடி யாரெல்லாம் கடவுள்கள் ஆகிறார்கள், உண்மையடியானுக்கு எத்தனை கோடி கடவுள்கள் என்பதைப் பாருங்கள்

1. உண்மையடியான் எடுத்துக்காட்டிய புகாரி 4548வது ஹதீஸூம், திருக்குர்ஆனின் 3:36 வது வசனமும் மர்யம் (அலை) அவர்களை பரிசுத்த அன்னையாகக் கூறுகிறது. எனவே உண்மையடியானின் ஆராய்ச்சிபடி அன்னை மர்யம் (அலை) அவர்கள் கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆகிறார்கள்.

2. அன்னை ஆயிஷா (ரழி)அவர்களும், நபித்தோழர் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களும்; அறிவிக்கின்ற முஸ்லிமில் பதிவாகியுள்ள அந்த இரண்டு ஹதீஸ்களும் நபி (ஸல்) அவர்களை ஷைத்தான் எதுவும் செய்ய இயலாது என்பதை தெளிவுபடுத்துகிறது. எனவே உண்மையடியானின் லாஜிக்படி நபி (ஸல்) அவர்களும் கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆகின்றார்கள்.

3. மேற்கண்ட புகாரி 3689 வது ஹதீஸின் படி உமர் (ரழி) அவர்களுக்குப் பயந்து ஷைத்தான் வெருண்டோடுவான். நபி ஈஸா (அலை) அவர்கள் பிறந்தவுடன் ஷைத்தான் தீண்டவில்லை அதனால் அவர்கள் கடவுள் என்றால், ஒருவரைப் பார்த்து ஷைத்தான் விரண்டோடினால் அவர் எவ்வளவு பெரிய கடவுளாக இருக்க வேண்டும். எனவே உண்மையடியானின் ஆய்வின் அடிப்படையில் உமர் (ரழி) அவர்களும் கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆகிறார்கள்.

4. இவ்வுலகில் அவதரித்த தீர்க்கதரிசிகளான லட்சக்கணக்கான நபிமார்கள் எவரையும் ஷைத்தான் தீண்ட இயலாது அல்லாஹ் பாதுகாத்தான் என்பதை திருக்குர்ஆன் வசனங்கள்; மூலம் முன்னர் விளக்கினோம். எனவே உண்மையடியானின் ஆராய்ச்சிபடி கிருஸ்தவர்களுக்கு அந்த நபிமார்கள் அனைவரும் கடவுளாக ஆகிறார்கள். எனவே உண்மையடியான் வணங்கவேண்டிய கடவுள்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டிவிட்டது.

5. அல்லாஹ்வை ஈமான் கொண்ட இறைவிசுவாசிகளான நல்லடியார்களை ஷைத்தான் எதுவும் செய்ய இயலாது என்பதை திருக்குர்ஆன் வாயிலாக நாம் சுட்டிக்காட்டினோம். இந்த உலகத்தில் இதுவரை வாழ்ந்து மரணித்த, இனி வாழ இருக்கிற, இன்று வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய முஃமின்கள் அனைவரும் இறைவிசுவாசிகளே. எனவே உண்மையடியானின் ஆராய்ச்சிபடி இறைவிசுவாசிகளான கோடானுகோடி முஸ்லிம்கள் அனைவரும் கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆகிறார்கள். இப்படி உண்மையடியான் வணங்கவேண்டிய கடவுள்களின் எண்ணிக்கை பல ட்ரில்லியன்களைத்; தாண்டிவிட்டது.

6. அவ்வளவு ஏன்? ஏசு சிலுவையில் மரணித்து மனிதர்களின் பாவங்களை பரிசுத்தப்படுத்தினார் என்பதுதானே கிருஸ்தவர்களின் நம்பிக்கை. பரிசுத்தவான்கள் எல்லாம் கடவுள்கள் என்ற உண்மையடியானின் தத்ததுவத்தின்படி கிருஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே வணங்கிக்கொள்ள வேண்டும்.எப்படி இருக்கிறது கொடுமை.

அல்லாஹ்வின் சங்கைமிக்க திருத்தூதரான ஏசு என்ற நபி ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்று பொய்யுரைப்பதற்கு குர்ஆனையும் நபிமொழியையும் கையில் எடுத்ததால் உண்மையடியானுக்கு வந்த வினையைப் பார்த்தீர்களா? ஒரு கடவுளை உருவாக்கக் கனவுகண்ட இவருக்கு, பல பில்லியன், ட்ரில்லியன் கடவுள்கள் கிடைத்துள்ளன. இதை அறிந்து பெருமிதம் அடைந்தாலும் அடைவார் இந்த பொய்யடியான்.


