மதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு?
Posted by ARSHATHALATHARY at 1:32 AMஇயேசுவை இழிவுபடுத்தும் பைபிள்!
பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்கில பைபிள்களில் WINE என்று வரும் இடங்களில் தமிழ் பைபிளில் ‘திராட்சைரசம்’ என்றும் STRONG DRINK என்று வரும் இடங்களில் ‘மது‘ என்றும் மொழிபெயர்த்துள்ளனர். WINE என்று குறிப்பிடப்படும் வேறு சில இடங்களில் ‘திராட்சைரசம்’ என்பதற்கு பதிலாக நேரடியாக ‘மதுபானம்’ என்றே தமிழ் பைபிள்களில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானவகையைச் சேர்ந்த திராட்சைரசம் (Wine), மது (Strong Drink) என்ற இந்த இரண்டுமே முற்றிலுமாக தடை செய்யப்பட்ட ஒன்று என்றும் இதை அருந்துவது மிகப் பாவமான காரியம் என்றும், இதை அருந்துபவன் தவறான நடத்தையுடையவன் – பரிசுத்தமில்லாதவன் என்றும் பைபிளின் பழைய ஏற்பாடு கூறுகின்றது. அந்த தடை வசனங்களின் பட்டியல் இதோ:
திராட்சை ரசம் (Wine) – மதுபானம் (Strong Drink) அருந்திய நிலையில் ஆசாரிப்புகூடத்துக் போவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது :
கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் (Wine) மதுவையும் (Strong Drink) குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். – லேவியராகமம் : 10: 8 – 11
திராட்சரசத்தையும் மதுபானத்தையும் அருந்துபவன் ஞானவானாக மாட்டான் :
திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. - நீதிமொழிகள் 20:1
திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. - நீதிமொழிகள் 20:1
அதிசயமாக குழந்தை பெற இருக்கும் ஒரு மலடான பெண்ணிற்கு திராட்சைரசம் மற்றும் மதுபானத்தை அருந்தக்கூடாது என்று கர்த்தரின் கட்டளை :
கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். ஆதலால் நீ திராட்சரசமும் (Wine) மதுபானமும் (Strong Drink) குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. – நியாயாதிபதிகள் 13:3-4
கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். ஆதலால் நீ திராட்சரசமும் (Wine) மதுபானமும் (Strong Drink) குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. – நியாயாதிபதிகள் 13:3-4
திராட்சைரசம் என்பது கொடுமையின் இரசம் :
அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள் (drink the wine of violence) – நீதிமொழிகள் 4:17
திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் அருந்துபவன் வழிதவறியவன் – மோசம் போனவன் – அவனால் நியாயம் தீர்க்க முடியாது :
அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள் (drink the wine of violence) – நீதிமொழிகள் 4:17
திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் அருந்துபவன் வழிதவறியவன் – மோசம் போனவன் – அவனால் நியாயம் தீர்க்க முடியாது :
ஆனாலும் இவர்களும் (Wine) திராட்சரசத்தால்மயங்கி, (Stong Drink) மதுபானத்தால் வழி தப்பிப்போகிறார்கள். ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். – ஏசாயா 28:7
திராட்சைரசம் அருந்துபவன் வெறியன். அது முற்றிலுமாக விலக்கப்பட்டது :
வெறியரே, விழித்து அழுங்கள். (Wine) திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள். அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது - யோவேல் 1:5
திராட்சைரசம் அருந்துபவன் வெறியன். அது முற்றிலுமாக விலக்கப்பட்டது :
வெறியரே, விழித்து அழுங்கள். (Wine) திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள். அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது - யோவேல் 1:5
இருதயத்தை மயக்கக்கூடிய மிகக் கொடிய பழக்கங்கள்:
வேசித்தனமும், (Wine) திராட்சரசமும், (New Wine) மதுபானமும் இருதயத்தை மயக்கும். – ஓசியா 4:11
வேசித்தனமும், (Wine) திராட்சரசமும், (New Wine) மதுபானமும் இருதயத்தை மயக்கும். – ஓசியா 4:11
Whoredom and wine and new wine take away the heart.
