Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

இஸ்லாம் பற்றிய சந்தேகம் கேட்டு, 67.நான் ஏன் மதம் மாறினேன்..? என்ற தலைப்பின் தருமி என்பவர் ஒரு பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் 21கேள்விகள் வைக்கப்பட்டிருந்தது. கேள்விகள் மட்டுமில்லை, கேள்விகளுக்கு முன் ஒரு முன்னுரை மாதிரி, ”இதெல்லாம் எனக்குத் தெரியும்” என்ற தோரணையில் இஸ்லாத்தை பற்றியும் சில விளக்கங்களை எழுதியிருந்தார்.
நமது பார்வையில் அது விமர்சனமாகப்பட்டது. ஏனென்றால் எழுத்தின் சாயலில் விமர்சனம் இருந்தது. மிகையாகச் சொல்லவில்லை இதோ அவர் எழுதியது…

//மூன்று திருமணங்கள் மட்டுமே (என்னைப் பாதித்தவை) குறிப்பிடத் தக்கவை.
1 ஆயிஷா – முகமது இப்பெண்ணை மணம் முடிக்கும்போது அவரது வயது 50-க்கு மேல்;
2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி;
3. ஜுவேரியா – இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.// >தருமி.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டு அதில் மூன்று திருமணங்களால் இவர் பாதிக்கப்பட்டதாகவும், (எப்படி பாதிக்கப்பட்டாரோ?) அதிலும் ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு நிகழ்ந்தது இவர் மனதை கஷ்டப்படுத்தியதாகவும் (எதனால் கஷ்டமடைந்தாரோ?) குறிப்பிட்டிருந்தார். இது விமர்சனம் என்பதில் சந்தேகமில்லை.
இந்த விமர்சனத்தை மனதில் கொண்டு, அன்னை ஆயிஷா, அன்னை ஸைனப், அன்னை ஜுவைரியா (ரலி-அன்ஹுமா) இந்த மூவர் முஹம்மது (ஸல்) அவர்களை மணந்து அதனால் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மாறாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார்கள் என்பதை  இரண்டு பதிவுகளில் விளக்கியிருந்தோம்.

அப்படிப் பாதிக்கப்பட்டிருந்தால், அது சமகால இஸ்லாத்தின் எதிரிகளால் விமர்சிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற திருமணங்கள் அச்சமூகங்களிடையே தடை செய்யப்பட்டிருந்தால் அதுவும் எதிரிகளால் விமர்சிக்கப்பட்டிருக்கும். என்று எழுதி, இத்திருமணத்தால் எங்களின் வாழ்க்கை பாழாகி விட்டதாக யாரும் சொல்லவில்லை மாறாக மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் வரலாறு. என்று சொல்லி…

//நபியை மணந்த ஆயிஷா (ரலி)யின் வாழ்க்கையில் சிறு கீறல்கூட இல்லாமல் மிக்க மகிழ்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லியே வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. ஆனாலும் தருமி போன்றவர்கள் புகுந்து இது கொடுமையென்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதுதான் மிகக் கொடுமை. 53வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஆயிஷா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த பால்ய விவாகத்திற்கும் தருமி மதமாறியதற்கும் என்ன சம்பந்தம்?

59வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஜுவைரியா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா?// 
இப்படிக் கேட்டிருந்தோம். 

அதாவது சம்பந்தப்பட்டவர்கள் மிக சந்தோஷமாக நபி (ஸல்) அவர்களோடு இல்லற வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். இது ஏன் தருமியை பாதிக்க வேண்டும்? அப்போதிருந்தே, தருமிதான் எனக்கு விளக்கம் சொல்லும் இடத்தில் இருக்கிறார்.

ஆனால் பதில் சொல்லாமல், 175.நான் ஏன் மதம் மாறினேன்..? என்ற பதிவில், அவருடைய கேள்விகளில் சிலவற்றை அவரே தள்ளுபடி செய்கிறார். மேலும் தான் விமர்சித்த பகுதிக்கு விளக்கம் கொடுத்த போது, நான் அதைக் கேள்வியாக வைக்கவில்லை என்று நாணயத்தை மாற்றுகிறார், பூவா, தலையா போட சுண்டியதில் பூ விழுந்ததும், உடனடியாக நாணயத்தை தலைப் பக்கம் திருப்பிக் போட்டுக் கொள்வார்களே! அது போல.

//ஆக, என் 21 கேள்விகளில், முதல் கேள்வி, கேள்வியே தவறானது என்று ஒப்புக்கொள்கிறேன். இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டுள்ளன. அந்தப் பதில்களை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேனா என்பது வேறு விஷயம்.// >தருமி.

இங்கே தருமிக்கு சில வார்த்தைகள்: எந்தவொரு விளக்கத்தையும் ஏற்றுக் கொள்வதும், புறக்கணிப்பதும் அவரவர் சுதந்திரமான கருத்திற்குட்பட்டது. ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமென்று இங்கு யாரும் வற்புறுத்தவில்லை. ஏற்காததால் பூமியின் சுழற்சி நின்று விடப்போவதில்லை ஆனால்… 

ஒரு விமர்சகனின் எழுத்தில் நேர்மை இருக்க வேண்டும். தான் விமர்சித்ததை விளக்கும் போது ‘இதை நான் கேள்வியாக வைக்கவில்லை’ என்றால் கேள்விகளுக்கு முன்பு அந்த விமர்சனங்கள் ஏன் எழுதப்பட்டது? என்பதையாவது உண்மையுடன் உரைக்க வேண்டும். 21 கேள்விகளுக்கு மட்டுமல்ல அதற்கு அப்பாலுள்ள கேள்விகளுக்கும் மணி மணியான விளக்கங்கள் இஸ்லாத்தில் இருக்கிறது.

அது பற்றி பேசுவதற்கு முன்,

//மூன்று திருமணங்கள் மட்டுமே (என்னைப் பாதித்தவை) குறிப்பிடத் தக்கவை.
1 ஆயிஷா – முகமது இப்பெண்ணை மணம் முடிக்கும்போது அவரது வயது 50-க்கு மேல்;
2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி;
3. ஜுவேரியா – இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.// >தருமி.

இந்த மூவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள் என்று கூட வேண்டாம் – பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கான சம்பந்தப்பட்டவர்களின் வாக்கு மூலம், அல்லது சமகாலத்தில் யாராவது இவர்களின் பாதிப்பைப் பற்றி பேசியுள்ளதாக ஏதேனும் ஒரு ஆவணத்தை தருமி சமர்ப்பிக்க வேண்டும், அதன் பிறகு அவருடைய மற்ற கேள்விகளையும் அது சம்பந்தமான விவாதங்களையும் அழகிய முறையில் சந்திப்போம். நன்றி!

நன்றி: www.islamkalvi.com/

0 Comments:

Post a Comment