பைபிளில் உள்ள முரண்பாடுகளையும் - குழப்பங்களையும் பற்றி தொடர்கட்டுரையை வெளியிட்டு வருகின்றோம். அதன் முதல் பாகத்தை பின்வரும் தலைப்பில் படிக்கவும்.
இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! -01 க்குசெல்ல இங்கே அழுத்தவும்...
இதன் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி...
சாலாவின் தந்தை யார்?
லூக்கா 3:36 ல் ஆதாம் முதல் இயேசு வரை உள்ள வம்சத்தில் அர்ப்பகசாத்தின் மகன் காயினான். அவன் மகன் சாலா என்கிறார். ஆனால் ஆதியாகமம் 10:24 மற்றும் 11:12 ஆகியவை அர்ப்பகசாத்தின் மகன் சாலாதான் என்கிறது. இடையே உள்ள காயீனான் அங்கே வரமாட்டான் என்கிறது. லூக்கா சொல்வது சரியா பழைய ஏற்பாடு சொல்வது சரியா? எதை நம்புவது? ஏது கடவுள் சொன்னது?
தாவீது முதல் இயேசு வரையிலும் மொத்தம் எத்தனைப் பேர்?
தாவீது முதல் இயேசு வரையிலும் மொத்தம் 28 தலைமுறையினர் என்கிறார் மத்தேயு (பார்க்க மத்தேயு 1:6-16) ஆனால் லூக்காவோ மொத்தம் 43 என்கிறார் (பார்க்க லூக்கா 3:21-31) எது சரி? லூக்கா சொல்வதா அல்லது மத்தேயு சொல்வதா?

மத்தேயு ஆபிரகாம் முதல் இயேசுவரையிலும் மொத்தமே 42 பேர்தான் என்கிறார். ஆனால் லூக்காவோ ஆபிரகாமுக்கும் பலதலைமுறைக்கு பிறகுள்ள தாவீதிலிருந்து இயேசுவரையிலுமே 43 பேர் வந்துவிடுகின்றனர் என்று கூடுதலாக கணக்கு காட்டுகிறார். ஒரே தலைமுறையை புதியஏற்பாட்டு எழுத்தாளர்கள் இப்படி மாற்றி மாற்றி முரண்பாடாக சொல்வதை எப்படி கடவுளின் வார்த்தை என்று ஏற்க முடியும்? எது சரி? மத்தேயு சொல்வதா அல்லது லூக்கா சொல்வதா?
(இது போல் இன்னும் பல முரண்பாடுகளும், பல குழப்பங்களும் இந்த வம்சாவளிப் பட்டியல்களில் தொடர்கிறது. நாம் ஆக்கம் நீண்டுக்கொண்டே செல்வதால் தவிர்த்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.)
இயேசு விபச்சாரர்களின் சந்ததியா?
இயேசுவின் வம்சத்தில் வரும் இவ்வளவு குளறுபடிகளும் ஒரு புறம் இருக்க அவரின் வம்சத்தில் வரும் பலர் விபச்சாரர்களாக இருந்ததாக பைபில் கூறுகிறது.
'யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்' (மத்தேயு 1:3)
இந்த தாமார், யூதா, பாரேஸ் என்பவர்கள் யார்? இந்த தாமார் என்பவள் யூதா என்பவனின் மகனுடைய மனைவி. அதாவது மருமகள். அவளுடன் யுதா கள்ளத்தனமாக உறவு கொள்கிறார். இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் தான் பாரேஸ் என்று பைபிள் சொல்கிறது. பார்க்க ஆதியாகமம்; 38 : 6 (இந்த மாமனார் மருமகள் ஆபாசக்கதையில் உள்ள குழப்பங்களை படிக்க இங்கே அழுத்தவும்)
அடுத்து அவரது தலைமுறையில் வரும் தாவீது பற்றி மத்தேயு (1 : 6) சொல்லும்போது 'தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்'. இப்படி விபச்சார சந்ததிகள் மூலமாகத்தான் இயேசு பிறக்கின்றார் என்கிறார் மத்தேயு. (நவூதுபில்லாஹ்...) அதேபோல் இயேசுவின் வம்சத்தில் வரும் மற்றொருவர் 'ராகாப்'. (மத்தேயு 1:5) இவள் ஒரு விபச்சாரி என்று பழைய ஏற்பாடு கூறுகின்றது.(பார்க்க - யோசுவா 2:5)
இப்படிப்பட்ட விபச்சார சந்ததிகள் மூலமாக வந்தவர்தான் இயேசு என்கிறது பைபிள். இது ஒரு புறம் இருக்க இப்படிப்பட்ட விபச்சார சந்ததியில் பிறக்கக்கூடியவர்கள் எவரும் பரிசுத்தராக முடியாது, என்றும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு - ஒன்றல்ல இரண்டல்ல, தலைமுறை தலைமுறையாக வர முடியாது என்றும் கூறுகிறது பைபிள்.
