Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

மறுப்பும்.. விளக்கமும்… 

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் மக்களுக்கு எந்த ஒரு படிப்பினைகளும் இல்லாத – எதற்கும் உதவாத – ஆபாசவர்ணனைகளுடன் கூடிய ஏராளமான ஆபாசக்கதைகள் – நிறைந்து காணப்படுகின்றன என்ற ஆய்வுக்கட்டுரைகளை ‘பைபிளில் ஆபாசம்’ என்றத் தலைப்பில் நாம் தொடராக கண்டு வருகின்றோம்.

கடவுளின் வேதம் என்பது எதற்காக அருளப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மாறாக – அசிங்கமான கற்பனைக்கதைகள் – ஆபாசம் நிறைந்த கதைகள் – பைபிளில் நிறைந்துக் காணப்படுவதற்கு காரணம், அக்காலத்தில் வாழ்ந்த யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம்போனப் போக்கில் – கடவுளுடைய பெயரால் – அவரது தீர்க்கதரிசிகள் – நல்லோர்கள் – பலரின் பெயரால் இட்டுக்கட்டிய பொய்க்கதைகளை, கடவுளுடைய வேதத்திலேயே உட்சொருகி, அதை சீரழித்ததால் தான் இன்றைய பைபில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அப்படி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கதைகள் கடைசியில் கடவுள் கொள்கைக்கே பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அமைந்து விட்டது என்பதுதான் அதைவிட வருத்தத்திற்குறிய ஒன்று. அதன் அடிப்படையில் அமைந்த ஒரு கதை – யாருக்கும் – எவருக்கும் – எந்த ஒரு பயனுமற்ற ஒரு கதை – பைபிளில் வருகின்றது. அதை சற்று அலசுவோம்.

இஸ்ரவேலர்களில் ஒருவரான ‘யூதா’ என்பவரின் சந்ததியினர் மூலமாகத்தான் இயேசு பிறந்தார் என்று புதிய ஏற்பாட்டில் கூறப்படுகின்றது. அதை மத்தேயு பின்வருமாறு கூறுகின்றார். ‘யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்’ (மத்தேயு 1:3) அதவது ‘யூதா’ பரேசை தாமாரிடத்திலிருந்து பெற்றானாம். அந்த வம்சத்தில் தான் இயேசு பிறந்தாராம். இந்த தாமார் யூதாவுக்கு யார்? மனைவியா? இல்லை நிச்சயிக்கப்பட்டவாரா? அல்லது யூதா தாமாருக்கு திருமணம் முடிக்கும் அளவுக்கு உறவு முறைக்காரரா? கிடையாது. யூதாவுக்கும் தாமாருக்கும் உள்ள உறவு என்ன? பைபிளின் பழைய ஏற்பாட்டிலேயே அந்த ஆபாசக்கதையை விளக்கப்படுகின்றது. அதாவது இந்த கேடுகெட்ட விபச்சார சந்ததி மூலம் தான் இயேசு வந்தார் என்று இயேசுவைக் அசிங்கப்படுத்தக்கூடிய கதையை பாருங்கள்:

‘அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஏர் என்று பேரிட்டான். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டான். அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான். (ஆதியாகாமம் 38 : 2 – 5)

இது வரை யூதா என்பவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்து வரும்கதையைப்பாருங்கள்.

யூதா தன் மூத்த மகனாகிய ‘ஏர்’ என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராததென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். (ஆதியாகமம் – 38 : 6 – 10)

இங்கே யூதா ஒரு செயலைச் செய்தாக சொல்லப்படுகின்றது. அதாவது தனது மூத்த மகனும் தாமாரின் கனவனுமான ஏர் என்பவன் பொல்லாதவனாக இருந்தானாம். ஆதனால் அவனைக் கடவுள் அழித்துப் போட்டாராம். அந்த ‘ஏர்’ என்பவனுக்கு மகன் இல்லாததால் அவனது மனைவியை தனது இரண்டாவது மகனை திருமணம் செய்து அவளை வைத்து ஒரு பிள்ளைப்பெறு என்று சொன்னதாகவும், அவனும் அவளோடு உடலுறவு கொண்டுவிட்டு, இவனது ‘விந்து’ அவளுள்ளே சென்றுவிடாமல் வெளியே எடுத்து விட்டு – அதை ‘வேஸ்ட் பண்னிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அவன் செய்தது கடவுளுக்கு பொல்லாப்பாய் இருந்ததாம். இந்தக் கதையால் – இந்த விளக்கத்தால் – இந்தச் சமுதாயத்திற்கு என்னப் பயன்? அடுத்து வரும் கதையைப் பாருங்கள் :

‘அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான். அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்’ (ஆதியாகமம் – 38 : 11)

இப்படி வாக்கு கொடுத்த யூதா அடுத்து செய்த காரியம் என்ன?