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவனாகிய யோவான் ஸ்னானன் கர்த்தருக்கு முன்பாக பெரியவனாக இருப்பான். காரணம் அவன் தடைசெய்யப்பட்ட திராட்சைரசத்தையும் – மதுவையும் குடிக்கமாட்டான்:
அவன் (யோவான் ஸ்னானன்) கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், (Wine) திராட்சரசமும் (Stron Drink) மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். – லூக்கா 1:15
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவனாகிய யோவான் ஸ்னானன் கர்த்தருக்கு முன்பாக பெரியவனாக இருப்பான். காரணம் அவன் தடைசெய்யப்பட்ட திராட்சைரசத்தையும் – மதுவையும் குடிக்கமாட்டான்:
அவன் (யோவான் ஸ்னானன்) கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், (Wine) திராட்சரசமும் (Stron Drink) மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். – லூக்கா 1:15
மொத்தத்தில் மதுபானம் அருந்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டது -காரணம் :
(Wine) மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள – Wine – சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. Wine – மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதேள, அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்ள. உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை. என்னை அறைந்தார்கள் எனக்குச் சுரணையில்லை. நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய். - நீதிமொழிகள் 23:29-35
(Wine) மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள – Wine – சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. Wine – மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதேள, அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்ள. உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை. என்னை அறைந்தார்கள் எனக்குச் சுரணையில்லை. நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய். - நீதிமொழிகள் 23:29-35
திராட்சைரசம் உட்பட மதுபானங்கள் அனைத்தும் முழுமையாக தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதையும், அது எந்த அளவுக்கு மனிதனுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய தன்மையுடையது என்பதையும் மேற்கூறப்பட்ட பைபிள் வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது.
பொதுவாக மதுவானது மனிதனுடைய சிறு மூலையை செயலிழக்கச்செய்து அவனது சிந்தனைத் திரணைக் குறைத்துவிடும். அந்த நேரத்தில் அவன் தனது பகுத்தறிவுக்கு மாற்றமாக – தன்மானத்தை இழந்தவனாக தனது நடவடிக்கையை அமைத்துக்கொள்வான். அதை அருந்தியிருக்கக்கூடிய நிலையில் – அதன் போதை தலைக்கேறியவுடன் தனது தாய் என்று தெரியாது, தனது மகள் என்று தெரியாது, தனது குடும்பத்தினர் என்று தெரியாது, எல்லாவற்றையும் மீறி மிகக் கேவலமாக நடந்துக்கொள்ளக்கூடியவனாக – நடக்கக்கூடாத அனைத்துச்செயல்களையும் செய்யத் தூண்டும் ஒரு கேடுகெட்ட போதையுட்டும் பொருள்தான் மது. இதை அனைவரும் அறிந்ததே!
