Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

பலதாரமணம் புரிந்தவர் இறைதூதராக இருக்க முடியுமா? கிறிஸ்தவர்களுக்கு பதில்
.
உலகம் முழுவதும் இன்று பெருகிவரும் இஸ்லாமிய வளர்ச்சியைப் பொருத்துக்கொள்ள முடியாத இஸ்லாமிய எதிரிகள் குறிப்பாக கிறிஸ்தவ மிஷினரிகள் அதன் வளர்ச்சியை எப்படியேனும் தடுத்திட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் ஏற்படுத்திவரும் விஷமப்பிரச்சாரங்களில் மிக முக்கியமான ஒன்று நம் உயிரினும் மேலான நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மீது சுமத்தப்படும் 'காமவெறியர்' என்ற குற்றச்சாட்டு. குறிப்பாக கிறிஸ்தவர்களில் பலர் இயேசு காம இச்சையை அடக்கி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தார் என்றும் ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களோ ஒன்றுக்கு மேற்பட்டதிருமணங்களை, குறிப்பாக 11 பெண்களைத் திருமணம் செய்து தனது காம இச்சையை தீர்த்துக்கொண்டார் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பலதாரமணத்தை இஸ்லாம் அனுமதித்ததன் மூலம் இஸ்லாம் ஏதோ விபச்சாரத்தை அனுமதித்தது போன்று எழுதும் சில கிறிஸ்தவ அறிவிளிகளும் உண்டு.

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தார்கள் என்பதையும், அவர்கள் ஒரு நேரத்தில் ஒன்றுக்கு அதிகமான பெண்களை திருமணம் முடித்திருந்தார்கள் என்பதையும், ஆயிஷா (ரலி) அவர்களை - அவர்களின் சிறுவயதிலேயே திருமணம் செய்தார்கள் என்பதையும் என்றைக்குமே இஸ்லாமிய உலகம் மறைத்ததும் கிடையாது - மறுத்ததும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இவற்றை ஒப்புக்கொண்டு அதற்கான நியாயமான காரணங்களை இன்றைக்கும் - என்றைக்கும் மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லியே வருகின்றது.

பெருமானார் (ஸல்) அவர்கள் தமது பதிமூண்டு ஆண்டுகள் நபித்துவ வாழ்கை வாழ்ந்த அந்நாட்களில் தன்னை இறைத்தூதர் என்று ஏற்றுக்கொண்ட, எற்காமல் நிராகரித்த, பல சமுகத்து மக்கள் மத்தியில் தான் வாழ்கின்றார்கள். இவர்களில் ஆதரவாளர்களும் உண்டு, எதிரிகளும் உண்டு, துரோகிகளும் உண்டு. இந்த அத்தனை பேருக்கும் மத்தியில் தான் பெருமானாரின் இந்த அனைத்துத் திருமணங்களும் நடைபெருகின்றது.

இவை அத்தனைக்கும் மத்தியிலும் அன்றைக்கு இஸ்லாம் வளர்ந்துக்கொண்டே இருந்ததே யொழிய வீழ்ச்சியடைந்துவிடவுமில்லை பலவீடபடவுமில்லை. மாறாக இத்தனைத் திருமணங்களுக்குப் பிறகும் அந்த பெருமானாருக்காக தனது உயிரையும் தியாகம் செய்யும் தோழர்கள் உருவாகி இருந்தார்கள் - மேலும் மேலும் உறுவாகிக்கொண்டே இருந்தார்கள் என்றால் என்னக் காரணம்? இந்த அத்தனைக்கும் மத்தியிலும் அவர்களின் மீது அளவுக்கதிகமான அண்பு காட்டக்கூடிய மக்களாக அன்றைய மக்கள் இருந்தார்கள் என்றால் என்ன அர்த்தம்? இன்றைய கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்வது போல் இத்தனைத் திருமணங்களுக்கும் 'காமவெறிதான்' காரணமாக இருந்திருந்தால் பெருமானாருக்கு இப்படிப்பட்ட கூட்டம் கிடைத்திருக்குமா?

அது மட்டுமல்ல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சத்தியப்பிரச்சாரத்தை துணிவுடன் துவங்கியபோது உலகில் எந்த சீர்த்திருத்தவாதியும் சந்தித்திராத பல எதிர்ப்புகளை அவர்கள் சந்தித்தார்கள். அவர்களது பிரச்சாரத்தால் பாதித்தவர்கள் ஏராளம். மூட நம்பிக்கைளில் ஆழ்ந்து கிடந்தவர்கள், குலப்பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்கள், மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தவர்கள், ஏமாற்றுவதையும் மோசடியையுமே தொழிலாகக் கொண்டவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டார்கள். எப்படியாவது முஹம்மது(ஸல்) அவர்களின் தூதுத்துவப் பிரச்சாரத்தை முடக்கிவிட வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் அவர்களால் தீட்டப்பட்டன. கிறுக்கன் என்றார்கள், திறமை மிக்க கவிஞன் என்றார்கள், கை தேர்ந்த மந்திரவாதி என்று கூட சொன்னார்கள். ஏசிப்பார்த்தார்கள்! அடித்தும் பார்த்தார்கள்! ஊரைவிட்டே விரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள். உலகை விட்டே அவர்களை அப்புறப்படுத்தவும் சதி செய்தார்கள்.