‘அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில்போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான். அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள்ளூ அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள். யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்ள. அவன் அவளைக் காணாமல், அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான். அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லைளூ நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான். ஏறக்குறைய மூன்றுமாதம் சென்ற பின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன். இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள். அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன. அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது. அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். அது தன் கையை திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள். அதினாலே அவனுக்கு பாரேஸ் என்று பேரிடப்பட்டது. பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான். அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது. (ஆதியாகமம் 38 : 12-30)

இப்படி போகின்றது ஒரு குடும்பத்தின் விபச்சாரக்கதை. நாம் என்ன கேட்கின்றோம் என்றால் இந்தக் கதையால் இந்த சமுதாயத்திற்கு – இந்த மக்களுக்கு என்னப் பயன்? இதனால் இந்த சமுதாயத்திற்கு கடவுள் சொல்ல வரும் உபதேசம் என்ன? ‘தாமார்’ போல் தன் மாமனார் என்று தெரிந்தும் விபச்சாரம் செய்ய வேண்டும் என்று சொல்ல வருகின்றாரா? அல்லது யூதாபோல் விபச்சாரியுடன் விபச்சாரம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லவருகின்றாரா? ஓரு குடும்பத்திற்குள் நடந்த இந்த அசிங்கமான கதையால் – மாமனாரும் மருமகளும் செய்த கல்ல உறவை சொல்லுவதன் மூலம் – மைத்துனனும் மைத்துனியும் செய்த உடலுறவை சொல்லுவதன் மூலம் – இந்த மக்களுக்கு என்ன பயன்? ஒன்றும் கிடையாது. ஒரே ஒரு உன்மையைத் தவிர. அதாவது, இந்த யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம் போன போக்கில் கடவுளுடைய வேதங்களை சிதைத்ததோடு, வரலாறு என்றப் பெயரில் – வரலாற்றைப் புறட்டி – அவதூறான – ஆபாசமான கதைகளை எழுதிவைத்து கடவுளின் வேதத்தையே கேள்விக் குறியாக்கிவிட்டார்கள் என்பது மட்டும் தான்.
இந்த ஆபாசக் கதையை வேண்டும் என்றே மறுப்பதற்காகவும் – தாங்களிடம் இருக்கும் பைபிளை கடவுளின் வேதம் என்று நம்பிவிட்டோம் என்பதற்காகவும் – எதையாவது எழுதி இந்தக் கதையை நியாயப்படுத்த முனைகின்ற முயற்சியில் – முஸ்லீம் பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக அவதூறுபரப்பிக்கொண்டிருக்கும் சில கிறிஸ்தவ முகமூடிகள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் சொல்வது பச்சைப் பொய் என்றாலும், அதைச் பொருந்தச் சொல்லியாவது தங்களைச் சார்ந்தவர்களைத் திருப்திபடுத்தியிருக்கலாம். அவ்வாறல்லாமல் சம்பந்தமில்லாத காலத்துடன் அதைப் பொருத்தி நியாப்படுத்த முயல்வது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
.
லேவிரட் திருமண முறையும் – யுதா, தாமார் ஆபாசக் கதையும் : 

இந்தக் கதையை சில முகமூடிகள் தங்களைச் சார்ந்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக கூறக்கூடிய காரணம் ‘ லேவிரேட் திருமணம் – Levirate Marriage’ என்ற முறையாம். அப்படி என்றால் என்ன? அதையும் அவர்களே விளக்குகின்றனர் :

// ஒரு நபர் குழந்தை இல்லாமல் இறந்துவிட்டால், அந்த இறந்தவரின் வம்சத்தை நிலைநாட்ட, இறந்தவரின் சகோதரன் அந்த விதவையை மறுமணம் செய்துக்கொண்டு தன் சகோதரனின் வம்சத்தை தொடரவேண்டும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தை, அந்த மரித்தவரின் பெயராலேயே அழைக்கப்படும்//

இதற்கு என்ன பைபிள் ஆதாரம் என்றால் மோசேக்கு கொடுக்கப்பட்ட சட்டத்தின் படி இது நடந்தது என்று ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். பார்க்க உபாகமம் 25 : 5-10. அதாவது இந்த யூதா தாமார் வாழ்வில் நடந்த ஆபாசக் கதைக்கு இந்த வசனத்தில் வரும் சட்டம் தான் காரணமாம். அதையும் அந்த முகமூடிகளே விளக்குகின்றனர் :
//இந்த ‘லேவிரேட் திருமணம்’ முறைதான் இந்த தாமார் வாழ்விலும் நிகழ்ந்தது //

எப்படிப்பட்ட பச்சைப்பொய்யை இட்டுக்கட்டுகின்றனர் என்று பார்த்தீர்களா சகோதரர்களே! இப்படி பொய்யை இட்டுக்கட்டி சமாளிப்பதென்பது இவர்கள் இரத்தத்தில் ஊரிய ஒன்று.