இந்த மதுவகையைச் சேர்ந்த Wine என்னும் திராட்சைரசமானது எந்த அளவுக்கு மனிதனைத் தரம்தாழ்ந்த நிலைக்கு கொண்டுச்செல்லும் என்பதற்கு பைபிளிலேயே தீர்க்கதிரிசிகளின் பெயரால் புனையப்பட்ட கதைகளில் வரும் சம்பவங்களே சரியான சான்று :
நோவாவும் (Wine) திராட்சைரசமும் :
ஒரு மனிதன் மதுபான வகையைச்சேர்ந்த Wine என்னும் திராட்சைரசத்தை அருந்தினால் போதை தலைக்கேறி எந்த அளவுக்கு மிக கீழான நிலைக்குத் தள்ளப்படுவான் என்பதற்கு ஆதாரமாக நோவா என்னும் தீர்க்கதரிசியின் செயல்பாட்டை(?) பைபிளில் எழுதி வைத்துள்ளனர்:
நோவாவும் (Wine) திராட்சைரசமும் :
ஒரு மனிதன் மதுபான வகையைச்சேர்ந்த Wine என்னும் திராட்சைரசத்தை அருந்தினால் போதை தலைக்கேறி எந்த அளவுக்கு மிக கீழான நிலைக்குத் தள்ளப்படுவான் என்பதற்கு ஆதாரமாக நோவா என்னும் தீர்க்கதரிசியின் செயல்பாட்டை(?) பைபிளில் எழுதி வைத்துள்ளனர்:
நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். அவன் (Wine) திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள் அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து, கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். (ஆதியாகமம் 9 : 20 – 25 )
லோத்தும் மதுபானமும் (Wine):
அடுத்து இந்த திராட்சைரசம் – (Wine) என்னும் மதுபானத்தை அருந்தக்கூடியவன் எந்த அளவுக்கு வெட்கங்கெட்ட செயல்களைச் செய்யவும் தயங்கமாட்டான் என்பதற்கு மற்றொரு தீர்க்கதரிசியான லோத்து என்பவருடைய வாழ்வில் நடந்ததாக (?) ஒரு சம்பவத்தை எழுதி வைத்துள்ளனர்:
லோத்தும் மதுபானமும் (Wine):
அடுத்து இந்த திராட்சைரசம் – (Wine) என்னும் மதுபானத்தை அருந்தக்கூடியவன் எந்த அளவுக்கு வெட்கங்கெட்ட செயல்களைச் செய்யவும் தயங்கமாட்டான் என்பதற்கு மற்றொரு தீர்க்கதரிசியான லோத்து என்பவருடைய வாழ்வில் நடந்ததாக (?) ஒரு சம்பவத்தை எழுதி வைத்துள்ளனர்:
பின்பு லோத்து சோவாரில் குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள். அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு (Wine) மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு (Wine) மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் (Wine) மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு (Wine) மதுவைக் குடிக்கக்கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள். (ஆதியாகமம் 19:30-36)
மதுபானவகையைச் சேர்ந்த Wine என்னும் திராட்சைரசம் அருந்தினால் எந்த அளவுக்கு கேடுகெட்ட, கேவலமான, அருவறுக்கத்தக்க செயல்களை செய்யத்தூண்டும் என்பதற்கு பைபிளில் சொல்லப்பட்டுள்ள இந்த நோவா மற்றும் லோத்தின் சம்பவங்களே (?) சரியான சான்று.
மேலே தடைசெய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பைபிள் வசனங்களிலும், லோத்து மற்றும் நோவா ஆகியோர் அருந்தியதாக சொல்லப்படும் இடங்களிலும் பயன்படுத்தப்படும் வார்த்தை போதை ஏற்படுத்தும் மதுபானவகையைச் சேர்ந்த Wine என்னும் திராட்சைரசம் தான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதுவரை நாம் பார்த்தவகையில், இந்த திராட்சைரசம் (Wine) மற்றும் மது (Strong Drink) என்பது:
- கர்த்தரால் தடை செய்யப்பட்டது ஒன்று என்று பைபிள் கூறுகின்றது.
- அதை அருந்திய நிலையில் ஆசாரிப்புக்கூடாரத்துக்கு போகக்கூடாது என்கிற அளவுக்கு தடை செய்யப்பட்டது.
- இவற்றை அருந்துபவன் ஞானவானாகமாட்டான்.
- பாக்கியம் பெற்ற பெண்மணிக்கு இவை தடுக்கப்பட்டதாக கர்த்தரால் சொல்லப்பட்டது.
- இவை கொடுமையின் ரசம் என்கிற அளவுக்கு மனிதனை கொடுமையான நிலைக்குத் தள்ளக்கூடியது
- இவற்றை அருந்துபவன் வழிதவறியவன், மோசம் போனவன். இதை அருந்திய நிலையில் உள்ளவன் நியாயம் தவறியவனாகத்தான் இருப்பான்.