இந்தப் பிரச்சாரத்தை எப்படியாவது முடிக்கி விட வேண்டும் என்பதில் அவர்களுக்கிருந்த வெறித்தனத்துக்கு இவை தக்க ஆதாரங்கள். இப்படியெல்லாம் திட்டம் தீட்டிய அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்வு பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை. மற்ற எல்லா ஆயுதங்களைவிடவும் பலமான இந்த 'காமவெறியன்' என்ற ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்தி இருந்தால் அதில் அவர்கள் வெற்றி கண்டிருக்கக்கூடும். ஆனால் அவர்களாலும் வைக்கப்படாத - வைக்கமுடியாது ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால் பெருமானாரை இன்றைய இஸ்லாமிய எதிரிகள் - குறிப்பாக கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று 'காமவெறியர்' என்ற குற்றச்சாட்டு. பெருமானாருடன் சமகாலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய எதிரிகள் எத்தனையோ குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது கூறியவர்கள் இத்தனைத் பெண்களைத் திருமணம் செய்தபிறகு அவர்களை 'காமவெறியர்' என்று கூறாதது ஏன்? இஸ்லாத்தை பலவீனப்படுத்த, பெருமானாரின் புனிதத்தைக் கொச்சைப்படுத்த இதை வீட ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைக்காது என்றிருந்தும் அந்தக் குற்றச்சாட்டைப் பயன்படுத்தாதது ஏன்?

காரணம் அன்றைய காலத்தில் அந்த குற்றச்சாட்டு அந்த மக்களிடத்தில் எடுபடாது என்ற நிலை. ஏனெனில் பெருமானார் அவர்கள் அன்றைய காலத்தில் வாழ்ந்த அனைத்து தரப்பு மக்களிடத்திலும் எல்லா வகையிலும் சிறந்த நற்பெயரையே பெற்றிருந்தார்கள் - அவர்களுடைய நற்குணத்தைப் பற்றி அந்த மக்கள் நன்கு அறிந்துவைத்திருந்தார்கள். இதையும் மீறி சிலர் அன்று அவர்களை எதிர்தற்கு ஒரே காரணம் அவர்கள் போதித்த சத்திய மார்க்கமான இஸ்லாம் தானே யொழிய வேறல்ல.

அன்றைய கால இஸ்லாமிய எதிரிகளால் கூட வைக்கப்படாத - வைக்கப்பட முடியாத ஒரு குற்றச்சாட்டான 'காமவெறியர்' என்றுக் குற்றச்சாட்டைக் இன்றைய கிறிஸ்தவர்கள் கையிலெடுத்துப் பிரச்சாரம் செய்வதற்கு காரணம் எப்படியேனும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்தி நிறுத்தியாக வேண்டும் என்று குறுகிய நோக்கமே!

உன்மையில் பெருமானார் (ஸல்) அவர்கள் ஏன் அத்தனைத் திருமணங்கள் செய்தார்கள்? அவர்கள் நான்கிற்கு அதிகமான திருமணம் செய்ய காரணம் என்ன? என்பதை எல்லாம் பின்வரும் தொடுப்புகளில் தெரிந்துக்கொள்ளலாம்.
மற்றும் சகோதரர் பீஜே எழுதிய 'நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? ஏன்ற புத்தகத்தின் மூலமும் இன்னும் தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இருந்தாலும் இஸ்லாமிய வளர்ச்சியை தடுப்பதற்காக இன்றைய கிறிஸ்தவர்களால் வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டான 'பெருமானார் (ஸல்) அவர்கள் காமவெறியர்' என்றக் குற்றச்சாட்டு அவர்களின் நம்பிக்கைப்படி சரியானதா? ஒருவர் ஓன்றுக்கு மேற்பட்ட திருமண்ஙகளை முடித்தால் அவர் காமவெறியர் ஆகிவிடுவாரா? அப்படிப்பட்டவர் இறைதூதராக - தீர்க்கதரிசியாக முடியுமா? தனது காம இச்சையை அடக்கி இயேசு திருமணம் முடிக்காமல் தான் வாழ்ந்தாரா? பலதாரமணம் பற்றி பைபிளின் கருத்தென்ன? உன்மையில் பரிசுத்தவானாக, இறைதூதராக, கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாக ஆக முடியாத துர்பாக்கியவான்கள் யார்? என்பதை எல்லாம் பைபிளில் ஆதராங்களை வைத்து கிறிஸ்தவர்களுக்கு விளக்கமளித்தால் மிக நன்றாக இருக்கும் என்பதால் நாம் அவற்றை சற்று அலசுவோம்.
பல திருமணங்கள் செய்தவர் இறைத்தூதராக இருக்க முடியுமா?
இந்த கேள்வியை பைபிளின் படி பார்த்தால் 100க்கு 200 சதவிகிதம் முடியும் என்பதுடன் முறையற்ற முறையில் ஒருவர் திருமணம் செய்தால் கூட அவரும் பரிசுத்தவானாகவும் இறைதூதராகவும், பைபிளின் புத்தகங்களுக்கு எழுத்தாளராகவும் இருக்க முடியும் என்றே பைபிள் கூறுகின்றது.

இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதத்தில் மிகவும் முக்கியமானவராக மதிக்கப்படுவர் முஸ்லீம்களால் இப்ராஹீம் (அலை) என்று அழைக்கப்படக்கூடிய ஆபிரகாம். இவருக்கு எத்தனை மனைவிகள்? மொத்தம் 3 பேர் இருந்ததாக பைபிள் கூறுகின்றது. சாராள், ஆகார், மற்றொருவர் கேதூராள் (பார்க்க ஆதியாகமம் 25:1) பலதாரமணம் தவறானதாகவும் அது விபச்சாரத்துக்கு ஒப்பானதாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை ஒருவன் செய்தால் அவன் காமவெறினாகிவிடுவான் என்றால் இந்த ஆபிரகாம் காமவெறியரா? இவர் விபச்சாரம் செய்துவிட்டாரா?

சாலமோன் என்ற தீர்க்கதரிசி பற்றி பைபிளில் குறிப்பிடப்படுகின்றது. இந்த சாலமோன் என்ற தீர்க்கதரிசிக்கு ஒன்றல்ல இரண்டல்ல, அல்லது பெருமானார் (ஸல்) அவர்களைப் போன்று 11 பெண்களைத் திருமணம் செய்தவரோ கூட அல்ல. மாறாக 700 மனைவிகளும், அது போக 300 மறுமனையாட்டிகளும் (வைப்பாட்டிகளும்) இருந்ததாக பைபிள் கூறுகின்றது. (பார்க்க 1 இராஜாக்கள் 11:1-3). இவர் யார், கிறிஸ்தவர்கள் புனிதமாக மதிக்கும் பைபிளின் நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதபாட்டு போன்ற புத்தகங்களுக்கு சொந்தக்காரர். இவருடைய வம்சத்தில் தான் இயேசுவும் பிறக்கின்றார். இவருக்கு 700 மனைவிகள் போதாதென்று அது அல்லாமல் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டாத 300 மறுமனையாட்டிகளையும் வைத்திருந்ததாக பைபிள் கூறுகின்றது. இப்படிப்பட்டவரை பரிசுத்தர் என்று ஏற்றுக்கொள்வதுடன், அவர் எழுதிய புத்தகங்களை பைபிளில் ஒரு பகுதியாகவும் ஏற்றுக்கொள்வார்களாம். அதை புனித புத்தகமாக ஏற்பார்களாம். ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து சமூகத்து மக்களுக்கு மத்தியில் அவர்கள் செய்த திருமணங்களை ஏற்காததுடன் அவர்களை காம வெறியர் என்றும் பிரச்சாரம் செய்வார்களாம். சாலமோன் வைத்திருந்த வைப்பாட்டிகளை விட்டுவிடுவோம். அவர் முடித்த மனைவிகளின் எண்ணிக்கையின் அருகிலேயே நெருங்க முடியாத - சாலமோனுடன் ஒப்பிடும் பொழுது மிக மிகக்குறைந்த எண்ணிக்கை அளவுக்குகே திருமணம் முடித்த பெருமானாரை காமவெறியர் என்று சொல்வது எப்படி சரியாகும்? இதில் எங்கே நியாயம் இருக்கின்றது. சிந்திக்க வேண்டாமா?