இந்த ஆபாசக்கதையை நியாயப்படுத்துவதற்காக எந்தக்காலத்திலேயோ நடந்த சம்பவத்தை எந்தக் காலத்திலேயோ கொடுக்கப்பட்ட சட்டத்துடன் முடிச்சு போடுகின்றனர் என்று பார்த்தீர்களா?

பைபிளின்படி மோசேக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த ‘லேவிரேட் திருமணம்’ என்ற முறையை மோசேப் பிறப்பதற்கும் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த யூதா தாமாரின் இந்த ஆபாசக்கதையுடன் எப்படி ஒத்துப்போகும்? ஒரு பொய்யைச் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா? பைபிளின்படி மோசே பிறந்ததோ கி.மு. 1576. யூதாவின் காலமோ கிட்டத்தட்ட கி.மு 1810 ஆக இருக்கலாம் (அல்லது ஒரு சில வருடங்கள் முன்னும் பின்னும் இருக்கலாம்) எப்படியாயினும் மோசே பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதாவுக்கு அவருக்கு பின் வாழ்ந்த மோசேயின் சட்டம் எப்படிப் பொருந்தும்? இந்த வாதம் இவர்களுக்கே வேடிக்கையாக தெரியவில்லையா? இந்த அசிங்கமான – யூதா தாமரின் இந்த ஆபாசக்கதையை நியாயப்படுத்துவதற்கு ஒரு அளவு வேண்டாமா?

ஒரு வாதத்திற்காக அவர் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டாலும், லேவிரட் திருமணமுறைப்படி ஒரு பெண்ணிற்கு குழந்தை இல்லாத நிலையில் அவளது கணவன் இறந்துவிட்டால் அவளின் கணவனின் கூடப்பிறந்தவர்கள் அவளோடு உடலுறவுக்கொண்டு அதன் மூலம் குழந்தைப் பெற்று தனது அண்ணணுக்கு சந்ததியை உருவாக்கலாமாம். அப்படித்தான் அந்த முகமூடி விளக்கமளித்துள்ளார்.

//ஒரு நபர் குழந்தை இல்லாமல் இறந்துவிட்டால், அந்த இறந்தவரின் வம்சத்தை நிலைநாட்ட, இறந்தவரின் சகோதரன் அந்த விதவையை மறுமணம் செய்துக்கொண்டு தன் சகோதரனின் வம்சத்தை தொடரவேண்டும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தை, அந்த மரித்தவரின் பெயராலேயே அழைக்கப்படும். //

இந்த சட்டத்தின் படி பார்த்தால் தாமாருடன் யூதாவின் மகனான ‘ஓனான்’ செய்த செலைத்தான் நியாயப்படுத்தலாம். யூதா தனது மருமகள் (தனது மகனின் மனைவி) தாமாருடன் செய்த இந்த விபச்சாரம் எப்படி இந்த சட்டத்துடன் பொருந்திப் போகும்? யூதா இந்தப் தாமாருக்கு மாமனாரே யொழிய மைத்துனன் அல்லவே? எப்படி இந்தக்கதைக்கு இந்த சட்டம் ஒத்துப் போகும் என்று வாதிட முன்வந்தீர்கள்?

அடுத்து இன்னொரு கோணத்தில் பார்த்தாலும் இந்த கதைக்கு இந்த சட்டம் ஒத்துப்போகாது. அதாவது மோசேக்கு கொடுத்த இந்த ‘லேவிரட் திருமணம்’ என்ற சட்டத்தின்படித்தான் இந்த செயல் நடந்தது என்றால், அதே மோசேக்கு திருமணமானவளுடன் விபச்சாரம் செய்தால் மரணத்தண்டனை விதிக்க வேண்டும் – ஊர் மக்கள் முன் கல்லால் அடித்து கொள்ளப்படி வேண்டும் என்பது சட்டம் :

ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலை செய்யப்படக்கடவர்கள். (லேவியராகமம் – 20:10 மற்றும் உபாகமம் 22:21-24)