- வெறியனே இவற்றை அருந்துவான்.
- இவற்றை அருந்துவது இருதயத்தை மயக்கக்கூடிய கேடுகெட்ட செயலான விபச்சாரத்திற்கு ஒப்பானது
- பரிசுத்த ஆவியால் நிரப்பபட்டவனும், கர்த்தருக்கு முன்பாக பெரியவானாக இருப்பவர்களும் இவற்றை கண்டிப்பாக அருந்த மாட்டார்கள்.
- இவற்றை அருந்துவதால் ஏற்படக்கூடிய போதை மனிதனை மிக கீழான நிலைக்கு கொண்டு சொல்லுவதுடன் அருவருக்கத்தக்க செயல்களையும் செய்யத்தூண்டும்
என்பவற்றையெல்லாம் பைபிளின் ஆதராங்களுடன் பார்த்தோம்.
மேற்கூறிய அனைத்து காரணங்களால் பைபிளில் தடைசெய்யப்பட்ட Wine என்று சொல்லப்படும் திராட்சைரசமென்னும் மதுபானத்தை இயேசு தானும் அருந்தியதுடன் மற்றவர்களையும் அருந்தத்தூண்டினார் என்றும் அவரை ‘குடிகாரர்’ என்றே மக்கள் பரவலாக அழைத்தனர் என்றும் பைபிளில் எழுதிவைத்துள்ளனர். இயேசுவை இழிவு படுத்தும் நோக்கத்துடனும் – அவரது ஒழுக்கத்திற்கு மாசுகற்பிக்கும் வகையிலுமே பைபிளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் கவனிக்கவேண்டும். அதுவும் எந்த அளவுக்கொன்றால் ‘தான் கடவுள் புறத்திலிருந்து வந்த ஒருவன்’ என்பதை நிரூபிப்பதற்காக அவர் செய்த முதல் அதிசயமே தண்ணீரை திராட்சரசமென்னும் மதுபானமாக மாற்றி மக்களுக்கு குடிக்கக்கொடுத்தார் என்று எழுதிவைத்துள்ள வரிகளைப் பாருங்கள் :
மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். (Wine) திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் (Wine) திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு. ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அவர்கள் கொண்டுபோனார்கள். அந்தத் (Wine) திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் (Wine) திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: எந்த மனுஷனும் முன்பு நல்ல (Wine) திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல (Wine) ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். (யோவான் 2:1-10)
இந்த வசனத்தின் மூலம் ‘குடிமகன்’களுக்கு தேவையான திராட்சைரசமென்னும் மதுபானம் பற்றாக்குறை ஏற்பட்டபோது தேவைக்கு அதிகமாகவே தனது அதிசயத்தின் மூலம் பெற்றுக்கொடுத்தார் இயேசு என்று அவரைப் பற்றி பைபிளில் குறிப்பிடப்படுகின்றது. இந்த புணையப்பட்ட சம்பவத்தின் மூலம் அவரது ஒழுக்கத்திற்கும், கண்ணியத்திற்கும் மாசு கற்பிக்கப்படுகின்றதா இல்லையா? இதன் மூலம் அவரது வருகையின் நோக்கம் கேள்விக் குறியாக்கப்படுகின்றதா இல்லையா? அதுவும் பழைய ஏற்பாட்டில் தடைசெய்யப்பட்ட திராட்சைரசத்தை தொடர்ந்து தடைசெய்ய அவர் வந்திருப்பாரா? அல்லது அந்த தடையை உடைத்து ‘குடி’மக்களுக்கு உற்சாக மூட்ட வந்திருப்பாரா? இப்படி தங்களுக்கு வழங்கப்பட்ட அதிசயத்தின் மூலம் ‘குடி’மக்களுக்கு ‘நற்செய்தி’ அறிவிக்கும் வண்ணமாக அவர்கள் போதையில் மிதப்பதற்கு துணைபுறிந்தவர்கள் தான் தீர்க்கதரிசிகள் என்று சொல்லப்படுவதால் தீர்க்கதரிசிகளின் வருகையின் நோக்கம் கேள்விக்குறியாகிவிடாதா?
