Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

பவுலும் கிறிஸ்தவமும் – பாகம் 4
 
இயேசுவின் மாக்கத்திற்கு பரம எதிரியாக இருந்த பவுல் இயேசுவை திடீரென ஏற்றுக் கொண்டு இயேசு போதித்த அந்த போதனைகளை போதித்தாரா? உண்மைக்காக மதம் மாறியிருந்தால் அவ்வாறு தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் செய்ததோ வேறு. அவரின் பிரச்சாரத்திற்கு கிறிஸ்தவ மத சர்ச்சிலேயே கடும் எதிர்ப்பு. ஏன் இயேசுவின் நேரடி சிஷ்யர்களே கடுமையாக எதிர்க்கின்றார்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமோ பவுலின் வேதத்தை தவிர வேறெதுவுமில்லை.

பவுல் பிரச்சாரம் செய்தது தான் என்ன? அது இயேசுவின் பிரச்சாரத்தோடு ஒத்திருந்ததா? பவுலின் பிச்சாரத்திற்கு எதிர்ப்பு இருந்ததா? அப்படி இருந்திருந்தால் அது எத்தகைய எதிர்ப்பு?

பவுல் பிரச்சாரம் செய்த காலத்திலேயே “வேறொரு சுவிசேஷத்தை”, “வேறொரு இயேசுவைப்” பற்றிய பிரச்சாரம் அங்கே இருந்து வந்தது.

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்க திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிஷேத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருப்பான். மேலும் சகோதரரே, என்னால் பிரசங்கிப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். (கலாத்தியர் 1:6-12)

‘ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் ப்றிற உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாக வெறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக் கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. மாக பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.‘ (2 கொரிந்தியர் 11:3-6)

இயேசுவின் நேரடி அப்போஸ்தலர்களிமிருந்து கற்றதாக பவுல் ஒரு போதும் சொன்னதில்லை. அது மாத்திரமல்லாமல் அது தேவையுமில்லை என்று அவர் கூறுகின்றார். ஏனெனில், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் எனப் பவுல் கூறுகின்றார்.
பவுலின் இந்தக் கூற்று நன்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அவர் பிரச்சாரம் செய்தது இயேசு செய்த அதே பிரச்சாரம்; தான் என்றால் அதற்கு சாட்சியாக இயேசுவின் நேரடி சீடர்களை கோடிட்டு காட்டி என் பிரச்சாரமும் அவர்கள் பிரச்சாரமும் ஒன்று தான் என்று கூறியிருக்க முடியும். இவர் பிரச்சாரம் செய்வது இயேசுவின் நேரடி சீடர்களின் பிரச்சாரத்திற்கு நேர் எதிராக இருந்தால் அவர் நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இவரின் வார்த்தையில் கிறிஸ்துவத்தின் கொள்கை அமைக்கப்பட்டிருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது தான். இவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட கதையும், அவர் இயேசுவோடு உரையாடியாதாக சொல்லப்பட்ட சம்பவகளும் எந்த அளவுக்கு முரண்பாடுகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் மேலே கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

பைபிள் ஆராய்ச்சியாளர்களுக்கு மேற்கண்ட பவுலின் கூற்று பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. முதலில் : உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகின்றேன் என்றால் என்ன?

கிறிஸ்துவின் கிருபையினாலே அழைப்பது என்றால் என்ன எனத் தெரிந்தால் தான் பவுல் அவர்கள் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன் என்று சொல்வதன் முழு அர்த்தம் என்ன என்பது தெரிய வரும்.

இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசிகளுக்குக் கீழப்படிந்து நியாயப்பிரமாணங்களில் உள்ளவற்றைப் பின்பற்றி இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட வாழ்க்கை வாழும் போது தான் நிலையான பெருவாழ்வை – பரலோக இராஜ்ஜியத்தை – மனிதன் அடைய முடியும் என்பது அனைத்து தீர்க்கதரிசிகளின் போதனையாயிருந்தது.

ஆனால் பவுலோ இதற்கு முற்றிலும் மாற்றமாக பிரச்சாரம் செய்தார். நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றுவதெல்லாம் இயேசுவிற்கு முன்பு வரைதான். இயேசு தன்னைத் தானே சிலுவையில் ஒப்புக் கொடுத்து நம்மை கிருபைக்கு உள்ளாக்கி விட்டார். ஆகவே நியாயப் பிரமாணங்களைப் பின்பற்றத் தேவையில்லை. இனி இயேசு நம்மை நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கவே தம்மை சிலுவையில் ஒப்புக் கொடுத்தார் என்று நம்பினால் போதும். நியாயப்பிரமாணங்களை கைக்கொள்ள வேண்டியதில்லை. இவை எல்லாம் பவுலின் வாதம். அதானல் தான் பவுல் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன் என்று கூறுகின்றார்.

‘இதோ நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோசனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், விருத்தசேதனம் பண்ணிக் கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன். நியாயப் பிரமாணத்திலினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.‘ (கலாத்தியர் 6:2-4)

அதாவது இவரின் புதிய போதனையின் படி கிறிஸ்துவை நம்பி விட்டால் நியாயப்பிரமாணத்திற்கு கட்டுப்பட வேண்டியதில்லை. விருத்தசேதனம் செய்ய வேண்டியதில்லை. கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையையே உங்களுக்கு நிலையான பெருவாழ்வை அளிக்க போதுமானதாக இருக்கும் போது நியாயப் பிரமாணம் உங்களைக் காப்பாற்றும் என்று நீங்கள் எண்ணினால் அந்த விசுவாசம் உங்களிடம் இல்லை என்று அர்த்தம். இதைத் தான் பவுல் அவர்கள் : நியாயப் பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்த கிருபையினின்று விழுந்தீர்கள் என்று கூறுகின்றார்.