எந்த மோசேயின் சட்டத்தின் படி இந்த தாமாரின் சம்பவத்தை நியாயப்படுத்துகின்றீர்களோ அதே மோசேயின் சட்டத்தின் படி யூதாவும் – தாமாரும் செய்த விபச்சாரத்தினால் மரணத்தண்டனை விதிக்கப்பட்டு – கொள்ளப்பட்டிருக்க வேண்டுமே? ஆனால் அப்படி செய்யப்படவில்லை. காரணம் யூதா வாழ்ந்த காலம் வேறு மோசே வாழ்ந்த காலம் வேறு. யூதாவுக்கு மோசேயின் சட்டப்படி ‘லேவிரட் திருமணமுறை’ ஒத்துப்போகும் என்றால் விபச்சாரத்திற்கான மரணத்தண்டனையும் ஒத்துப்போகும். எனவே இந்த ஆபாசக் கதைக்கு எத்தனைக் காரணங்களைக் கூறு நியப்படுத்த முயன்றாலும் அது தவறே. இந்த ஆபாசமான கதையால் பைபிளுக்கு மட்டுமல்ல இயேசுவுக்கே கேவலம்தான். காரணம் கேடுகெட்ட இந்த விபச்சாரத்தில் பிறந்த சந்ததி மூலம் தான் அவர் இயேசு வந்தாராம்.

லேவிரட் திருமண முறை இன்றைய கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாதா?

இது ஒருபுறம் இருக்க இதில் இன்னொரு வேடிக்கையும் அடங்கியிருக்கின்றது.
அதாவது யாருக்கு – எந்தக் காலத்தவருக்கு – இந்த லேவிரட் திருமணமுறை பொருந்தாதோ அவருக்கு அதைப் பொருத்தி நியாயப்படுத்தியவர்கள், யாருக்கு இந்த முறைப் பொருந்துமோ அதை மறுத்து எழுதியிருக்கும் வேடிக்கையைப் பாருங்கள்.

மோசேவின் காலத்தில் கொடுக்கப்பட்ட இந்த லேவிரட் திருமண முறை, மோசேவின் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதாவிற்கு பொருந்தாது என்று பார்த்தோம். ஆனால் அந்த இந்த சட்டம் இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டுமா? என்றால் கூடாது என்கிறார் அந்த கிறிஸ்தவ முகமூடி :

//பழைய ஏற்பாட்டுக்காலத்தில், இப்படி தன் சகோதரரின் குடும்பத்தை நிலைநாட்டாதவனுக்கு சமுதாயத்தில் தண்டனையும் கொடுக்கப்பட்டது. இந்த கட்டளைகள் பழைய ஏற்பாட்டு மனிதர்களாகிய எபிரேயர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது, கிறிஸ்தவர்களுக்கு கிடையாது. இப்போது இதை யாரும் (கிறிஸ்தவர்கள்) பின்பற்றுவதில்லை, பின்பற்றவேண்டிய அவசியமில்லை //

இப்படி பச்சைப் பொய்யை இவர் சொல்கின்றார். காரணம் இந்த சட்டம் இந்தக்காலத்தில் இவர்களால் பின்பற்றுவது கிடையாது என்பதால் இதைச் சொல்கின்றார். அதுமட்டுமல்ல, இந்தச் சட்டத்தை இப்பொழுதும் பின்பற்றலாம் என்று இவர் சொன்னால் இன்னும் ஏராளமான குழப்பங்கள் வரும் என்பதால் இப்படி ஒரு கருத்தை திணிக்க முயற்சிக்கின்றார். இது போன்ற சட்டத்தை இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றத் தேவையில்லை என்று இவர் சொல்வதற்கு என்ன பைபிள் ஆதாரம்? இயேசு நாதர் இதைத் தடை செய்தாரா? கிடையாது. மாறாக (பைபிளின் படி) இந்தச் சட்டத்தை இயேசு நியாயப்படுத்தியது மட்டுமல்லாமல் இந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது தான் அவர் கருத்து. அதை அவரும் பின்பற்றுவாராம்.

இந்தச் சட்டத்தை பற்றி இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது :

‘உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்னையதினம் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள். மூத்தவன் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்’ (மத்தேயு 22: 23-30)

அதாவது இந்தச் லேவிரட் திருமணச் சட்டத்தை பற்றி கேட்டவர்களிடம், இயேசு அந்தச் சட்டத்தை நியாயப்படுத்தி பதில் அளிக்கின்றார். இந்தச்சட்டத்தை அவர் தடை செய்திருந்தால் அங்கேயே இது இனி வரும் காலத்திற்கு பொருந்தாது என்றிருக்கலாம். அது மட்டுமல்ல இது போண்ற சட்டங்களை நான் அழிக்க வரவில்லை என்றும் அதைத் தொடர்ந்து நிறைவேற்றவே வந்துள்ளேன் என்றும் சாட்சியம் அளிக்கின்றார்.