அடுத்து இந்த சாலமோனின் தந்தை தாவீது ராஜா என்பவரைப் பற்றியும் பைபிளில் கூறப்படுகின்றது. இவரின் வம்சத்தில் தான் இயேசு சாலமோன் வழியாக பிறக்கின்றார். எந்த அளவுக்கு என்றால் புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் எழுத்தாளரான மத்தேயு கூட இயேசுவை அறிமுகப்படுத்தும் போது 'ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு' (மத்தேயு 1:1) என்று அறிமுகப்படுத்தப்படும் அளவுக்கு ஒரு பரிசுத்தவானாக கருதப்படுபவர் இந்த தாவீது. இவர் தனக்கு முறையான ஒரு மனைவி இருக்க இன்னொரு அண்ணியப்பெண்னை அவள் குளித்துக்கொண்டிருக்கும் பொழுது அவளைத் தவறான கண்னோட்டத்தோடு பார்த்ததுடன் அவள் மேல் ஆசைக் கொண்டு அவளுடன் தவறான உறவும் கொள்கின்றார். இந்த தவறான உறவின் மூலம் அவள் கர்ப்பமடைந்துவிட்டால் என்று தெரிந்ததும், சில சூழ்ச்சிகள் மூலம் அவளது கணவனையே தாவீது கொலைசெய்ய வைத்து அதன் பிறகு அவளையே தனது மனைவியாக்கிக் கொள்கின்றார். இந்த தகாத உறவின் மூலம் பிறந்தவர்தான் இயேசுவின் மூதாதையரான மேலே விவரிக்கப்பட்ட சாலமோன் என்று பைபிள் கூறுகின்றது. (மத்தேயு 1:6) (இது குறித்து விரிவான விளக்கம் கான இங்கே சொடுக்கவும்).
இப்படி ஒரு அப்பட்டமான - அநாகரீகமான - முறையற்ற முறையில் தவறான உறவு கொண்டு திருமணம் முடித்தார் என்று சொல்லப்படுபவரை இவர்கள் பரிசுத்தவானாக ஏற்பார்களாம்? அவருடைய வம்சத்தில் தான் இயேசு பிறந்தார் என்று பெருமையோடு சொல்லிக்கொள்வார்களாம். அவர் எழுதிய புத்தகமான சங்கீதம் என்ற புத்தகத்தை மிக உயர்வாக மதிப்பார்களாம். எந்த அளவுக்கொன்றால் பல கிறிஸ்தவ பிரச்சாரங்களில் இந்த புத்தகத்தின் வசனங்களைத்தான் அடிக்கடி மேற்கோள் காட்டும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அப்படிப்பட்டவரை ஒரு பரிசுத்தராக ஏற்பார்களாம். ஆனால் பெருமானாரை முறையாக பல திருமணம் செய்ததால் காமவெறியர் என்பார்களாம்? இதில் எங்கே நியாயம் இருக்கின்றது? சிந்திக்க வேண்டாமா? இப்படி இவர்கள் முரண்படுவதன் மூலம் அவர்களின் அவதூறு பிரச்சாரத்தின் நோக்கம் என்ன வென்று புரிகின்றதா இல்லையா?

அதேபோல் யாக்கோபு என்பவரும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முடித்தவர்தான். இப்படி பைபிளில் எத்தனையோ மேற்கோள்கள் இருக்கின்றது. உதாரனத்திற்காகவே இங்கு சிலவற்றை குறிப்பிடுகின்றோம். மேலே நாம் எடுத்துக்காட்டியது போன்று 700 மனைவிமார்கள் போதாதென்று சட்டத்திற்கு புறம்பாக பெறப்படும் (பைப்பாட்டிகளான) 300 மறுமனையாட்டிகளை வைத்திருந்த சாலமோன் தீர்க்கதரிசி போன்றோ அல்லது தனக்கு மனைவி இருந்தும் ஒரு அண்ணியப்பெண்னை சட்டவிரோதமாக தகாத உறவு கொண்டு அவன் கனவனை கொலைசெய்யவும் வைத்து அதன் பிறகு பலவந்தமாகதிருமணம் முடித்த தாவீது போன்றோ எங்கேயாவது பெருமானார் (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள் என்று இவர்களால் நிரூபிக்க முடியுமா? வெறும் 11 திருமணங்களை முடித்தவரை காமவெறியர் என்று பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் முதலில் சாலமோனையும், தாவீதையும், ஆபிரகாமையும், யாக்கோபையும் பைபிளில் சொல்லப்பட்டுள்ள மற்ற பலதாரமணம் புரிந்தவர்களையும் காமவெறியர் என்று அறிவிக்கட்டும். அதன் பிறகு பெருமானாரை குறை சொல்லட்டும். முடியுமா? அல்லது குறைந்தபட்சம் சாலமோன் எழுதிய புத்தகங்களையும் தாவீது எழுதிய புத்தகங்களையும் பைபிளிலிருந்து தூக்கி எரியட்டும். அதன் பிறகு பெருமானாரை காமவெறியர் என்று அறிவிக்கட்டும். இப்படி செய்ய அவர்களால் முடியுமா என்றால் முடியாது. காரணம் பலதார மணம் என்பது கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்றுதான் பைபிளும் கூறுகின்றது. ஒருவர் முறையான முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் முடித்தால் அது தவறல்ல. அதை பல தீர்க்கதரிசிகளும் செய்துள்ளார்கள், சட்டத்திற்கு உட்பட்டு ஒருவன் பலதாரமணம் முடிப்பது நியாயமானதே, பலதாரமணம் முடிப்பவன் காமவெறியனாக மாட்டான் என்பது தான் இன்றைய பைபிளின் உறுதியான நிலை. பலதாரமணம் முடிப்பவர்கள் பற்றி பைபிள் பின்வருமாறு கூறுகின்றது:

இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும், தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது. (உபாகமம் 21:15)

இந்த வசனத்தின் மூலம் ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை திருமணம் செய்யலாம் என்பதும், அப்படி அவன் செய்தால் அதில் அவன் நியாயமாக நடக்க வேண்டும் என்பது தான் பைபிளின் நிலை.

இதையும் மீறி இவர்கள் முறையான வழியில் 11 திருமணங்களை செய்த பெருமானாரை காமவெறியர் என்று கூறுவார்களேயானால் முதலில் சாலமோனையும் தாவீதையும் காம வெறியர் என்று அறிவிக்கட்டும், அவர்கள் எழுதிய புத்தகங்களை பைபிளிலிருந்து தூக்கி எரியட்டும். பிறகு தங்கள் வாதத்தை பிரச்சாரம் செய்யட்டும். இப்படி இவர்களால் முடியுமா? என்றால் முடியாது காரணம், இவர்கள் வைக்கும் வாதம் என்பது வேண்டும் என்றே பெருமானாரை இழிவு படுத்தி அதன் மூலம் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பது தான்.

எனவே பைபிளைப் பொருத்தவரை பல திருமணம் செய்தவர் இறைத்தூதராக வரமுடியும், பரிசுத்தவானாக இருக்க முடியும், அவருக்கு இறைவனிடமிருந்து செய்தியும் வரும். அப்படியே பலதாரமணம் முடித்திருந்தால் அதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமே யொழிய அதற்கு காமம் காரணமாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

இயேசு மணமுடித்தாரா இல்லையா?

இப்படி ஒரு அப்பட்டமான - அநாகரீகமான - முறையற்ற முறையில் தவறான உறவு கொண்டு திருமணம் முடித்தார் என்று சொல்லப்படுபவரை இவர்கள் பரிசுத்தவானாக ஏற்பார்களாம்? அவருடைய வம்சத்தில் தான் இயேசு பிறந்தார் என்று பெருமையோடு சொல்லிக்கொள்வார்களாம். அவர் எழுதிய புத்தகமான சங்கீதம் என்ற புத்தகத்தை மிக உயர்வாக மதிப்பார்களாம். எந்த அளவுக்கொன்றால் பல கிறிஸ்தவ பிரச்சாரங்களில் இந்த புத்தகத்தின் வசனங்களைத்தான் அடிக்கடி மேற்கோள் காட்டும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அப்படிப்பட்டவரை ஒரு பரிசுத்தராக ஏற்பார்களாம். ஆனால் பெருமானாரை முறையாக பல திருமணம் செய்ததால் காமவெறியர் என்பார்களாம்? இதில் எங்கே நியாயம் இருக்கின்றது? சிந்திக்க வேண்டாமா? இப்படி இவர்கள் முரண்படுவதன் மூலம் அவர்களின் அவதூறு பிரச்சாரத்தின் நோக்கம் என்ன வென்று புரிகின்றதா இல்லையா?

அதேபோல் யாக்கோபு என்பவரும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முடித்தவர்தான். இப்படி பைபிளில் எத்தனையோ மேற்கோள்கள் இருக்கின்றது. 