அதுமட்டுமல்ல தான் கர்த்தரிடமிருந்து வந்தவன் என்பதை நிரூபிப்பதற்காக அவர் செய்த முதல் அதிசயமே இந்த தண்ணீரை மதுபானமாக மாற்றி ‘குடி’மகன்களைக் குளிர்வித்ததுதான் என்றும் எழுதிவைத்துள்ளனர்:
இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 2:11)
இப்படி தனது அதிசயத்தின் மூலம் ‘குடி’மகன்களை உற்சாகமூட்டியதோடல்லாமல் தானும் ‘குடி’மகன்களில் ஒருவராகத்தான் இருந்தார் என்றும் குறிப்பாக அவர் வாழ்நாள் முழுவதும் Wine என்னும் மதுபானம் அருந்தக்கூடியவராகவே இருந்தார் என்றும் மக்கள் அவரை ‘மதுபானப்பிரியர்’ என்றே பரவலாக அழைத்தனர் என்றும் பைபிளில் எழுதிவைத்துள்ளனர் :
எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் (Wine) திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான். அதற்கு நீங்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார். அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் – Winebibber – மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள். – லூக்கா 7:34, மத்தேயு 11:19
இந்த வசனத்திலேயே யோவான் ஸ்னானன் மது அருந்தாதவனாக இருந்ததாகவும் ஆனால் இயேசுவோ மதுவை அருந்துபவராக மட்டுமல்ல அதை விரும்பிக் குடிக்கக்கூடியவராகவும் இருந்தார் என்பதாகவும், இது மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தது என்பதாகவும் அந்த விமர்சனம் இயேசுவின் காதுகளுக்கும் எட்டியது என்பதாகவும் எழுதிவைத்துள்ளனர்.
எந்த அளவுக்கொன்றால் மதுபானம் உட்பட பழைய ஏற்பாட்டில் தடைசெய்யப்பட்ட அனைத்தையும் அனுமதிக்கும் வகையில் பின்வருமாறு இயேசு போதித்ததாக பைபிளில் எழுதிவைத்துள்ளனர்:
வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். – மத்தேயு 15:11
மொத்தத்தில் பழைய ஏற்பாட்டால் தடைசெய்யப்பட்ட மதுபானத்தை தானும் அருந்தக்கூடியவராகவும் மக்களை எல்லாம் மது அருந்த வைத்து வழிகெடுத்தவராகவும், இப்படி போதை அடிமையாக இருந்ததன் மூலம் மேலே நாம் சுட்டிக்காட்டிய அத்தனை தவறான செயல்களுக்கும் சொந்தக்காராக இருந்தார் என்பது போன்றும் இயேசுவை இன்றைய பைபிள் சித்தரிக்கின்து. மட்டுமல்ல, இவர் காலத்தில் வாழ்ந்த பரிசுத்தவான்களில் ஒருவரான யோவான்ஸ்னான் கூட மதுஅருந்தாதவராக இருந்ததாகவும் ஆனால் இயேசுவோ தடைசெய்யப்பட்ட மதுவை விரும்பி குடிக்கக்கூடியவராக இருந்ததாக காட்டி இருக்கின்றார்கள் என்றால் என்ன அர்த்தம்? இயேசுவை எப்படியேனும் இழிவுபடுத்த வேண்டும் என்ற வக்கிரநோக்கம் தானே?