'வேசிப்பிள்ளையும் (விபச்சார சந்ததிகள்) கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது, அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது' - உபாகமம் 23:2,3
இந்த வசனத்தின் படி பார்த்தால் தாவீது, சாலமோன், இயேசு இவர்களெல்லாம் ஒரு பரிசுத்தராக வரவேமுடியாது என்கிறது பைபிள். (இவர்களெல்லாம் இஸ்லாத்தைப் பொருத்தவரை மிக்க பரிசுத்தவான்கள். இது பற்றி சிறப்புக் கட்டுரை விரைவில்... இறைவன் நாடினால்) கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்படி இயேசு கடவுடைய குமாரன் என்பதை விட்டுவிடுவோம். முஸ்லீம்கள் சொல்வது போல் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதையும் விட்டுவிடுவோம். அவர் ஒரு பரிசுத்தராகக்கூட வரமுடியாது என்கிறது இந்த வமிசாவளிப் பட்டியலும், இந்த கிறிஸ்தவர்களின் புனித பைபிளும். இதுதான் தான் இந்த உபாகமம் 23:2,3 வசனத்தின் மூலமும் பைபிளின் எழுத்தாளர்கள் கொடுத்துள்ள இயேசுவின் வம்சாவளிப்பட்டியல்கள் உணர்த்தும் மறுக்க முடியாத உன்மை.
இது மட்டுமல்ல இப்படி விபச்சார வம்சத்தில் வந்த - தானும் விபச்சாரம் செய்த (?) தாவீது தீர்க்கதரிசி எழுதிய பழையஏற்பாட்டில் உள்ள நூல்களான சங்கீதம் என்ற புத்தகம், சாலமோன் எழுதின நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதபாட்டு, போன்ற புத்தகங்களெல்லாம் எப்படி புனித புத்தகங்களாகும்? காரணம் இவர்களெல்லாம் விபச்சார சந்ததிகளாயிற்றே? அதே போல் இயேசுவே பைபிளின் உபாகமம் 23:2,3ன் படி பரிசுத்தராக முடியாது எனும்போது அவரைப்பற்றி எழுதிய புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களெல்லாம் எப்படி புனித புத்தகங்களாகும்? இப்படி இந்த யூத எழுத்தாளர்கள், தீர்க்கதிரிகளான - நல்லோர்களான - தாவீது, சாலமோன் போன்ற இன்னும் பல பரிசுத்தவான்கள் மீது இட்டுக்கட்டி எழுதிய கட்டுக்கதைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பாhத்தீர்களா? சகோதரர்களே! பைபிளில் பல புத்தகங்கள் இறைவேதம் என்றத் தகுதியை இழக்கும் நிலை ஏற்படும். நீங்கள் பைபிளில் வரும் யூதா தாமார் கள்ள உறவுக் கதைகளை (ஆதியாகமம் 38:6), தாவீது உரியாவின் மனைவியோடு நடத்தியதாகச் சொல்லப்படும் விபச்சாரக்கதைகளை (2 சாமுவேல் 11:1-8) கர்த்தரால் அருளப்பட்ட வசனங்களாக நம்பினால் அது வேறு ஒரு விதத்தல் உங்கள் நம்பிக்கைகளுக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் உணரவேண்டும்.

இதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் இப்படி தலைமுறைத் தலைமுறையாக ஒருவருக்கு பாவம் தொடரும் என்று இஸ்லாம் ஒருபோதும் சொல்லவில்லை. அப்படி தொடராது - அது மடத்தனமான கொள்கை என்று சத்தியமார்க்கமான இஸ்லாம் போதிக்கின்றது. (பார்க்க அல்குர்ஆன் 2 : 233, 281, 286) இப்படி சொல்வது முட்டாள்தனமான வாதமும் கூட. யாரோ செய்யும் தவறுக்கு யாரையோ தண்டிப்பது என்பது மடத்தனமாக கொள்கை என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கின்றது. ஆனால் கிறிஸ்தவமோ, நம் முன்னோர்கள் செய்யும் பாவம் சந்ததி சந்ததியாக தொடரும் என்கிறது. கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடான ஆதிபாவம் - Original Sin என்பதே 'ஆதாம் செய்த பாவம் சந்ததி சந்ததியாய் தொடர்கிறது' என்பது தானே. இப்படிப்பட்ட நம்பிக்கை இவர்களிடம் இருக்கும் நிலையில், நாம் மேலே கூறியுள்ள விவரங்களையும் அதற்கு ஆதாரமாக காட்டியுள்ள உபாகமம் 23:2,3 வசனத்தையும் கிறிஸ்தவர்கள் மறுத்தார்களேயானால், அவர்கள் ஆதிபாவம் என்னும் கிறிஸ்தவத்தின் ஆணிவேரையே மறுத்தவர்களாவர்கள். ஆதிபாவம் உள்ளதா? அல்லது இல்லையா? ஆதிபாவம் என்னும் கொள்கை சரிதான் என்றால் இந்த உபாகமம் 23:2,3 வசனத்தின் படி இயேசுவும், தாவீதும், சாலமோனும் பாவிகளாகிவிடுவார். இவர்களளெல்லாம் பாவிகள் இல்லை என்றால் ஆதிபாவம் தவரானதொன்றாகிவிடும். எது சரி?
தந்தை இல்லாமல் பிறந்தவருக்கு தந்தைவழி வம்சாவழி ஏன்?
கிறிஸ்தாவர்களிடம் கேட்பது இது தான். தந்தை இல்லாமல் பிறந்தார் என்பதற்காக இயேசுவைக் கடவுளின் குமாரன் (?) என்றும் அதனால் அவருக்கு தனிச்சிறப்பே உள்ளது என்றும் ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறம் தந்தையே இல்லாத ஒருவருக்கு தந்தைவழி வம்சாவழியை சொல்லுவதன் அவசியம் என்ன? வரலாற்றைச் சொல்லுகிறோம் என்றப்பெயரில் தந்தையே இல்லாத ஒருவருக்கு தந்தை வழி வம்சத்தை யாராவது சொல்வார்களா? எந்த ஒன்றுக்கும் உதவாத இந்த வம்சாவழியை சொல்லும் கடவுள் (?) முரண்பாடில்லாத வகையிலாவது சொல்ல வேண்டாமா? இந்த வம்சாவழியை சொல்லுவதால் உங்கள் பைபிள் உலகமக்ளுக்கு என்ன நல்வழிகாட்டவருகின்றது? இவைஅனைத்தும் கடவுளால் தான் அருளப்பட்டதென்றால் தனது குமாரனுடைய வம்சத்தை முரண்பாடாக சொல்லுவாரா? இந்த வம்சாவழியால் பைபிளின் பல புத்தகங்களின் புனிதம் கெடுகின்றதே இது ஏன்?