உதாரனத்திற்காகவே இங்கு சிலவற்றை குறிப்பிடுகின்றோம். மேலே நாம் எடுத்துக்காட்டியது போன்று 700 மனைவிமார்கள் போதாதென்று சட்டத்திற்கு புறம்பாக பெறப்படும் (பைப்பாட்டிகளான) 300 மறுமனையாட்டிகளை வைத்திருந்த சாலமோன் தீர்க்கதரிசி போன்றோ அல்லது தனக்கு மனைவி இருந்தும் ஒரு அண்ணியப்பெண்னை சட்டவிரோதமாக தகாத உறவு கொண்டு அவன் கனவனை கொலைசெய்யவும் வைத்து அதன் பிறகு பலவந்தமாகதிருமணம் முடித்த தாவீது போன்றோ எங்கேயாவது பெருமானார் (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள் என்று இவர்களால் நிரூபிக்க முடியுமா? வெறும் 11 திருமணங்களை முடித்தவரை காமவெறியர் என்று பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் முதலில் சாலமோனையும், தாவீதையும், ஆபிரகாமையும், யாக்கோபையும் பைபிளில் சொல்லப்பட்டுள்ள மற்ற பலதாரமணம் புரிந்தவர்களையும் காமவெறியர் என்று அறிவிக்கட்டும். அதன் பிறகு பெருமானாரை குறை சொல்லட்டும். முடியுமா? அல்லது குறைந்தபட்சம் சாலமோன் எழுதிய புத்தகங்களையும் தாவீது எழுதிய புத்தகங்களையும் பைபிளிலிருந்து தூக்கி எரியட்டும். அதன் பிறகு பெருமானாரை காமவெறியர் என்று அறிவிக்கட்டும். இப்படி செய்ய அவர்களால் முடியுமா என்றால் முடியாது. காரணம் பலதார மணம் என்பது கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்றுதான் பைபிளும் கூறுகின்றது. ஒருவர் முறையான முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் முடித்தால் அது தவறல்ல. அதை பல தீர்க்கதரிசிகளும் செய்துள்ளார்கள், சட்டத்திற்கு உட்பட்டு ஒருவன் பலதாரமணம் முடிப்பது நியாயமானதே, பலதாரமணம் முடிப்பவன் காமவெறியனாக மாட்டான் என்பது தான் இன்றைய பைபிளின் உறுதியான நிலை. பலதாரமணம் முடிப்பவர்கள் பற்றி பைபிள் பின்வருமாறு கூறுகின்றது: 

இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும், தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது. (உபாகமம் 21:15)

இந்த வசனத்தின் மூலம் ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை திருமணம் செய்யலாம் என்பதும், அப்படி அவன் செய்தால் அதில் அவன் நியாயமாக நடக்க வேண்டும் என்பது தான் பைபிளின் நிலை.

இதையும் மீறி இவர்கள் முறையான வழியில் 11 திருமணங்களை செய்த பெருமானாரை காமவெறியர் என்று கூறுவார்களேயானால் முதலில் சாலமோனையும் தாவீதையும் காம வெறியர் என்று அறிவிக்கட்டும், அவர்கள் எழுதிய புத்தகங்களை பைபிளிலிருந்து தூக்கி எரியட்டும். பிறகு தங்கள் வாதத்தை பிரச்சாரம் செய்யட்டும். இப்படி இவர்களால் முடியுமா? என்றால் முடியாது காரணம், இவர்கள் வைக்கும் வாதம் என்பது வேண்டும் என்றே பெருமானாரை இழிவு படுத்தி அதன் மூலம் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பது தான்.

எனவே பைபிளைப் பொருத்தவரை பல திருமணம் செய்தவர் இறைத்தூதராக வரமுடியும், பரிசுத்தவானாக இருக்க முடியும், அவருக்கு இறைவனிடமிருந்து செய்தியும் வரும். அப்படியே பலதாரமணம் முடித்திருந்தால் அதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமே யொழிய அதற்கு காமம் காரணமாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

இயேசு மணமுடித்தாரா இல்லையா?

இதில் இன்னென்றையும் நாம் கவனித்தாக வேண்டும். கிறிஸ்தவர்கள் பெருமானாரை குறைசொல்லும் அதே வேலையில் மற்றொன்றையும் இவர்கள் வாதமாக வைக்கின்றனர். அதாவது இயேசு திருமணம் முடிக்காமல் தனது காம இச்சையை அடக்கி வாழ்ந்தார் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

பொதுவாக பைபிளைப் பொருத்தவரை இயேசு திருமணம் முடிக்காமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் இயேசுவின் திருமணத்தைப் பற்றித்தான் பைபிளில் சொல்லப்படவில்லையே யொழிய அவர் திருமணம் செய்யவில்லை - அவர் பிரம்மச்சாரி என்று பைபிளில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் பைபிளின் படி, புதிய ஏற்பாட்டின் அதிக புத்தகங்களுக்குச் சொந்தக்காரரான பவுலின் கூற்றை வைத்துப் பார்க்கையில் இயேசு திருமணம் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என்றே எண்ணத்தோன்றுகின்றது.

