பவுலும் கிறிஸ்தவமும் – பாகம் 3
… இந்த அளவுக்கு பவுல் ஒரு பொய்யைச் சொல்லி இயேசு தனக்கு அதிசயத்தைக் காட்டி தன்னைக் கடவுள் ஊழியத்திற்காக தேர்ந்தெடுத்துக்கொண்டதாக சொல்லவருவதுடன் இந்த பொய்யான சம்பவத்தையும் கடவுள் பெயரால் பவுல் சொல்வருவதையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே? அதற்கு இயேசுவின் நேரடி சீடர்களின் அங்கீகாரத்தைப் பெற்றால்தான் இயேசுவைப் பின்பற்றக்கூடிய மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இல்லை என்றால் பவுலின் வாதத்தை பொய் என்று நிராகரித்து விடுவார்கள். ஆகவே பவுல் இயேசுவிற்கு கீழ்ப்படிபவராக மாறியவுடன் சீடர்களை சந்திக்க ஜெருஸலம் சென்றார் எனவும், அதன்பிறகு அவர் வெகு தீவிரமாக அங்கு இயேசுவின் மார்க்கத்தை பிரச்சாரம் செய்தார் எனவும் அதனால் யூதர்கள் அவரை கொல்ல சதி செய்தனர் எனவும் அப்போஸ்தலரின் செயல்பாடுகளை எழுதியவர் குறிப்பிடுகின்றார்.
சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சில நாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரரென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். கேட்டவர்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு : எருசலேமில் இந்த நாமத்தைத் தொழு கொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயம் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்கு கொண்டு போகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள். சவுல் அதிகமாகத் திடன் கொண்டு. இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப் பண்ணினான். அநேக நாள் சென்ற பின்பு, யூதர்கள் அவனைக் கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள். சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்து கொள்ளப் பார்த்தான். அவர்கள் அவனைச் சீஷரென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள். அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக் கொண்டு அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக் கொண்டு போய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசியதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். அதன் பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய் பிரசங்கித்து. கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான் : அவர்களோ அவனைக் கொலை செய்ய எத்தனம் பண்ணினார்கள். (அப்போஸ்தலர் 9:18-29)
பவுல் எனப்படும் இவர் இயேசுவின் நேரடி சிஷ்யர்களின் அங்கீகாரத்தை பெற்றதாக இதிலிருந்து அப்போஸ்தலரின் நடபடிகளை எழுதியவர் தன் வாசகர்களுக்குச் சொல்கின்றார். அது மாத்திரமல்லாமல் அதன் பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான். ஆகவே பவுலை எருசலேத்தில் உள்ளவர்கள் அனைவரும் நண்பர்களும் எதிரிகளும் – குறிப்பாக சர்ச்சில் உள்ளவர்கள் நன்கு அறிந்திருப்பர் என்பது போல் எழுதுகிறார்.
ஆனால் இது உண்மையா? பவுல் இயேசுவின் நேரடி சீடர்களின் அங்கீகாரத்தைப் பெற்றாரா? அப்போஸ்தலர்களின் நடபடிகளை எழுதியவருக்கு நேர் மாற்றமாக பவுல் எழுதுவதைப் பாருங்கள் :
‘தம்முடைய குமாரனை நான் புறஜாதியார்களிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்த போது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும், எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்: அரபி பிரதேசத்திற்குப் புறப்பட்டுப் போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பி வந்தேன். மூன்று வருஷம் சென்ற பின்பு, பேதுருவைக் கண்டு கொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்து நாள் தங்கியிருந்தேன்.கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர அப்போஸ்தலரில் வேறொருவதையும் நான் காணவில்லை.
‘நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்கு முன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். பின்பு சிரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன். மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.’ (கலாத்தியர் 1:16-21)
இப்பொழுது எது உண்மை? பவுலின் சொந்த வார்த்தைகளா அல்லது அப்போஸ்தலரின் நடபடிகளை எழுதியவர் சொல்வதா? பவுல் கிறிஸ்துவின் சீடரென கூறிக் கொண்ட உடனேயே தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான் என்பதும் பின்பு அவர் எருசேலம் சென்று அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து கர்த்தராகிய இயேசுவின் நாம்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்தான் என்று அப்போஸ்தலர் நடபடிகள் எழுதியவர் சொல்வது உன்மையா? அல்லது அப்போஸ்தலரானவரிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்: அரபி பிரதேசத்திற்குப் புறப்பட்டுப் போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பி வந்தேன். மூன்று வருஷம் சென்ற பின்பு, பேதுருவைக் கண்டு கொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்து நாள் தங்கியிருந்தேன். கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை என்று பவுல் சொல்வது உண்மையா?