பவுல் மேலும் கூறுகின்றார் : நீதியானது நியாயப்பிரமாணத்தினால் வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. (கலாத்தியர் 2:21)

‘இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின் மேல் விசுவாசிகளானோம்.’
(கலாத்தியர் 3:15)

இயேசுவின் மேல் விசுவாசம் கொண்டால் நீதிமான்களாக்கப்படுவோம் என்று பவுல் சொல்வது என்ன என்பதை வாசகர்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். பவுல் கூறும் விசுவாசம் என்பது இயேசுவை இறைமகன் என்றோ, இறைத்தூதர் என்றோ மாத்திரம் விசுவாசித்து விட்டு நியாயப்பிரமாணத்தை கடைபிடித்தால் அந்த விசுவாசம் விசுவாசமே அல்ல. அதனால் பலனும் இல்லை. ஆனால் இயேசுவின் மேலுள்ள விசுவாசம் என்னவெனில், அவர் நம்மை நியாயப்பிரமாணங்களிலிருந்து விடுதலையாக்கும் பொருட்டு தன்னுடைய உயிரைக் கொடுத்து விட்டார் என நம்பி நியாயப்பிரமாணத்தை கைவிட்டு விட வேண்டும். இது தான் பவுல் கூறும் இயேசுவின் மேலுள்ள விசுவாசம். பவுலின் இந்தப் பிரச்சாரம் நன்கு கவனிக்கப்பட வேண்டியதும், ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியதுமாகும்.

பவுலை எதிர்த்து “சுவிசேஷத்தையும்”, ”வேறொரு இயேசுவையும்”, பிரச்சாரம் செய்தவர்கள் இயேசுவின் மீது விசுவாசம் கொள்ளாமல் இருந்தனரா? அவர்கள் இயேசுவின் மீது விசுவாம் கெர்ணடிருந்தனர். ஆனால் அவர்களுக்கும் பவுலிற்கும் இடையே உள்ள கருத்து வேற்றுமை என்ன? அவர்கள் இயேசுவை இறைவனால் அனுப்பப்பட்டவர் என்று ஏற்றுக் கொண்டு இறைவனின் கட்டளைகளை பின்பற்றி அவனுக்குக் கீழ்ப்படிந்தால் தான் இறைவனின் திருப்தியும் நீதியும் கிடைக்கும் என நம்பினர். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? மனிதர்களை பாவங்களிலிருந்தும் நியாயப்பிரமாணங்களிலிருந்தும் விடுவிக்கவே இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கொள்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான்.

சகோதரரே..! இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தை பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்ககும் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப் பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டு போனால் நலமாயிருக்கும்.
(கலாத்தியர் 6:11-12)

பிரச்சினை இது தான். சிலுவையிலறையப்பட்டதால், மனிதர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட வேண்டியதில்லை என்ற அந்த பவுலின் கொள்கை தான் பிரச்னைக்கு பிரதான காரணமாயிருந்திருக்கிறது.

இயேசுவை ஏற்றுக் கொண்ட மக்கள் மனிதர்களின் பாவத்தை நீக்குவதற்காக இயேசு சிலுவையில் தன்னைத் தானே ஒப்புக் கொடுத்தார் என்பதை மாத்திரம் ஏற்றுக் கொள்ளவில்லை எனில், இயேசு அதைப் போதிக்கவில்லை என்று தான் அர்த்தமாகும். அவர் அதற்காகவும் வரவில்லை. மக்கள் இறைவனிற்கு கீழ்ப்படிந்து நியாயப்பிரமாணங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே வந்தார். ஆனால் பவுல் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தால் இது அவருடைய சொந்தக் கண்டுபிடிப்புதானே அல்லாமல் அது வேறென்னவாக இருக்க முடியும்?

இது இவ்வாறிருக்க, நியாயப்பிரமாணங்கள் பற்றி இயேசு என்ன கூறுகின்றார்? பவுலின் இந்தப் பிரச்சாரம் இயேசுவின் பிரச்சாரத்திற்கு உகந்ததா? நான் சிலுவையில் அடிக்கப்பட்டு உங்களை நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கப் போகின்றேன். ஆகவே நீங்கள் நியாயப்பிரமாணங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று சொன்னாரா? அல்லது அதற்கு மாற்றமாக சொன்னாரா? பரலோகராஜ்யம் செல்வதற்குரிய வழி என்னவெனில் பிரமாணங்களை கையாளுவதுதான். இதைத் தான் இயேசு தன்னுடைய வாழ்நாளில் பிரச்சாரம் செய்து வந்தார். அதையேதான் அவரது உன்மையான சீடர்களின் போதனையாகவும் இருந்திருக்க வேண்டும்.

இயேசுவின் போதனைகளுக்கும் அவரின் கொள்கைகளுக்கும் மாற்றாக பவுல் எவ்வாறெல்லாம் போதித்தார், எவற்றையெல்லாம் போதித்தார் என்பதை இனி காண்போம்.

நன்றி: egathuvam.blogspot.com

0 Comments:

Post a Comment