கர்த்தருக்காக பொய் சொல்லாம் என்று புதிய கொள்கையை உதித்த, இயேசுவால் எச்சரிக்கப்பட்ட – யூதர்களைச் சேர்ந்த ‘பரிசேயரான’ பவுலும், அவரைச் சார்ந்தவர்களாலும் எழுதப்பட்ட பைபிளில் எப்படி இயேசுவைப் பற்றி உயர்வாக காணமுடியும்? இயேசுவின் மீது உன்மையிலேயே பற்று உள்ளவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா? ஒருபக்கம் கர்த்தருக்கு மேலானவராக காட்டி அவரது வருகையைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, மறுபக்கம் அவரை மிகத் தரக் குறைவானவராகவும் ‘குடி’மகன்களில் ஒருவராகவும் சித்தரிப்பது தான் அவரை மதிக்கும் லட்சனமா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!
உலகில் இன்றைக்கு எந்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இந்த மதுபானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது? எந்த சமுதாயத்தினரின் முக்கிய விசேஷங்களில் இந்த மதுபானம் முக்கியமான ஒன்றாக பரிமாரப்படுகின்றது? எந்த சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இந்த மதுபானம் அருந்துவதை ‘லேடஸ்ட் ஃபேஷனாக’ மாற்ற முயற்சி எடுத்துக்கப்பட்டு கொண்டிருக்கின்றது? கிறிஸ்தவ சமுதாயத்தினர் அதிகமாக வாழும் மேலைநாடுகளில் தானே!
மதுபானத்தை வீட்டுக்கு வீடு, ரோட்டுக்கு ரோடு, உணவு விடுதிகள் என்று அனைத்திலும், தாயும் தந்தையும் மகனும் மகளும் குடும்பத்தார் என்று அனைவரும் சர்வ சாதாரணமாக ஒன்றாக அமர்ந்து குடித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கெல்லாம் காரணம் என்ன? அந்த கேடுகெட்ட கலாச்சாரம் இன்று உலகம் முழுவதும் ‘ஃபேஷன்’ என்றப் பெயரில் பரவிக்கொண்டிருக்கின்றது என்றால் என்ன காரணம்? கிறிஸ்தவர்கள் கடவுளாக கருதிக்கொண்ருக்கக்கூடிய இயேசுவே குடித்தார் என்று பைபிளின் புணையப்பட்ட வரிகள் தானே!?
மது அருந்துவது இன்றைய கிறிஸ்தவ மார்க்கத்தில் தடைசெய்யப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க இன்றைய கிறிஸ்தவ மதத்தின் தலையாய கோட்பாடுகளுக்கும் – பைபிளின் அதிக புத்தகங்களுக்கும் – சொந்தக்காரரான பவுல் மதுபானம் அருந்துவது பற்றி என்ன சொல்கின்றார்? அது பற்றி அவரின் உபதேசம் தான் என்ன?
நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் – Wine – திராட்சரசமும் கூட்டிக்கொள். – 1 திமோத்தேயு 5:23
என்ன அருமையான போதனைப் பார்த்தீர்களா? ஒரு பரிசுத்த ஆவியால் (?) பேசக்கூடிய ஒரு பரிசுத்தவானின் உபதேசத்தைப் பார்த்தீர்களா? தண்ணீர் மட்டும் குடிக்காமல் திராட்சைரசமென்னும் மதுபானத்தையும் கொஞ்சம் சேர்த்துக்கொள் என்றால் என்ன அர்த்தம்? ‘குடிமகன்களுக்கு’ சாதகமான இந்த வைர வரிகளை (?) தாங்கி நிற்கும் ஒரு புத்தகம் எப்படி புனித புத்தகமாக இருக்கமுடியும்? இதை அடிப்படையாக கொண்ட ஒரு மதம் எப்படி மனிதனைப் பண்படுத்தும் மார்க்கமாக இருக்க முடியும்? சிந்திக்க வேண்டாமா?
இந்த அற்புத உபதேசத்திற்கு (?) சொந்தக்காரரான பவுலும் அவரைச் சார்ந்தவர்களாலும் எழுதப்பட்ட பைபிளில் இயேசுவை ‘மொடக் குடிகாரர்’ என்று எழுதப்பட்டதில் யாருக்கும் எந்த ஆச்சரியமும் ஏற்படப்போவதில்லை.