பவுல் கூறுகின்றார் : 

விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். (1 கொரிந்தியர் 7:8)
அதாவது திருமணம் முடிக்காதவர்களைப் பற்றி கிறிஸ்தவ மதத்தின் நிறுவனரான பவுல் கூறுகின்றார் 'நான் திருமணம் முடிக்காத பிரம்மச்சாரியாக இருக்கின்றேன். திருமணம் முடிக்க விருப்பமில்லையானால் என்னைப்போல் இருந்து விடுங்கள்' என்று தானே கூறுகின்றாரே யொழிய, நமது இரட்சகரான இயேசுவைப் போன்று திருமணம் முடிக்காதவராக இருங்கள் என்று அவர் கூறவில்லை. உன்மையிலேயே இயேசு திருமணம் முடிக்காதவராக இருந்தார் என்றால் ஏன் பவுல் தன்னை மட்டும் உதாரணம் காட்டவேண்டும்? கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கதாபாத்திரமான இயேசுவையே உதாரனமாக காட்டி இருக்கலாமே? அவரை முன்னுதாரணமாக காட்டி அவர் போல் திருமணம் முடிக்காமல் இருங்கள் என்று ஏன் பவுல் கூறவில்லை?

அது மட்டுமல்ல இயேசுவைப் பற்றிய பல செய்திகள் இன்றைய பைபிளில் இல்லை என்பதை புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்களில் ஒருவரான யோவான் தனது புத்தகத்தில் வாக்குமூலம் தருகின்றார் :

இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். (யோவான் 21:25)

அதாவது இயேசு செய்த இன்னும் பல காரியங்கள் இருக்கின்றதாம். ஆனால் புத்தகம் நீண்டுக்கொண்டே போவதால் யோவான் அவற்றை எல்லாம் எழுதாமல் தவிர்த்துவிட்டாராம். இதற்கு என்ன பொருள்? இயேசு பற்றி இன்னும் நிறைய இருக்கின்றது, அவற்றில் பல விஷயங்கள் சொல்லப்படவில்லை என்பது தானே! அதில் திருமணமும் அடங்கி இருக்கலாம். ஓன்றல்ல அதற்கு மேற்பட்ட திருமணங்கள் கூட செய்திருக்கலாம். அவை மறைக்கவும் பட்டிருக்கலாம் அல்லவா?

எனவே இயேசு திருமணம் முடிக்காதவராக இருந்தார் என்று பைபிளில் எந்த இடத்திலும் குறிப்பு இல்லை என்பதுடன் பவுலின் இந்த அறிவிப்பின்படி பவுல் தான் திருமணம் முடிக்காதவராக இருந்ததாக பைபிளில் சொல்லப்படுகின்றதோ யொழிய இயேசு திருமணம் முடிக்காதவராக இருந்தார் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை, அதுமட்டுமல்லாமல், யோவான் இயேசுவின் இன்ன பிற நிறைய விஷயங்களை விட்டுவிட்டார் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே இயேசு காமத்ததை கட்டுப்படுத்தி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தார் என்று கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்வதும் தங்களது சுயகருத்தே அன்றி பைபிளின் கருத்தல்ல.

பைபிளின் படி பரிசுத்தவானாக தகுதியற்றவர்கள் யார்?

அடுத்து இன்னொன்றையும் நாம் கவனித்தாக வேண்டும். அதாவது இன்றைய பைபிளின் படி பொருமானார் (ஸல்) அவர்கள் காமவெறியர் எனற வாதம் தவறானது என்பதும், பல தீர்க்கதரிசிகளே பலதாரமணம் புரிந்துள்ளார்கள் என்பதும், இயேசு திருமணம் செய்யாமல் இருந்தார் என்பது யூகத்தின் அடிப்படையிலான வாதம் என்பதும் நாம் விளங்கிய அதே வேலையில் இன்னொன்றையும் முக்கியமாக இங்கே விளங்கியாக வேண்டும். அதாவது, இன்றைய பைபிளின் படி பரிசுத்தவானாகவும், தீர்க்கதரிசியாகவும், கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவராக முடியாதவர்கள் - அதற்கான தகுதியற்றவர்கள் யார் யார் என்பதையும் அப்படிப்பட்ட உயர்ந்த நிலையை அடைய முடியாத துர்ப்பாக்கியவானாக எவர்களை பைபிள் குறிப்பிடுகின்றது என்பதையும்;; இனி கவனிப்போம். 

தகுதி 1: வேசிப்பிள்ளைகளும், அவர்களின் சந்ததியினரும்...
உபாகமம் 23:2ல் 'வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. அவனுக்கு பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது' என்று ஒரு தகுதி சொல்லப்படுகின்றது.

அதாவது இந்த வசனத்தின் மூலம் விபச்சாரத்திற்கு பிறந்தவனும், அவனது சந்ததியினரும், அதுவும் அவனுக்கு பத்துதலைமுறையானாலும் பரிசுத்தவானாக ஆகமாட்டான் என்கிறது.

