Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் சிந்தனைகள் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகவே இருந்திருக்கின்றது. பால்ய விவாகம், பலதாரமணம், மற்றும் போர்கள் பற்றியக் குற்றச்சாட்டுகள் என எல்லா விமர்சனங்களும் ஒரே சாயலே. வலைப் பூவில் கடந்த 2004 டிசம்பர் மாதம் தொடங்கிய இஸ்லாத்தைப் பற்றிய விமர்சன வாசிப்பில் இப்போது தருமி என்பவரும் இணைந்துள்ளார். 

”நான் ஏன் மதிய உணவு சாப்பிட்டேன்?” என்ற தலைப்பில் எவராவது பதிவிட்டால் ”இது என்ன பிரமாதம் அவருக்கு பசித்திருக்கும் அதனால் மதிய உணவு சாப்பிட்டார்” என்பதை யூகித்துக்கொள்வது பெரிய விஷயமல்ல. அதுபோல் ”நான் ஏன் மதம் மாறினேன்?” என்ற தருமியின் தலைப்பைப் பார்த்ததும் தாய் மதமோ, தழுவிய மதமோ அவருக்கு பிடித்திருக்காது என்றுதான் சொல்லத் தோன்றும். அதுதான் ஏதார்த்தமான உண்மையும் கூட.

ஆனால் பாருங்கள், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பால்ய விவாகம் செய்து கொண்டதால், என் தாய் மதமாகிய கிறிஸ்த்துவ மதத்திலிருந்து மாறினேன் என்று தருமி சொல்வது – இஸ்லாத்தில் குறைபாடுகள் இருப்பதாக விமர்சித்து, அதனால் கிறிஸ்துவத்திலிருந்து மதம் மாறினேன் என்பது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. (எதற்கு மாறினார் என்பது தனி விஷயம்)

பிற மதவாதிகள், தங்களின் மதம் சார்ந்த விமர்சனங்களை சாதாரணமாக எற்றுக்கொள்வது போல், இஸ்லாத்தை விமர்சித்தால் முஸ்லிம்கள் ஏன் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது? என்று தருமியே சொல்லிவிட்டு, அவருடைய இஸ்லாத்தின் விமர்சனங்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு – மறந்தும் விட்டது. இப்போது என் கேள்விக்கு பதிலே இல்லை என்று முஸ்லிம்களை சீண்டுகிறார். இங்கே அவர் ஏன் மதம் மாறினார் என்பதன் நோக்கம் மிகத் தெளிவாகவேப் புரிகிறது. மக்காவை – நோக்கித் தொழும் என்னையும் – உலக முஸ்லிம்கள் அனைவரையும் அவமானப்படுத்தி, சபையொழுக்கம் தெரியாத வின்ஸ்டன் என்பவரின் அநாகரிகப் பின்னூட்டத்தை தருமி அனுமதித்து ஆதரித்திருப்பது அவரது உள் நோக்கம் என்ன? என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. தருமி அவர்களே மிக்க நன்றி!
ஆயிஷா (ரலி) அவர்களின் பால்ய விவாகத்தையே முதலில் தருமி தொட்டிருப்பதால் அதிலிருந்தே தொடங்குவோம். இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்துபவர்கள், 1420 ஆண்டுகளுக்கு முன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டும்தான் பால்ய விவாகம் செய்து கொண்டார் என்கிற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு, அதே கற்பனையிலேயே தங்களின் விமர்சனத்தையும் துவக்குகிறார்கள். பால்ய விவாகம் குற்றமான செயலாகயிருந்திருந்தால் அது அன்றைய சமூகத்தார்களால் எதிர்க்கப்பட்டிருக்கும். (அப்படி எதிர்க்கப்பட்டதாக தகவலிருந்தால் தருமி சமர்ப்பிக்கலாம்) இந்தியாவில் கடந்த நூற்றாண்டு ஆரம்பம் வரையிலும் பால்ய விவாகம் அங்கீகரிக்கப்பட்டதாகவே இருந்தது. 

பால்ய விவாகம்.

குஜ்ஜார் எனும் உயர் ஜாதியைச் சேர்ந்த ராம்கரன் தனது ஒரு வயது மகளை திருமணம் செய்யத் திட்டமிட்ட போது இருகுழந்தைகளுக்கெதிரான கொடுமை என்று குடும்பத்தாரோடு வாதிட்டாள் பன்வாரிதேவி. குடும்பத்தார் கேட்க மறுத்ததும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறாள். காவல் துறை வருவதற்கு முன் கல்யாணம் முடிந்து ஒரு வயது குழந்தை புதுப் பெண்ணாகிறது.

தன் உயர் சமூகம் சார்ந்த உரிமை(?)க்கெதிராக பன்வாரிதேவி புகார் செய்ததால் ஐந்து வெறியர்களால் குதறியெடுக்கப்படுகிறாள் அவள். அந்தக் காமுகர்களுக்கு நீதி மன்றம் விடுதலையளிக்கிறது. பெண் விடுதலைப் பற்றி விவாதித்து சாதனை புரியும் இந்தியாவில் எழுச்சி நூற்றாண்டின் இறுதியில் சில வருடங்களுக்கு முன் நடந்த கொடுமை இது.

கல்வியாளர்களாக மதிக்கப்படும் பிரிட்டிஷார் ஆட்சியின் போது 1828ல் குற்ற நீதி சட்டம் சென்னை, பம்பாய், கல்கத்தாவில் அமுல்படுத்தப்பட்டது. அதில் 8வயதுக்கு குறைவான பெண்ணை கற்பழிப்பது தண்டனைக்குரியக் குற்றமென அறிவிக்கப்பட்டது.