‘நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள். அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்’ (மத்தேயு 5:17)

அதாவது முந்தைய சட்டங்களை இயேசு அழிக்க வரவில்லையாம். தொடர்ந்து நிறைவேற்றத்தான் வந்தாராம். எனவே இந்த லேவிரட் திருமணமுறை இயேசுவின் மேற்குறிப்பிட்ட கருத்தின்படி இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். உன்மையிலேயே இயேசுவைப் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவர்களாக இருந்தால் – இயேசுவின் கூற்றின் படி இந்த சட்டத்தை இன்றைய கிறிஸ்தவர்களும் பின்பற்ற வேண்டும். அதுதான் உன்மை. நீங்கள் வேண்டுமானால் இது தற்போது சட்டமில்லை என்று சொல்லி இயேசுவின் கூற்றை நிராகரிக்கலாம். அது உங்கள் கூற்று தானே யொழிய பைபிளின் கூற்று அல்ல. பைபிளின் படி – இயேசுவின் கூற்றின் படி – இயேசு அந்த சட்டத்தை நியாயப்படுத்தியதன் படி – இந்த சட்டம் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். இந்தச் சட்டம் இன்றைக்கு பொருந்தாது என்பதற்கு பைபிளில் ஆதாரம் கிடையாது. நீங்கள் சொல்வது போல் யூதா தாமாருக்குத் தான் இந்த சட்டம் பொருந்தாது. அதுதான் உன்மை. (iபிளின் படி பழைய ஏற்பாட்டுச் சட்டங்கள் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும் என்பது பற்றிய ஆய்வுக்கட்டுரை விரைவில் எமது தளத்தில் இன்ஷா அல்லாஹ்)

அடுத்து இந்த சம்பவத்துடன் – திருமணம் ஆகாமல் உடலுறவு கொண்ட யூதா தாமாரின் ஆபாசக் கதையை நியாயப்படுத்த முயலும் சில கயவர்கள் பெருமானார் (ஸல்) ஜைனப் (ரலி) அவர்களின் திருமணத்தை வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் கொச்சைப் படுத்தி எழுதியிருந்தனர். அவர்களின் அந்த அவதூறுக்கு எமது தளத்தில் மற்றொரு பதிப்பில் தெளிவான விளக்கம் அளித்துள்ளோம் என்பதையும் கூறிக்கொள்கின்றோம். அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

யூதாவும் தாமாரும் தவறான வழியில் – நியாயத்திற்கு புறம்பாக – செய்த விபச்சாரத்தை நியாயம் கற்பிக்க முயன்ற இந்த கயவர்கூட்டம், முறையாக – நியாயமான காரணங்களுடன் – நடந்த பெருமானாரின் திருமணத்தை கொச்சைப்படுத்த நினைக்கின்றார்கள் என்றால் அவர்களின் எண்ணத்தை புரிந்துக்கொண்டீர்களா? அவர்களைப் பொருத்தவரை பைபிளில் சொல்லப்பட்ட – முறையற்ற – தகாத உறவுக்கதைகளை செயல்வடிவில் காட்டி வரும் மேலை நாட்டினரின் கேடுகெட்ட கலாச்சாரத்தை, இந்த தமிழ் மக்களிடம் திணிப்பதற்கான முயற்சிதான் இது. அதற்காகத்தான் நியாயமான காரணத்துடன் நடந்த பெருமானார் (ஸல்) அவர்களின் திருமணத்தை கொச்சைப்படுத்திவிட்டு – முறையற்று – கேவலமாக நடந்த விபச்சார கதையை நியாயப்படுத்த நினைத்தது. காரணம் அவர்களின் அந்த அசிங்கமான கலாச்சாரத்தை இங்கே இறக்குமதி செய்வதற்கு ஒரே தடை இஸ்லாம் மட்டும் தான். அதனால் தான் இஸ்லாத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்ய பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர்.

‘கண்ட கண்ட அசிங்கமான கதைகளை எல்லாம் கடவுள் சொல்லியிருப்பார்’ என்று ஒருவன் நம்பினானேயானால் இது போன்ற தவறான முடிவுக்குத் தான் வருவார்கள் என்பது தான் நிதர்சனமான உன்மை. அது தான் இவர்களது வாழ்விலும் நடைபெருகின்றது. இறைவனே நன்கறிந்தவன்.

நன்றி: egathuvam.blogspot.com

0 Comments:

Post a Comment