அடுத்து மற்றொன்றையும் நாம் இந்த இடத்தில் தெளிவு படுத்த விரும்புகின்றோம் :
இயேசுவை பைபிளில் குறிப்பிடப்படுவது போன்று இப்படிப்பட்ட கீழ்தனமாவராக முஸ்லீமகளாகிய நாங்கள் ஒருபோதும் கருதவில்லை – கருதவும் கூடாது. இயேசு அவர்களை முழுக்க முழுக்க ஒரு பரிசுத்தவானாகவும் மிகச் சிறந்த தீர்கதரிசியாகளில் ஒருவராகவுமே நாங்கள் நம்புகின்றோம். அவ்வாறு தான் எங்களுக்கு இஸ்லாம் அவரைப் பற்றி எடுத்துரைக்கின்றது.
அவரது முதல் அதிசயம் தண்ணீரை மதுபானமாக மாற்றி குடிமகன்களை உற்சாகமூட்டியவர் என்று பைபிள் கூறுகின்றது. குர்ஆனோ, இயேசுவை அதிசயமாக பெற்றுக்கொண்டு முதன் முதலில் தனது சமூகத்தாரிடம் வந்த பொழுது தனது தாய்க்கு ஏற்பட்ட கலங்கத்தைத் துடைக்கும் வண்ணமாக பச்சிளம் குழந்தையாக இருந்தபோது பேசி தனது முதல் அதிசயத்தை தொடங்கினார் என்கிறது. (இந்த அதிசயம் பைபிளில் மறைக்கப்பட்டுவிட்டது)
இயேசு தனது பரிசுத்த தாய் மரியாளை அவமதித்தவராக பைபிளில் காட்டப்படுகின்றது. ஆனால் குர்ஆனோ தனது தாயை மதித்து நடக்கக்கூடிய ஒழுக்கச்சீலர்களில் ஒருவராக இருந்தார் என்று கூறி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள கலங்கத்தை துடைக்கின்றது.
தனது தாயை மட்டுமல்ல மற்றவர்களுடைய பெற்றோரையும் மதிக்காதவராகவும், இன்றைய ரௌடிகளும், பொறுக்கிகளும் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவர்களின் பெற்றோர்களைத் தரக்குறைவாக திட்டக்கூடியவராகவும் இயேசு நடந்துக்கொண்டார் என்று பைபிள் கூறுகின்றது. ஆனால் குர்ஆனோ அவர் அப்படிப்பட்ட தரம் தாழ்ந்தவர் அல்ல என்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.
அவ்வளவு ஏன்? அவர் விபச்சாரசந்ததியில் பிறந்ததன் மூலம் பரிசுத்தவானாக கூட வரமாட்டார் என்று பைபிள் கூறுகின்றது. ஆனால் குர்ஆனோ அவர் கண்ணியமிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும் அவர் மிகச்சிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் அவரைப் போற்றிப் புகழ்துரைக்கின்றது. எப்படிப் பார்த்தாலும் பைபிளில் இயேசு மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து கலங்கத்தையும் குர்ஆன் துடைத்து எரிகின்றது. உன்மையிலேயே இயேசுவை நேசிக்கின்றோம் என்று கூறுபவர்கள் இவற்றை எல்லாம் ஆழ்ந்து சிந்தித்து பார்க்கவேண்டும். உங்களின் நேர்வழிக்காக நாங்கள் ஏக இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.
