உலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்கில் மனித உயிர்களை கொன்று இரத்த ஆற்றை ஓட்டியது போதாதென்று ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், உலகின் இன்ன பிற பாகங்களிலும் கர்த்தரின் பெயரால் மனித குலத்திற்கே பேரழிவை இக்கிறிஸ்தவ நாடுகளும் அவை சார்ந்து இருக்கக்கூடிய கிறிஸ்தவ மிஷினரிகளும் இப்போதுமட்டுமல்ல எப்போதுமே ஏற்படுத்தியே வந்துள்ளன என்பது பலரும் அறிந்ததே.
இது ஒருபுறமிருக்க இதுபோன்ற பயங்கரவாத செயல்களை போதிக்கக்கூடிய வசனங்களும், தீவிரவாதத்தை வலியுறுத்தக்கூடிய வசனங்களும், மனித உரிமை மீறலை ஆதரிக்கக்கூடிய குறிப்பாக உலக அமைதிக்கு வேட்டுவைக்கக்கூடிய வசனங்கள் பைபிளில் அதிகமதிகம் காணப்படுகின்றது என்ற உன்மையைச் சொன்னால் மட்டும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். காரணம் பைபிளின் வசனங்கள் சமாதானத்தையே போதிக்கின்றது என்ற ஒரு மாயை இந்த கிறிஸ்தவமிஷினரிகளால் பாமரமக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டதன் விளைவு, இந்த நம்பிக்கை இந்த மக்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. நாம் மேலே சொன்ன வசனங்கள் பைபிளில் உன்மையிலேயே இருக்கின்றதா என்பதற்கான விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன்னால் சமாதானத்தையே பைபிள் போதிக்கின்றது என்று அவர்கள் சொல்லக்கூடிய வசனங்களின் நிலையை பார்த்துவிடுவோம்.
பைபிள் சமாதானத்தையே போதிக்கின்றது என்பதற்கு கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மிஷினரிகளும் காட்டக்கூடிய முக்கியமான ஆதாரம் மத்தேயு 5:39 ல் வரக்கூடிய
‘ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு’ என்ற வசனமே!
அதாவது ஒருவன் உனது வலது கன்னத்தில் அறைந்தால் அவனை எதிர்க்காமல் – எந்த மறுபேச்சும் பேசாமல் உடனேயே உனது இடது கன்னத்தைக் காட்டு என்று இயேசு போதித்தார் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த வசனம் சொல்லவருகின்ற கருத்து கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அதை செயல்படுத்துவதற்கு சாத்தியபடுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதில் சொல்லப்படக்கூடிய கருத்து இந்த நடைமுறை உலகிற்;கு சாத்தியப்படுமா? இயேசு சொன்னதாகச் கூறப்படும் இந்த போதனையை யாராவது செயல்படுத்துவார்களா? எந்த ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? கிடையாது. அல்லது இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திகக்காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.
ஆனாலும் ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து பாமரமக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
இதில் முக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இந்த வசனம் ஏதோ ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டவேண்டும்’ என்பதை மட்டும் தான் போதிக்கின்றது என்பது இதன் கருத்தல்ல. கிறிஸ்தவர்கள் இந்த ஒரு கருத்தை மட்டும்தான் பெரும்பாலும் எடுத்துக்காட்டுவார்கள். ஆனால் இயேசு (?) சொன்னதாக வரும் அந்த வசனத்தின் மூலம் அவர் சொல்ல வரும் செய்தி என்ன என்பதை அதைத்தொடர்ந்து வரக்கூடிய மற்றவசனங்களைக் கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும்.
அதாவது மத்தேயு வசனத்தில் தெளிவாகவே அதன் கருத்து தெரியப்படுத்துகின்றது.
‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ’ – மத்தேயு 5:39-41
இந்த வசனங்களின் மூலம் நீ யாரையும் எதிர்த்து நிற்காதே. உன்னை எவனாவது அடித்தால் அவனைத் திருப்பி அடிக்காதே. உனது ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு. உன்னிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பறிக்க வேண்டும் என்று விரும்பினால் அதோடு சேர்த்து மற்றொன்றையும் கொடு என்று சொல்வருகின்றார்.
