Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

இன்னுமா நம்புகிறார்கள்?  என்ற தலைப்பில் எழில் என்பவர் ஒரு பதிவிட்டிருக்கிறார். ஆம் ”இன்னுமா நம்புகிறார்கள்…?” இதே கேள்வியை வந்த வழிக்கே திருப்பினால் என்ன…?

பரிணாமப் பறிமாற்றங்களை அருகிலிருந்து பார்த்து குறிப்புகள் எடுத்துக் கொண்டாரா!? என்னத்தைச் சொல்ல..! 

பரிணாமத்தின் உந்து விசையைக் கண்டுபிடிப்பதில் லாமார்க் போன்ற சிறந்த விஞ்ஞானிகளேத் தோற்றுப் போனார்களே! இவரென்ன விஞ்ஞானக் குஞ்சு! குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்பதை நிரூபித்து விட்டாரா..?

”கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்” அடடா என்ன தத்தவமய்யா இது, சொன்னவர் யாராம்..? அட கலைவாணர்… எப்படி இருக்கிறது பாருங்கள், ”பாரிணாம உந்து விசைக்கு” நகைச்சுவை நடிகரை ஆதாரம் காட்டுகிறார் பாருங்கள். (தயவு செய்து யாரும் நகைக்க வேணடாம்.) 

எவ்வளவோ உயினங்களைக் கண்டு வருகிறோம். அவைகளெல்லாம் தம் இனத்தையே ஈன்றெடுக்கின்றன. 

குதிரையிலிருந்து குதிரைக் குட்டியும்,
கழுதையிலிருந்து கழுதைக் குட்டியும்,
ஆட்டிலிருந்து ஆட்டுக் குட்டியும்,
குருவியிலிருந்து குருவிக் குஞ்சும்,
மாமரத்திலிருந்து மாங்கன்றும்,
இன்னும் குரங்கிலிருந்து குரங்குக் குட்டிதான் பிறந்து கொண்டிருக்கிறது,
மனிதனிலிருந்து மனிதக் குழந்தைதான் பிறக்கிறது. 

அனைத்தையும் விட மேலாக, மனிதன் அறிவால் உயர்ந்து நிற்கிறான். எந்த உயிரினத்துக்கும் கிட்டாத – வழங்கப்படாத இந்தப் பேறறிவு எனும் மணி மகுடம் எந்த உந்து விசையால் பரிணாமம் பெற்றது என்பதை ”கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவர் விளக்குவாரா..?”

நன்றி: http://www.islamkalvi.com/

0 Comments:

Post a Comment