8வயதுக்கு மேற்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய வழிவகுத்த அதே வேளையில் 1828ற்கு முன் சட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பதையும் இச்சட்டம் உறுதிப்படுத்துகிறது.

திருத்தப்பட்ட 1844ம் ஆண்டு தண்டணை சட்டத்தில் 8வயதிற்கு குறைவான மனைவியோடு உடலுறவு கொள்வது கற்பழிப்புக் குற்றம் எனக் கூறப்பட்டது. 8வயதைத் தொட்டவுடன் அவளை மனைவியாக்கி சிதைக்கலாம் என்பதுதான் இச்சட்டத்தின் அர்த்தம்.

இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி திருமண வயது 10ஆக உயர்த்தப்பட்டது 1860ல் தான். ரக்மாபாய் என்ற சிறுவயது பெண்குழந்தையை எலும்புருக்கு நோயால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்யப்பட்டது. ஓரளவு கல்வி பெற்றிருந்த இந்த குழந்தை மணப்பெண் தன் கணவனோடு உடலுறவிற்கு சம்மதிக்க முடியாது என மறுத்தாள். ஆயிரக்கணக்கான மதவாதிகள் ரக்மாபாய்க்கு எதிராக களமிறங்கினர். அவள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

”மனைவியோடு உடலுறவு கொள்ளும் உரிமை கணவருக்கு உண்டு, இதை மறுக்கும் மனைவி தண்டிக்கப்படுவாள்” என்று 1877ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. 

இதன் பிறகு நடத்தப்பட்ட ஆய்வுகளின் பலனாகத்தான் 1891ல் திருமண வயது 12ஆக உயர்த்தப்பட்டது இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், 1928ல் தான் திருமண வயது 16 என்ற நிலையை எட்டியது. (தினமணிக்கதிர் ஆய்வு கட்டுரை 9-97)

இந் நாட்டின் பெண்களுக்கெதிரான கொடுமைகளை முடிவுகட்ட எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும் அவை அனைத்தும் நீதிப் புத்தகங்களிலும், வீட்டுக்கு வெளியிலும்தான் காத்துக்கிடக்கின்றன. கசங்கி புதையும் குழந்தைகள் என்னவோ புதைந்து கொண்டுதானிருக்கிறார்கள். பிரபலமான பூலான் தேவிகூட வயதுக்கு வருமுன் 10வயதில் திருமணம் முடிக்கப்பட்டவர் என்பதை மறுக்க முடியுமா? கவிபாரதி 7வயது கண்ணம்மாவை கைப் பிடித்ததை மறைக்க முடியுமா?

இந்த நூற்றாண்டின் இறுதிவரை இதுதான் நிலைமையெனில் 1420 வருடங்களுக்கு முன்னால் நிலமை எப்படியிருந்திருக்கும் என்பதை ஆய்வாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆயிஷா(ரலி)யின் திருமணம்.

இருண்டு கிடந்த பிரதேசத்தில் இஸ்லாம் தம் ஒளிக்கதிர்களை வீசத் துவங்கிய கொஞ்ச காலத்தில் வியக்கத்தக்க சீர் திருத்தங்கள் உருவாகத் துவங்கின. கொடுமைகள் வேரறுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் பால்ய விவாகம். இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தமது 53வது வயதில் தம் நெருங்கிய தோழரான அபூபக்கர் சித்தீக் அவர்களின் மகள் ஆயிஷாவைத் திருமணம் செய்கிறார்கள் அப்போது ஆயிஷாவிற்கு வயது ஆறு.

அன்றைய அரபுலகில் பால்ய விவாகம் நடைமுறையிலிருந்த வழக்கமாகும். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் 21வயதில் பாட்டியாகி விடுவார்கள் (புகாரி) என்கிறது வரலாறு. 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகப்பேறு, அந்த மகளுக்கு 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகளுக்கு மகப்பேறு இப்படி அந்தக்காலத்துப் பெண்கள் மகள் வழி பாட்டி என்ற உறவு அந்தஸ்தை 21வயதிலேயே பெற்றுவிடுவார்கள்.

அன்றைய நடைமுறை வழக்கில்தான் முஹம்மது (ஸல்) ஆயிஷா (ரலி) திருமணம் நடக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் செய்த பால்ய விவாகமாகட்டும் அல்லது நான்குக்கு மேற்பட்ட திருமணமாகட்டும் இது அவருக்கு மட்டுமே உள்ள தனி சலுகையாகும். திருக்குர்ஆன், 33வது அத்தியாயத்தின் 50வது வசனத்தில்..

”இது மற்ற இறைநம்பிக்கையாளர்களுக்கின்றி உமக்கு மட்டும் உரியது” என்று இறைவன் கூறுகிறான்.” 

இஸ்லாத்தில் பால்ய விவாகம் உண்டு, இது கொடுமை என்று மீடியாக்களும், அறிவு ஜீவிகளும் கூறுவது போல், ஆம் உண்டுதான். இது இறைத்தூதருக்கு மட்டும் இறைவன் அனுமதித்த சட்டம். இஸ்லாத்தில் மற்றெவருக்கும் பால்ய விவாகம் அனுமதி இல்லை. 

நபியை மணந்த ஆயிஷா (ரலி)யின் வாழ்க்கையில் சிறு கீறல்கூட இல்லாமல் மிக்க மகிழ்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லியே வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. ஆனாலும் தருமி போன்றவர்கள் புகுந்து இது கொடுமையென்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதுதான் மிகக் கொடுமை. 53வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஆயிஷா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த பால்ய விவாகத்திற்கும் தருமி மதமாறியதற்கும் என்ன சம்பந்தம்?
(மற்றவை அடுத்த பகுதியில் வளரும் இன்ஷா அல்லாஹ்)

நன்றி: www.islamkalvi.com   
 

0 Comments:

Post a Comment