குர்ஆன் அனைவரையும் கெட்டவர்கள் என்று கூறுகிறது என்ற பொய்யடியானின் பொய்க்கூற்றின் நிலையையும் தற்போது பார்ப்போம். குர்ஆன் தெளிவுபடுத்தும் அந்த வசனம் இதோ
திருக்குர்ஆனின் 9ம் அத்தியாயம் அத்தவ்பாவின் 28 வது வசனம்

9:28. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் – அல்லாஹ் நாடினால் – அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் – நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்

மேற்கண்ட இறைவசனம் அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்கள் என்று கூறுகிறது. சுருங்கச் சொல்லப்போனால்.

• அன்னை மர்யம் (அலை), நபி ஈஸா (அலை), நபி முஹம்மது (ஸல்) மற்றும் செய்யிதினா உமர் (ரழி) போன்றோரை கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆக்கி, அல்லாஹ்வுக்கு இணைவைத்த உண்மையடியான் அசுத்தமானவர் என்கிறது.

• தீர்க்கதரிசிகளாக அவதரித்த இறைத்தூதர்கள் அனைவரையும் கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆக்கி, அல்லாஹ்வுக்கு இணைவைத்த உண்மையடியான் அசுத்தமானவர் என்கிறது.

•  கோடானகோடி முஸ்லிம்கள் அனைவரையும் கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆக்கி, அல்லாஹ்வுக்கு இணைவைத்த உண்மையடியான் அசுத்தமானவர் என்கிறது.

• இன்னும் கிருஸ்தவர்களையே கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆக்கி, அல்லாஹ்வுக்கு இணைவைத்த உண்மையடியான் அசுத்தமானவர் என்கிறது.

எனவே மேற்கண்ட வசனம் உண்மையடியான் போன்ற இணைவைப்பார்களை அசுத்தமானவர்கள் என்று கூறுகிறதே அல்லாமல் பொத்தாம் பொதுவாக அனைவரையும் கெட்டவர்கள் என்று கூறவில்லை.

பொய்யடியானின் பொய் கூற்று- 5

//ஏசு சத்தியமான நியாய அதிபதி என்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர். அவர் இவ்வுலகத்திற்கு திரும்பி வருவார் என்றும் குர்ஆன் கூறுகிறது. மனிதன் சத்தியமான நியாய அதிபதியாக முடியுமா? எனவே ஏசுதான் கடவுள்.//

நமது விளக்கம்:-

அன்பு நண்பர்களே! உலக முஸ்லிம்கள் அனைவரும் சத்தியமான நியாய அதிபதியாகவும், நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் படைத்த இறைவனை மட்டும்தான் நம்புகிறார்கள், நம்பவேண்டும். நபி ஈஸா (அலை) அவர்களை சத்தியமான நியாய அதிபதி என்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர் என்ற கருத்து உண்மையடியானின் அறியாமையை உணர்த்துவது மட்டுமல்லாது, உலக முஸ்லிம்களுக்கெதிரான இவர் சுமத்தும் மாபெரும் அவதூறு ஆகும்.

நாங்கள் நபி ஈஸா (அலை) அவர்கள் இறுநாளில் அடையாளம் என்று நம்புகிறோம் (43:61). இறைவன் புறத்தில் உயர்த்தப்பட்ட அவர்கள் (4:157) இவ்வுலகம் அழிவதற்கு முன்பாக இறைவனால் பூமிக்கு அனுப்பப்படுவார்கள். மனிதனாக பிறந்த எவரும் இறந்தே ஆகவேண்டும் என்ற விதியின் படி, பூமிக்கு இறக்கப்படும் நபி ஈஸா (அலை) அவர்கள் இந்த பூமியிலேயே மரணிப்பார்கள் என்றும் நம்புகிறோம். இதுவல்லாமல் நபி ஈஸா (அலை) அவர்களை சத்தியமான நியாய அதிபதியாக எந்த முஸ்லிமும் சத்தியமாக நம்பவில்லை.

5:17 திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்ததையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். ”மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்;. வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள பொருட்கள் அனைத்தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவன் நாடியதைப் படைக்கிறான்;. இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.


5:116 இன்னும், ”மர்யமுடைய மகன் ஈஸாவே, ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்’ என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், ”நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.


5:72 ”நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; ”இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.


9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும். இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?


61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, ”இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் ‘அஹமது’ என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் ”இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.


43:64. நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).

நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி வல்ல இறைவன் கூறுவதையும், கிருஸ்தவர்களுக்கு எதிரான நபி ஈஸா (அலை)அவர்களின் வாக்குமூலத்தையும், நபி (ஸல்) அவர்களைப் பற்றி முன்னறிவிப்பு செய்ததையும் விளக்கும் மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்களை உண்மையடியான் வகையறாக்கள் படித்து புத்தியுடன் நடந்து கொள்ளட்டும். இனியேனும் குர்ஆன் அப்படி சொல்கிறது, ஹதீஸ் இப்படி சொல்கிறது என்று எதைஎதையோ உளறிக் கொட்டிவிட்டு முஸ்லிம்லிம்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளாமல் இருப்பார்களாக.

நன்றி: www.iiponline.org

0 Comments:

Post a Comment