பவுலின் கூற்றுப்படி அவர் அப்போஸ்தலர்களைச் சந்திக்கவில்லை. அவர் எருசலேத்திலே பிரச்சாரம் செய்யவுமில்லை என்பது தெளிவு. இதை அவரின் கீழக்கண்ட ஒப்புதல் மிகவம் தெளிவுபடுத்துகின்றது :
‘நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்கு முன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். பின்பு சிரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன். மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.’ (கலாத்தியர் 1:20-21)
இது பவுல் சத்தியம் செய்து சொல்வதாகும். இது உண்மையெனில் ‘அதன் பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான்: அவர்களோ அவனைக் கொலை செய்ய எத்தனம் பண்ணினார்கள்’ என்பது பொய். ஏனெனில் அவர் முன்பு அவ்வாறு பிரச்சாரம் செய்திருந்தால் யூதாயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவராக இருந்திருக்க முடியாது. பவுலினை உயர்த்தி சொல்வதற்காகவும் அவரின் பிரச்சாரத்திற்கு இயேசுவின் நேரடி அப்போஸ்தலர்களின் அங்கீகாரம் இருந்ததென காண்பிப்பதற்காகவும் அப்போஸ்தலர்களின் செயல்பாடுகள் பற்றி எழுதியவர் கட்டிய கதையே இது என்பதை ஆழ்ந்து சிந்திப்பவர்கள் நன்கறியலாம். இப்படி ஒரு தலைப்பட்சமாக எழுதப்பட்ட புத்தகத்திலிருந்து உண்மைகளைக் கண்டறிவது அத்தனை எளிதானதா? இதையும் வேதப் புத்தகம் என்று சொல்வது அறிவீனமல்லவா?
புதிதாக மதம் மாறிய ஒருவர் அம்மதத்தில் ஏற்கனவே இருந்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முயற்சிப்பர். குறிப்பாக இயேசுவின் நேரடி சிஷ்யர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களிடம் சென்று கற்றுக் கொள்ள முயற்சிப்பர். ஆனால் இவருக்கு அந்த ஆர்வம் எல்லாம் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் இவருக்கு இயேசு நேரடியாக போதிக்கின்றாராம்.
கிறிஸ்து முதல் கான்ஸ்டன்டைன் வரை என்ற தனது புத்தகத்தில் ஜேம்ஸ் மாக்கினோன் அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்கள் :
அவர் மதம் மாறியவுடன் அரேபியாவிற்கு (நபாத்தியர் பாகம்) சென்றது அவர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்கு எனக் கூறிட முடியாது. ஆனால் தனது புதிய மதத்தை வைத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தான் அங்கே சென்றார் என்பது தெளிவு. மூன்று வருடத்திற்குப் பிறகு தான் பீட்டரையும், கர்த்தரின் சகோதரனான ஜேம்ஸையும் சந்திக்க அவர் ஜெருஸலம் செல்கின்றார். ஒரு வேளை இயேசுவைப் பற்றி அவர்களிடம் கேட்பதற்காக இருக்கலாம்.
என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா கூறுகின்றது :
தன்னுடைய புதிய நிலமைகளைப் பற்றி சிந்திக்க அமைதியாக ஆரவாரமற்ற ஒரு இடம் தேவையென்பதை பவுல் உணர்ந்தார். அதனால் தான் அவர் டமஸ்களின் தெற்கிலுள்ள பிரதேசங்களுக்கு சென்றார்… தன்னுடைய புதிய அனுபவத்தின் ஒளியில் நியாயப்பிரமாணத்தையும் இயேசுவின் போதனைகளையும் புதிய உருவில் எவ்வாறு விளக்குவது என்பதே அவருக்கிருந்த முக்கியப் பிரச்னையாக இருந்தது.
இயேசுவின் மாக்கத்திற்கு பரம எதிரியாக இருந்த பவுல் இயேசுவை திடீரென ஏற்றுக் கொண்டு இயேசு போதித்த அந்த போதனைகளை போதித்தாரா? உண்மைக்காக மதம் மாறியிருந்தால் அவ்வாறு தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் செய்ததோ வேறு. அவரின் பிரச்சாரத்திற்கு கிறிஸ்தவ மத சர்ச்சிலேயே கடும் எதிர்ப்பு. ஏன் இயேசுவின் நேரடி சிஷ்யர்களே கடுமையாக எதிர்க்கின்றார்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமோ பவுலின் வேதத்தை தவிர வேறெதுவுமில்லை.
பவுல் பிரச்சாரம் செய்தது தான் என்ன? அது இயேசுவின் பிரச்சாரத்தோடு ஒத்திருந்ததா? பவுலின் பிச்சாரத்திற்கு எதிர்ப்பு இருந்ததா? அப்படி இருந்திருந்தால் அது எத்தகைய எதிர்ப்பு?
- பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன?
நன்றி: egathuvam.blogspot.com
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)