மதுபானம் பற்றி திருக்குர்ஆன்:
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் ”அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! ”தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; ”(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு இறைவன் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (அல் குர்ஆன் 2 : 219)
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் ”அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! ”தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; ”(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு இறைவன் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (அல் குர்ஆன் 2 : 219)
நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி இறைவனின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5 : 90 – 91)
குறிப்பு: Wine என்னும் திராட்சைரசம் என்பது ஏதோ போதையை ஏற்படுத்தாத, திராட்சைப் பழத்திலிருந்து எடுக்கப்படும் ஒருவகைப் பழச்சாறு என்று ஒரு சில கிறிஸ்தவர்களும் பல அப்பாவி பொதுமக்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். சில கிறிஸ்தவ கடைகளிலும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட போதை இல்லாத பழச்சாற்றை திராட்சைரசம் என்றப்பெயரில் விற்பனையும் செய்யப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் இயேசு குடித்த திராட்சைரசம் என்பது போதை இல்லாத இது போன்ற பழச்சாறுதான் என்று மக்களை நம்பவைப்பதற்காக – ஏமாற்றியே பழக்கப்பட்ட கிறிஸ்தவ மிஷி’நரி’களால் செய்யப்படும் தந்திர வேலையே இது! ஆனால் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள படி இயேசு தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டிது – மதுபானவகையைச்சேர்ந்த போதைதரக்கூடிய Wine என்னும் திராட்சைரசத்தையே என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். லோத்து குடித்துவிட்டு அவரது மகள்களுடன் உடலுறவு கொண்டதற்கும், நோவா குடித்துவிட்டு அநாகரிகமாக நடந்துக்கொண்டதற்கும் எந்த திராட்சைரசம் காரணமாக இருந்ததோ அதே திராட்சைரசத்தை தான் இயேசுவும் குடித்தார் மற்றவர்களையும் குடிக்கவைத்தார் என்று பைபிள் குறிப்பிடுகின்றது. மதுவையும் திராட்சைரசத்தையும் யோவான்ஸ்னானன் குடிக்கமாட்டான் என்று எந்த திராட்சை ரசத்தை குறித்து சொல்லப்பட்டதோ அதே திராட்சைரசத்தைத்தான் இயேசு குடித்தார் என்று பைபிளில் எழுதிவைத்துள்ளனர். ஆங்கில பைபிள்களில் தடைசெய்யப்பட்ட இடங்களிலும் சரி, இயேசு குடித்ததாக சொல்லப்படும் இடங்களிலும் சரி, அனைத்து இடங்களிலும் ‘Wine’ என்றே குறிப்பிடப்படுகின்றது.
ஒரு வாதத்திற்காக இன்றைய கிறிஸ்தவ மிஷி’நரி’கள் பிரச்சாரம் செய்வது போல் திராட்சைரசம் என்பது போதை இல்லாத ஒருவகைப் பழச்சாரறுதான் என்றால் பிறகு ஏன் பழைய ஏற்பாட்டில் அதை தடை செய்யப்படவேண்டும்? பிறகு ஏன் அதைக் குடித்ததால் நோவாவும், லோத்தும் அநாகரிகமாக நடந்துக்கொள்ள வேண்டும்? யோவான்ஸ்னானன் அதைக் குடிக்கமாட்டான் என்று ஏன் சொல்லப்படவேண்டும்? பவுல் ‘கொஞ்சம்’ கூட்டிக்கொள் என்று ஏன் உபதேசம் செய்யவேண்டும்? சிந்திக்க வேண்டாமா?
பழைய ஏற்பாட்டால் தடைசெய்யப்பட்ட, நோவா, லோத்து ஆகியோர் அருந்திய, இயேசு தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டிய, பவுல் கொஞ்சம் சேர்த்துக்கொள் என்று உபதேசம்(?) செய்த அனைத்தும் மதுவகையைச் சேர்ந்த Wine என்னும் திராட்சைரசம் தான். அதற்கான போதுமான பைபிள் ஆதாரங்களை நாம் இங்கே கொடுத்துள்ளோம். இதன் பிறகும் யாரேனும் மறுத்தால் இன்னும் பல கூடுதல் தகவல்களுடன் விரிவான விளக்கமளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ். கட்டுரை நீண்டுக்கொண்டே செல்வதால் பல கூடுதல் தகவல்கள் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி: egathuvam.blogspot.com
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)