உதாரணமாக ஒரு ரௌடி அடாவடியாக ஒரு லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டினால் உடனேயே நீ இரண்டு லட்சம் ரூபாய் கொடு என்பது தான் இந்த போதனை (?) சொல்ல வரும் கருத்து.
இதை எந்த மனிதனாவது பின்பற்ற முடியுமா? எந்த கிறிஸ்தவ நாடாவது இதை சட்டமாக்குமா? ஒரு கிறிஸ்தவராவது இதைபின்பற்றுவாரா முடியவே முடியாது. பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லிக் கொன்டிருக்கலாமேயொழிய இதை செயல்படுத்துவது என்பது அறவே முடியாத காரியமே.
உதாரனமாக இந்த வசனத்தை நம்பக்கூடிய கிறிஸ்தவர் ஒருவனுடைய சகோதரனையோ அல்லது அவரது குழந்தையையோ ஒருவன் கொலைசெய்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். உடனே அந்த கொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல் தனது மற்றொரு சகோதரனைக் கொலை செய் என்று அந்த கொலைகாரனிடம் கொடுப்பாரா?
சமீபத்தில் ஒரிசாவில் சில கிறிஸ்தவ கன்னியாஸத்திரிகள் சில பயங்கரவாதிகளால் கற்பழிக்கப்பட்டார்கள். உடனே இந்த கிறிஸ்தவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இரண்டு பேரை கற்பழித்தாயா? (இயேசுவின் போதனைப்படி) இன்னும் இரண்டு கண்ணியாஸ்திரிகளை எடுத்து கற்பழித்துக்கொள்ளுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? அதை செய்தார்களா? முடியுமா? மாறாக இந்த கொடுமையை எதிர்த்து ஆர்பாட்டமும் – போராட்டமும் செய்தார்கள்.
ஓரிசாவில் ஒரு பாதிரியாரும் அவர் மகனும் தாராசிங் என்பவனால் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார்கள். உடனே கிறிஸ்தவ உலகம் இதை எதிர்த்து ஆர்பாட்டங்களும் போராட்டங்களிலும் ஈடுபட்டதேயொழிய இன்னொரு பாதிரியாரையும் அவர் மகளையும் தாராசிங்கிடம் கொடுத்து எரிக்கச் சொல்லவில்லை.
சமீபத்தில் ஒரிசாவில் பல சர்ச்சுகள் சங்பரிவார்களால் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால் இந்த போதனையை பெயரளவுக்கு பாமரமக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் இந்த போதனையை செயல் படுத்துவது போல் மேலும் இரு மடங்காக சர்ச்சுக்களை கொளுத்திக்கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கினார்களா என்றால் இல்லை. மாறாக இந்த கொடுமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதை எதிர்த்து வழக்குகளைச் சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். இந்த அக்கிரமத்தை எதிர்த்தும் கண்டித்தும் எழுதினார்கள். உலகத்தில் ஒருத்தராவது – ஒரு உன்மையான கிறிஸ்தவராவது பைபிளில் உள்ளதன் படி செயல்படுவோம் என்றார்களா என்றால் கிடையவே கிடையாது. காரணம் இந்த போதனை என்பது யாராலும் செயல்படுத்த முடியாத, இந்த நடைமுறை உலகிற்கு சாத்தியப்படாத ஒரு போதனை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இதை அவர்கள் பெயருக்காவது பிரச்சாரம் செய்யத்தான் செய்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, இந்த போதனையை போதித்ததாகச் சொல்லப்படும் இயேசுவாவது இதை செயல்படுத்தி காட்டிஇருக்க வேண்டுமல்லவா? அவரது வாழ்விலும் அவர் துன்புறுத்தப்படுகின்றார். இது போன்ற பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கின்றார். அதை அவரும் செயல்படுத்தவில்லை என்பது தான் இதில் வேடிக்கையிலும் வேடிக்கை. அது பற்றி பைபிளில் வரக்கூடிய வசனத்தைப் பாருங்கள்:
‘இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.- யோவான் : 18:22-23
இந்தவசனத்தில் இயேசுவை ஒருவன் அறைந்ததும் அவர் மறுகனமே மற்றொரு இடத்தைக் காட்டி இங்கும் அறை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து அவரோ ‘நான் தப்பா பேசினால் என்னை அடி. நான் சரியாக பேசினால் என்னை ஏன் அடிக்கின்றாய்?’ என்று எதிர்த்து கேட்கிறார் என்றால் என்ன அர்த்தம்? இந்த வசனம் சாத்தியப்படுமானால் அவராவது செய்து காட்டி இருக்க வேண்டியது தானே.