ஓன்றுக்கும் உதவாக இந்த வம்சாவளிப்பட்டியல்கள் கூறும் வசனங்கள் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான வசனங்கள் பழையஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் சேர்த்து வருகின்றது. ஆங்காங்கே அவன் அவன் மகன், இவன் இவன் மகன், இவனை இவன் பெற்றெடுத்தான் அவனை அவன் பெற்றெடுத்தான் என்பது போன்ற நடையில் வரும் வசனங்கள் ஏராளம். இதனால் யாருக்கு என்ன பயன்? ஒரு பிரயோஜனமும் இல்லை.
பொதுவாக வேதவாக்கியங்கள் எதற்காக அருளப்பட்டது என்பது குறித்து பொதுவான நிபந்தனைகளை சொல்வதைவீட பைபில் அது பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்த்தோமேயானால் இது போன்ற வம்சாவளி பற்றிய வசனங்களால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது புலனாகிவிடும். வேதவாக்கியங்கள் அருளப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பது பற்றி பைபில் சொல்லுவதை பாருங்கள் :
'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.- 2 திமெத்தேயு 3:16-17
அதாவது அந்த வேதவசனங்கள் :
1. உபதேசத்திற்கும்
2. கடிந்துக்கொள்ளுதலுக்கும்.
3. சீர்திருத்தலுக்கும்...
4. நீதியைப் படிப்பித்தலுக்கும்...
உதவக்கூடியது என்று சொல்லுகிறது பைபில்.
பைபிளில் வரும் எல்லா வமிசாவளிப்பட்டியல்களை கூறும் வசனங்களை, இந்த பைபிள் வசனத்தோடு உரசிப்பாருங்கள். இதில் ஆயிரக்கனக்கான குழப்பங்களும் முரண்பாடுகளும், அசிங்கமான மரபுகளும் நிறைந்த இந்த வமிசாவளிப் பட்டியல் வசனங்களால் என்ன பயன்? இந்த நான்கு தகுதியில் எந்த தகுதிகளோடு இந்த வம்சாவளிப்பட்டியல் வசனங்கள் ஒத்துப்போகின்றது? அது மட்டுமல்ல புதிய ஏற்பாட்டின் மூலகர்த்தா பவுல் அவர்களே, இந்த வம்சவரலாறு பட்டியல்களெல்லாம் ஒன்றுக்கும் உதவாது, அதனால் எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறுகின்றார்.
புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு. அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். (தீத்து 3:9)
வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,... (1 திமோத்தேயு 1:3)
இங்கே வம்சாவளிப்பட்டியல்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று பவுல் சொன்னதும் கடவுளால் அருளப்பட்டதாம், அங்கே மத்தேயுவும் லுக்காவும் இன்னும் பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கலெல்லாம் சொல்லும் அந்த வம்சாவழிப்பட்டியள்களும் கடவுளால் சொல்லப்பட்டதாம். இது பச்சை முரண்பாடாக தெரியவில்லையா?
அன்புள்ள கிறிஸ்தவ சகோதரர்களே! இவ்வுலகமக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவதற்காக இறைவன் தனது இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக குர்ஆன் எனும் இறுதி இறைவேதத்தை அருளியிருக்கின்றார். இயேசுவைப் பற்றியும் அவரது முன்னோர்களான தாவீது, சாலமோன் இன்னும் பல தீர்க்கதரிசிகள் - இறைத்தூதர்கள் அனைவரும் பரிசுத்தாவன்கள் - அவர்கள் அனைவரும் நல்லடியார்கள் என்று பறைசாட்டுகிறார் இறைவன். யூதர்களும் பைபிளின் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் இயேசுவுக்கும் அவனது மற்ற பரிசுத்தவான்களுக்கும் எற்படுத்தியுள்ள களங்கங்களைத் துடைத்து அவர்களின் உன்மைநிலையை விளக்குவதற்காக வந்த இந்த திருக்குர்ஆனை மனதுறுகிப் படியுங்கள். கண்டிப்பாக நேர்வழி அடைவீர்கள். இறைவன் நம் அனைவரையும் நேரான வழியில் நிலைநிறுத்துவானாக.
விளக்கங்கள் தொடரும்.. இறைவன் நாடினால்...

நன்றி: http://egathuvam.blogspot.com/
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)