தகுதி 2: wine என்னும் திராட்சைரசம் குடிப்பவன் பரிசுத்தவானாக -ஞானவானாக மாட்டான் என்றும் பரிசுத்த ஆவியால் வழி நடத்தப்படக்கூடியவர்கள் மதுபானத்தை அருந்த மாட்டார்கள் என்றும் பைபிள் கூறுகின்றது:
திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. - நீதிமொழிகள் 20:1

அவன் (யோவான் ஸ்னானன்) கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், (wine) திராட்சரசமும் (Strong Drink) மதுவும்குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். - லூக்கா 1:15

கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் (wine) மதுவையும் (Strong Drink) குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். - லேவியராகமம் : 10: 8 - 11

மேலே சொன்னதன் படி விபச்சார சந்ததியில் பிறந்தவர்களும், குடிகார்களும், பரிசுத்தவானாகவோ தீர்க்கதரிசியாகவோ, பரிசுத்தஆவியால் வழிநடத்தப்படக்கூடியவராகவோ அல்லது கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாகவோ ஆக முடியாது என்பது தெளிவாகின்றது. இந்த வசனங்களின் படி பார்த்தால் இயேசு, தாவீது, சாலமோன் போன்றோர் மேலே சொல்லப்பட்ட பலவீனங்களை உடையவர்களாக இருந்துள்ளார்கள் என்றும் குறிப்பாக இயேசு இந்த இரண்டு பலவீணங்களையும் உடையவராக இருந்தார் என்றும் இன்றைய பைபிள் கூறுகின்றது.

தாவீது அண்ணியப்பெண்ணுடன் விபச்சாரம் செய்தவர். (2 சாமுவேல் 11:1-27) அந்த விபச்சாரத்தின் மூலம் தான் சாலமோன் பிறக்கின்றார் என்று பைபிள் கூறுகின்றது.(மத்தேயு 1:6) இவர்களின் வம்சத்தில் தான் இயேசுவும் பிறக்கின்றர் என்றும் பைபிள் கூறுகின்றது. இவர்கள் மூவரும் உபாகமம் 23:2 வசனத்தின் படி பரிசுத்தவான்களாக முடியாது. (இது குறித்து விரிவான விளக்கம் கான இங்கே சொடுக்கவும்).

அது மட்டுமல்லாமல் இயேசு குடிகாரராகவும் தடைசெய்யப்பட்ட wine என்னும் திராட்சைரசமான மதுவை தானும் விரும்பிக்குடித்து மற்றவர்களையும் குடிக்கச் செய்தவராகவும் இருந்தார் என்கிறது பைபிள். (பார்க்க யோவான் 2:1-10, லூக்கா 7:4) மட்டுமல்ல யோவான் ஸ்னானன் wine என்னும் மதுபானத்தை குடிக்கமாட்டாராம். ஏனெனில் அவன் தன் தாயின் வயிற்றிலிரூக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிறப்பப்பட்டவனாம். அப்படியானால் இயேசுவின் நிலை என்ன?  (இது குறித்து விரிவான விளக்கம் கான இங்கே சொடுக்கவும்).

மேலே கூறப்பட்டுள்ள பைபிளின் வசனங்களின்படிப் பார்த்தால் இயேசுவும் தாவீதும் சாலமோனும் இந்த உயர்ந்த தகுதியைப் பெறமாட்டார்கள் என்பதும், அவர்களே பரிசுத்தவானாக ஆகமுடியாது எனும் போது அவர்கள் எழுதிய புத்தகங்கள் எங்ஙனம் என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

விளக்கமாக சொல்லவேண்டுமென்றால் பைபிளின் படி - இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின்படி பெருமானாரை காமவெறியர் என்று சொல்லுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதுடன், பரிசுத்தவான்களாக தகுதியற்றவர்கள் குறித்து பைபிள் சொல்வதை வைத்துப்பார்த்தால் இயேசுவும், தாவீதும் சாலமோனும் தான் அந்த தகுதியற்றவர்களாக ஆவார்களே யொழிய பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அவை எள்ளளவும் பொருந்தாது என்பது மட்டும் நிச்சயம்.

குர்ஆனின்படி மட்டுமே இயேசுவும் தாவீதும் சாலமோனும் பரிசுத்தவானாகவும், தீர்க்கதரிசிகளாகவும் இறைசெய்தி பெற்றவர்களாகவும் இருக்கின்றார்களேயொழிய பைபிளின் படி இவர்கள் அந்த உயர்ந்த தகுதியைப் பெற தகுதியற்றவர்கள் என்பது தான் பைபிள் சொல்லும் உன்மை என்பதை கிறிஸ்தவர்கள் உணர்ந்து, சத்திய இஸ்லாத்தை ஏற்று நீங்கள் அனைவரும் பரலோக இரஜ்யத்தில் சுதந்தரிக்கக்கூடியவர்களாக ஆக உங்கள் அனைவருக்காகவும ஏக இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

நன்றி: egathuvam.blogspot.com



0 Comments:

Post a Comment