நாம் மேலே கேள்வி எழுப்பியது போல் அடிதடி சம்பவங்களோ, கற்பழிப்பு சம்பவங்களோ அல்லது தீ எரிப்பு சம்பவங்களோ இங்கே நடைபெறவில்லை. குறைந்தபட்சம் அவர் கன்னத்தில் அறைந்துள்ளார்கள். அவர் மறு கன்னத்தை காட்டி இதோ அடித்துக்கொள் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? ஆனால் செய்யவில்லை. காரணம் கண்டிப்பாக இது இயேசுவின் போதனையாக இருக்க முடியாது. இரண்டாவது இதை யாராலும் எப்போதும் பின்பற்ற முடியாத செயல்படுத்த முடியாத சாத்தியப்படாத சட்டமும் கூட.
இப்படி இந்த வசனத்தின் மூலம் யாராலும் சாத்தியப்படுத்த முடியாது என்ற பிறகும் இதை வைத்து இந்த மக்களை ஏமாற்றும் கிறிஸ்தவர்களை என்ன வென்று சொல்வது?
யாராலும் செயல்படுத்த முடியாத, இதை போதித்ததாக சொல்லப்படும் இயேசுவாலேயே செயல்படுத்த முடியாத, ஏட்டளவில் இருக்கும் ஒரு போதனையை எதற்காக இந்தக் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மிஷினரிகளும் பிரச்சாரம் செய்யவேண்டும். சிந்திக்க வேண்டாமா?
தமிழ்நாட்டுடைய முதலமைச்சர் ஒரு அறிவிப்பு வெளியிடுகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அதாவது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் தரப்படும் என்று சொல்கின்றார். ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. காரணம் அது சாத்தியப்படாது – கொடுக்கவும் முடியாது. சாத்தியப்படாத ஒன்றை அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக அவருக்கு வக்காலத்து வாங்கி ஆஹா.. என்ன அற்புதம் என்று பாராட்டு தெரிவிப்பீர்களா? அல்லது இந்த மடையன் நம்மை ஏமாற்றுகின்றான் என்று குற்றம் சுமத்துவீர்களா? அது போலத்தான் இந்தச் சட்டமும் இந்த சட்டத்தின் கருத்தும். இதை சொன்ன இயேசுவும் பின்பற்ற வில்லை. இதை பிரச்சாரம் செய்யக்கூடிய கிறிஸ்தவர்களும் பின்பற்ற போவதில்லை. ஆனால் இந்த கிறிஸ்தவர்களும் மக்களை ஏமாற்றியே பழக்கப்பட்ட கிறிஸ்தவ மிஷினரிகளும்; யாராலும் செயல்படுத்தமுடியாத இது போன்ற போதனைகளை (?) மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது மக்களை மடையர்களாக்கவே என்பதை யாராவது மறுக்க முடியுமா?
இதில் இன்னொரு உன்மையையும் நாம் கவனித்தாக வேண்டும். அதாவது, இது போன்ற சாத்தியமற்ற ஒரு போதனையை குறிப்பாக தனிமனிதர்களுக்கு சொல்லப்பட்ட ஒரு போதனையை இஸ்லாம் சொல்லக்கூடிய ஒரு ஆட்சி நடைபெரும் நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய குற்றவியல் சட்டங்களோடு ஒப்பிட்டு கிறிஸ்தவமார்க்கம் சமாதானத்தைப் போதிப்பதாகவும் இஸ்லாம் அதற்கு எதிரான சட்டங்களை சொல்லுவதாகவும் ஒரு பொய்பிரச்சாரத்தையும் செய்து வருகின்றனர். அதற்காகத்தான் பைபிளின் இந்த போதனை சாத்தியமற்றது – மடத்தனமானது என்று தெரிந்தும் இவர்களால் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
எனவே சகோதரர்கள் இது போன்ற பொய்யான பிரச்சாரங்களை முறியடித்து உன்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி: egathuvam.blogspot.com
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)